பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 12, 2008

தசாவதாரம் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்.

குமுதத்தில் வந்த முதல் தசாவதார விமர்சனம். ( warning! may contain spoilers )

10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம்.

முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையைப் பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகுப் பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.


சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,
மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,
ஜப்பானிய கராத்தே மாஸ்டர்,
பஞ்சாபி கஜல் பாடகன்,
நியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்.
கத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,
எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,
நவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,
இழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி

என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது.

இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரஙகநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாகப் புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், "ஓம் நமசிவாய" என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்' என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் 'சொல்லி விடுங்கள்' என்று கண்ணீர் விட, 'ஓம்' என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, "நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழியத் தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கடஅவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.

தமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக் ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாகக் கைகோர்க்கிறது.

பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்கத் துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை.

தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்!

பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் "பூவராகன்" கமல் வித்தியாசப்பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத் துறை அதிகாரியாக வரும் ' தெலுங்கர்' கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.

அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும் , துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல் !

"முகுந்தா" பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். "உலகநாயகனே" பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகதியத்தைக் காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம்.

படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம். கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.

தரம். உலகநாயகத் தரம். உலகத் தரம்.


ப்ளஸ்:

* கமலின் நம்பி அவதாரம் நம்மை 12ஆம் நூற்றாண்டு சோழர் ஆட்சிக்கே அழைத்துச் செல்கிறது. சைவ வைணவ போராட்டத்தின் வலியைப் பதிவு செய்ததின் மூலம் சரித்திர நாயகனாகிறார் கமல்.

* ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழில் ஒரு படம்.

* டெக்னிகல் மிரட்டல் அதிகம். லைட்டிங், எடிட்டிங், செட்டிங், பைட்டிங் எல்லாம் செம பிட்டிங்.

நன்றி: குமுதம்

இதை எனக்கு அனுப்பிய HEARTAவிற்கு ஸ்பெஷல் நன்றி.

யார் எல்லாம் படம் பார்த்தார்கள் ? பார்க்க இங்கே படங்கள்

ஓவர் ரியாக்ஷன்ஸ்
The first responses to Dasavatharam:

Surya: “Stunning. I’m not going to be able to sleep for a month, Dasavatharam will haunt my dreams. “Kamal’s Annachi character is his funniest performance ever.”

Jyothika: “Marvellous. I’ve never seen anything like it”.

Karthi: “Dasavatharam is tremendous – it has shaken me up.

Monorama: “I cried.”

Director K.Balachandar didn’t speak – he ran to Kamal and tried lifting him up physically to show his applause. Kamal quickly stopped him and they hugged.

K.S Ravikumar was overjoyed, and said: “No movie of mine has met with such an overwhelming reaction. I’m ecstatic.” All these stars voiced their reactions after a special screening this morning for important people in the film industry. There were several others who emerged from the screening, stunned and congratulating Kamal for pulling of what could prove the movie of the year.

இட்லிவடை விமர்சனம் நாளை :-)

11 Comments:

Anonymous said...

தூள் !

சூப்பர் !

இட்லி வடைக்கு நன்றி !!

கமல் தனது குரு பாலசந்தரோடும், சூர்யாவோடு இருக்கும் படங்கள், ரஜினியோடு இருக்கும் படங்கள் சூப்பர் !! எப்பொழுது முதல் ஹிண்டு இப்படி போட்டோக்கள் அப்லோடு செய்ய ஆரம்பித்தார்கள்?

நீங்க செம பாஸ்டுங்க. குமுதம் ஆபிஸ்ல "உளவாளி" யாராச்சும் வைத்திருக்கிறீர்களா?

திரைக்கதை அமைப்பதில் மன்னனாக இருக்கும் கமல்ஹாசனால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.

படம் மிகப் பெரிய ஹிட் ஆகும்.

இட்லி வடையாரே ! உங்களுக்கும், "கமலுக்கும் வாழ்த்துகள் !!!"

sakthi said...

when i saw the KUMUDHAM posters today morning about this review.
I know i will definetly will have this in IDLYVADAI . thank u idly vadai for this.

BEST OF LUCK KAMALJI.

I wish this film to be the BLOCK BUSTER MOVIE of evertime in tamil industry. It should beat masala like SIVAJI.

Bleachingpowder said...

என்னமோ போங்க...கடைசியா கமல் படம் First day பார்த்தது ஆளவந்தான் தான். கோயம்புதூர் ராகம் theatreல மதியம் 2 மணி காட்சி,பொட்டி வந்தது இரவு 11 மணி. அதுக்குள என்னோட நண்பன் கமலோட தீவீர ரசிகன் நாலு தடவ வாந்தி எடுத்து (எம்மேலதான்) கடைசில படம் போட்ட ஒடனே தூங்கிடான்(புத்திசாலி)

கடைசியில் நான் தான் அந்த கொடுமையை முழுசா பார்த்து தொலைச்சேன்.

அதிலிருந்து கமல் படம் Review பார்க்காம போறதில்ல. அந்த Friend கூட எந்த படமுமே பார்க்கறது இல்ல

Bleachingpowder said...

//I wish this film to be the BLOCK BUSTER MOVIE of evertime in tamil industry. It should beat masala like SIVAJI.//

அட ! என்னதான் உயிர கொடுத்து படம் எடுத்தாலும், வெற்றியின் அளவுகோளா ரஜினி படத்தை தான் எடுக்க வேண்டியிருக்குல.

மொதல்ல ஆஸ்கர் ரவி போட்ட காச எடுக்கட்டும்...பாவம்

Anonymous said...

//ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழில் ஒரு படம்?//

ஹாலிவுட்..ஹாலிவுட்.ஏன்டா எப்ப பார்த்தாலும் ஹாலிவுட்தானா? ஹாலிவுட் மாதிரி நீங்க எதுக்குடா எடுக்குறீங்க? நாங்க பேசாம ஹாலிவுட் படமே பார்த்துக்குறோம்.

தமிழ் சினிமாகாரனுங்க, பத்திரிக்கைகாரங்க எப்ப இந்த பில்டப்ப விடப் போறனுங்களோ தெரியல.

Nilofer Anbarasu said...

இட்லி வடையோட வீச்சு ரொம்ப அதிகமாயிடுச்சு.....நிறைய பேரு நாளைக்கு படிப்பாங்க.....அதுனால படத்தோட கதையை முழுசா சொல்லாம சுவாரஸ்யமா உங்கள் விமர்சனம் அமையட்டும்........

Anonymous said...

Finally, here comes the magnum opus of the greatest Star Kamal Haasan. His dedication for films is inevitable and especially his hard work has landed him up over here to this peak. Dasavatharam, the film is ready hit the screens by tonight at few theatres and morning in others. Few hours left for the release and Kollywood Today brings you some of the exciting analysis of the movie comparing to the past of Kamal Haasan's previous films.

First, let us glimpse through the box-office collections for Kamal Haasan's films. Aascar Ravichandran with a bold attempt has released the film at 22 centres in Chennai alone in order to overbeat Sivaji. But, when it comes to comparison between Rajnikanth and Kamal Haasan, it is superstar who always tops the chart.

Before couple of decades, Manithan and Nayagan released together. With no doubt, Nayagan won the accolades for the stunning performance of Kamal Haasan, but superstar had his turn to picking the collections. Similar scenario showed up when Guna and Thalapathy were released together. Never seen before performance from Kamal Haasan was critically acclaimed, but Rajnikanth was again there to easily go for the box-office collections while Kamal couldn't.

Though Michael Madhana Kama Rajan had Kamal Haasan playing 4 different roles, it was really a good entertainer where it was just not the show of Kamal alone. The film had equal and powerful characterizations drawn for Manorama, Oorvasi, Nagesh, Bheem Boy and many others. Panchu Arunachalam produced the movie and Seengitham Srinivasan directed it.

But Dasavatharam has 10 roles and for the running length of 2hrs 45mins, you are going to see only Kamal and Kamal. Be it action, romance, comedy or anything, its only Kamal who will be donning it.

Might be that is the reason why Kamal Haasan cleverly handed over the protocol of direction to KS Ravikumar. He is the director who can well handle such kind of scripts in an entertaining manner adding commercial elements.

Finally, we would like to mention about the childish plays of Aascar Ravichandran. Be it any theatre in Chennai, none of the counters opened booking from Friday. But all the audiences were completely disappointed to hear that booking are opening only from Monday. The fact is that Aascar Ravichandran himself has blocked all the tickets for the first 3 days in order to create hype for his film.

Aascar Ravichandran must understand its not a matter of creating hypes, but a good film made for the audiences will always have excellent results. Also it is noteworthy that some of the journalists and photographers who were there at the theatres early on Sunday morning to take a note on crowd lining up, it was a complete disappointment to see that there were no sufficient crowd.

Then, one of the managers for the theatre located at Central Chennai had his staffs getting in 100 people with more difficulty to pose in line for the photographs. At this moment, speaking on this, the same manager says that people flocked in crowd to book the tickets for Sivaji at around 2 in the morning…

So, Let's wait and see how does Aascar's technique works out. If the film clicks well at the box-office, it is not due to his works of gimmicks, but the hard work of Kamal Haasan and K.S. Ravikumar….

Kollywood Today wishes for the best success of Dasavatharam bring more light into Kollywood.

http://www.kollywoodtoday.com/news/dasavatharam-pre-release-analysis/

sakthi said...

HI All

This is SAKTHI again. I saw the movie yesterday night at9:00 in Ambathur Rakie Cinemas.

I never saw this kind of movie in TAMIL cinema.
All 10 avatars were perfectly created and perfectly matched in the screen play.

HATS OF KAMALJI, U R the Great actor in Indian film industry and also u r the best film technician in the Indian film industry.

Anonymous said...

Aiya
+ ai sollittu
- ai vittuteengalae

enna kaaranam?

Anonymous said...

Kamal favored review...
I spent $15 and not worth watching even at $1. average movie.
For $15 I can watch two Hollywood movies. Kamal shoud learn a lesson.

Gowri Shankar said...

இது நடுநிலையான விமர்சனம் இல்லை. படத்திலிருக்கும் அப்பட்டமான குறைகளைக்கூட கண்டுகொள்ளாமல் விமர்சனம் பண்ணியிருக்கிறார்கள். ஹாலிவுட் தரம் என்று ஆயிரம் முறை பேசுகிறார்கள். அவர்கள் ஒரு ஹாலிவுட் படத்தையாவது பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் படங்களில் இது ஒரு மைல்கல் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹாலிவுட் தரத்திற்கு வரவில்லை. கிராபிக்ஸ் ஏமாற்றம் தான்.

சிவாஜியை மசாலா படம் என்று கூறியிருக்கும் நண்பர் சக்திக்கு

இந்த படமும் மசாலா படம் தான். 'அன்பே சிவம்' மாதிரி இது ஒன்றும் கிளாசிக்கல் தமிழ் சினிமா கிடையாது.