பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 04, 2008

கலைஞர் -85 - ராமர்கள் வாழ்த்து

கலைஞருக்கு நிறைய வாழ்த்துக்கள் நேற்று வந்திருக்கலாம். இரண்டு சேதுராம் தான் எனக்கு உண்மையான பிறந்த நாள் பரிசு என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டு ராமர்கள் ( ராமகோபாலன், ராமதாஸ் ) சொன்ன வாழ்த்து கிழே....

ராமகோபாலன் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு 85_வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. அவர் 200 ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியும். அவர் தமிழ்நாட்டில் ண்ட காலம் ஆட்சி செய்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் சாதிக்க முடியாததை ராமர் பாலத்தை இடித்தால் சாதித்து விடலாம் என்று நினைப்பது ஏமாற்று வித்தை.

சேதுராம் என்று ராமர் பெயரை வைத்தாவது திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதி பேசுவது, ராமர் மீது கொண்ட பக்தியால் அல்ல. அது குள்ளநரித்தனம். கபட நாடகம்.

மழைக் காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரி ஆக்கிரமிக்கப்பட்டர் நிலைகளை மீட்டு ஆயத்தப்படுத்தி வைத்தால் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை கொண்டு குடிதண்ணீர் மற்றும் பாசனத்துக்கானர் ஆகியவற்றை நம் காலில் நின்று நாமே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று ர்வள ஆதார வல்லுநர்கள் தொடர்ந்து அறைக்கூவல் விடுத்து வருகிறார்கள். இதன் மூலம் முதலமைச்சர் கனவு காணுகிற வளமான தமிழ்நாட்டை உருவாக்க அவர் ஏன் முயற்சிக்கவில்லை?


மருத்துவர் ராமதாஸ்
முதல்வர் கருணாநிதிக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 85_வது பிறந்த தினத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு நேற்று காலை 6.30 மணியளவில், முதலமைச்சருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


1 Comment:

Anonymous said...

kalaignarai seendavillaiyenil umakku thookkam varadha

ennavo ponga