பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2008

மருதநாயகத்தின் மறுபெயர் மர்மயோகி - கமல்

பிரமிட் சாய்மிரா நிறுவனத்துடன் உலக நாயகன் கமலஹாசன் இணையும் முதல்படம் மர்மயோகி ஆகும். இந்த படத்தின் கதை , திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கமல் கவனிக்கிறார். ரூ 100 கோடி செலவில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் துவக்க விழா ஜூலை 13ல் வெகுவிமரிசையாக நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். மருதநாயகம் படத்தையே கமல் மர்மயோகி என்ற பெயரில் எடுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த படம் முதலில் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் தயாரிக்கப்போவதாக இருந்தது தற்போது பிரமிட் சாய்மிராவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
( தகவல்: தினமலர் )

பிரமிட் சாய்மிராவுக்கு ஆல் தீ பெஸ்ட். வலைப்பதிவர்கள் எல்லா ரெடியா இருங்க விமர்சனம் எழுத :-)

5 Comments:

Anonymous said...

Dont you know that Era.Murkuan has
confirned his participation in discussions for this film.I am sure that Idlyvadai will be at the function. I look foward to holding you by your shirt collar :)

Anonymous said...

இட்லி வடை

யு ஆர் டூ லேட். அரவிந்தன் நீலகண்டன் படம் வருவதற்கு முன்பாகவே விமர்சனம் எழுதிக் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்

கீழே படியுங்கள்

http://arvindneela.blogspot.com/

ஆபாச பொய்யன் கமல்ஹாசன்

அண்மையில் கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படம் இந்து முன்னணியினரால் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் இத்திரைப்படத்தில் வைணவக்கோவில் சிலைகளை ஒரு சைவ அரசன் இடிப்பதாகக் காட்டப்பட்டிருப்பது என்கிறார்கள். பொதுவாக எந்த திரைப்படத்தையும் தடை செய்வது அல்லது நூலை தடைசெய்வது என்பதெல்லாம் தவறான விசயங்கள். அந்த முறையில் இந்த தடை கோரிக்கையும் கூட தவறானது. அல்லது இந்த திரைப்படம் நடக்கும் திரையரங்குகளை தாக்குவது போன்றதெல்லாம் சரியான எதிர்ப்பு அல்ல. இதில் இந்து இயக்கங்கள் செய்ய தவறியுள்ள காரியங்கள் பல உள்ளன.
கமல் ஹாசன் தொடர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக செயல்பட்டு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்து இயக்கங்கள் அமைதி காத்து வந்துள்ளன.

உதாரணமாக 'ஹே ராம்' திரைப்படத்தில் இந்துக்களின் பாரம்பரிய ஸ்வஸ்திகம் நாஸி ஸ்வஸ்திகாவாக மாறும் ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்யத் தூண்டும் ஒரு அரசரின் வீட்டில் ஒரு பக்கம் அடால்ப் ஹிட்லர் படமும் மறுபுறம் சாவர்க்கர் படமும் இருப்பதாக ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அதே எடையுள்ள துப்பாக்கியை தேடியதாக பீற்றிக்கொள்ளும் கமல்ஹாசன் (அட பைத்தியகாரா!), எப்படி சரித்திர பிழையான அதே நேரத்தில் அரசியல் முத்திரை குத்தும் இந்தக் காட்சியை தன் படத்தில் சேர்த்தார்?1 இந்து இயக்கங்கள் வாய் மூடி மௌனித்தன.

அதே போல 'அன்பே சிவம்' படத்தை எடுத்துக்கொண்டால் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுகிற முதலாளி வில்லனாக வருவார். இந்தியாவில் விபத்து நடக்கிற இடத்திலெல்லாம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி பிரசன்னமாகி சேவை செய்வார். ஒரிசாவானாலும் சரி, டெல்லி விமான விபத்தானாலும் சரி கேரளத்தில் ரயில் கவிழ்ந்த இடமென்றாலும் சரி போபால் விஷவாயு விபத்தென்றாலும் சரி அங்கெல்லாம் உடனடியாக விரைந்து சென்று விபத்துக்குள்ளானவர்களுக்கு எவ்வித பேதமும் இன்றி சேவையாற்றிய ஒரு சேவை இயக்கம் இந்தியாவில் உண்டு.2 உலகமே அந்த விஷயத்தில் அவர்கள் செய்கிற சேவையை வியந்து பாராட்டியுள்ளது. ஆனால் தனது திரை சித்திரத்தில் சேவை என்றாலே கிறிஸ்தவம், இந்து தருமம் என்றாலே ஆஷாடபூபதிகள் என பதிய வைத்தார் கமல்ஹாசன். இந்து இயக்கங்கள் வாய்மூடி மௌனித்தன.

அடுத்ததாக மருதநாயகம் பட முன்னோட்டக் காட்சிகள். அதில் 18 ஆம்நூற்றாண்டில் தீண்டாமையை கர்மா நியாயப்படுத்தியதென்றும் அதனை எதிர்த்த ஒரு புரட்சியாளனாக மருதநாயகம் என்பவன் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தை தழுவினான் எனவும் காட்டப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் (மற்றெந்த நாடுகளை போலவும்) இஸ்லாமிய ஆளும் வர்க்கமும் சரி உலேமாக்களும் சரி மக்களிடையே பிறப்படிப்படையிலான பேதங்களை பேணினர், ஆதரித்தனர்.3 ஏன் 1910களில் கூட அய்யன் காளி போன்ற தலித் தலைவர்கள் சம உரிமை நாடி நடத்திய போராட்டங்களை இந்து தேசிய அமைப்புகள் ஆதரித்தன. ஆனால் முஸ்லீம்கள் மேல்சாதி வெறியர்களுடன் சேர்ந்து அவர்களை தாக்கினர்.4

கதாநாயகனாக கமல் ஹாசன் முன்னிறுத்தும் கான்சாகிப் வெள்ளையர்களின் அடிவருடியாக செயல்பட்டவன். இன்று தலித்துகளாக கொடுமைப்படுத்தப்படும் சமுதாயத்தினருக்கு நீதியும் அந்தஸ்தும் வழங்கிய விடுதலை வீரன் பூலித்தேவன் மீது ஆங்கிலேயருக்காக படையெடுத்த கூலிக்கும்பல் தலைவனாக செயல்பட்டவன் கான்சாகிப். 1759 நவம்பர் 6 ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலை கோட்டையை கூலிப்படைத்துரோகி காட்டாளன் கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பினான்.மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் பூலித்தேவரை தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப்பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக்கும்பலை தாக்கலாயினர். பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரதிலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக்கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது. வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுக கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் 'வீரர்களுக்கும்' வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரை புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறி பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது. பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறி குமுறி கண்ணீர் சிந்தினார் என்பதை பூலித்தேவர் சிந்து நமக்கு சொல்கிறது.5

ஆக, உண்மை இவ்வாறிருக்க ஒரு மோசடியான வரலாற்றினை ஏற்படுத்த கமல்ஹாசன் முனைகிறார். இதற்கும் இந்து இயக்கங்கள் அமைதி காத்தன. சரி இப்படியெல்லாம் இந்து சமுதாயத்தை கீழ்மைப்படுத்தி பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன் அப்படி சமுதாய அக்கறை உடையவரா என்றால் அவரது முந்தைய படங்கள் எல்லாவித ஆபாச காட்சிகளும் கொண்டு பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்வது உட்பட பல அசிங்க காட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படம் ஒன்றில் மிக மூன்றாந்தரமாக நடித்து அந்த திரைப்படம் வெளியே வராமலிருக்க பிரம்ம பிரயத்தனம் பட்ட செய்தியையும் மக்கள் அறிவர்.

அவரது 'தேவர் மகன்' திரைப்படம் தலித் மக்களுக்கும் தேவர் சமுதாய மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பல மோதல்களில் ஒரு காரணியாக செயல்பட்டது. ஆக, எவ்விதத்திலும் சமுதாய அக்கறை இல்லாதவரான இந்த நடிகர் இந்து சமுதாயத்தை மட்டும் தாக்கி படங்களை எடுத்து தன்னை ஏதோ சமுதாய அக்கறை உடைய அறிவுசீவியாக காட்டுவது ஏன் என்ற கேள்வியை இந்து இயக்கங்கள் தொடர்ந்து மக்களிடையே எழுப்பி இருக்க வேண்டும். அப்படி எழுப்பியிருந்தால் இன்று இத்தகைய ஒரு ஆபாச நடிகரின் மூன்றாந்தர பிரச்சார தாக்குதலுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

சரி இனி இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்டும் காட்சியைக் குறித்து பேசலாம். கிருமி கண்ட சோழன் என்கிற சோழன் சைவத்துக்கு ஆதரவாக வைணவத்துக்கு எதிராக நடந்ததாக ராமானுஜரின் சரித்திரம் கூறுகிறது. யார் இந்த கிருமி கண்ட சோழன்? இவன் எத்தனை காலம் ஆண்டான்? பொதுவாக இரண்டாம் குலோத்துங்க சோழன் கிருமி கண்ட சோழன் என கருதப்படுகிறான். முதலாம் குலோத்துங்க சோழனின் குலதெய்வம் நரசிம்மர் என ஒரு சாசனம் சொல்வதைச் சுட்டிக்காட்டும் அகழ்வாராய்ச்சியாளர் நாகசாமி இந்த நிகழ்ச்சியே நடந்ததா என கேள்வியை எழுப்புகிறார். தில்லையில் இருந்த விஷ்ணு சிலை வன்கொடுமையாக அகற்றப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட அத்துடன் ஒரு வைணவரையும் அந்த தெய்வ விக்கிரகத்துடன் கட்டி கடலில் வீசியதாக சரித்திரம் சொல்லவில்லை. மேலும் இந்த சமயப்பொறையின்மை விரைவில் நீங்கிட மீண்டும் விஷ்ணுவின் சிலை தில்லையில் நிறுவப்பட்டது என்பதையும் சரித்திரம் சொல்லுகிறது.

சரி இந்த காட்சி மூலம் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்கள் மனதில் ஒரு விசயத்தை பதிக்க விரும்புகின்றனர். அதாவது சிலைகளை உடைப்பதெல்லாம் வரலாற்றில் சகஜம் என்பதுதான் அது. ஆனால் உண்மை என்ன? ஏக இறை மதங்களான இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகியவற்றில் சிலைகளை உடைப்பதென்பது ஒரு இறையியலாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு சில அரசர்கள் அதற்கு விதிவிலக்காக உள்ளனர். அதே போல அனைத்து மதங்களையும் அரவணைப்பதென்பதே இந்து அரசர்களின் பொதுத்தன்மையாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு சில மன்னர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். இஸ்லாமிய-கிறிஸ்தவ அரசர்களின் விதியான சிலை உடைப்புகளை நியாயப்படுத்த விதிவிலக்கான ஒரு சில அரசர்களின் சில கேள்விக்குரிய சம்பவங்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்க எடுக்கப்படும் முயற்சியே கமல்ஹாசன் போன்ற ஆபாச கலைஞர்கள் செய்யும் வக்கிர செயலாகும். இதனை இந்து சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இயக்கங்கள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் போன்ற அயோக்கிய சிகாமணிகளை பொதுவிவாததத்துக்கு அழைத்து இவர்கள் முகத்திரைகளை கிழிக்க வேண்டும். மாறாக கிறிஸ்தவ-முஸ்லீம் பாணியில் திரைப்படத்தை தடைவிதித்து இந்த கோமாளி கூத்தாடி ஆபாச அயோக்கிய சிகாமணியை ஒரு 'கலையுலக' தியாகியாக மாற்றிவிடகூடாது.

இந்து இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?


கமல் ஹாசனை பொதுவிவாதத்துக்கு அழைக்கவும். அவ'ரி'டம் அவரது இரட்டை டம்ளர் முறையை மக்களுக்கு தெளிவுபடுத்த சொல்லவும்.

பூலித்தேவன், வெண்ணிக்காலாடி போன்ற சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரத்யட்ச உண்மை வரலாறுகளை மறைத்து ஆதாரமில்லாத வெறிபிடித்த வெறுப்பியல் பிம்பங்களை கமல்ஹாசன் உருவாக்க முயல்வதன் காரணத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதனை கமல்ஹாசனை கேள்விகேட்டு மக்கள் முன்னால் இந்த ஆபாச கோமாளியின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.

கமல்ஹாசன் பெண்களை இழிவுபடுத்தி நடித்துள்ள காட்சிகளை அவ'ரி'டம் செய்யும் பொது விவாதத்தின் போது போட்டுக்காட்டி அவ'ரை' இந்துமக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

அத்திரைப்படத்தில் ஒரு வைணவரை கடலில் மூழ்கடிப்பது போல காட்டியுள்ளதற்கு சரித்திர ஆதாரத்தை கமல்ஹாசன் காட்ட சொல்லவேண்டும். இல்லையென்றால் அத்திரைப்படத்தை 'மக்களில் ஒரு சாரார் மீது பொய்யான வெறுப்பு பிரச்சாரம்' செய்வதாக கூறி வழக்கு தொடரவேண்டும். நஷ்ட ஈடு கேட்கவேண்டும்.குறிப்புகள்:1. வீர சாவர்க்கர் தாம் எழுதிய ஹிந்துத்துவா எனும் நூலில் குறிப்பிடுகிறார்: "துருவம் முதல் துருவம் வரை மானுட இனம் ஒரே குலமே ஆகும். மற்றெல்லா பிரிவினைகளும் மனிதர்கள் ஏற்படுத்தியதே ஆகும்." நாசி இனவாதக் கோட்பாட்டுடன் முழுக்க முழுக்க வேறுபடும் நிலைபாடு இது.

2. உதாரணமாக, ரஷீதா பகத் (தி ஹிண்டு பிஸினஸ்லைன்) எழுதுகிறார்: "RSS, an organisation which can always be counted upon to swing into action at any scene of disaster, have rallied around to demonstrate the indomitable human spirit"

3. உதாரணமாக காண்க அஃப்ஸார், உமர் சலீம்கான் மற்றும் முகமது ஹபீப்பின் மொழி பெயர்ப்பு ஸியாவுதீன் பரானியின் பத்வா-இ-ஜகாந்தாரி (கிபி 1358-9) பக்.134.

4. நிர்மால்யா, அய்யன்காளி, பக்.96

5. ந.இராசையா, மாமன்னன் பூலித்தேவன்

வெங்க்கி said...

அனானி.. உங்கள் மேற்கோள்..சூப்பர் !! வடை ஊசி போச்சா ??

:)))

Unknown said...

வெறும் சினிமாவுக்கு இவ்வளவு உணர்ச்சிகரமான பின்னூட்டங்களா

என்னே சினிமாவின் பலம்..

சினிமா உலகம் இப்படியே பலமாகிக் கொண்டிருக்க விமர்சிக்கும் அனானிகள் பலவீனமாகின்றனர்

Unknown said...

வெறும் சினிமாவுக்கு இவ்வளவு உணர்ச்சிகரமான பின்னூட்டங்களா

என்னே சினிமாவின் பலம்..

சினிமா உலகம் இப்படியே பலமாகிக் கொண்டிருக்க விமர்சிக்கும் அனானிகள் பலவீனமாகின்றனர்