பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 04, 2008

அழகிரியின் அதிரடி சபதம்

முதலமைச்சர் கருணாநிதியின் 85-வது பிறந்த நாள் விழாவில், வாழ்த்து தெரிவிக்க சென்ற தயாநிதி மாறன் சகோதரர்களை, அவர் சந்திக்க மறுத்து விட்டதன் பின்னணி வெளியாகியிருக்கிறது.

‘நான் உயிரோடு இருக்கும் வரை மாறன் சகோதரர்கள் மீண்டும் குடும்பத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்’ என்று மு.க. அழகிரி செய்துள்ள சபதமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.முதலமைச்சர் கருணாநிதியின் 85-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பிற கட்சி தலைவர்கள், அதிகாரிகள், குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதியின் வாரிசு யார் என்று தினகரன் பத்திரிகையில் கருத்து கணிப்பு வெளியிட்டதால் ஏற்பட்ட மோதல் காரணமாக, தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. மேலும் அவர் கட்சி யிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார். இது மட்டுமின்றி அவரையும், அவரது சகோதரர் கலாநிதி மாறனையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அடியோடு ஒதுக்கிவிட்டனர்.

எனினும் கருணாநிதியின் மகள் செல்வி, மருமகன் முரசொலி செல்வம் ஆகியோர் மட்டும் மாறன் சகோதரர்களிடம் உறவு வைத்துள்ளனர். இதற்கு செல்வம் மாறன் சகோதரர்களின் சித்தப்பா என்பதும் ஒரு காரணமாகும்.

செல்வம், செல்வியின் மூலமாக பலமுறை கருணாநிதியுடன் சமரசத்துக்கு முயன்ற போதிலும், குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் எப்படியாவது மீண்டும் கருணாநிதியிடம் நெருங்கிவிட வேண்டும் என்று பல முயற்சிகளை கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் செய்து வருகின்றனர்.

இந்த முயற்சியின் பலனாக, மு.க. ஸ்டாலினின் நல்லெண்ணத்தை அவர்கள் பெற்றுவிட்டதாக கூறப் படுகிறது. அந்த அடிப்படையிலேயே கடந்த மார்ச் 1-ந் தேதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கலாநிதி மாறன் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, சகோதரர்கள் இருவரும் அவரை சென்று பார்த்து நலம் விசாரித்தனர். இதனையடுத்து சமரசம் ஆகிவிட்டதாக செய்திகள் பரவியது.

ஸ்டாலின், செல்வி ஆகியோர் மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில், மு.க.அழகிரி மட்டும் அவர்களை குடும்பத்தில் சேர்ப்பதை அடியோடு எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எப்படியாவது அவரை சந்தித்து வாழ்த்து கூறி இழந்த உறவை சரிபடுத்த வேண்டும் என்று தயாநிதி, கலாநிதி சகோதரர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

கோபாலபுரம் வீட்டுக்கு மாறன் சகோதரர்கள் வந்தால், அது குறித்த தகவலை அழகிரிக்குத்
தெரிவிப் பதற்காக அவரது ஆதரவாளர்கள் வெளியில் காத்திருந்தனர்.

அந்த சூழ்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் அவரை சந்திக்க முடியாது என்பதால், சிஐடி காலனி வீட்டுக்கு சென்று சந்திக்குமாறு செல்வி அவர்களிடம் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் நேற்று பிற்பகலில் சிஐடி காலனி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல், முன்புறத்தில் உள்ள ஹாலிலேயே அமர வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் அரைமணி நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்த போதிலும், கருணாநிதியை சந்திக்க அவர் களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு அழகிரியின் எதிர்ப்புதான் காரணம் என்று தெரிகிறது.

சிஐடி காலனி இல்லத்துக்கு மாறன் சகோதரர்கள் வருவதை அறிந்து கொண்ட அழகிரி, தனது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எந்த காரணத்தை முன்னிட்டும் அவர்களை சந்திக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

தனது எதிர்ப்பை மீறி அவர்களை சந்தித்தால், தான் இப்படியே மதுரை சென்று விடப்போவதாகவும், அதன் பின்பு எந்த கட்டத்திலும் தன்னோடு பேசக் கூடாது என்றும் கருணாநிதியிடம் அழகிரி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அழகிரியின் எதிர்ப்புக்கு பின்னரே, கருணாநிதி, தயாநிதி மாறன் சகோதரர்களை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கீழ் தளத்தில் உள்ள ஹாலிலேயே காத்திருந்த சகோதரர்கள் இருவரையும் கனிமொழி சந்தித்து, அப்பா ஓய்வில் இருப்பதால் இப்போது சந்திக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

மாலையில் வரலாமா என்று அவர்கள் கேட்டதாகவும், அதற்கு வாய்பே இல்லை என்று மறுக்கப் பட்டுவிட்டதாகவும் நாசுக்காக மறுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப் படுகிறது.

இதையடுத்து தாத்தா கருணாநிதியை சந்திக்காமல் பேரன்கள் இருவரும் வருத்தத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் சிலருக்கு அழகிரி அவர்களை சந்திக்க விருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அழகிரியை சந்திக்க விரைந்தனர். அப்போது தனது தந்தை மாறன் சகோதரர்களை சந்திக்க மாட்டார் என்றும், அவர்களை சந்திக்கும் நிலையில் அவர் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் ஒருபடி மேலே சென்று நான் உயிரோடு இருக்கும் வரை தயாநிதி மாறனையும், அவரது அண்ணனை யும் குடும்பத்திற்குள் மீண்டும் சேர்க்க அனுமதிக்க மாட்டேன் என்றும், எனது பேச்சை என் தந்தை தட்டமாட்டார் என்றும் அழகிரி கூறியிருக்கிறார்.

மாறன் சகோதரர்களை மீண்டும் குடும்பத்தில் சேர்ப்பதில் அழகிரியின் சகோதரர் மு.க. ஸ்டாலின் ஆர்வத் துடன் இருப்பதாக கூறப்படுவது பற்றி அழகிரியிடம் கேட்டதற்கு பதிலளித்த அவர், அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் தன்னை பொறுத்த வரை அதற்கு இடமே இல்லை என்றும் கூறினார்.

கட்சியின் தலைவர் பொறுப்பை மாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அழகிரி, என் தந்தையின் உடலுக்கு வேண்டுமானால் வயதாகி யிருக்கலாம். ஆனால் மனதளவில் அவர் மிகவும் இளமையானவர். யார் வாரிசு என்பது ஒரு பிரச்சனையே அல்ல. இது எல்லா கட்சிக்கும் ஏற்படும் நிலைதான் என்று கூறினார்.

மாறன் சகோதரர்களை குடும்பத்தில் மீண்டும் சேர்த்து விட வேண்டும் என்ற ஸ்டாலினின் விருப்பத்திற்கு அழகிரி தடை போட்டுள்ள நிலையில், கருணாநிதி குடும்பத்தில் உள்ள மோதல் பகிரங்கமாக வெடித்திருப்பது திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது
( நன்றி: மலைமலர் )

DC News...

When Deccan Chronicle contacted Mr Azhagiri to enquire if the meeting had taken place he asserted that no such thing had happened. �I can tell you 200 per cent that the two did not meet the chief minister. They�re spreading false news,� an angry Azhagiri retorted virtually confirming his role. The Maran brothers were not available for their reaction.


தட்ஸ் தமிழ்...

மாறன் சகோதரர்கள் முதல்வரைச் சந்தித்தார்களா என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதிலளிக்கையில், அப்படி சந்தித்திருந்தால், அவர்களது டிவியில் பிளாஷ் போட்டு பெரிதாக்கியிருக்க மாட்டார்களா என்று புன்னகையுடன் எதிர் கேள்வி போட்டார்.


1 Comment:

Anonymous said...

இட்லிவடையாரே! தங்களுக்கு என்ன ஆயிற்று? செய்திதால்கள்ள படிச்சு போர் அடிச்ச செய்தி இங்கயுமா! இவுங்க குடும்ப செய்தி கேட்டாலே எரிச்சலா வருது. தலைவர், மகன், பேரன் யாருக்கும் வேலை இல்லை. எல்லாரும் சுயநலவாதிகள். யாருக்கும் பொதுமக்கள் மேல அக்கறை இல்லை. இந்த ஆளு பிறந்தநாள் கொண்டாடமாட்டேன்னு சொல்லிடு நல்லா கொண்டாடி இருக்கார். இவனுங்க செய்தி போடுறதுக்கு பதில நீங்க பேசாம இட்ல்ய்வடையே விக்கலாம்.

MK family ennaiku Oligichu katromo annikku thamilukkum, thamilandukkum vidivukalam.