பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 17, 2008

FLASH: திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கம்

இன்று நடந்த திமுக உயர்நிலைக் குழுக்கூட்டத்தில், பாமகவுடன் இனியும் கூட்டணியைத் தொடர முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

கலைஞர் என்ன சொல்கிறார்...

இழிவாக, தரக்குறைவாக, தன்மான உறவைப் பறிக்கும் வகையில் கேவப்படுத்தப்பட்டாலும், அத்தகைய ஒருகட்சி தலைமை அப்படி இழிவுபடுத்தியவர்களை, பேசியவர்களை தட்டிக்கேட்காமலும், அவர் மீது அந்தக் கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பேசியது தவறு, இத்தகைய கேவலமான வார்த்தைகளை பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்போ, வருத்தமோ கேட்காத நிலையிலும் கூட, அப்படி கேவலப்படுத்திகிறவர்களோடு, உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்பதை ஏற்க இயலாத காரணத்தால், அவர்களை இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனியும் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கிறது


பழைய படம் - கூட்டணி தர்மத்தில் கையெழுத்து போட்ட படம்பழைய கார்ட்டூன் - திமுகவும் பாமகவும் எப்போதும் நண்பர்கள்


அப்டேட்:

திமுக முடிவு தன்னிச்சையானது, பாமக மீது வீண் பழி - ராமதாஸ்

17 Comments:

Anonymous said...

மகிழ்ச்சிதானே இட்லிவடையாரே?

Anonymous said...

DMK discontinues allaince with PMK.But allies like CPI(M),Congress may take a different
stand.So technically only DMK has discontinued the alliance.
Only when the state UPA committee
meets we will know who is (not)
with whom. So change the title.

IdlyVadai said...

அனானி
இந்தாங்க இதை பிடியுங்க :-)

ஜயராமன் said...

கரு.நா.நிதி இப்போது தன் மஞ்சள் துண்டை தூக்கி எறிவாரா?

மஞ்சள் துண்டு போடுவதே அந்த துண்டை மருத்துவர் ஐயா தனக்குப் போட்டதால்தான் என்று (நூற்றுக்கணக்கான சப்பைக்கட்டுகளில் ஒன்றாக) காரணம் கூறியவர் கரு.நா.நிதி.

அது உண்மையானால், மஞ்சள் துண்டை இப்போது தூக்கி எறிவாரா?

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்ற மருத்துவர் ஐயாவின் குற்றச்சாட்டுக்கு எங்கே பதில்?

ஜனவரியில் பார்த்து முடித்த ஒரு சி டியை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் ஏதோ புது சமாசாரம் போல ஆற்காட்டார் கொடுக்க அதை வாங்கி "ஓகோ அப்படியா பார்க்கிறேன்" என்று சொன்னது எதனால்? இதற்கு பதில் என்ன? கரு.நா.நிதி ஒரு கொள்களையற்ற நேர்மையற்றவர் என்பதையே இது காட்டுகிறது.

நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

ஜயராமன் - கரு.நா.நிதி என்ற பிரயோகம் வேண்டாமே.

Anonymous said...

Ithu summa drama nganum.Delhi la daily nadakkuthu.Ippa ingayum otranga.

Hajo said...

Intervallukku munnadi First Half leye summa Jivvunnu poguthey padam climax mathri?

மாயவரத்தான் said...

இன்னாது..? இட்லியும் வடையும் பிரிஞ்சாச்சா?!

மாயவரத்தான் said...

ரெண்டாவதா உள்ள போட்டோவை பார்க்கவும். பின்னாடியிலிருந்து எட்டிப் பார்க்கும் தயாநிதி மாறனை துரத்தி விட்டாச்சு. இப்போ முன்னாடி உட்கார்ந்திருக்கிற மருத்துவர் ஐயையோவையும் துரத்தி விட்டாச்சு. அடுத்ததா நடுவிலே இருக்கிற ராஜாவா?! (வேற 'ஏதோ' மேட்டரிலே ஊரிலே கேள்விப்பட்டேன்!) அதனால அது நடக்காது.

Anonymous said...

I will really love it if ADMK also rejects the PMK alliance..then these guys knows their worth..but I dont think that will happen..

Gowri Shankar said...

ராமதாஸ் அவரே விலகாமல், கலைஞரை விலக்க வைத்திருக்கிறார். கொஞ்ச நாளில் அடுத்த கூட்டணி யாருடன் என்று ராமதாஸ் அறிவிப்பார். கொஞ்சம் பொறுமை... :)

Anonymous said...

This is all common in politics. Pl recollect Goundamani dialogue.

Unknown said...

oru valiyay elupari mudinthadhau patri romba makilchi.

melum dramkkalai ethirparpom.

Unknown said...

oru valiyay elupari mudinthadhau patri romba makilchi.

melum dramkkalai ethirparpom.

Anonymous said...

Chief Minister is not in the position to answer Ramdoss's criticism about his government.
Chief Minister’s reason for removing PMK from the alliance is not acceptable.

Anonymous said...

Kalaignar avargale Guruvukku oru nyayam Vetrikondanukku oru nyayama.
Nadunilayaga partha PMK onnum thavaru cheiyala. Ungal mudivai mathikanum.

Anonymous said...

இழிவாக, தரக்குறைவாக, தன்மான உறவைப் பறிக்கும் வகையில் கேவலப்படுத்தப்பட்டாலும் , அத்தகைய ஒருகட்சி தலைமை அப்படி இழிவுபடுத்தியவர்களை, பேசியவர்களை தட்டிக்கேட்காமலும், அவர் மீது அந்தக் கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பேசியது தவறு, இத்தகைய கேவலமான வார்த்தைகளை பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்போ, வருத்தமோ கேட்காத நிலையிலும் கூட, அப்படி கேவலப்படுத்திகிறவர்களோடு, உறவை வைத்து கொள்ள ADMK தயங்காது..
இப்படி ஜெ. அறிக்கை விடுவார் பாருங்கோ !!!
---
இதெல்லாம் ஒரு டீல்மா... இதன் பிண்ணனியில் இருப்பது விஜயகாந்த்... போக போக தெரியும்...இதனால் இழப்பு மு.க வுக்கு தான் ... பா.ம.க-வுக்கல்ல... அவசரப்பட்டு ஆற்காட்டு தெலுங்கன் பேச்சைக் கேட்டு மு.க தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டுவிட்டது...தி.மு.க வுக்கு கெட்டகாலம் ஆரம்பமாகிவிட்டது.. டண்டனக்க...டமுக்கு டக்க..