பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2008

இட்லிவடை பதில்கள் - 25-6-08

இட்லிவடை பதில்கள் பத்து.

ஜி. சங்கர் கேள்விகள்...

1. 2 இட்லி 1 வடையின் விலை (தற்போது) என்ன ? சாதாரண பவன் களிலும், சரவண பவன் மாதிரியான உயர்தர சைவ உணவகங்களிலும் ?

உண்மையான தமிழன் இட்லிவடையின் தரம், ருசி மட்டுமே பார்க்கவேண்டும். விலை, நதிமூலம் ரிஷிமூலம் ஆகியவற்றை அல்ல. அப்படிப் பார்ப்பவன் தமிழனே அல்ல. ;-)

2. மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் இதுவரை மக்களுக்காக என்ன செய்துள்ளார் ? ஆளுங்கட்சியிலும் அவருக்கு நல்ல பேராமே ? அவர் கேட்டுக்கொண்டால் சில விஷயங்களை செய்து கொடுக்கிறார்களாமே ?

MLA ஆகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இவருக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர் டிராமாவுக்கு பல திமுக காரர்களே விசிரிகள் அதனால் அவரை யாரும் பகைக்காமல் நகைத்துவிட்டு போகிறார்கள். இதுவரை என்ன செய்திருக்கிறார் என்று அவருடைய வலைப்பதிவை பாருங்கள். ஃபேன்ஸி நம்பர் வாங்கிய வைபவத்தை தவிற மற்றதை சொல்லியிருக்கிறார்.

3. டைம்ஸ் ஆஃப் இண்டியா வரவினால் ஹிண்டுவிற்கு பாதிப்பு உள்ளதா ? இந்த சுமார் 2 மாதங்களில் ஆங்கில நாளிதழ் மார்க்கெட் எப்படி உள்ளது? இண்டியன் எக்ஸ்பிரஸ் வேற எழுத்துரு எல்லாம் மாற்றி படம் போட்டு பாகம் வரைகிறதே ?

டைம்ஸ் வந்ததால் இந்துவிற்கு பாதிப்பு தான். இந்து என்றாலே தமிழ் நாட்டில் பாதிக்கபட வேண்டும் என்பது தலையெழுத்து. எழுத்துரு மாற்றம் எல்லாம் வலைப்பதிவு டெம்பிளேட் மாற்றம் மாதிரி தான். கண்டுக்கவேண்டாம்.

4. தி.நகர் உஸ்மான் ரோட்டில் சென்னை சில்க்ஸ் மற்றும் சில கடைகள் மட்டுமே 4 மாடிக்கு மேல் உள்ள தளங்கள் இடிக்கப்பட்டன. சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை 7 மாடிவரை கட்டியுள்ளனரே ? அதெப்படி ஒரே சாலையில் ஒருவர் கட்டியுள்ளதற்கு அனுமதி மற்றவருக்கு இடி ? எம்.எம்.டி.ஏ ரூல்ஸ் என்ன ?

கோடம்பாக்கம் பாலத்தை பெரிசாக்காமல் கோயம்பேடு பாலத்தை மட்டும் ஏன் பெரிசாக்கினார்கள் என்று கேட்டால் எப்படி பதில் சொல்லுவது ? அதே போல் தான் இதுவும்.

5. பாஸ்கியும் சேதுவும் கொட்டம் அடிக்கும் அரி-கிரி அசெம்பிளியின் சிவப்பு கலர் சோபா செட் எப்படி ?

பிரகாஷ் காரத், ராஜாவிற்கு பிடித்திருக்கலாம், எனக்கு பிடிக்கவில்லை. ஒரிஜினல் அசெம்பிளி பச்சைக் கலர் சோபாவுக்கு முன்னால் பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை.

அனானி கேள்விகள்....
6 இட்லி வடை குழு உறுப்பினர் பாஸ்டன் பாலா சென்னை வந்தது
பற்றி இட்லிவடையில் ஏன் மூச்சே இல்லை.

'வார்த்தைக்கு' 'வார்த்தை' பாஸ்டன் பாலா பற்றி கேட்டால் சரக்கு மாஸ்டருக்கு கோபம் வந்துடும்.

மெயிலில் வந்த கேள்விகள் ...

7. ஹோட்டல்களில் வடைகறிக்கென்று தனியே வடை சுடுவார்களா? முந்தையநாள் மீதி வடைகள்தான் வடைகறியாகின்றனவா?

தினமும் மெனுவில் இந்தால் கறிக்காகவே வடை. "இன்றைய ஸ்பெஷல் வடை கறி" என்றால் (முந்தையநாள்) வடை கறியானது.

8. மெதுவடையின் நடுவே ஏன் ஓட்டை போடப்படுகிறது?
ஓட்டையற்ற வடை போடும் ஓட்டல் உண்டா உலகில்?

வடை சாப்பிட்டால் வயிறு உபதை ஏற்படும் என்பதை குறிக்க தொப்புள் போல வடையில் ஓட்டை இருக்கிறது. ஒட்டையற்ற வடை இருக்கு அதற்கு பேர் போண்டா. ஓட்டையான மீட்டிங்கில் தரப்படுவது.

9. இட்லிக்கு வெல்லம் தொட்டுச் சாப்பிடும் பிரகஸ்பதிகளை கழுவிலேற்றலாமா? சுட்டுக்கொல்லலாமா ?

இரண்டும் வேண்டாம். இவர்களை வடைக்கு சீனியை தொட்டுக்கொள்ள சொல்லணும்.

கானகம் கேள்விகள்..

10. சென்னையில் மொத்தம் எத்தனை எஃப் எம் சானல்கள் உள்ளன?? இணையத்தில் கிடைப்பவை எவை எவை??

உங்க மொபைல் ஃபோனில் "Search for Stations" என்ற ஆப்ஷனை யூஸ் செய்யுங்கள். இடத்துக்கு தகுந்தார் போல் 8-12 சேனல் வரை வரும். எதை கேட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆஹா FM குமுதம் சைட்டில் வரும், ராத்திரி நல்ல நிகழ்ச்சிகள் முன்பு வந்துக்கொண்டிருந்தது.

5 Comments:

sathish (bengaluru) said...

Idly Vadai padhilgal is kalakkal.

Anonymous said...

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லட்சிய தி.மு.க. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மீது விஜய டி. ராஜேந்தர் கடும் தாக்குதல் தொடுக்க, மேடை மீது செருப்பு வீசப்பட்டு ஒரே கலாட்டா. பாதியிலேயே கூட்டம் முடிந்துவிட்டது.

What's your view on this news Idly vadai

Boston Bala said...

#7 & #8 பதில் கலக்கல் :)

என்னுடைய சில கேள்விகள்:
1. படம் வெளியான பிறகும் ட்ரெயிலர்களில் 'Main Film is yet to be certified' என்று வருகிறதே. உண்மைய சொல்லணுங்கிற எண்ணமா அல்லது சென்சார் எல்லாம் கண்டுக்காதீங்க என்னும் அவமதிப்பா?

2. சிட்டி சென்டர் யுவதிகள், ஸ்பென்சர்ஸ் பெண்கள் - நாகரிக ஆடைகளை ஒப்பிடுக

3. கபாலி கோவில், காந்தி சிலை பீச், காமதேனு தியேட்டர் - கடலைக்கு சாலச் சிறந்த இடம் எது?

4. பெண்கள் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்தால் மாநகரப் பேருந்தில் கண்டுகொள்வதில்லையே... சென்னையில் சமத்துவம் வந்துடுத்தா?

5. ஏசி பேருந்தில் உள்ளே நுழைந்தவுடனே பயணக் கட்டணத்தை சொல்லும் நடத்துநர் தன் கடமையைச் செய்கிறாரா? சாமானியனை மட்டந்தட்டி மதிப்பிடுகிறாரா?

IdlyVadai said...

பாபா நன்றி :-) கேள்விகள் எல்லாம் சென்னை ஸ்பெஷல் போல, என்னை நேரில் சந்தித்த போதே இதை எல்லாம் கேட்டிருக்கலாமே ?

Anonymous said...

நன்றி இட்லிவடை. இதோ அடுத்த செட் கேள்விகள்.

ஜி.சங்கர்

1. த.சத்தியநாராயணன், அயன்புரம், எம்.சம்பத் வேலாயுதம்பாளையம், ப.மூர்த்தி பெங்களூர் போன்ற கேள்வி கேட்போர்/வாசகர் கடிதம் எழுதுவோர் கடந்த 20- 25 வருடங்களாக எத்தனை பத்திரிக்கைகளைக் காசுகொடுத்து வாங்கியிருப்பர் ? அல்லது கேள்வி/கடிதம் பிரசுரமானால் பத்திரிக்கை இலவசமா ? போஸ்ட்கார்ட் / இன்லண்டு லெட்டருக்கு இவர்கள் எத்தனை செலவழித்திருப்பர் ?


2. அப்துல் கலாமைப் போலவோ கே.ஆர். நாராயணனைப் போலவோ அல்லது அதற்கு முந்தைய சங்கர் தயாள் சர்மா போலவோ எந்தவிதத்திலும் எந்த சிறப்பும் இல்லாததால்தான் பிரதிபா பாடீலை இந்தியாவில் யாரும் தற்போது அவ்வளவாக தங்கள் கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது பிற திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவதில்லையோ ? இப்படி ஒரு ஜனாதிபதி இந்தக் காலகட்டத்தில் தேவையா ? (சோனியாவுக்கு ஒரு ஆமாம் சாமி தேவைப்பட்டிருக்கலாம் அதற்காக இப்படி ஒருவரா ?)

3. அம்புலிமாமா இன்னும் வெளிவருகிறதா ? விலை எவ்வளவு ? 10ரூ? 15ரூ ? விக்ரமாதித்யன் வேதாளம் எல்லாம் இருக்கிறதா ? துப்பறியும் சாம்பு கார்டூன் தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளதா ?

4. கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு பொழுது எப்படி போகிறது ? தினமும் ஒரு அறிக்கை விடுவதைத் தவிர மீதி நேரத்தை எப்படி செலவழிக்கிறார் ? ஏதேனும் சேதி உண்டா ?

5. மதன் இப்போது எந்த குழுமத்தில் வேலை பார்க்கிறார் ? விகடனில் கேள்வி-பதில் கார்ட்டூன் தவிர, விஜய் டிவி மதன்ஸ் திரைப்பார்வை தவிர வேறு ஏதேனும் செய்கிறாரா ? இல்லை ரிடையர் ஆகிவிட்டாரா ?

6. தேசிகன் எங்கு இருக்கிறார் ? தேசிகன் பக்கத்தில் பதிவுகளைக் காணோமே ? அமுதனுக்கு அமுதூட்டுவதில் பிஸியா ? இல்லை வெளிநாட்டுப் பயணமா ?

7. தினத்தந்தியில் வரும் எகனாமிக்டைம்ஸ் பக்கம் - தினத்தந்தியின் சாமானிய வாசகர்கள் புரிந்துகொள்ளும் லெவலில் இல்லையே ?

8. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - இதெல்லாம் உள்ள (திரையில் தான்) தற்போதைய ஹீரோயின் யார் ?

9. சாரு நிவேதிதா - ஜெயமோகன் பதிவுகள் எதுவும் எனக்குப் புரிவதில்லை. நான் ஒரு நல்ல தமிழ் வாசகனா ?

10. சாரு நிவேதிதா போன்றவர்களுக்கு பணக்கார நண்பர்கள் எப்படி கிடைக்கிறார்கள் (தினமும் நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடவும்..இன்ன பிறவுக்கும்)