பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 10, 2008

அ அ - க க

வலைப்பதிவு ஆரம்ப காலத்தில் அகர தூரிகை என்று அருண் வைத்தியநாதன் எழுதிக்கொண்டிருந்தார், 'நச் பூமராங்' நல்லா எழுதுவார். 2005 அப்பறம் அவர் பிளாக் பக்கம் திரும்பி பார்க்கலை. சில குறும்படங்களை எடுத்தார், சில மாதங்களுக்கு முன்பு அச்சமுண்டு அச்சமுண்டு என்று ஒரு சினிமா விளம்பரத்தை பார்த்த போது அட நம்ம 'அருண் வைத்தியநாதன்' என்று ஆச்சரியப்பட்டேன். திரில்லர் படமாம், தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர் வேற என்ன எடுப்பார் :-)
இவர் இவ்வளவு தூரம் முன்னேறியதற்கு காரணம், இவ்வளவு நாள் வலைப்பதிவு பக்கம் வாராதது தான் - படம் பெயர் அச்சமுண்டு அச்சமுண்டு சரவணாஸ் ஸ்டோர்ஸ் விளம்பரம் புகழ் ஸ்நேகா நடிக்கிறாங்க. இவங்க இப்ப அமெரிக்காவில் நடிக்க போயிருக்காங்க. அங்கே அவர் நடித்த தெலுங்கு படத்தை ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்திருக்காங்க. படம் பார்க்க டிக்கேட் அனுப்பிவீங்களா அருண் ?

சில வருடங்கள் முன்பு ரம்பா குறித்த செய்யுள், 9 கட்டளைகள் என்று எழுதிக்கொண்டிருந்த பா.ராகவன் என்ற பா.ரா திடீர் என்று கடையை மூடிவிட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு திடீர் என்று திரும்பவும் வந்துவிட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் கடையை ஓப்பன் செய்தவுடன் இவரை தேடி சினிமா வாய்ப்புக்களும் வந்து சேர்ந்தது. கனகவேல் காக்க என்ற படத்தில் ஐயா தான் வசனம், நாளை தினத்தந்தி விளம்பரத்தில் பார்க்கலாம். அப்பறம் சிவசக்தி - சன் டிவி சீரியல் வேற. ஜெயமோகன் - சாரு மாதிரி இவருக்கு இன்னும் ஜோடி அமையவில்லை. சீக்கரம் அமைய இறைவனை வேண்டுகிறேன் :-)

மக்களே இந்த இரண்டு செய்திகளிலிருந்து உங்களுக்கு என்ன புரிந்தது ?

4 Comments:

Anonymous said...

'கனகவேல் காக்க '
ஏதோ பக்தி பட டைட்டில் மாதிரியிருக்கு.
இட்லிவடை என்ன செய்யறார்ன்னு
சொல்லவே இல்லையே ?

எஸ்.கே said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான் said...

பத்ரி (இட்லி), பாரா (வடை) ரெண்டு பேருக்கும் இப்போதெல்லாம் வலைப்பூவில் எழுத நிறைய நேரம் கிடைக்கிறது என்று!

Litmuszine said...

"//பத்ரி (இட்லி), பாரா (வடை) ரெண்டு பேருக்கும்//"
சத்யாவை விட்டுடீங்க!! மாயவரத்தாரே .....

பத்ரி, பாரா இருக்காங்கன்னு தெரியலே...
சத்யாதான் சரக்கு மாஸ்டரா !!??