பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 04, 2008

தாடிஸ் மெஸ்

நாராயணனின் கடைசி வரியும், பாராவின் முதல் வரியும் நம்பி 'மாமி மெஸ்' என்ற ஸ்தலத்துக்கு போகும் வாய்ப்பு சில நாட்கள் முன் கிடைத்தது...

மாமிஸ் மெஸ் என்று செல்லமாக கூப்பிட்டாலும், அதன் உண்மையான பெயர் 'சிவசாய் மெஸ்'. டி.டி.கே சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கி நாரதகான போகும் முன் இருக்கும் Nike ஷோரூமுக்கு எதிர் புறம் உள்ள பிள்ளையார் கோயில் பக்கத்து சந்தில் நுழைந்தால் எல்லோர் வீட்டு முன்பும் இரண்டு பைக் நிறுத்தியிருக்கும் சந்தில் தான் மாமி மெஸ் இருக்கிறது.

நல்ல உச்சி வெயிலில் கல்லா பெட்டியில் தாடி வைத்த பெரியவர் ஒருவர் தான் இருந்தார். மாமியும், நாராயணனும், ராகவனும் மிஸ்ஸிங்.

பெரிசாக இலை போட்டு நாட்டின் பண வீக்கம் இன்று 8.1% என்பதை நினைவுபடுத்தும் விதமாக உருளைக்கிழங்கு கறி, மஞ்சள் பூசணிக்காய் கூட்டு வைத்தார்கள். டேபிளில் உப்பு, பருப்பு பொடி, எண்ணை, ஊருகாய் இருக்கிறது. பருப்பு பொடி நிஜமாகவே சூப்பர். மவுண்ட் ரோடில் இருக்கும் ஆந்திரா மெஸ் தான் ஞாபகத்துக்கு வந்தது. ஊறுகாய் வெயலுக்கு வத்தலாக பருவமழைக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

அன்லிமிடெட் என்றால் பொதுவில் அப்பளத்தை அந்த லிஸ்டில் சேர்க்கமாட்டார்கள். இங்கு இரண்டாம் முறை அப்பளம் கேட்டாலும் கிடைக்கிறது. [நான் மூன்று முறை வெண்டைக்காய் பொறியல் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்.]


என்று பா.ராகவன் எழுதியதை நம்பி அடுத்த நாள் நான் சென்று எக்ஸ்டரா அப்பளம் கேட்டேன், "எக்ஸ்டரா அப்பளம் இரண்டு ரூபாய்" என்று பின் பக்கதிலிருந்து ஒரு சின்ன பையன் சொன்னான். பா.ராவின் effect.

சாதம், பருப்பு பொடி, மோர் குழம்பு, சாம்பார், ரசம், சின்ன கப்பில் தயிர் ( வேகமாக உறிந்தால் கப் தொண்டையில் மாற்றிக்கொள்ளும் ஜாக்கிரதை ) என்று டேஸ்ட் நல்லா இருக்கு.

அடுத்த முறை செல்லும் போது, மெஸ் மாமி எங்கே என்று தேட வேண்டும். அல்லது பா.ராகவானாவது மாமி வேஷம் போட்டுக்கொண்டு இருக்கணும் :-)

7 Comments:

ஹரன்பிரசன்னா said...

//பா.ராவின் effect.//

:)))

Anonymous said...

பா.ராகவானாவது மாமி வேஷம் போட்டுக்கொண்டு இருக்கணும் :-)


பா.ரா மாமி வேஷம் போட்டால்
அன்றைய பிந்து கோஷ் அல்லது இன்றைய டி.வி.புகழ் ஆர்த்திக்கு புடவை கட்டி விட்டது மாதிரி இருக்கும்.வேண்டாமய்யா இந்த
விபரீத எண்ணம் :).

யோசிப்பவர் said...

//நாராயணனின் கடைசி வரியும், பாராவின் முதல் வரியும் நம்பி 'மாமி மெஸ்' என்ற ஸ்தலத்துக்கு போகும் வாய்ப்பு//

//என்று பா.ராகவன் எழுதியதை நம்பி அடுத்த நாள் நான் சென்று எக்ஸ்டரா அப்பளம் கேட்டேன்,//

http://devakottai.blogspot.com/2008/06/blog-post_03.html>

யோசிப்பவர் said...

முந்தின கமெண்ட்டில் ஒரு ;-) விட்டுப்போச்சு. சேர்த்துக்கோங்க!!;-)

Motley Fool said...

Idlivadai -
Now i know two things. You are a man, not a women. If you are the one sitting in front of paruppu podi, you have thoppai.
I will keep this mess in my next india visit list.

Anonymous said...

இப்படி ஆளுக்காள் மாமி மெஸ் புகழ பாடினால் வீரமணி பார்பனர் உணவு விடுதிக்கு பார்பனர் செய்யும் பிரச்சாரம், தமிழர்களே எச்சரிக்கை,
பார்பனர் நடத்தும் உணவு விடுதிகளை
புறக்கணிப்பீர் என்று நான் அறிக்கை விடவேண்டிவரும்.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி
பெரியார் திடல்

அரவிந்தன் said...

என்ன திடீர் சென்னை விஜயம்..?

அன்புடன்
அரவிந்தன்