பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 29, 2008

மதம் மாறவில்லை, மனம் மாறிவிட்டேன் - நக்மா

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்ற நியூஸை தொடர்ந்து
மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா என்ற செய்தி வந்தது இப்ப அதை தொடர்ந்து - இப்போது மதம் மாறவில்லை, மனம் மாறிவிட்டேன் என நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜெபமுகாமில் பிரசங்கம் செய்த நடிகை நக்மா, கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது....


கிறிஸ்தவத்திற்கு வந்த பின்னர்தான் என் மனம் அமைதியாக உள்ளது. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு இயேசுவைக் குறித்து பிரசங்கம் செய்ய யார் கூப்பிட்டாலும் செல்வேன்.

கூட்டங்களில் நானாக எதுவும் பேசவில்லை. கடவுள் எனக்கு கொடுத்துள்ள ஞானத்தினால் பேசுகிறேன். இதற்கு தனியாக நான் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றார்.

ஆங்கிலத்தில் பிரசங்கம்: முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ ஹிந்தி பாடல் ஒன்றும், இயேசுவே என் ஆண்டவர் என்ற தமிழ்ப் பாடலையும் பாடி பிரசங்கம் செய்தார்.

ஆங்கிலத்தில் அவர் செய்த பிரசங்கம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பின்னர், நக்மா சிறப்பு ஜெபம் செய்தார்.

கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

1 Comment:

Anonymous said...

பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் லூஸ் மோகன், குமரி முத்து போன்றோர் இதுபோன்ற பிரசங்க கூட்டங்களுக்கு வந்து ஏசுவை நம்பியதால் தங்களுக்கு "ரட்சிப்பு" ஏற்பட்டது என்று பேசி வந்தார்கள். இப்போது லூஸ் மோகன், குமரி முத்துவிற்கு போட்டியாக நக்மா வந்திருக்கிறார்.

ஸீரியல்களில் நடிப்பதில் கால்வாசி செய்து அதற்குப் பதிலாக ஆண்டவரின் "கருணையை" சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம். நமக்கென்ன தெரியும்? ஆண்டவரே அனைத்தும் அறிவார்.