பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 26, 2008

தசாவதாரம் திரைப்படம் பற்றி -ஓர் அலசல்! - கி. வீரமணி

தசாவதாரம் திரைப்படம் பற்றி -ஓர் அலசல்! - கி. வீரமணி எழுதிய கட்டுரை விடுதலை இதழில்....

சீரிய பகுத்தறிவாளர், கலைஞானி நண்பர் கமல்ஹாசன் அவர்கள் நடித்த தசாவதாரம் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். திரைப்படத் தொழில்நுட்பத்தின் பல்வேறு திறன்களையும் ஒருங்கே பெற்ற பல்கலைக் கொள்கலனாக (A multi-dimensional genius) நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திகழ்கிறார் என்பதை அத்திரைப்படத்தைப் பார்க்கும் எவரும் உணர முடியும் என்கிற அளவுக்கு அவர் உயர்ந்து நிற்கிறார். ஒரு பாத்திரத்தில் உயர்ந்து உள்ளபடியே புகழிலும் உயர்வாக நிற்கிறார்!
12ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சைவ-வைணவ சமயங்களுக்கிடையேயான சண்டையிலிருந்து கதை தொடங்கி கடந்த 2004இல் நிகழ்ந்த சுனாமியில் முடிகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை மத உணர்வுகளால் உந்தப்பட்ட மனிதர்களின் மனித விரோதச் செயல்கள் பார்ப்பவர் அனைவரின் மனங்களிலும் விவாதத்தைத் தூண்டும் என்பது நிச்சயம்.
உரையாடலில் ஒவ்வோர் இடத்திலும் கூர்மை மிளிருகிறது; பகுத்தறிவு வாதம் பளிச்சிடுகிறது. இன்றைய இளைய தலைமுறையின் விரைந்த பரபரப்பான உலகத்தில் அவர்கள் விரும்பும் வகையில் ஆங்கிலப் படம் போல அமைத்திருப்பது சிறப்பான முயற்சியாகும். அதிகம் சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத எம்மைப் போன்றவர்களையே கட்டிப்போடும் அளவுக்கு காட்சிகளின் அமைப்பும் அதன் கோர்வையும் வெகுவாகக் கவர்ந்தன.
உலகை அழிக்கவல்ல உயிரியல் ஆயுதம் மக்களை மாய்த்திடாத வகையில் பத்திரமாய் பாதுகாத்து அதனைக் கைப்பற்றி அழிக்கும் மனித நேய உணர்வு ஒரு பகுத்தறிவாதிக்கே உரியது என்பதை விஞ்ஞானி கதாபாத்திரத்தின் வழியாக உணர்த்தி, பகுத்தறிவாளர்களின் உயரிய மனித நேயத்தை உலகிற்கு உணர்த்தியதை பகுத்தறிவு இயக்கத்தவராகிய நம்மால் எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்.
தனது தந்தை பெயர் தஞ்சாவூர் ராமசாமி நாயக்கர் என்று கூறி, அந்தப் பெரியாரா என கேள்வி கேட்க வைத்து, இல்லை இல்லை இவர் சிறியார் என பதில் கூறி தந்தை பெரியாரை நினைவுபடுத்தும் காட்சியும் சிறப்புடன் சிரிப்பும் இணைந்த ஒன்று!
படம் முழுக்க உரையாடலில் வரும் பகுத்தறிவு வாதங்கள் நிச்சயம் இளைய தலைமுறை மட்டுமல்லாது எல்லாத் தரப்பினரையும் சிந்திக்கத் தூண்டும் என்பது உறுதி. மடம் என்றால் தப்பு நடக்காதா? என்ற கேள்வியும் வேறு ஒரு காட்சியில் எனக்கு பெருமாள் தான் முக்கியம் என்று கதாநாயகி சொல்லும்போது எனக்கு மனுஷங்கதான் முக்கியம் என்று விபத்தில் அடிபட்டவர்களைக் காப்பாற்றும் பகுத்தறிவாளரின் பதிலும் சில சான்றுகள். பகுத்தறிவாளர்கள் மனித நேயர்கள் என்பதை உறுதிப்படுத்துபவைகள் ஆகும்!
10 பாத்திரங்களையும் ஒருவரே ஏற்று அனைத்தையும் கச்சிதமாக செய்து ஒரே மனிதரா இத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்தார்? என்று எவரையும் வியக்கும் அளவுக்கு நடிப்புக் கலையின் உச்சத்தை எட்டியுள்ள பகுத்தறிவாளர் கமல்ஹாசன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறோம்.
வைணவப் பார்ப்பனர், பகுத்தறிவுவாதி, இஸ்லாமியர், சீக்கியர், தாழ்த்தப்பட்டவர், அமெரிக்க அதிபர் புஷ், வெள்ளைக்காரர், தெலுங்கர், ஜப்பானியர், வயது முதிர்ந்த பாட்டி என பத்து பாத்திரங்களை அமைத்து ஒவ்வொருவரின் குணநலன்களையும் நடிப்பில் மட்டுமல்லாது அவர்களின் கொள்கைகளையும் உரையாடல் வாயிலாக வெளிப்படுத்தி இறுதியில் மனித நேயமே மகத்தானது என்பதை உணர்த்தியுள்ள பாங்கு அவரது கற்றறிவை வெளிப்படுத்துகிறது.

ஒரு வணிகச் சினிமாவில் இத்தனை உயரிய மனித நேயச் சிந்தனையைச் சொல்லியது வியப்புக்குரியது. வரலாறு, அரசியல், அறிவியல், திரைத் தொழில் நுட்பம் என அனைத்தையும் நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்துள்ளார்; புதிதாக திரைத்துறையை நோக்கி வருவோர்க்கு நண்பர் கமல்ஹாசன் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இத்தகைய பல்லாற்றல் பெற்று ஒருவர் சீரிய பகுத்தறிவாளராக, அறிவு ஆசான் பெரியார் பற்றாளராக இருப்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும். நடிகர்களில் ஏராளம் படிக்கும் பழக்கமுடைய பகுத்தறிவாளர் இவர்.

இதற்குமுன் தனது பல படங்களில் பகுத்தறிவு, மனித நேயச் சிந்தனைகளைப் பரப்பி தன்னை ஒரு பகுத்தறிவாதியாக அறிவித்துக் கொண்டு வந்துள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்கள் அந்த முயற்சியின் தொடர்ச்சியாக தசாவதாரத்தைத் தந்து தனது ரசிகர்களையும் பகுத்தறிவாளர்களாக உருவாக்கிடும் பணியைச் செய்து வருவது பாராட்டுக்குரியது.

நாடகக் கலை வித்தகர், முத்தமிழ் கலா வித்வ ரத்ன அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் நடிப்புப் பட்டறையில் உருவாகி கற்றறிவாளர்கள் பலருடன் நட்பை வளர்த்துக் கொண்டு, பகுத்தறிவாளருக்கே உரிய தனித்த பண்போடு பலவகை நூல்களையும் கற்று, பொறுப்புணர்ச்சிமிக்க ஒரு முழுமையான கலைஞனாகத் திகழும் நண்பர் கமல்ஹாசன் அவர்களின் இச்சாதனையை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்கு தன்னிகரற்ற கலைஞராக உயர்ந்து நிற்கும் அவரது திறமையை உலகம் நிச்சயம் பாராட்டும்; நாமும் பாராட்டுவோம். வாழ்த்துகள்.

மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பிரம்மாண்டம் என்று சொல்லி மகிழ்ந்து அவர் அறிவு ஆற்றலைப் பாராட்டியவர். வேறு பரிசுகள் தேவையா?
இந்தப் படத்துக்காக நாம் நன்றி பாராட்டுகிறோம். இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்.


"இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்"


மேலெ உள்ள வரிகள் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது' என்ற பாடலில் ஒரு பகுதி. இதில் கமலின் அப்பா அம்மா பெயர்களை சொல்லிவிட்டு அவர்களின் செய் ஒரு விஷ்ணுதாசன் என்று சொல்லுகிறார். இது விரமணி ஐயாவிற்கு காதில் விழுந்ததா ?


14 Comments:

Sridhar V said...

இ.வ.,

பாட்டு மட்டும்தான் கேட்டீங்களா? இறுதிக் காட்சியில் விண்செண்ட் பூவராகனையும் 'ஸ்ரீனிவாசனின் சேய்' என்றுதான் கிருஷ்ணவேணி பாட்டி சொல்கிறார்.

இப்படியெல்லாம் கேள்வி வரும்னு நினைச்சாரோ எதிர்பார்த்தாரோ என்னவோ? :-))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இ வ

என்னத்தக் கேள்வி கேட்க்கிறீங்க வீரமணி ஐயாவின் காதில் விழுந்ததா என்று? அது விழுந்ததினால்தானே இந்தப் பாராட்டே :)))

புரியலையா? வீரமணி என்னும் சாரங்கபாணிக் கோனாரும் ஒரு வைணவரே, வீரமணியின் குருவும் ஒரு வைணவரே, வீரமணியின் இணைப்பும் (தோழியும்) ஒரு கமலஹாசன் பிராண்ட் வைணவரே, இப்ப தெரியுதா ஏன் இப்படி விழுந்தடித்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்று?

Anonymous said...

அவ்வளவு ஆழ சிந்தனை அவருக்கு இருந்தா ஏன் அந்த கட்டுரை யை எழுதப் போறாரு .. பகுத்தறிவு, கடவுள் இல்லா கொள்கை எல்லாம் புளிப்புக்கும், விளம்பரத்துக்கும் தான்..வேற ஒரு வெங்காயமும் இல்லை..

கமலின் உள்குத்து கும்மாங்குத்து..

Anonymous said...

கமலஹாசன் ஆத்திகராயிருப்பதோ நாத்திகராயிருப்பதோ அவருடைய சொந்த விருப்பம். அதைப்போல் அவருடைய படத்தில் ஆத்திக கருத்துகளையோ நாத்திக கருத்துகளையோ சொல்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அதை விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம். அதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசுவது பண்பற்ற செயல்.

Anonymous said...

robin தங்களை வழிமொழிகிறேன்.

Anonymous said...

robin ungalai தங்களை வழிமொழிகிறேன்.pesa topic kidaikathavangathan ippati illam pesuvanga,

Anonymous said...

ராபின்

இங்கு விமர்சனத்தில் தனிப்பட்ட முறையில் ஏதாவது அவரைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், அவர் தன் கொள்கைகளைச் சொல்லும் பொழுது அவை விமர்சிக்கப் படத்தான் செய்யும். இதில் தனிப்பட்ட முறையில் எப்பொழுது இகழ்வாகப் பேசப்பட்டுள்லளது? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்

We The People said...

அப்ப தசாவதாரம் பார்ப்பன மலம் இல்லைன்னா சொல்லறாரு??
ஒரு எழவும் பிரியலயே!

முந்தியெல்லாம் கமல் பேசறது மட்டும் தான் புரியாது, ஆனா என்ன சொல்ல வரார்ன்னு பிரியும்! இப்ப அதுவும் பிரியமாட்டிங்குதே! வீரமணி சொல்வது சரியா?? இல்லை பைத்தியகாரன் சொல்லறது சரியா?? பைத்தியகாரன் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டால் வீரமணி ஒரு பார்ப்பன அடிவருடிமாதிரியில்ல ஆயிடும்!!!

வர வர பகுத்தறிவையே, பகுத்து அறியவேண்டியிருக்கே!! எங்க போய் முட்டிக்க!!??

Anonymous said...

//இங்கு விமர்சனத்தில் தனிப்பட்ட முறையில் ஏதாவது அவரைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறதா?//
கீழ்க்கண்ட விமர்சனங்களை வாசிக்கவும்:
//கமலஹாசன் ஒரு இந்து இன விரோதி, தி க வின் கைக்கூலி...//
//இதற்குத் தானே ஆசைப் பட்டாய் கமலஹாசா? உன் அரிப்புத் தீர்ந்ததா?//
//இந்த மனோ வியாதி கமலஹாசனுக்கு மட்டும் அல்ல...//
இதெல்லாம் தனிப்பட்ட முறையில் இகழ்வது இல்லையா?
நான் கமலகாசனை ஒரு நடிகன் என்ற முறையில் பார்கிறேன்.
நீங்கள் அவரை ஒரு பிராமணன் என்று பார்க்கிறீர்கள். அது தான்
வித்தியாயாசம். கொள்கையை விமர்சிப்பதற்கும் தனிப்பட்ட முறையில்
நிந்திப்பதர்க்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் தெரியும்.

IdlyVadai said...

Robin - நீங்கள் சுட்டிக்காட்டிய வரிகள் அசிங்கமானது தான். அதை எடுத்துவிட்டேன். உங்களுக்கு நன்றி.

படிக்காமல் பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு ரொம்ப சாரி.

யோசிப்பவர் said...

//நீங்கள் சுட்டிக்காட்டிய வரிகள் அசிங்கமானது தான். அதை எடுத்துவிட்டேன். //

ஓ! யாராவது சுட்டிக்காட்டினால்தான் இ.வ.வுக்கு, அசிங்கமான வரிகள் என்று புரியுமா? யாரும் சுட்டிக்காட்டாததால்தான், இதற்குமுன் பலர் இட்ட, பலரைப் பற்றிய தனிமனித அநாகரிக பின்னூட்டங்களை புரியாமலே பிரசுரித்தாரா?

//படிக்காமல் பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு ரொம்ப சாரி.//
சுட்டிக்காட்டப்பட்ட பின்னூட்டத்தை மட்டும் எப்படி படித்தீர்கள்?

Anonymous said...

dasavatharam padathai neengal inga paarkalam http://tamilmoviewaves.blogspot.com/2008/06/dasavatharam-2008-tamil-movie-watch.html
padathai net-il parpathu thavaru endralum, intha link velinaatil irunthu theater-il paarka mudiyatha thamizhargalukkaga ithai vaithulen

R.Gopi said...

AAATHIGAM PESUM ANBARUKKELLAM

NAATHIGAM PESUM ARUMAINAYAGAM

ANNAN AANA KADHAI

K.Veeramani is a shameless creature. He took Rs.5 Crores from JJ and given her SAMOOGA NEEDHI KAATHA VEERANGANAI and the same dagalti is now going to give the same award SAMOOGA NEEDHI KAATHA VEERAN to Kalaignar.