பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2008

ஜெ புகார் - அழகிரி பதில்

சன் குழும சேனல்களை பெறுவது தொடர்பாக சுமங்கலி கேபிள் விஷனுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத் துக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என மு.க. அழகிரியின் ராயல் கேபிள் விஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் கேபிள் மற்றும் சுமங்கலி கேபிள் நிறுவனங்கள் பரஸ்பரம் அறிக்கைப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவதில் தாமதம் ஏற்பாடுவது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக ராயல் கேபிள் விஷன் வெளியிட்ட அறிக்கை...."ராயல் கேபிள் விஷன் குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான, உண்மைக்கு புறம்பான ஒரு அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட் டுள்ளார்.

அறிக்கையில் அவர் தெரிவித் திருப்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும்.
கடந்த 9ந் தேதி தொடங்கப்பட்ட ராயல் கேபிள்விஷன் நிறுவனம் மக்களுக்கும், கேபிள் ஆப்பரேட் டர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் உயரிய தொழில்நுட்ப சேவை வழங்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

எங்களை விரும்பி, அணுகி தாங்களாகவே இணைத்துக் கொண்ட "ஹெட் என்ட், "லிங்க்' ஆப்பரேட் டர்களுக்கு எங்களது சேவை தொடர்கிறது. சன் குழுமத்தின் கட்டணச் சேனல் களை பொறுத்தவரை சட்டப்பூர்வ மான அணுகுமுறையை மேற்கொண்டு இறுதியில் வெற்றி பெறுவோம்.

இது ஆர்.சி.வி. மற்றும் எஸ்.சி.வி எனும் இரு வணிக நிறுவனங்களுக் கிடையிலான பிரச்சனை, இதில்அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத்திற்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லை' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
( செய்தி: மாலைசுடர் )

0 Comments: