பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 10, 2008

தசாவதாரம் கியூ காட்சிகள்

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே....உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐ. நா வும் உன்னை அழைக்கும் !" என்ற அருமையான பாடல் வரிகளை கொண்ட தசாவதாரம் படம் ஜூன் 13 ரிலீஸ்.


தமிழ் படங்களில் உலக தரம் இருக்குதோ இல்லையோ உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார்கள்.


அட கூட்டம் குறைவு என்று நினைக்காதீங்க சத்தியம் தியேட்டர் முன் பக்கம் கியூ, பின் பக்கம் வரை வந்துட்டுது.


இவர்களுக்கு நிச்சயம் டிக்கெட் கிடைக்க போவதில்லை. இருந்தாலும்...


நாங்க ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களும் கியூ வரிசையில் நின்றார்கள்.


இந்த மாதிரி எவ்வளவு போர்டு பாத்திருக்கிறோம்.


தேவி தியேட்டர் வாசலில் அதே மாதிரி பலகை. திங்கள் வரை House Full, செவ்வாய் கிழமை திருட்டு விசிடி ரெடியாகிவிடும் என்று சொன்னார்கள்.


இதை எல்லாம் பார்த்துவிட்டு ரஜினி இமயமலைக்கு ஓட்டிட்டார் என்று நினைக்க வேண்டாம் :-)7 Comments:

IdlyVadai said...

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த
`தசாவதாரம்' படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

Anonymous said...

எல்லாருக்கும் வந்த இந்த மின் அஞ்சல் உங்களுக்கும் வந்துட்டுதா?

எனக்கு நண்பர் மூலம் மதியம்தான் கிடைத்தது.

சுடச்சுட அதை பதிவாக்கிட்டிங்க.

'தசாவதாரம்' சினிமா வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 'கேவியட்' வாங்கிவிட்டார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
இந்த லிங்க் பாருங்க.
http://dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=696&cls=row4&ncat=IN

சிவாஜியை விட ஓபனிங் மற்றும் எல்லா விதத்திலும் தசாவதாரம் தூக்கி சாப்பிட்டு விட்டது. சிபி.காம் சொல்லுது.

தசாவதாரம் அதன் பிரம்மாண்டம், கமல் மற்றும் அதிகரிக்கும் 10 கெட்-அப் பற்றிய 'சஸ்பென்ஸ்' காரணமாகவே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ரஜினியை ஏன் இதில் இழுக்கறீங்க? ரோபோ 2010 ல் வரப்போகுது.

கமலுக்கு "மர்மயோகி" வரப்போகுது. இது தொடரும்.

பெண்கள் முன்பதிவு க்யூ, அதுவும் கமலின் படத்திற்கு ஆச்சர்யமானதுதான்.

திருட்டு சி.டி பற்றி எழுதி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இட்லி வடையாரே ! அந்த சிவப்பு, கருப்பு கோடு போட்டு வரிசையில் நிற்பது நீங்கதானே? உண்மையைச் சொல்லுங்க. டிக்கட் வாங்கிட்டீங்களா? சொலுங்க.

M Arunachalam said...

IV,

This write-up shows you have NOT seen or heard about Sivaji's record breaking advance booking. On Day 1 of Advance Booking itself, it sold out for the first two weeks for all shows & in all theatres of its release.

May be because the movie is DOSAvataram, Idly Vadai is biased against BO Baadshaw's movies. Even by chance Dosa (with Kamal in 10 roles) gets a higher opening than Sivaji, it will be short-lived & Kuselan (with only of 25% Rajini's screen presence) will come & obliterate its record within 2 months.

Getting such opening may be news for a Kamal film. But all Rajini movies do that as a matter of routine.

Nilofer Anbarasu said...

//திங்கள் வரை House Full, செவ்வாய் கிழமை திருட்டு விசிடி ரெடியாகிவிடும் என்று சொன்னார்கள்.//
idlyvadai-yoda speciality-ye intha maathiri puchuthaan.......super....

கலியுக சித்தன் said...

FOR rajni - "bhaba"
and
FOR kamal - Dasaavatharam???

IDLY = RAJNI
KAMAL = VADAI

so???????????

Murali

கிரி said...

//இதை எல்லாம் பார்த்துவிட்டு ரஜினி இமயமலைக்கு ஓட்டிட்டார் என்று நினைக்க வேண்டாம் :-)//

ரஜினி யாரை கண்டும் எதற்காகவும் ஓட மாட்டார். ஒருவரை பாராட்டும் போது இன்னொருவரை தாழ்த்தி தான் கூற முடியுமா?

இன்னும் சில தினங்களில் குசேலன் பாடல் வெளி வர போகிறது, அப்போது பாருங்க அனைத்து ஊடகங்களும் குசேலன் புகழ் "பாடுவதை"

கமல் ஒரு வகையில் சிறப்பு என்றால், ரஜனி ஒரு வகையில் சிறப்பு. ரஜினி கமலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை.

Anonymous said...

கடைசி வரியை போட்டு என்னையும் எழுத வச்சிட்டீங்க... இதுல இருந்து ரஜினி மேல பயங்கர காண்டா இருக்கறது தெரியுது.. சம்பந்த பட்ட ரெண்டு பேருமே சைலண்டா இருக்காங்க... நாலு வெந்தயம் போட்ட மோர் குடிங்க..சூடு தணியும்