பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 02, 2008

நரேந்திர மோடி இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி - டெல்லி இமாம் தாக்கு

நரேந்திர மோடி இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி: டெல்லி இமாம் தாக்கு

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதியாக திகழ்பவர் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, குஜராத்தில் தீவிரவாதத்தை வளர்ந்து விட்டவரே அவர்தான். தீவிர வாதிகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களை கைது செய்து கொடுமைபடுத்தி தீவிரவாதம் உருவாக காரணமாக இருக்கிறார்.

குஜராத் கலவரம் முற்றிலும் மோடி உத்தரவின் பேரில்தான் நடந்தது. ஆனால் இப்போதும் அவர் அதிகாரத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடத்தில் எந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

தீவிரவாதம் உருவாவதற்கு அடக்கு முறைதான் காரணமாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் கொல்லப்படும் போது அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் இளைஞர்கள் என்ன செய்வார்கள்?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் இல்லை என்றால் தீவிர வாதம் ஒரு காலமும் முடி வுக்கு வராது.

அதே நேரத்தில் புனி தப் போர் என்ற பெய ரில் தீவிரவாதத்தில் ஈடுபடு வதற்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவாக இருக்க மாட்டோம். இதை கண்டிக்கிறோம். இஸ்லாம் மதம் ஒரு போதும் இது போன்ற செயல்களை அனுமதிக்கவில்லை.

2 Comments:

மாயவரத்தான் said...

நாளைல இருந்து இட்லி,வடையோட 'மதிப்பு' கொறயுதாமே?! மேட்டரு தெரியுமா?!

http://thatstamil.oneindia.in/news/2008/06/02/tn-hotel-foods-price-cut-to-be-implemented.html

Anonymous said...

அந்த கடைசி வரி தான் சூப்பர் ஜோக்!