பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 23, 2008

எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் - கலைஞர்

வழக்கம் போல் கலைஞர் பேசியுள்ளார் டென்ஷன் ஆகாதீங்க :-)
எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜ் டி.வி.யின் 24 மணிநேர செய்தி சேனலைத் தொடங்கி வைத்து அவர் பேசியது...

எனது பெயரிலேயே ஒரு டி.வி. சேனல் இருக்கும்போது மற்றொரு டி.வி. சேனலுக்கு விளம்பரம் தருகிறாரே என்று சிலர் கருதலாம். எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான். எல்லா டி.வி.யும் நான் வளர்க்க வேண்டிய டி.வி.தான்.

ராஜ் டி.வி. வளர்ந்து அரசுக்கும் அதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மை கிடைக்குமானால் அதனை நான் பாராட்டுவேன். போற்றுவேன். அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பேன்.

எப்போதுமே விழாவுக்கு அழைப்பவர்கள் உண்மையும் பேச வேண்டும். உண்மைக்கு மாறானதையும் பேச வேண்டும். அதைத்தான் "பொய்மையும் வாய்மையிடத்து' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நல்லது நடக்கும் என்றால் பொய்கூட சொல்லலாம் என்ற வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றி பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் என்று அழைத்து வந்துவிட்டு என்னைப் பேச வைத்து விட்டார்கள்.

தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனால்தான் திமுக அரசு இலவச கலர் டி.வி.க்களை வழங்கி வருகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன

5 Comments:

Raj Chandra said...

'அம்மா' (ஜெ டிவி) டென்ஷன் ஆகிடப்போறாங்க...:)

Anonymous said...

Maanaada Mayilaada pootu makkal savai seyunga kalaigar ayya.Vazhakamaana ularlthaan ungoldathu.

Anonymous said...

Vijaykanth kudichitu ulararu. Neenagaluma!!! Athusari kootani vachika poringala.

Anonymous said...

Nalla mattnaru valluvar ungalta. Raj TV MD, DMK Membership card vangnathu engalluku innum ninaivula irrukku. Makkala (Makkal TV ai sollala) pathi neenga romba kavali pada vendam. Appram enna oru JALRA TV ongaluku ready.Inimale ungalukku Veeramani(DK) thevai illa.

Unknown said...

அய்யோ

எங்க வீட்டுக்கு நான் காசு கொடுத்து வாங்கின டிவி என்னுதில்லியா - அவருதா.. டிவி சேனல் பத்தி சொன்னாரா

அப்ப்டின்னாலும் போகோ, அனிமல் பிளானட், கார்டூன் நெட்வொர்க், ஜெடிக்ஸ் இதெல்லாமும் அவருதா

ஜெடிக்ஸ்ல வர்ற முகமூடி வீரர்கள் இவரும் காடுவெட்டி குருவுமா