பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 12, 2008

ராயல் ஃபேமலி யுத்தம் ஆரம்பம்

தாங்கள் புதிதாக அறிவித்துள்ள ராயல் கேபிள் விஷனுக்கு சன் நெட்வொர்க் நிறுவனம் இணைப்பு தர மறுப்பதாக முதல்வரின் மூத்த மகன் மு.க.அழகிரி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். மதுரையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேபிள் டிவி தொழிலை அவர்கள் மட்டும் தான் (சன் டிவி) செய்ய வேண்டுமா? நாங்கள் செய்யக் கூடாதா? மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை அளிப்பதற்காக ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் நலன் கருதியும் இது துவக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணைப்பு தர வேண்டும் என்று 31.05.2008ல் சன் டிவிக்கு ஒரு கடிதம் எழுதினோம். மீண்டும் 3.6.2008ல் ஒரு கடிதம் எழுதினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள்.

அவர்களுடைய நேரடி ஒளிபரப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள். மக்களுக்கு மாதம் ஒன்றிற்கு 130 ரூபாய் கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு நாங்கள் இந்த நிறுவனத்தை துவங்கி இருக்கிறோம்.

தற்போது தென் மாவட்டங்களில் இந்த அமைப்பு உள்ளது. விரைவில் வட மாவட்டங்களிலும் எங்கள் சேவையை துவக்க இருக்கிறோம்.

ராயல் கேபிள் விஷன் துவக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி தவறானதாகும். சுமங்கலி கேபிள்ஸ் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் போது நாங்கள் குறைந்த கட்டணத்தையே வசூலிக்கிறோம்.

தற்போது எங்களிடம் 80 சேனல்கள் உள்ளன. மேலும் பல சேனல்கள் வரவிருக்கின்றன. இதை தடுப்பதற்காக சன் டிவி நிறுவனம் தங்களின் நேரடி ஒளிபரப்பு சேவையை செயல்படுத்துவதற்காக எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள்.

இதுகுறித்து டிராய் அமைப்பிடம் புகார் கொடுத்திருக்கிறோம். சட்டத்தை மீறி அவர்கள் செயல்படுகிறார்கள்.

பழைய பதிவுகள்:
SCV - RCV கயிறு இழுக்கும் போட்டி
ஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி
எலாஸ்டிக் இல்லாத ஜட்டி
ராஜ் x சன் என்ன நடக்கும் ?

மக்களே இந்தச் சண்டையில் யார் அடிவாங்கினாலும் நமக்கு சந்தோஷம் தான். கைத்தட்டி உற்சாக படுத்தணும்.

7 Comments:

ஹரன்பிரசன்னா said...

//தற்போது தென் மாவட்டங்களில் இந்த அமைப்பு உள்ளது. விரைவில் வட மாவட்டங்களிலும் எங்கள் சேவையை துவக்க இருக்கிறோம்.
//

ஐயையோ...!

Anonymous said...

Though the fight is between the owners of SUN & THE SON, the ones who will get beaten up in the cross-fire will be the employees from either side (a la Dinakaran episode of last year).

So, even though your wish may be morally correct, the end result will NOT be to your or anybody's liking.

Its something like the sudden fights which erupt between two Pettai Rowdy gangs & people in the vicinity abruptly getting caught in the cross-fire. Finally, the rowdies will never be caught.

மாயவரத்தான் said...

ஹரன் பிரசன்னா.. இது என்னா நமக்கு நாமே திட்டம் மாதிரி நீங்களே பதிவு, நீங்களே பின்னூட்டமுமா?!

மாயவரத்தான் said...

//ஹரன் பிரசன்னா.. இது என்னா நமக்கு நாமே திட்டம் மாதிரி நீங்களே பதிவு, நீங்களே பின்னூட்டமுமா?!//

ஹூம்.. ஊரு ரெண்டு பட்டா, இட்லி வடையாருக்கு கொண்டாட்டமாம்!

ஹரன்பிரசன்னா said...

மாயவரத்தான், உங்கள் 'கண்டுபிடிப்பை' எண்ணி வியந்து நிற்கிறேன். கலக்கிட்டீங்க, கீப் இட் அப்.

ஹரன்பிரசன்னா said...

மாயவரத்தான், உங்கள் 'கண்டுபிடிப்பை' எண்ணி வியந்து நிற்கிறேன். கலக்கிட்டீங்க, கீப் இட் அப்.

Anonymous said...

"யார் அடிவாங்கினாலும்"

adi vaanginaa parava la...uyir pogama iruntha seri!
dinakaran incident a marandhuteengala Haran Prasanna?
namakku kondaattam, urchaga paduththanum nu ezhuthi irukeenga?