பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 18, 2008

மர்மயோகிக்கு பிறகு மருதநாயகம் - கமல் பேட்டி

தசாவதாரம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக கமல்ஹாசன் ஐதராபாத் சென்றிருந்தார். அங்கே கமல் பேட்டி....

கே:- `தசாவதாரம்' படம் எடுக்கும் ஐடியா எப் படி வந்தது?

பதில்:- தசாவதாரம் படம் எடுப்பது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். இப்படத்தை எடுத்தது கஷ்டமான காரிய மல்ல. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

கே:- நீங்கள் மிகப் பெரிய பாராட்டாக எதை கருதுகிறீர்கள்?

ப:- நான் எப்போதுமே விரும்புவது ரசிகர்களின் பாராட்டைத் தான். அவர்கள் பாராட்ட பாராட்டத்தான் நான் வளர்ந்து கொண் டிருக்கிறேன். ஒரு கலைஞ னுக்கு ரசிகர்கள் பாராட்டு தான் முக்கியம்.

கே:- `தசாவதாரம்' படம் தொழில் நுட்பரீதி யாக நன்றாக உள்ளது. ஆனால் கதை பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார் களே?
ப:- குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதே இல்லை.

என்னைக் பொறுத்த வரையில் `தசாவதாரம்' படம் மிக நன்றாக வந்துள் ளது. அதில் எற்த குறை யும் காணமுடியாது. அந்த அளவுக்கு மிகவும் கவன மாக இப் படத்தை எடுத்தி ருக்கிறோம்.

கே:- இப் படம் வேகமாகச் செல்வதால் சாதாரண ரசிகர் களால் புரிந்து கொள்ள முடியாதே?

ப:- எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். படம் வேகமாகச் செல்வதால் உங்களுக்கு சந்தேகம் வந்தி ருக்கலாம்.

விரைவில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக எனது கனவு படமான "மருதநாய கத்தை'' பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கி றேன். இப் படத்தை மர்ம யோகிக்கு பிறகு எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

கே:- தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?

ப:- ஒரு தாயிடம் சென்று நீங்கள் பெற்ற 10 குழந்தைகளில் எந்த குழந்தை பிடிக்கும் என்று கேட்டால் அவள் என்ன பதில் சொல் வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி.

கே:- சிரஞ்சீவி அரசிய லுக்கு வருவதை வரவேற் கிறீர்களா?

ப:- சிரஞ்சீவி எனது நெருங்கிய நண்பர். அவர் சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

4 Comments:

கோவை விஜய் said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Anonymous said...

கமல்ஹாசன் பற்றிய பதிவில் அவரோட போட்டோ ஒன்று கூட போடமாட்றீங்க. ஏன்?


உங்களுக்காக மருதநாயகம் டிரைலர் உங்களுக்காக:

http://www.youtube.com/watch?v=ytQQm8J7PHY&feature=related

டிரைலரே சூப்பரா இருக்குது.

மேலும் இதையும் கொஞ்சம் பாருங்க:

Never-before-seen Marudhanayagam stills!!!

http://www.allthingskamal.info/blog/2008/06/05/never-before-seen-marudhanayagam-stills/#comment-2943

Anonymous said...

பலவிஷயங்களை ஜெயலலிதாவிடம் பேசிய சுவாமி, 'டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தாலும் அ.தி.மு.க. கூட்டணியில் எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது...' என்ற கோரிக்கையை வைத்தாராம். ஜெயலலிதாவும் அதனை ஆமோதித்தாராம்!'' -

http://www.vikatan.com/jv/2008/jun/22062008/jv0101.asp

நாரத முனி said...

it seems "marudhanaayakam" & tata nano car will be releasing together