பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 02, 2008

சைக்கோ மனிதன் பிடிப்பட்டான்!!

கடலூர் மாவட்டத்தை கதிகலங்க வைத்தவர் கைது.
சைக்கோ மனிதன் பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு.

கடந்த சில நாள்களாக கடலூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் இரவில் பொதுமக்களைத் தாக்கி வந்தனர்.

மர்ம மனிதர்கள் தாக்குதலில் ரவி, பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் பாதிக்கபட்டனர். லதா, சித்ரா என்ற பெண்களும் காயம் அடைந்தனர். பாதிக்கபட்ட பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

போலீசாரும் இரவும் - பகலுமாக மர்ம மனிதர்களைத் தேடி அலைந்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

பொதுமக்களைத் தாக்குவது உண்மையில் சைக்கோ மனிதர்களா? அல்லது சைக்கோ மனிதர்கள் என்ற பெயரில் வேறு சில விஷமிகளா என்று போலீஸ் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் எலோரையும் கலக்கிய சைக்கோ வாலிபரை போலீஸ் சில நாள்கள் முன்பு பிடித்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தான் சைக்கோவாக மாறி கொலைகள் செய்தது எப்படி என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கைதான சைக்கோ(என்ற சரவணன்) ஒரு மனநோயாளி ஆவார். இவரைத் தாக்கி உள்ள மனநோயை ``பைபோலார் டிஸ்ஆர்டர்'' என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய் தாக்கியவர்கள் எப்போதும் ஒரே நிலையில் இருக்கமாட்டார்கள். சில நேரங்களில் மன அழுத்தத்தினால் தாழ்ந்த நிலைக்குச் செல்வார்கள். சில நேரம் மிதமிஞ்சிய எழுச்சி அடைந்து விடுவார்கள். இப்படியாக மாறிமாறி இருவித நிலைகளில் இருப்பார்கள். அவர்கள் மிதமிஞ்சிய எழுச்சி நிலையை அடையும் போது, என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் எதையாவது செய்து விடுவார்கள்.

இதில் ஈடுபட்ட போலீஸ், சூப்பிரண்டு பார்த்தசாரதி மற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி ஆவர். தெய்வம் தான் வந்து மக்களை காத்தது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

( நன்றி: மாலைமுரசு, தினத்தந்தி )
மாலைமலர் செய்தி இங்கே

பின்குறிப்பு. பழைய செய்திதான். சரக்குமாஸ்டர் ஊரில் இல்லாததுதான் இப்போது வெளியிடக் காரணம். வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை

0 Comments: