பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 06, 2008

கம்யூனிஸ்டு பதில்கள் !

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் நாளை `பந்த்' நடத்துகின்றனர். மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்துக் கொண்டு மறுபக்கம் `பந்த்' போராட்டம் நடத்துவது சரி தானாப என்று ஒவ்வொரு கட்சியினரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியனி டம் கேட்ட கேள்விகளுக்கு அவர் சூடாக அளித்த பதில்கள்....

கேள்வி:- நாளை நடை பெற இருக்கும் `பந்த்' போராட்டத்தில் மறியலும் நடைபெறுமா?
பதில்:- மறியல் நடக்க வேண்டிய இடத்தில் மறியலும் நடைபெறும்.

கேள்வி:- இந்த போராட்டத்தால் பெதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்களே?
பதில்:- அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.

கேள்வி:- கம்யூனிஸ்டு கட்சியினர் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறாரேப
பதில்:- எங்களுக்காக யாரும் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். மக்களுக்காக கண்ணீர் விட்டால் போதும்.

கேள்வி:- மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து கொண்டு மறுபக்கம் அரசை எதிர்த்து `பந்த்' போராட்டம் நடத்துவது சரியா?
பதில்:- அதுதான் எங்கள் வழி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் வழி தனி வழி.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?
பதில்:- அவர் எங்களுக்கு வழி காட்டி அல்ல.

கேள்வி:- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?
பதில்:- அவரிடம் பாடம் கற்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல.

10 Comments:

seethag said...

யாரிடமிருந்தும் ,எதையும் ,சரித்திரம் உட்பட கற்றுகொள்ள இந்திஅய் கம்யூனிஸ்ட்டுகள் தயாரில்லை.. சீனா சொன்னால் கேட்ட்க்ககூடும்

Anonymous said...

லாலுவின் பேட்டியை படித்தது போல இருந்தது

Anonymous said...

பொறுப்பற்ற கம்யுனிஸ்ட்களால் ஆட்சி செய்யப்படும் எந்த மாநிலமும் (மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா) முன்னேறியதில்லை. சிறிய மாற்றத்தைக்கூட அவர்களால் கொண்டு வர முடியாது.

We The People said...

//கேள்வி:- இந்த போராட்டத்தால் பெதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்களே?
பதில்:- அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.//

இது தான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான நிலைபாடு!!!

வால்பையன் said...

///கேள்வி:- இந்த போராட்டத்தால் பெதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்களே?
பதில்:- அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.///

மக்களுக்காக போராடுகிரார்களா இல்லை
விளம்பரம் தேடி கொள்கிறார்களா?

வால்பையன்

Anonymous said...

இந்தத் தாமஸ் பாண்டியன் ஒரு மிஷநரி கைக்கூலி. இவனுக்கு ரஷ்யாதான் தாய் நாடு. இவனுக்குத் தேவையானதெல்லாம் ஒரு எம் எல் ஏ ஒரு எம் பி என்ற எலும்புத் துண்டுகள்,. அதற்காக காங்கிரஸ் காலைப் பிடித்து நக்கும் தாமஸ் பாண்டியன், காங்கிரசை எதிர்த்து பந்த் நடத்துவது ஊரை ஏமாற்றும் வேலை. உண்மையிலேயே எதிர்க்கிறாய் என்றால் ஆதரவை வாபஸ் வாங்கு. அதை விட்டு பந்து லந்து என்று யாரை ஏமாற்றுகிறாய்? இது நாள் வரை ரஷ்யா போட்ட எலும்புத் துண்டை நக்கிக் கொண்டிருந்த இந்த தாமஸ் பாண்டியன் இப்பொழுது சோனியா மாதா வீசியெறியும் எலும்புத் துண்டை நக்கிக் கொண்டே சோனியா அன்னையை எதிர்த்துக் குரைப்பது போல குரைத்து நாடகம் ஆடுகிறார். ஊரை ஒரு நாள் ஏமாற்றலாம், ரெண்டு நாள் ஏமாற்றலாம். அன்றைக்கு கீழவெண்மணியில் அப்பாவி விவ்சாயிகள் எரித்துக் கொல்லப் பட்டதற்கும் இந்த ரஷ்ய ஏஜெண்டின் கட்சியே காரணம். பந்து நடத்தறானாம் பந்த். ஏமாத்துக்கார தா பாண்டியன்

Anonymous said...

If I click on Tugluk AttaiPadam, it goes to previous week's attaipadam.
Old idly/vadai is heated and reserved :)

Litmuszine said...

//* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?*//

ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் சொன்னதையும் இங்கே பிரசுரியுங்கள், அப்பதானே தா.பாண்டியனின் புல் காமெடியும் ரசிக்கலாம்.

Anonymous said...

///கேள்வி:- இந்த போராட்டத்தால் பெதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்களே?
பதில்:- அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.///

என்ன ஒரு பொறுபற்ற பதில் !!! இவர்கள் நமக்காகவா ? இல்லை நாம் இவர்களுக்க்காகவா ??

ஜெய் ஹிந்து!!

Anonymous said...

//இந்தத் தாமஸ் பாண்டியன் ஒரு மிஷநரி கைக்கூலி.//
அவரு தாவீத் பாண்டியன்