பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 29, 2008

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும் - ஏ.எம்.ஆர் கட்டுரை

பாரதம் சுதந்திரம் பெற்ற பின்பு இந்து மதத்தையும், இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பவித்திரமான ஆஸ்ரமங்கள், மடங்கள் ஆகியவற்றைப் பழிப்பதும், கேலி செய்வதும், நமது ஆச்சார்ய மகாபுருஷர்களின் ஒழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதும், நமது அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கும் பொழுது போக்காக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே! அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்துமத விரோத நடவடிக்கைகள், சில அரசியல் கட்சிகள் மற்றும் தற்போதைய தமிழக அரசு ஆகியவற்றின் ஆதரவுடனும், வெளிப்படையான பிரசாரங்களுடனும் நடைபெற்று வருவதும் உலகமறிந்த உண்மையாகும்.



தற்போது சினிமாத்துறையும் இத்தகைய அநீதியை இந்து சமூகத்திற்குச் செய்வதில் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தீவிரமாக இறங்கியுள்ளது. திரைப்படத்துறை என்பது ஓர் இருமுனை ஆயுதம். இதனால் சமூகத்திற்கு நன்மை செய்யவும் முடியும். தீமை செய்யவும் முடியும்.

வெளிநாடுகளில் விஞ்ஞானபூர்வமான,அதிசயக்கத்தக்க பல திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உலகப் புகழ்பெற்று வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ``டினோசார்'' என்ற மிருகத்தை வைத்து அற்புதமான படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து, மிகப் பெரிய அளவில் லாபமும், புகழும் பெற்றுள்ளனர் மேலைநாட்டுத் தயாரிப்பாளர்கள்.இதற்கு மாறாக,தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய திரைப்படங்கைளத் தயாரிப்பதற்குப் பதிலாக தரக்குறைவான படங்களையே பெரும்பாலும் தயாரித்து வருகின்றனர். சென்றகாலத் திரைப்படங்களில் உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நல்ல கதைகள் இருக்கும். பண்புள்ள கருத்துகள் பொதிந்திருக்கும். நல்ல சங்கீதமும் இருக்கும். நடிப்பிலும் திறமை இருக்கும்.

உதாரணமாக,திரைப்பட உலகில் தனக்கென்று அழியாத ஒரு தனிச்சிறப்பையும், பெருமையையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டவர் திரு. சிவாஜிகணேசன் அவர்கள். இவரைப்போன்றே சென்றகாலத்தில் புகழ்பெற்ற நடிகர்களான திரு. பி.யூ. சின்னப்பா, திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரையும் கூறலாம். பாடல்களை எழுதியவர்களும் உண்மையான கவிஞர்கள். அவர்கள் எழுதிய பாடல்களில் நயம் இருக்கும். நெஞ்சைத் தொடும் நல்ல கருத்துகள் இருக்கும். பாடல்களில் விரசமும், இரட்டை அர்த்தமும் இருக்காது. கண்ணியம் இருக்கும். இவற்றிற்கு உதாரணமாக திரு. கண்ணதாசன்அவர்களைச் சொல்லலாம்.

ஆனால் தற்காலத் திரைப்படங்களில் நல்ல கதைகள் கிடையாது. கருத்துகள் கிடையாது. பாலுணர்வைத் தூண்டும் இரட்டை அர்த்தம் பொதிந்த தரக்குறைவான பாடல்களே பெரும்பாலும் ஒலிக்கின்றன! பொழுதுபோக்கிற்கு வேறு வழியின்றித் ``தலைவிதியே'' என்று சகித்துக்கொண்டு இதுபோன்ற தரக்குறைவான திரைப்படங்களை மக்களும் பார்த்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகளும், திறமையை விட சிறிதளவும் வெட்கமின்றி, உடலழகைக் காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

தற்போதைய திருப்பம்!

இந்நிலையில் சமீபகாலமாக, திரைப்படத்துறையினரின் பார்வை இந்து சமுதாயத்தின் மீதும், இந்து மதத்தின் மீதும் திரும்பியுள்ளது. இந்துக்கள் என்றாலே அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அரசாங்கத்தின் பாதுகாப்பும் நமக்கு உள்ளது என்ற எண்ணத்தில், ஏராளமான மகான்களாலும் மகரிஷிகளாலும் அளவற்ற ஆன்மிகச் சக்தி பெற்ற இம்மாபெரும் இந்து சமுதாயத்தை மிகவும் கேவலமாகச் சித்திரிப்பதில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டு முனைந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இத்தகைய திரைப்படங்களைப் பற்றி எந்தத் தமிழகப் பத்திரிகையும் நடுநிலைமையாக விமர்சிப்பதில்லை. பிரசாரம், விளம்பரம், அரசியல் ஆதரவு, சம்பந்தப்பட்ட நடிக, நடிகையர் ஆகியோரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே மிகத் தரக்குறைவான படங்களைக்கூட `ஓஹோ' என்று தமிழகப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதிவருவது கண்கூடு. இதற்குக் காரணம், சினிமாத்துறை குவித்துவரும் பணம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நிலைமையே மாறிவிட்டது. லஞ்சமாகவோ அல்லது பரிசாகவோ அல்லது பட்டமாகவோ கொடுத்துவிட்டால் மனசாட்சியை எளிதில் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை தேசபக்தி உள்ள எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய சூழ்நிலையில்தான், சென்ற சில நாட்களுக்கு முன்பு, மிகப் பெரிய அளவில் விளம்பரமும், பிரசாரமும் செய்யப்பட்டு, சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது `தசாவதாரம்' என்ற புதிய தமிழ்ப்படம். என்னிடம் அன்பு கொண்ட ஏராளமான `குமுதம் ஜோதிடம்' வாசக அன்பர்கள் இப்படத்தைப் பற்றி மிகவும் மனம் வருந்தி எழுதியுள்ளனர். தொலைபேசியிலும் கூறி வருத்தப்பட்டனர். இதுபற்றி விவரங்கள் கூற எங்கள் மனமும், மனசாட்சியும் இடம் தரவில்லை.

எத்தனையோ உயர்ந்த கருத்துகளும், மக்களின் கலாசாரம், பண்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை உயர்த்தக்கூடிய மிகவும் தரமுள்ள திரைப்படங்களை எடுத்து பெருமைப்படுவதை விட்டுவிட்டு, இத்தகைய தரக்குறைவான படங்களைக் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ஏன் எடுக்கவேண்டும் என்று மிகவும் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார்கள் பல அன்பர்கள். இவர்களில் பலர் படித்து நல்ல பதவிகளில் உள்ள தேசபக்தி நிறைந்த பெரியோர்கள், சான்றோர்களும்கூட.

இது நமக்குப் புதிதல்ல..!

காலம் காலமாக, உலகில் வேறு எந்த மதமும் தோன்றாமல் இருந்த காலத்திலிருந்தே பெயரும், புகழும், பக்தியும் நிறைந்த இந்து சமுதாயத்திற்கு இத்தகைய அநீதிகள் புதிதல்ல. உலகில் வேறு எந்தச் சமூகத்தினருக்கும் இத்தகைய கொடிய அநீதிகள் இழைக்கப்படவில்லை என்பதை இந்திய சரித்திரம் எடுத்துரைக்கிறது. ஏராளமான அன்னியர்களின் படையெடுப்பின்போது, கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் கணக்கில் அடங்கா! அவ்வளவு ஏன்? இந்தியாவிலிருந்துபாகிஸ்தான் பிளவுபட்டபோது, பாகிஸ்தானின் நகரத் தெருக்களில் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடுமைகளை மேலைநாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனை அப்போதைய இந்திய அரசாங்கமும், ஆங்கிலேய அதிகாரிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். அந்தக் கொடுமைகளை மறப்பதற்கு இந்துச் சமுதாயம் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்நிலையில், இந்துத் தாய்க்குப் பிறந்து, இந்துத் தாயின் பாலைப் பருகி இந்துக்களாக வளர்ந்தவர்களே இன்று இத்தகைய படத்தைத் தயாரித்து அன்பிலும், கருணையிலும் உயர்ந்த இந்து சமுதாயத்தை ஈனப்படுத்திப் பேசுவதும், எழுதுவதும், கேவலப்படுத்துவதும் எவ்விதம் நியாயமாகும்?

பாரத மக்களுக்கு இத்தகைய கொடுமைகள் புதிதல்ல. துவாபர யுகத்தில் பவுண்டரகன் என்றொரு மன்னன் இருந்தான். `இறைவன் என்று ஒருவன் கிடையாது. அந்த இறைவன் நான்தான். நான்தான் அந்த வாசுதேவன்' என்று ஆணை பிறப்பித்தான் அவன். (பகவான் ஸ்ரீமந் நாராயணனுக்கு வாசுதேவன் என்ற பெயர் உண்டு). அவனுக்கு பயந்து மக்கள் அவனை வணங்கினர். இருப்பினும் ஒருசிலர் மறைமுகமாக, `பகவான் என்றால் நான்கு கரங்கள் இருக்கவேண்டுமே! சங்கு, சக்கரம் இருக்கவேண்டுமே! கருட வாகனம்தான் எங்கே உள்ளது?' என்று பேச ஆரம்பித்தார்கள். இது மன்னனின் காதில் விழுந்தது. ஆதலால் அவன் அக்காலத்தில் இருந்த ஒரு நிபுணரைக் கொண்டு யந்திரங்கள் வைத்த இரண்டு கைகள், சங்கு சக்கரம், ஒரு கருட வாகனம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டான். அதன்மூலம் தான்தான் அந்த வாசுதேவன் என்று கூறிக்கொண்டான்.

துவாரகையை கண்ணன் ஆண்டுவந்த காலம் அது!மன்னன் பவுண்டரகனின் அட்டூழியம் அதிகரித்தது. மக்களால் அக்கொடுமைகளைத் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, கண்ணனே பவுண்டரகனைப் போருக்கு அழைத்து, அவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினான்.

பவுண்டரகனோடு ஒப்பிடும்போது, தமிழகத்தின் தற்போதைய நாத்திக அரசியல் தலைவர்கள் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். `தெய்வம் உண்டு; அது நான்தான்!' என்று கூறினான் பவுண்டரகன். ஆனால், இந்த நாத்திகர்களோ, பகவானே இல்லை என்றல்லவா கூறுகிறார்கள்!

சென்ற சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாத்திக பிராசார படத்தில், மகா உத்தமியும், கற்புக்கரசியுமான ஸ்ரீசீதையைப் பற்றி அவதூறாக ஒரு பாடலை எழுதி, பல தலைமுறைகளுக்கான கொடிய பாவத்தை இப்போதே சேர்த்துக்கொண்டுவிட்டார் ஒரு ``கவிஞர்.'' பாவம்-புண்ணியம் ஆகியவற்றில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். ஆனால் தர்மம் என்றொரு சட்டம் இருக்கிறது அல்லவா! அது தன் கடமையைத் தவறாமல் செய்யும். காலம் இதனை நிரூபிக்கும்.

பணத்திற்குப் பத்தும் விலை போகும்!

இந்து சமுதாயத்தையே கேவலப்படுத்தி எடுக்கும் இத்தகைய திரைப்படங்களினால் பணம் சேர்க்கலாம். ஆனால், அந்தப் பணத்திற்காக இவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ``பணம் பத்தும் செய்யும்'' என்றொரு மூதுரை உண்டு. ஆனால், இதே பணம், இவர்களது குலம், கல்வி, மானம், தவம், கற்பு, பெருமை, ஒழுக்கம், அறிவுடைமை, தாளாண்மை, தூய்மை ஆகிய பத்து பெருமைகளை இழக்கவும் செய்யும் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். ஆணவமும், பணத்தாசையும் இவர்கள் கண்களை மறைக்கின்றன. சாதுக்களாக வாழ்க்கை நடத்திவரும் இந்துக்களுக்கு இத்தகைய திரைப்படங்களின் மூலம் இவர்கள் இழைத்து வரும் அநீதிகளின் மூலம், பாவம் எனும் கொடிய நாகப்பாம்பைத் தேடி, அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இவர்களைத் தீண்டும்போது, இவர்கள் தேடி ஓடிச் சேர்த்த பணம், கைகுலுக்கிய அரசியல் செல்வாக்கு என்று எதுவும் இவர்களுக்குத் துணை நிற்காது.

இன்று இவர்கள் சிரிக்கட்டும்! அந்த நாள் வரும்போது தர்மதேவதை சிரிக்கும்!!

இந்துக்களுக்கு தர்மம் என்றும் துணை நிற்கும்!!!
( குமுதம் ; ஜோதிடம் )

Read More...

மதம் மாறவில்லை, மனம் மாறிவிட்டேன் - நக்மா

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்ற நியூஸை தொடர்ந்து
மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா என்ற செய்தி வந்தது இப்ப அதை தொடர்ந்து - இப்போது மதம் மாறவில்லை, மனம் மாறிவிட்டேன் என நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜெபமுகாமில் பிரசங்கம் செய்த நடிகை நக்மா, கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது....


கிறிஸ்தவத்திற்கு வந்த பின்னர்தான் என் மனம் அமைதியாக உள்ளது. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு இயேசுவைக் குறித்து பிரசங்கம் செய்ய யார் கூப்பிட்டாலும் செல்வேன்.

கூட்டங்களில் நானாக எதுவும் பேசவில்லை. கடவுள் எனக்கு கொடுத்துள்ள ஞானத்தினால் பேசுகிறேன். இதற்கு தனியாக நான் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றார்.

ஆங்கிலத்தில் பிரசங்கம்: முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ ஹிந்தி பாடல் ஒன்றும், இயேசுவே என் ஆண்டவர் என்ற தமிழ்ப் பாடலையும் பாடி பிரசங்கம் செய்தார்.

ஆங்கிலத்தில் அவர் செய்த பிரசங்கம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பின்னர், நக்மா சிறப்பு ஜெபம் செய்தார்.

கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

Read More...

Friday, June 27, 2008

குசேலன் - படம் வரும் பின்னெ விமர்சனம் வரும் முன்னே

எச்சரிக்கை: படிக்கும் போது, ரஜினி ரசிகர்கள் பக்கத்தில் இருக்க போகிறார்கள்.

நமது புராணங்கள் இதிகாசங்களில் இருந்து கதைகளை உருவி புதிய புதிய திரைக்கதைகளை உருவாக்குவதில் நம் சினிமாக்காரர்கள் சளைப்பதேயில்லை. ஒரு சத்யவான் சாவித்ரி கதையை ரோஜாவாக மாற்றிய சுஜாதாவைப் போல, ஒரு குசேலர் கதை அருமையான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார், மலையாளத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவும் இயக்குனரூம் நடிகருமான ஸ்ரீநிவாசன். தன் அப்பாவித்தனமான விளக்கெண்ணெய் மூஞ்சிக்குப் பின்னால் அபாரமான திறமைகளை மறைத்து வைத்திருக்கும் படைப்பாளி. கத பறயும் போல் மலையாளத்தில் வந்த மற்றொரு இயல்பான, சிறப்பான திரைப்படம்.'குசேலன்' படத்துக்காக, மொத்தம் 600 பிரிண்ட்டுகள் போடப்படுகின்றன. படம், ஜூலை மாதம் திரைக்கு வந்துவிடும். மலையாள படத்தில் மம்முட்டி தோன்றியதை விட, 4 மடங்கு அதிகமான காட்சிகளில், ரஜினிகாந்த் இந்த படத்தில் தோன்றுவார்.


எதிர் நீச்சல், பாமா விஜயம், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பார்த்த காட்சிகளானுலும் கூட, ஸ்ரீநிவாசன் திரைப்படங்களின் ஆதார அம்சமான ஒரு பாமரனைச் சுற்றி நிகழும் சம்பவங்களும், பாத்திரங்களும் சேர்ந்து இந்தத் திரைப்படத்தையும் மற்றுமோரூ அருமையான திரைப்படமாக்குகிறது. ஸ்ரீநிவாசன் படங்களின் சிறப்பே அதன் கச்சிதமான திரைக்கதையமைப்பும், இயல்பான பாத்திரங்களும், இயற்கையான நிகழ்வுகளும், சினிமாத்தனம் இல்லாத இயல்பான இயற்கையான கதையுமேயாகும்., இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல, ஒரு நல்ல படம் என்றால் இப்பட்டித்தான் இருக்க வேண்டும் என்ற திருப்தியை ஸ்ரீநிவாசனின் பல வெற்றிப் படங்களைப் போலவே இந்தக் கதை பறயும் போளும் அளிக்கிறது.



இதற்கு முன்னால் நெம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்னும் ஹாஸ்ய த்ரில்லரில் மம்முட்டி , நடிகர் மம்முட்டியாகவே படம் முழுக்க வருவார். ஷூட்டிங்கிற்காக திருச்சூரில் இருந்து மெட்றாஸ் போகும் மெயிலில் ஏறும் நடிகர் மம்முட்டிக்கும் அதே டிரெயினில் பயணப் படும் ஒரு இளைஞர் பட்டாளத்திற்கு ஏற்படும் சிக்கல்களை சுவாரசியமாகச் சொல்லும் சினிமா அது..இந்தப் படத்திலும் சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு சின்ன மலைக் கிராமத்துக்கு ஷூட்டிங்கிற்காக வர, அவரது வருகக அதே கிராமத்தில் தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை அப்பாவி பார்பரின் வாழ்வில் ஏற்படுத்தும் வேடிக்கையான மாற்றங்களே கதை பறயும் போளின் கதை.



பார்ப்பர் பாலனின் பார்பர் ஷாப் ஒரு சின்ன பத்துக்குப் பத்து அறையும், அதில் ஒரு காலொடிந்த மர நாற்காலியும், ரசம் போன கண்ணாடியும் தேய்ந்து போன கத்திரியுமே ஆகும். அந்த சின்ன பார்பர் தொழிலுக்கும் ஒரு போட்டி வந்து விட நொடித்துப் போகும் பாலனும் அவரது மனைவி குழந்தைகளும் மூன்று வேளைச் சோற்றிற்கே லாட்டரி அடிக்கிறார்கள். ஏழ்மையிலும் தனக்கு இருக்கும் கவுரவத்தையும் மதிப்பையும் விட்டுக் கொடுக்காமல் தன் துடுக்கான பேச்சினால் தன்னை மேலும் காயப் படுத்திக் கொள்ளும் அப்பாவி பார்பர் பாலன். கிராமத்தினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகும் பிழைக்கத் தெரியாத அப்பாவி. தூங்கி வழியும் அந்த கேரள மலைக் கிராமத்தில் திடீரென்று ஒரு சுவாரசியம் பரபரப்புக் கிளம்பி விடுகிறது. அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கேரளத்தின் சூப்பர் ஸ்டார் நடிக்க வருகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது. கிராமம் முழுக்கப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. கிராமத்திற்கு அது ஒரு திருவிழாவாகி விடுகிறது. எல்லோருக்கும் சூப்பர் ஸ்டாருடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள ஆசை. ஆனால் தனிமையை விரும்பும் மம்முட்டியோ மெஷின் கன் ஏந்திய கமாண்டோக்கள் படை சூழ, யாரும் நெருங்க முடியாமல் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறார். இந்த இடத்தில் பார்பர் பாலனும், சூப்பர் ஸ்டாரும் ஏதோ ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய பள்ளித் தோழர்கள் என்ற விஷயம் பாலனின் பிள்ளைகள் மூலமாக பறவைக் காய்ச்சல் போல ஊர் முழுக்கப் பரவி விட, பாலனின் அன்றாட இயல்பு வாழ்க்கை அடியோடு மாறி விடுகிறது. பிள்ளைகளின் பள்ளிக் கூடம் முதல் உள்ளூர் பணக்காரர்கள் வரை பலரும் பாலனை சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்காக நெருக்குகிறார்கள். இயல்பிலேயே கூச்ச ஸ்வாபியான பாலனுக்கோ தன்னை அத்தாம் பெரிய நடிகர் இன்னமும் நினைவில் வைத்திருப்பாரா, வைத்திருந்தாலும் எப்படி நடத்துவார் என்ற அச்சம், வெட்கம் தயக்கம். அந்த தயக்கமேஎ அவரை சூப்ப்ர் ஸ்டாரைப் போய்ப் பார்ப்பதைக் கூட தவிர்க்க வைக்கிறது. அவரது தயக்கம் அவரைப் பல்வேறு சிக்கல்களில் மாட்டி விடுகிறது. சூப்பர் ஸ்டாரின் வருகையும் அது அந்தக் கிராமத்தில் ஏற்படுத்தும் பரபரப்பையும், பாலனின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அளவான நகைச்சுவையுடன் சொல்லுகிறது. இறுதியில் சூப்பர் ஸ்டார் பாலனை அடையாளம் கண்டு கொண்டாரர, நிஜமாகவே நட்பு இருந்ததா என்பதையெல்லாம் உணர்ச்சி பூர்வமான ஒரு கிளைமாக்ஸில் நகர்த்துகிறார்கள்.


இந்தப் படத்தின் வெற்றிக்கு முழு முதல் காரணம் அதன் திரைக்கதையும் அதன் திரைக்கதையாசிரியரான ஸ்ரீநிவாசனுமேயாகும். பார்பர் பாலனாகவும் ஸ்ரீநிவாசனே நடித்திருக்கிறார். புது இயக்குனர் மோகனன் இருக்கும் இடம் தெரிய விடாமல் ஸ்ரீநிவாசன் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் . ஸ்ரீநிவாசனின் நடிப்பு பலருக்கும் பிடிக்காது. உணர்ச்சிகளளக் காட்டாத ஒரு விளக்கெண்ணெய் முகம். இருந்தாலும் அதுதான் அவரது பலமும் கூட. நடிக்காமலேயே இயற்கையாகவே இருப்பதுதான் ஸ்ரீநிவாசனின் சிறப்பே. அவரது மனைவியாக வரும் மீனா தான் இந்தப் படத்தின் ஒரே இயல்பற்ற பாத்திரம். ஒரு கிராமத்து ஏழை பார்பருக்கு இத்தனை அழகான ஒரு மனைவி, திருத்தப் பட்ட இமைகளுடனும் தன் நளினம் குறையாமல் இருப்பது கொஞ்சம் இடறுகிறது. மற்றபடி கவிஞரரக வரும் சலீம் குமார், டீக் கடை மாஸ்டர் மம்மக் கோயா, ஸ்ரீநிவாசனின் பிள்ளைகள், போட்டி பார்பர் ஷாப் ஜகதீஷ், பிரின்ஸிபாலாக வரும் பி ஏ சி லலிதா , வட்டிக்கு விடும் பணக்காரரான இன்னனசண்ட் மற்றும் ஏராளமான கிராமத்து ஆட்கள் என்று அனைவரும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். மலையாளப் படங்களின் அசுர பலமே இந்த காரெக்டர் ஆர்டிஸ்டுகள்தான். கதையை இவர்கள்தான் நடத்திச் செல்கிறார்கள். இயல்பான முகங்களும் பேச்சுக்களும் நம்மை ஒரு நிஜமான கேரள மலைக் கிராமத்திற்கே இட்டுச் சென்று விடுகின்றன. சூப்பர் ஸ்டாராக வரும் மம்முட்டிக்கு எண்ணி சில ஃப்ரேஎம்கள்தான் ஆனால் நம்மை நெகிழ்த்தி விடுகிறார். ஒரு சூப்பர் ஸ்டாருக்கான பள பளப்புடனும், கவர்ச்சியுடனும் மிளிர்கிறார். இவருக்கு மட்டும் வயதே ஆவதில்லை,. எம் ஜி ஆர் போல ஏதேனும் காய கல்பம் சாப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. இறுதிக் காட்சியில் நம்மை உருக்கி விடுகிறார். சந்தேகமில்லாமல் இந்தியாவின் உன்னதமான நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. சினிமாவில் ஒரே ஒரு பாடலும் நடனத்தையும் தவிர அதிகப் படியான காட்சிகளோ, உணர்ச்சி வசப் படுடுத்தும் பேத்தோஸ் காட்சிகளோ ஒரு மில்லி கிராம் கூட கிடையாது. அப்படி ஒரு யதார்த்தம். சினிமாப் பார்ப்பவர்களைக் கேனையர்களாக நினைத்துக் கொண்டு காண்பிக்கப் படும் ஃபிளாஷ் பாக்குகள் அறவே கிடையாது (அதற்கான வாய்ப்புகள் இருந்த போதிலும்). கத பறயும் போள் பிரமாதமான சினிமாவோ , கலைப் படைப்போ கிடையாது. எளிமையான , இயல்பான ஒரு சினிமா, பார்த்து விட்டு வரும் பொழுது எவ்வித எரிச்சலையோ, நம்பகமில்லாத யதார்த்தமில்லாத காட்சிகள் தரும் அஜீரணமோ இல்லாத, ஒரு இனிய உணர்வை அளிக்கும் சினிமா, அவ்வளவுதான். மீண்டும் சொல்கிறேன் தமிழ் நாட்டில் இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இப்படி ஒரு சினிமா வரவே வராதுதான் இருந்தாலும், சினிமாக்காரர்கள் பின்னால் வெறி பிடித்து அலைவதில் மலையாளிகளும் தமிழர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களில்லை என்று இந்தப் படம் காண்பிப்பது ஒரு அல்ப திருப்தியை அளிக்கிறது :))



இயல்பான , யதார்த்தமான சினிமாத்தனங்கள் அற்ற இந்த சினிமாவில் கதா பாத்திரங்களுடன் முக்கியமாக நடிப்பது கேரளாவின் பசுமை, மலைகளின் பிரமிப்பு, கொஞ்சும் எழில். இது வரை நாம் கண்டிராத ஒரு கேரள எழில் இந்தப் படத்தில் விரிகிறது. ஒரு இடத்தில் ஸ்ரீநிவாசன் தன் பிள்ளைகருடன் ஒரு ஆற்றுப் பாலத்ஹ்தின் மேல் நடந்து வர மெதுவாகக் காமிரா அந்த இடத்தின் பின்னணியை விழுங்குகிறது. அடடா காணக் கண் கோடி வேண்டும், நிஜமாகவே இறைவன் தன் இயற்கை அருளை பரிபூர்ணமாக அருளிச் செய்த பிரதேசம். ரப்பர் காடுகளும், மலைகளும், மலைகளின் மீதிலிருந்து இறங்கும் பிருமாண்டமான அருவிகளும், நதிகளூம், ஒடுங்கி ஓடும் மலைப் பாதைகளும், பாலங்களும், படத்திற்கு ரம்யமான ஒரு பின்புலத்தை அளிக்கின்றன. இயற்கையான இந்தப் பின்புலங்கள் இயற்கையான ஒரு கதையுடனும் நடிப்புடனும் இணைந்து நமக்கு ஒரு திருப்தியான நல்ல சினிமாவைப் பார்த்த மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கின்றன.


இப்படியாகப் பட்ட ஒரு நல்ல சினிமாவின் மீது யாரோ திருஷ்டிக் கண் போட்டு விட அதற்கு பிடித்திருக்கிறது கேடு காலம். ஆம் அந்தத் துரதிருஷ்ட செய்தியை ஏன் கேட்கிறீர்கள் போங்கள் !! இந்தப் படத்தைத் தமிழில் எடுக்கப் போகிறார்களாம்? இதை விட விசனமான ஒரு செய்தி என்ன இருக்க முடியும்? அதை விட வருத்தம் தரும் விஷயம் இதை மசாலா மன்னன் பி.வாசு , மசாலா நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போகிறாராம். ரஜினியின் ரசிகர்களை ஏமாற்றாமல் அவருக்கு ஜோடி, சண்டை, காமெடி, நடனம் எல்லாம் வைக்கப் போகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இந்திய பீனல் கோடின் படி மனிதக் கொலை செய்பவர்களுக்கு மட்டும்தான் மரண தண்டனை அளிக்க முடியுமா?

நல்ல சினிமாக்களை தேடி கண்டுபிடித்து சின்னா பின்னமாக்கி படு கொலை செய்யும் இந்தப் பி.வாசுக்களை எப்படி தண்டிப்பது? பி.வாசுவிடமிருந்தும் ரஜினியிடமிருந்தும் இந்தக் கதை பறயும் போளை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால் எப்படி எடுப்பார்கள் என்று கற்பனன செய்தால் நினைக்கும் பொழுதே நெஞ்சு பதறுகிறது. நல்ல சினிமா ரசிகர்கள் இந்தப் பி. வாசுவைக் கடத்திக் கொண்டு போய் ஆப்ப்கானிஸ்தானத்தில் விட்டு விட்டால் கத பறயும் போள் பிழைத்துப் போகும். ரஜனிகாந்துக்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை? யாரரவது இமய மலைச் சாமியார் அவருக்கு எடுத்துச் சொல்லப் படாதா?

ஏற்கனவே பரதம் என்றொரு நல்ல சினிமாவை எடுத்துப் கைமா செய்தவர் இதே பி.வாசுதான், அதை நாசமாக்கியது பத்தாது என்று வெறி தீரரமல் அதில் நடிக்க வேறு செய்தார். அப்புறம் மணிச்சித்திர தாழ் இப்பொழுது கத பறயும் போள், இந்த ஆளுக்கு மலையாள சினிமா மேல் அப்படி என்னதான் காண்டு? ஏனிந்த கொலை வெறி?

நாம நினைத்த மாதிரியே ஒரு நல்ல மலையாளப் படத்தை எடுத்துக் கொத்து புரோட்டா போடக் கிளம்பிட்டாய்ங்க பி.வாசு தலைமையில். ஒரு சாதாரண சினிமாவுக்கு இவனுங்கள மாதிரி யாரும் பில்டப் கொடுக்க முடியாது சாமிகளா. நாலு சண்டையாம், ஐந்து டூயட்டாம், ஸ்ரீநிவாசனுக்கு நிஜமாகவே ரஜனிகாந்த் ஃபிலிம் இன்ஸ்டியுட் சக மாணவராம். ஐயோ பாவம் ஸ்ரீநிவாசன் :))


தமிழில் இந்தப் படத்தை ரஜினிகாந்த்தை வைத்து குசேலன் என்று எடுத்தால் அது இப்படி இப்படி எல்லாம் கொத்து புரோட்டாச் செய்யப் பட வாய்ப்புகள் ஏராளம். சாம்ப்பிளுக்குச் சில:

கத பறயும் போள்... இதெல்லாம் ஒரு படம், சே! இப்படி ஒரு திராவையான படத்தை நான் சமீபத்தில் பார்த்ததில்லை. ஏனென்றால்:

1. மம்முட்டி வரும் முதல் சீன். கார் வந்து நிற்கிறது. மம்முட்டி இறங்கி, எல்லாருக்கும் கை காண்பித்துவிட்டு போய்விடுகிறார். ஒரு intro song இல்லை. சந்திரமுகியில் வருவது போல் ஒரு சண்டைக்காட்சியுடனாவது ஆரம்பித்திருக்கலாம். இவனெல்லாம் என்ன ஹீரோ?

2. சீனிவாசனுக்கு மீனா ஜோடி. ஒரு டூயட் கூட இல்லை. அப்புறம் எதுக்கு மீனா? அட்லீஸ்ட், மீனா படம் நடுவில் மல்லாந்து படுத்துக்கொண்டு பார்பர் பாலன் பணக்காரன் ஆவது போல ஒரு கனவுப் பாட்டு வைத்திருக்கலாம். ஸ்விஸ்- ல்லெ ஒரு பாட்டு, சங்கர் மகாதேவன் பாடி. அப்படி எதுவும் இல்லை இந்தப் படத்தில்.

3. மம்முட்டியும் சீனிவாசனும் பால்ய காலத்து நண்பர்களாம். ரெண்டு பேருக்கும் என்ன உறவு என்பதை ஒரு சில வாக்கியங்களிலேயே சொல்லி முடித்துவிடுகிறார்கள். அட, ஒரு flashback இல்லை. sepia tone-ல்லெ ரெண்டு பசங்களும் ஒண்ணா மாங்காய் சாப்பிட்டு, ஒரே கட்டிலில் படுத்து, இளையராஜா "அறியாத வயசு"ன்னு பாடி விஸ்தாரமா காட்டாம, என்ன இது? மம்முட்டி 2 நிமிஷத்தில் பேசி முடிச்சிடறார்.

4. படம் நடுவில் போர் அடிக்கிறது. இண்டெர்வல் முடிஞ்சு ஒரு குத்துப் பாட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும். ஒண்ணையும் காணோம்.

5. சீனிவாசனின் மகளாக வரும் பெண் ரொம்ப அழகாக இருக்கிறாள். அவளை வச்சு ஒரு லவ், ஸ்கூல்ல பசங்க அடிக்கும் லூட்டி-ன்னு டெவலப் பண்ணியிருக்கலாம்.
"யூத்"தை கவர் பண்ணியிருக்கலாம். அப்படியெல்லாம் இவங்க யோசிக்கவே இல்லை.

இப்படி ஒரு படத்தை தியேட்டர் போயி பார்த்தமேன்னு இருக்கு. பி.வாசு இந்த திரைக்கதையை கொஞ்சம் சரி பண்ணி, செதுக்கி, தமிழ் மக்களின் ரசனைக்கேற்றவாறு மாத்தி, நம்ம யூத்துக்கும் தாய்க்குலத்துக்கும் கோடானுகோடி ரஜினி ரசிகர்களுக்கும் பிடிக்கற மாதிரி மாத்துவார்ன்னு காத்திட்டிருக்கேன். அப்பவாவது இந்தப் படம் உருப்படுமா பார்க்கலாம்.

இதை தமிழ்ப் "படுத்தினால்" முதல் சீனிலேயே ரெண்டு ஷூக்கள் க்ராஸ் பண்ணித் தெரியும் அதை விலக்கினால் அதன் பின்னால் தலையைச் சிலுப்பிக் கொண்டு ரஜனி குதிப்பார் அப்புறம் ஒரு சண்டை போடுவார். அவரது அம்மா அவரைக் கல்யாணம் செய்யச் சொல்லி கெஞ்சுவார். அவரோ தன் நண்பனைத் தேடிக் கண்டுப் பிடித்த பின்னர்தான் திருமணம் என்று சொல்லி விடுவார்.

அப்புறம் ஷீட்டிங் போகும் இடத்தில் ஒரு ஸ்கூல் பெண்ணை ரவுடிகள் வம்பிழுக்க சும்மா பறந்து பறந்து பறந்து அடி பின்னுவார். அப்புறம் பார்த்தால் அந்தப் பெண் தேடிக் கொண்டிருக்கும் பெண்ணாய் இருப்பாள் இருந்தாலும் தெரிய வராது.

ஷூட்டிங் நடக்கும் கிராமத்தில் பொது இடத்தை வில்லன் ஆக்கிரமித்திருப்பான், அவனை வதம் செய்து வள்ளல் ஆவார் உடனே ஊர் காரர்கள் எல்லோரும் சேர்ந்து பாடி ஆடுவார்கள். அப்புறம் ஊரில் ஒரு சின்னப் பெண்ணை அவர் பேத்தி வயதில் டாவடித்து டூயட் பாடுவார்.

அப்புறம் பார்த்தால் நண்பனின் தங்கையாக இருக்கும். ஷூட்டிங்கிற்கு வரும் கதாநாயகியும் அவரை நினைத்து ஒரு தலையாக ஒரு பாடல் பாடுவார். அப்புறம் நண்பனை நினைத்து சின்ன வயதுக்குப் போய் விடுவார் அங்கும் பாட்டு. ஆட்டம். இப்படியாகக் கதை போய் கடைசியில் அந்த நண்பனைக் கண்டு பிடித்து விடுவார்.


ஐயா ரஜினி ரசிகர்களே, காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக்கிறேன், ப்ளீஸ். உங்களுக்கு நிஜ ரஜினிகாந்த் படம் வேண்டுமானால் கொஞ்சம் பி.வாசுவிடம் சொல்லி நெம்பர் 20 மெட்ராஸ் மெயில் சினிமாவை எடுக்கச் சொல்லுங்கள். அதில் மம்முட்டிக்குப் படம் முழுக்க ரோல், ரஜினிகாந்தும் நடிகர் ரஜினிகாந்தாகவே வரலாம், அதில் டூயட், சண்டை என்று தூள் கிளப்பி விடலாம், மோகன்லால் காரெக்டருக்கு மோகன்லாலைத்தான் கூப்பிட வேண்டும் தமிழ் நாட்டில் அது போன்று நடிக்க ஒரு சும்பனும் கிடையாது. தயவு செய்து பி. வாசுவுக்கு ஃபோன் போட்டு ஸ்ரீநிவாசன் கதையை விட்டு விடச் சொல்லுங்கள் சாமிகளா. புண்னியமாகப் போகட்டும். ஸ்ரீநிவாசன் சினிமாக்களில் அவர் எல்லோருக்கும் இளப்பமாக வருவார் இப்ப பாத்தால் தமிழ் நாட்டில் உள்ள தங்கர் பச்சன், பி.வாசு போன்ற கோமாளிகளுக்கும் அவர் இளப்பமாகப் போய் விட்டார். கென்னியின் மனைவி தங்கமானவர். கென்னிக்குக் காழ்ச்சாவை தமிழில் செய்ய வேண்டும் என்ற ஒரு விபரீத ஆர்வம் பொத்துக் கொண்டு வந்த பொழுது காலில் கையில் விழுந்து டைவர்ஸ் செய்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டி அந்த விபரீத ஆசையைப் போக்கடித்துக் காழ்ச்சாவைக் காப்பாற்றினாராம், அந்த மாதிரி ரசனையுள்ள பெண்ணரசி இந்த ரஜினிக்கு மனனவியாக அமையாமல் போய் விட்டாரே என்னே மலையாளத்துக்கு வந்த சோதனை, எண்ட குருவாயூரப்போவ் :(((



`குசேலன்' படத்துக்காக, மொத்தம் 600 பிரிண்ட்டுகள் போடப்படுகின்றன. படம், ஜூலை மாதம் திரைக்கு வந்துவிடும்.
மலையாள படத்தில் மம்முட்டி தோன்றியதை விட, 4 மடங்கு அதிகமான காட்சிகளில், ரஜினிகாந்த் இந்த படத்தில் தோன்றுவார்.

நயன்தாரா, இந்த படத்துக்காக, தன் தோற்றத்தில் விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டார். குறைவாக சாப்பிட்டு, சீக்கிரமாக தூங்கி முகத்திலும், உடம்பிலும் வசீகரத்தை அதிகரித்து கொண்டார்.''
- பி.வாசு

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் கொத்து புரோட்டாக்களை கமெண்ட் பெட்டியில் போடலாம் :-)

( பிகு: இந்த கட்டுரை எனக்கு மெயிலில் வந்தது. சில பகுதிகளை எடிட் செய்து வெளிட்டுள்ளேன் - இட்லிவடை )

குசேலன் பற்றி சினிமா நிருபர் தரும் தகவல்கள்

Read More...

கமலுடன் ஒரு மாலை - சுதாங்கன்

கமலுடன் ஒரு மாலை - எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சுதாங்கன் எழுதியது. அவருக்கு நன்றியுடன் அதை இங்கே பிரசுரிக்கிறேன்...

எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற
வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.

இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.

வைரமுத்து வீட்டு திருமணத்தின்போது இந்த வாரம் சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். புதன்கிழமை (25.6.2008) மாலையின், நானும், நூற்றாண்டை கடந்து விட்ட அல்லயன்ஸ் தமிழ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் போயிருந்தோம். வழக்கம் போல ஸ்ரீனிவாசன் கமலுக்கு கொடுக்க ஏராளமான புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார். இம்முறை ஏராளமான ஆன்மிக புத்தகங்கள்.

தன்னுடைய அலுவலக அறையில் லாப் டாப் போன்ற ந்வீன கருவிகள் சூழ அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் ஏராளமான புத்தகங்கள்.புன்முறுவலோடு வரவேற்றார்.`தசாவதாரம்' பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது எங்களது அன்றைய மாலை சந்திப்பு. `படத்தைப் பத்தி பல விதமான விவாதங்கள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனால் இப்படி ஒரு முயற்சி வெற்றி அடைஞ்சுதில அடுத்து இன்னும் ஏதாவது புதுசு பண்ணலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு ' என்றார்.

`வியாபார ரீதியில் படம் எப்படி ?'

`இதைத்தான் எழத்தாளர் ஜெயகாந்தனும் என்னிடம் கேட்டார்.`ஏம்பா, எனக்கு படம் பிடிச்சிருக்கு. அதனாலதான் பயமா இருக்கு. எனக்கு பிடிக்கிற படங்கள் வெற்றி பெர்றுவதில்லை. இந்த சினிமா எப்படி?' என்றார்.

`அது சித்தாள் வரைக்கும் படத்துக்கு வராங்க.( ஜெயகாந்தனின் மிகப்பிரபலமான நாவல் ` சினிமாவுக்கு போன சித்தாளு') என்று சொன்னேன். இந்த படம் கீழ இறங்காதுன்னு சொன்னாங்க. எனக்கு வர்ற தகவல் எல்லாம் எம்ஜிஆர் படம் பாக்க வர்ற மாதிரி வராங்கன்னு தகவல்'.

`முதல்ல இப்படி ஒரு படம் பண்ணனும்னு எங்க ஆரம்பிச்சது ?' இது நான்.

`வேட்டையாடு விளையாடு' முடிஞ்சதும், அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது கெளதம் மேனன் ` பச்சைக்கிளி முத்துச்சரம்' கதையத்தான் எனக்கு சொன்னார்.எனக்கு
ஒத்துவராதுன்னு தோணிச்சு.உடனே ஏதாவது வித்யாசமா பண்ணலாமேன்னு, ` நவராத்திரி'யில சிவாஜி சார் பண்ணின மாதிரி, ஒன்பது வேடங்கள்னு பேச்சு ஆரம்பிச்சு, அப்புறம்தான் ஒரு படி மேலே போய பத்து வேடங்கள்ன்னு யோசிச்சப்பதான், ` இந்த `தசாவதாரம்' விஷயம் வந்தது'

`இந்த ரங்கராஜ நம்பி விஷயம்?'

`இந்த மோதல்கள் வரலாற்றில இருக்கு. அந்த காலத்தை களப்பிரர்கள் காலம்னு சொல்வாங்க. சரித்திரலேயே நடந்த மிகப்பெரிய இன ஒழிப்புன்னா அது சமண மதத்துக்கு நடந்த மாதிரி எப்போதுமே நடந்ததில்ல. அதற்கு பிறகுதான் பல விவகாரங்கள் முளைத்தது. அதற்கு முன்பு பிறாமணர்கள் புலால் சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. இந்த சுத்த சைவமெல்லாம், சமணர்களிடமிருந்ந்துதான் பிறாமணர்களுக்கு வந்தது.வரலாற்றை நல்ல படிச்சு பார்த்தா, ஆர்ய சத்ரியர்கள், ஆர்ய் சூத்திரர்கள் என்றெல்லாம் கூட பிரிவுகள் கூட இருந்தது. அப்போது வைணவர்கள், குறிப்பாக ராமாஜரின் சீடர்கள் வீரமாக இருந்திருக்காங்க. தங்களுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு மனித குலத்தில் சில மனிதர்கள் அவதாரம் எடுத்தாங்கன்னு சொல்ற மாதிரியான கதைதான். நாம் இன்றைக்கு பண்ற தவறுகள்தான் நாளைக்கு நம்மை வழி நடத்தும்.

அந்த ஆரம்ப காட்சியில் நீங்க `விஷ்ணு ஸகஸ்ரநாமம்' சொல்லும்போது, அது ஏதோ மனப்பாடம் பண்ணி சொன்ன மாதிரி இல்லையே ? தினமும் கோயிலுக்கு போகிற ஒரு தீவிர வைணவர் சொல்ற மாதிரி தானே இருந்தது.?

`ஆமாம், எனக்கு விஷணு ஸ்கஸ்ரநாமம் முழசா தெரியுமே' கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்.`சுப்ரபாதம் முழசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் `குணா' படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது. இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி.குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்'அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்.
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள்.அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.இப்படி ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்ட பல விஷயங்களில் பாதிப்புதான் அந்த பாத்திரம்.

`இந்த படத்தின் மூலமாக கடவுள் அவதாரம் இருக்குன்னு ஒத்துக்கிறீங்களா ?

`அது உங்க perception. அதுதான் படத்திலேயே சொல்லியிருக்கேனே. கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு. எனக்கு பல ஆன்மிகப் பெரியவர்கள் நல்ல தமிழ் கத்துக் கொடுத்திருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும். நான் சினிமாவில வளர்ந்துக்கிட்டுருக்கிற நேரம். வாரியார் சுவாமிகள் எங்கப்பாவுக்கு நல்ல நண்பர். பல சமயங்கள்ள எங்கப்பாவோடு அவருடைய காலட்சேபங்களுக்கு போயிருக்கேன். ஒரு நாள் தீடிர்ன்னு வாரியார் சுவாமிகள் என் வீட்டுக்கு வந்தார். `உனக்கு நம்பிக்கை இல்லேன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முருகனுக்கு கோவில் கட்டறேன். நீ எனக்காக பணம் கொடுக்கணும்'னு சொன்னார். `நீங்க கேட்டா கொடுக்க ஆசைதான். ஆனால் பெரிய பணம் இப்ப இல்லையே' ன்னு சொன்னேன். `நீ எவ்வளவு வேணும்னாலும் கொடு' என்றார். அப்ப எனக்கு சம்பளமே 25 ஆயிரம்தான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்ப எங்கூட இருந்த பகுத்தறிவு நண்பர்கள் கூட எங்கிட்ட ` நீ யாருன்னு சொல்லு'ன்னு சண்டை போட்டாங்க.`நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்குங்க' அவர் கிட்ட நான் தமிழ் கத்துக்கிட்டேன்'ன்னு சொன்னேன். இப்படி எனக்கு தமிழ கத்துக்குடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் இந்த படத்தில் என்னால அசினுக்கு மங்களா சாசனம் சொல்லிக்கொடுக்க முடிஞ்சது. அவங்க மலையாளம் அவங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது.'

இப்படி பல விஷயங்களை சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் தெரியாத பல தொழில் நுட்ப கலைஞர்களுக்காக அவர் ஆங்கிலத்தில் எழதி வைத்திருந்த `தசாவதாரம்' திரைக்கதையை காட்டினார். அதை பார்க்கும்போது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு அதிக வேலையே இருந்திருக்காது என்பது புரிந்தது. ஒவ்வோரு அசைவையும் அவரே குறித்து வைத்திருந்தார். அடுத்த படமான `மர்மயோகி' முழ திரைக்கதையும் ஆங்கிலத்தில் தயாராக இருந்தார்.

என்னுடைய வாழ்க்கை லட்சியமே `THE DECLINE AND FALL OF ROMAN EMPIRE' எட்வர்ட் கிப்பன் எழதிய ஏழ வால்யூம்கள் என்னிடம் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். அதே போல் `THE RISE AND FALL OF THE THIRD REICH' BY WILLIAM SHEIRER. இதையும் தமிழில் கொண்டு வரவேண்டும். என்னுடைய இந்த ஆசை கமலுக்கும் தெரியும். இப்போது அதற்கு துணையாக பிஷருடைய புத்தகத்தையும் படிக்க சொன்னார். தான் தவில் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

தலைநிறைய் பல விஷயங்களை அவரிடமிருந்து வாங்கி நிரப்பிக்கொண்டு திரும்பினோம்
( நன்றி: எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்)

Read More...

Thursday, June 26, 2008

தசாவதாரம் திரைப்படம் பற்றி -ஓர் அலசல்! - கி. வீரமணி

தசாவதாரம் திரைப்படம் பற்றி -ஓர் அலசல்! - கி. வீரமணி எழுதிய கட்டுரை விடுதலை இதழில்....

சீரிய பகுத்தறிவாளர், கலைஞானி நண்பர் கமல்ஹாசன் அவர்கள் நடித்த தசாவதாரம் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். திரைப்படத் தொழில்நுட்பத்தின் பல்வேறு திறன்களையும் ஒருங்கே பெற்ற பல்கலைக் கொள்கலனாக (A multi-dimensional genius) நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திகழ்கிறார் என்பதை அத்திரைப்படத்தைப் பார்க்கும் எவரும் உணர முடியும் என்கிற அளவுக்கு அவர் உயர்ந்து நிற்கிறார். ஒரு பாத்திரத்தில் உயர்ந்து உள்ளபடியே புகழிலும் உயர்வாக நிற்கிறார்!
12ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சைவ-வைணவ சமயங்களுக்கிடையேயான சண்டையிலிருந்து கதை தொடங்கி கடந்த 2004இல் நிகழ்ந்த சுனாமியில் முடிகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை மத உணர்வுகளால் உந்தப்பட்ட மனிதர்களின் மனித விரோதச் செயல்கள் பார்ப்பவர் அனைவரின் மனங்களிலும் விவாதத்தைத் தூண்டும் என்பது நிச்சயம்.
உரையாடலில் ஒவ்வோர் இடத்திலும் கூர்மை மிளிருகிறது; பகுத்தறிவு வாதம் பளிச்சிடுகிறது. இன்றைய இளைய தலைமுறையின் விரைந்த பரபரப்பான உலகத்தில் அவர்கள் விரும்பும் வகையில் ஆங்கிலப் படம் போல அமைத்திருப்பது சிறப்பான முயற்சியாகும். அதிகம் சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத எம்மைப் போன்றவர்களையே கட்டிப்போடும் அளவுக்கு காட்சிகளின் அமைப்பும் அதன் கோர்வையும் வெகுவாகக் கவர்ந்தன.
உலகை அழிக்கவல்ல உயிரியல் ஆயுதம் மக்களை மாய்த்திடாத வகையில் பத்திரமாய் பாதுகாத்து அதனைக் கைப்பற்றி அழிக்கும் மனித நேய உணர்வு ஒரு பகுத்தறிவாதிக்கே உரியது என்பதை விஞ்ஞானி கதாபாத்திரத்தின் வழியாக உணர்த்தி, பகுத்தறிவாளர்களின் உயரிய மனித நேயத்தை உலகிற்கு உணர்த்தியதை பகுத்தறிவு இயக்கத்தவராகிய நம்மால் எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்.
தனது தந்தை பெயர் தஞ்சாவூர் ராமசாமி நாயக்கர் என்று கூறி, அந்தப் பெரியாரா என கேள்வி கேட்க வைத்து, இல்லை இல்லை இவர் சிறியார் என பதில் கூறி தந்தை பெரியாரை நினைவுபடுத்தும் காட்சியும் சிறப்புடன் சிரிப்பும் இணைந்த ஒன்று!
படம் முழுக்க உரையாடலில் வரும் பகுத்தறிவு வாதங்கள் நிச்சயம் இளைய தலைமுறை மட்டுமல்லாது எல்லாத் தரப்பினரையும் சிந்திக்கத் தூண்டும் என்பது உறுதி. மடம் என்றால் தப்பு நடக்காதா? என்ற கேள்வியும் வேறு ஒரு காட்சியில் எனக்கு பெருமாள் தான் முக்கியம் என்று கதாநாயகி சொல்லும்போது எனக்கு மனுஷங்கதான் முக்கியம் என்று விபத்தில் அடிபட்டவர்களைக் காப்பாற்றும் பகுத்தறிவாளரின் பதிலும் சில சான்றுகள். பகுத்தறிவாளர்கள் மனித நேயர்கள் என்பதை உறுதிப்படுத்துபவைகள் ஆகும்!
10 பாத்திரங்களையும் ஒருவரே ஏற்று அனைத்தையும் கச்சிதமாக செய்து ஒரே மனிதரா இத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்தார்? என்று எவரையும் வியக்கும் அளவுக்கு நடிப்புக் கலையின் உச்சத்தை எட்டியுள்ள பகுத்தறிவாளர் கமல்ஹாசன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறோம்.
வைணவப் பார்ப்பனர், பகுத்தறிவுவாதி, இஸ்லாமியர், சீக்கியர், தாழ்த்தப்பட்டவர், அமெரிக்க அதிபர் புஷ், வெள்ளைக்காரர், தெலுங்கர், ஜப்பானியர், வயது முதிர்ந்த பாட்டி என பத்து பாத்திரங்களை அமைத்து ஒவ்வொருவரின் குணநலன்களையும் நடிப்பில் மட்டுமல்லாது அவர்களின் கொள்கைகளையும் உரையாடல் வாயிலாக வெளிப்படுத்தி இறுதியில் மனித நேயமே மகத்தானது என்பதை உணர்த்தியுள்ள பாங்கு அவரது கற்றறிவை வெளிப்படுத்துகிறது.

ஒரு வணிகச் சினிமாவில் இத்தனை உயரிய மனித நேயச் சிந்தனையைச் சொல்லியது வியப்புக்குரியது. வரலாறு, அரசியல், அறிவியல், திரைத் தொழில் நுட்பம் என அனைத்தையும் நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்துள்ளார்; புதிதாக திரைத்துறையை நோக்கி வருவோர்க்கு நண்பர் கமல்ஹாசன் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இத்தகைய பல்லாற்றல் பெற்று ஒருவர் சீரிய பகுத்தறிவாளராக, அறிவு ஆசான் பெரியார் பற்றாளராக இருப்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும். நடிகர்களில் ஏராளம் படிக்கும் பழக்கமுடைய பகுத்தறிவாளர் இவர்.

இதற்குமுன் தனது பல படங்களில் பகுத்தறிவு, மனித நேயச் சிந்தனைகளைப் பரப்பி தன்னை ஒரு பகுத்தறிவாதியாக அறிவித்துக் கொண்டு வந்துள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்கள் அந்த முயற்சியின் தொடர்ச்சியாக தசாவதாரத்தைத் தந்து தனது ரசிகர்களையும் பகுத்தறிவாளர்களாக உருவாக்கிடும் பணியைச் செய்து வருவது பாராட்டுக்குரியது.

நாடகக் கலை வித்தகர், முத்தமிழ் கலா வித்வ ரத்ன அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் நடிப்புப் பட்டறையில் உருவாகி கற்றறிவாளர்கள் பலருடன் நட்பை வளர்த்துக் கொண்டு, பகுத்தறிவாளருக்கே உரிய தனித்த பண்போடு பலவகை நூல்களையும் கற்று, பொறுப்புணர்ச்சிமிக்க ஒரு முழுமையான கலைஞனாகத் திகழும் நண்பர் கமல்ஹாசன் அவர்களின் இச்சாதனையை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்கு தன்னிகரற்ற கலைஞராக உயர்ந்து நிற்கும் அவரது திறமையை உலகம் நிச்சயம் பாராட்டும்; நாமும் பாராட்டுவோம். வாழ்த்துகள்.

மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பிரம்மாண்டம் என்று சொல்லி மகிழ்ந்து அவர் அறிவு ஆற்றலைப் பாராட்டியவர். வேறு பரிசுகள் தேவையா?
இந்தப் படத்துக்காக நாம் நன்றி பாராட்டுகிறோம். இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்.


"இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்"


மேலெ உள்ள வரிகள் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது' என்ற பாடலில் ஒரு பகுதி. இதில் கமலின் அப்பா அம்மா பெயர்களை சொல்லிவிட்டு அவர்களின் செய் ஒரு விஷ்ணுதாசன் என்று சொல்லுகிறார். இது விரமணி ஐயாவிற்கு காதில் விழுந்ததா ?


Read More...

தி.மு.கழகத்திற்கும் `தினகரன்’ இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை

விரும்பிய சேனலை பார்க்க முடியவில்லை’ மரண பயத்தில் மதுரை மக்கள் - ஜெயலலிதா அறிக்கை ( தினகரன் )
தி.மு.கழகத்திற்கும் `தினகரன்’ இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை - கழகத்தினருக்கு ஓர் அறிவிப்பு ( முரசொலி )




தினகரனில் ஜெ அறிக்கை

சென்னை, ஜூன் 25: மதுரை மாவட்ட மக்கள் அஞ்சி, நடுங்கி, அடிமைகள் போல் வாழ்கின்றனர். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து டி.வி. சேனல்களையும் பார்ப்பதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரையை தலைமையிடமாக கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை மு.க.அழகிரி தொடங்கி இருக்கிறார். அதை விரைவில் தென்மாவட்டங்கள் முழுவதும் விஸ்தரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்துக்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மதுரை மக்கள் அனைத்து சேனல்களையும் பார்க்க முடியவில்லை. அங்குள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும், இதுகுறித்த புகாரை காவல் துறையினர் வாங்க மறுக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன.
மதுரையில் நிலவும் பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, Ôஅரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கி நடத்த இருக்கிறது. அதன்மூலம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்Õ என்று கூறினார். மாறன் குடும்பத்துடன் பிரச்னை ஏற்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இரண்டு டிவி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு, அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? எல்லாம் சுயநலம்தான்! அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும் அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தன்னுடைய மகனை மீறி தைரியமாக செயல்படக்கூடிய நிலைமையில் முதல்வர் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் அநியாயமான விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வு, மறைமுக பேருந்துக் கட்டண உயர்வு, தொடர் மின்வெட்டு. பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என பல்வேறு துன்பங்களை தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கவலையை மறந்து ஏதோ சிறிது நேரமாவது டிவியில் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை பார்த்து பொழுதை கழிப்போம் என்றால், அதற்கும் வழியில்லாத நிலை தற்போது மதுரை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.
Ôமுன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைÕ, Ôதினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு, அதன் காரணமாக மூன்று பேர் மரணம்Õ ஆகிய நிகழ்ச்சிகளின் காரணமாக பொதுமக்களும், கேபிள்டிவி ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். மரண பயம் அவர்களை தற்போது கவ்விக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அஞ்சி, நடுங்கி அடிமைகள் போல அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், மாநாடு என்ற போர்வையில் ஆங்காங்கே, அரசு பஸ்களை மாநாட்டுக்கு பயன்படுத்தியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் பொதுமக்களை முதல்வரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே கருணாநிதிக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மதுரை மாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து டிவி சேனல்களையும் கண்டு மகிழ்வதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.



முரசொலி அறிவிப்பு
"மரண பயத்தில் மதுரை மக்கள்" என்ற தலைப்பில் இன்றைய "தினகரன்" நாளேட்டில் மிகப்பெரிய தலைப்பிட்டு, அரைப் பக்கச் செய்தியாக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையொன்று தி.மு.கழக அரசுக்கும், தி.மு.கழகத்திற்கும் எதிரான பொய்ச் செய்திகள் கொண்டதாக வரிக்கு வரி விஷம் கக்கிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அந்த அறிக்கையில் எந்த விதமான உமியளவு உண்மையும் கிடையாது, தேவையில்லாமல் அரசுக்கு அவப் பெயர் வர வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏனைய நாளேடுகளில் பெரும்பான்மை ஏடுகள் ஜெயலலிதாவின் அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை என்கிறபோது, "தினகரன்" நாளிதழ் மட்டும் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதிலிருந்து - பல முறை அறிவுறுத்தியும் கேளாமல் நடந்து கொள்ளும் அந்த ஏட்டின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தி.மு.கழகத்திற்கும் "தினகரன்" இதழுக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், கழகத் தோழர்கள் யாரும் அந்த இதழில் விளம்பரங்களோ, செய்திகளோ தரத் தேவையில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


தலைமைக் கழகம்
தி. மு. க.
25. 6. 2008

Read More...

காடுவெட்டி குரு - ஆடியோவும், அறிக்கையும்

கிழே இருக்கும் இரண்டு ஒலித் துண்டுகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் திரு.காடுவெட்டி குரு பேசியது. சென்சார் ஆனது என்று தெரிகிறது.

ஆடியோ பகுதி - 1 ( MP3 கோப்பு )
ஆடியோ பகுதி - 2 ( MP3 கோப்பு )

இந்த மாதிரி எல்லா கட்சி கூட்டங்களில் அரசியல்வாதிகள் இப்படி தான் பேசுகிறார்கள். நமக்கு தான் கேட்க குடுப்பினை இல்லை. அமைச்சர் வளர்மதி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேசவில்லையா? எல்லா கழக கண்மணிகளும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பேசுவார்கள், வளர்ந்த விதம் அப்படி, வளர்த்த விதம் அப்படி. ஏன் ஓக்கேனக்கல் பிரச்சனையின் போது நடிகர் சத்தியராஜ் தமிழ் உணர்ச்சியுடன் பேசவில்லையா ?

ஏகைதட்டி விசில் அடிக்க ஒரு கூட்டம் இருக்கும் போது, இந்த மாதிரி பல காடுவெட்டி, மரம்வெட்டி, செடிவெட்டி என்று முளைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாக்கடை அடைப்பு இருக்க தான் செய்யும்.

இந்த மாதிரி காடுவெட்டி தலைவர்களை எல்லாம் பக்கத்தில் இருப்பதால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று அடிக்கடி ராமதாஸ் அறிக்கை விடுகிறார் போலும். இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இரு கட்சிகளுக்குள் மட்டும் ஒலிபரப்பப்பட்டு சேந்தியில் ஏத்தியிருந்த வசனங்களை இப்போது வாரிசு செய்த அரசியலுக்காக தூசிதட்டி எடுத்து, ஊருக்கே ஓதிக் காண்பித்தாகிவிட்டது. ஊர்சிரித்துப் போய்விட்டது. ஆனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கழகமும் பாட்டாளிப் பட்டாளமும் இணையவேண்டிய நெருக்கடியில், ஓதிய கேசட்டை மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் கழகங்கள் இருப்பதால் கழக தலைவர்கள், உடன்பிறப்புக்கள், கண்மணிகள், மொழிகள், விழிகள் எல்லாம் கீழே உள்ள பகுதியை, அறிக்கையாகவோ, தொண்டர்களுக்கு கடிதமாகவோ, பிரித்து போட்டு உரைநடை கவிதையாகவோ யூஸ் செய்யலாம். எனக்கு ஆட்சோபனை இல்லை..

மாதிரி அறிக்கை கீழே...

"கூட்டணி உடைப்புக்குமுன் ஒரே ஒரு முறை மோசமான ஒலிப்பேழையில் மட்டும் முன்பு கேட்டிருந்த தம்பி காடுவெட்டியின் பேச்சை மீண்டும் ஒருமுறை தெளிவான ஒலிப்பேழையில் கேட்க விழைந்தேன். அந்தத் தெள்ளமுதத் தமிழ்ப் பேச்சு பிறகு என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கேட்டேன். அதிர்ந்தேன். அப்போதுதான் எம் திராவிட மக்களின் குரலை ஒத்தெடுத்த என் பாட்டாளியின் குரலும் தமிழும் என்னை யோசிக்கவைத்தது. எங்கள் கூட்டணியை உடைக்க எத்தனித்த எதிர்க்கட்சி எத்தர்களின் சதி விளங்கியது. கேட்க கேட்க என்னருமைத் தம்பிகளாம் வெற்றி கொண்டான், இப்பொழுது எதிர் முகாமில் இருக்கும் தீப்பொறியார், நன்னிலம் நடராசன் ஆகியோரால் மட்டுமே இது போன்ற வீர உரைகளை நிகழ்த்த இயலும் என்று இறுமாந்திருந்த எனக்கு ஒரு இனிய ஏமாற்றம், அதிர்ச்சி, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அன்றே அண்ணா , எனதருமை அண்ணா சொன்னார், இதோ மாற்றான் தோட்டத்தில் ஒரு மல்லிகையைக் கண்டேன் மனம் குளிர்ந்தேன், காதுகளில் தேன் பாய்கிறது தம்பி.

வெறும் பஜனை மடங்களிலும் உபந்யாசங்களிலும் வெட்டித் தமிழ் பேசிப் பொழுதைக் கழித்து, சர்க்கரைப் பொங்கலும் தயிர்சாதமும் வாழ்வாகிப் போன நாறவாயர்களை-- தன்னையும் தமிழர்கள் என்று சொல்லித் திரியும் ஆரிய வந்தேறிப் பார்ப்பனர்களை-- எங்களைத் துண்டாட நினைத்த எதிர்க்கட்சி சதிகாரர்களை ஒன்றுதான் கேட்க நினைக்கிறேன், "என்றைக்காவது உங்களால் இந்த மாதிரியான வார்த்தையணியை என் தமிழன்னைக்குப் பூட்டி அழகுபார்க்க முடியுமா?"

மயிரு... போன்ற வார்த்தைகளை உங்கள் ஆயுளில் என்றாவது உபயோகித்திருப்பீர்களா? எத்தனை கோபமும் ஆத்திரமும் கையாலாகத்தனமும் வந்தாலும், "அபிஷ்டு, நாசமாப் போய்டுவ" வுக்கு மேல் தமிழை உங்களால் யோசிக்க முடிந்திருக்கிறதா? வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறதா? ஆனால் தம்பி காடுவெட்டி தன் பேச்சால் தமிழை செம்மொழி ஆக்கியுள்ளார். ஒரு மொழியின் வளர்ச்சி அந்த மண்ணின் மைந்தர்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. அந்த வகையில் காடுவெட்டியின் குரலிலும் மொழியிலும் அவரை வளர்த்தெடுத்த நண்பர் ராமதாசின் செயல்பாடுகளிலிம் என் தமிழன்னையை கண்டு நெகிழ்கிறேன். இதைத்தான் திரையுலகப் பகுத்தறிவு நட்சத்திரம் எனதருமைத் தம்பி கமலஹாசன், 'தமிழை யாராவது தெலுங்கு பேசறவங்க வந்து காப்பாத்துவாங்க' என்று முன்னறிந்து சொல்லியிருக்கிறான். பெரியாராக நடித்த சத்தியராஜ் பற்றி கேட்கவே வேண்டாம்.

டாஸ்மாக் கடையில் எந்த பார்ப்பான் வந்து குடிக்கிறான்? என்று தம்பி தைரியமாக கேள்வி கேட்க்கிறார், இந்த மாதிரி பார்பானை தைரியமாக கேள்வி கேட்கும் தைரியம் கழக உடன்பிறப்புக்களை தவிர வேற யாருக்கு வரும் ?

அதனால் இவன் தான் தமிழன், இவர்தான் நமக்குத் தேவை. உடன் பிறப்பே ஓடி வா, நம் அன்புத் தம்பி காடு வெட்டியைக் கட்டி அணைப்போம் வா, மயில் போல் ஆடி வா, குயில் போல் கூவி வா, குரங்கு போல் தாவி வா, ஆனை போல் அசைந்து வா, கரடி போல் கத்தி வா, மீன் போல் நீந்தி வா, பறவை போல் பறந்து வா, தவளை போல் தத்தி வா, காடு வெட்டியைக் காண வா, குருவைக் குசிப் படுத்த வா, அலை கடலென திரண்டு வா, குருவைப் போலக் குடித்து வா,. வெட்டி போல வெட்டியாக வா, காடு போலக் காட்டானாக வா, மான் போல் துள்ளி வா, மாடு போல் மயங்கி வா தவறிப் போயும், மறந்து போயும் மனிதனாக மட்டும் வந்து விடாதே என் மறத் தமிழனே. வா, நாம் காடு வெட்டியை ஆரத் தழுவி முத்தம் கொடுத்து வரவேற்போம். வா, வா, வா.................

எனவே நாங்கள் (அரசியல்) கொள்கையால் கூட்டணியில் இணைந்தோம்; இனி இன்றுமே பிரிக்கமுடியாதவாறு தமிழால் கட்டப்படுகிறோம்."

என்று அறிக்கையில் - - - - - - கூறியிருக்கிறார்.

Read More...

Wednesday, June 25, 2008

மருதநாயகத்தின் மறுபெயர் மர்மயோகி - கமல்

பிரமிட் சாய்மிரா நிறுவனத்துடன் உலக நாயகன் கமலஹாசன் இணையும் முதல்படம் மர்மயோகி ஆகும். இந்த படத்தின் கதை , திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கமல் கவனிக்கிறார். ரூ 100 கோடி செலவில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் துவக்க விழா ஜூலை 13ல் வெகுவிமரிசையாக நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். மருதநாயகம் படத்தையே கமல் மர்மயோகி என்ற பெயரில் எடுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த படம் முதலில் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் தயாரிக்கப்போவதாக இருந்தது தற்போது பிரமிட் சாய்மிராவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
( தகவல்: தினமலர் )

பிரமிட் சாய்மிராவுக்கு ஆல் தீ பெஸ்ட். வலைப்பதிவர்கள் எல்லா ரெடியா இருங்க விமர்சனம் எழுத :-)

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-06-08

நேற்றைய கடிதத்தை தொடர்ந்து...
முனிக்கு அடுத்த கடிதம், அனுப்பியவர் பாலா செந்தில்குமார். நிச்சயம் முனி ஒரு பட்டை தலைவலி மாத்திரையை கரும்பு ஜூஸுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்புள்ள முனிக்கு ...

அப்புறம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்க நான் ஆண்டவனை வேண்டிகறேன்.
அட இது தானா வேண்டாம்கறது இந்து, முஸ்லீம்,கிருத்துவ ஆண்டவன் யார இருந்தா உனக்கு என்ன? எல்லாரும் ஒன்னு தானா .அப்படி தானப்பா நாம நினைக்கிறோம் ஆனா சிலர் அப்படி இல்ல ....

அட சத்தியமா சொல்லறேன் எனக்கு இந்த தென்கலை வடகலை பற்றி எல்லாம் தெரியாது .நாமம் போடறதுல கூட வித்யாசம் இருக்கு அப்படிங்கறது உனக்கு வந்த கடிதாசிய படிச்சா பின்னால தான் தெரிஞ்சுது.


நம்ம ஊரு பொள்ளாச்சி பக்கம் ...அய்யா சொல்லி இருகரு இல்ல தேவர் மகன் படத்த வண்டி கட்டி போய் பார்த்த அப்பவிகள் போலவே எங்க ஊரு பக்கமும் அப்படி தான் வண்டி கட்டி போய் படம் பார்க்கும் கூட்டம் அதிகம் ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் எங்க ஊரு பெருமாள் கோவில திருநீறு குடுபங்க உங்கள மாதிரி இல்லைங்க ...எப்படி வடகலை அய்யரு மன்னிக்கணும் அய்யங்காரு எப்படி தென்கலை நாமம் போட்டு வரலாம்னு கேக்க மாட்டங்க ...அவர்களுக்கு திருநீறு நாமம் ரெண்டும் ஒன்னு தான்.

அப்புறம் மதுரை பக்கம் வர்ற அய்யப்பமார்கள் கடவுள் இல்லைனு சொல்லரவரு கடைல காரசேவு வாங்கரங்கனு சொல்லராரு ஆமா கடவுளுக்கும் காரசேவுகும் என்னய சம்பதம் ? ருசி நல்லா இருந்த எந்த கடில வேணும்னாலும் வாங்கலாம் அவோளுவுதான முஸ்லீம் நடுல இருந்து வர பெட்ரோல கார் ஓட்ட மாட்டேனு எந்த இந்துவும் நினைகரது இல்லை தானா அது போல தான் இதுவும் .அந்த கடைகாரர் பரவாஇல்லை எங்க ஊரு பக்கம் பழனிக்கு ஒரு தடவ வந்து பாருங்க நெத்தி நிறைய பட்டய போட்டுக்கிட்டு கத்தி இல்லாம உங்கள மொட்டை அடிக்க நிறைய பேரு இருகாங்க இத என்ன சொல்ல அப்போ பழனிக்கு போய் சாமி கும்பிட வேண்டாமா ?

அய்யா சாமிகளா ஆயரம் ஆயரம் வருசமா அழியாம இருக்கிற இந்து மதத்த யாராலும் அழிக்க முடியாது இந்துக்களை தவிர ஆமாயா நீங்க இன்னும் தென்கலை வடகலை நாமம் திருநீருனு சண்டை போட்டுக்கிட்டு இருங்க அப்புறம் யாரும் தேவை இல்லை தானா நம்ம மதத்த அழிக்க .

பட்டை பெருசா நாமம் பெருசான்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா அப்பாவி சனங்க என்ன செய்வாங்க நமக்கு எதுக்கு வம்புனு சிலுவை போட ஆரம்பிச்சிடுவாங்க இது தானா நடக்குது.

எல்லா அறிவு ஜிவிகளும் கேக்ற கேள்வி என்ன இந்த ஆளு இந்து மதத்த பத்தி மட்டும் குறை சொல்லராரு மத்த மதத்த பத்தி பேச மடிங்கரறு இவறும் கேட்டு இருகரு அய்யா எங்க வீட்டுல எதாவது ஒன்னுனா எங்க அம்மா என்னை தான் கேப்பாங்க பகத்து வீட்டு பையன் பத்தி அவங்க கேக்க மாட்டங்க அது போல தானா இதுவும்.நம்ம மதத்துல இருக்கிறதா சொன்னா பக்கதுல அப்படி இருகாங்க அத பத்தி கேளுன்னு சொன்னா எப்படி ?

கடசியா ஒன்னு எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கும் வழிச்சு தரவன் வழிச்சு தந்தா வாங்கி திங்கரவனுக்கு எங்க போச்சு புத்தின்னு ..... அப்படி தனைய வாரத்துக்கு பாத்து படம் வருது அதுல இதுவும் ஒரு படம் எங்கள மாதிரி அப்பாவிகளுக்கு ஆனா எத குடுத்தாலும் வாங்கி திங்கற அளவுக்கு ஒன்னும் புத்தி கெடு போகல ...

இந்து மதம் ஒரு புனித மதம் மட்டும் அல்ல புதிய சிதந்தகளை ஏற்றுகொள்ளும் ஒரு மதமும் கூட அது தானை புதுப்பித்து கொண்டே இருக்கும் அதை ஒரு சினிமா மாற்றி விடும் என்பது சும்மா பேத்தல் ...

என்ன முனியப்பா தலை சுத்துதா சரி சரி முடிச்சுக்கிறேன் என்ன செய்றது கடவுளுக்கும் கரசேவுகும் முடிச்சு போட்ட அப்புறம் இப்படி தான் நாமளும் நம்ம பங்குக்கு எதவத எழுதனும் இல்லை ........

அடுத்த கடிதத்தில் சிந்திப்போம் மன்னிக்கணும் சந்திப்போம்...


பாசமுடன்

பாலா ....
( balasenthil.ms@gmail.com )

Read More...

அரசியல் புதிர்

3x4 ^3x3 இது என்ன ? ( சத்தியமா இது அரசியல் புதிர் தான் )

இது கஷ்டமான புதிர் என்று நினைப்பவர்கள், பினாத்தலார் அருமையான சுலபமான:-) புதிர் ஒன்றை வைத்துள்ளார் அங்கே சென்றுவிடுங்கள் இந்த புதிருக்கு ஏதாவது Clue கிடைத்தாலும் கிடைக்கும் :-)

Read More...

ஜெ புகார் - அழகிரி பதில்

சன் குழும சேனல்களை பெறுவது தொடர்பாக சுமங்கலி கேபிள் விஷனுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத் துக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என மு.க. அழகிரியின் ராயல் கேபிள் விஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் கேபிள் மற்றும் சுமங்கலி கேபிள் நிறுவனங்கள் பரஸ்பரம் அறிக்கைப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவதில் தாமதம் ஏற்பாடுவது ஏன் என கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக ராயல் கேபிள் விஷன் வெளியிட்ட அறிக்கை....



"ராயல் கேபிள் விஷன் குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான, உண்மைக்கு புறம்பான ஒரு அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட் டுள்ளார்.

அறிக்கையில் அவர் தெரிவித் திருப்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும்.
கடந்த 9ந் தேதி தொடங்கப்பட்ட ராயல் கேபிள்விஷன் நிறுவனம் மக்களுக்கும், கேபிள் ஆப்பரேட் டர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் உயரிய தொழில்நுட்ப சேவை வழங்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

எங்களை விரும்பி, அணுகி தாங்களாகவே இணைத்துக் கொண்ட "ஹெட் என்ட், "லிங்க்' ஆப்பரேட் டர்களுக்கு எங்களது சேவை தொடர்கிறது. சன் குழுமத்தின் கட்டணச் சேனல் களை பொறுத்தவரை சட்டப்பூர்வ மான அணுகுமுறையை மேற்கொண்டு இறுதியில் வெற்றி பெறுவோம்.

இது ஆர்.சி.வி. மற்றும் எஸ்.சி.வி எனும் இரு வணிக நிறுவனங்களுக் கிடையிலான பிரச்சனை, இதில்அரசுக்கோ, அரசு கேபிள் நிறுவனத்திற்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லை' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
( செய்தி: மாலைசுடர் )

Read More...

இட்லிவடை பதில்கள் - 25-6-08

இட்லிவடை பதில்கள் பத்து.

ஜி. சங்கர் கேள்விகள்...

1. 2 இட்லி 1 வடையின் விலை (தற்போது) என்ன ? சாதாரண பவன் களிலும், சரவண பவன் மாதிரியான உயர்தர சைவ உணவகங்களிலும் ?

உண்மையான தமிழன் இட்லிவடையின் தரம், ருசி மட்டுமே பார்க்கவேண்டும். விலை, நதிமூலம் ரிஷிமூலம் ஆகியவற்றை அல்ல. அப்படிப் பார்ப்பவன் தமிழனே அல்ல. ;-)

2. மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் இதுவரை மக்களுக்காக என்ன செய்துள்ளார் ? ஆளுங்கட்சியிலும் அவருக்கு நல்ல பேராமே ? அவர் கேட்டுக்கொண்டால் சில விஷயங்களை செய்து கொடுக்கிறார்களாமே ?

MLA ஆகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இவருக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர் டிராமாவுக்கு பல திமுக காரர்களே விசிரிகள் அதனால் அவரை யாரும் பகைக்காமல் நகைத்துவிட்டு போகிறார்கள். இதுவரை என்ன செய்திருக்கிறார் என்று அவருடைய வலைப்பதிவை பாருங்கள். ஃபேன்ஸி நம்பர் வாங்கிய வைபவத்தை தவிற மற்றதை சொல்லியிருக்கிறார்.

3. டைம்ஸ் ஆஃப் இண்டியா வரவினால் ஹிண்டுவிற்கு பாதிப்பு உள்ளதா ? இந்த சுமார் 2 மாதங்களில் ஆங்கில நாளிதழ் மார்க்கெட் எப்படி உள்ளது? இண்டியன் எக்ஸ்பிரஸ் வேற எழுத்துரு எல்லாம் மாற்றி படம் போட்டு பாகம் வரைகிறதே ?

டைம்ஸ் வந்ததால் இந்துவிற்கு பாதிப்பு தான். இந்து என்றாலே தமிழ் நாட்டில் பாதிக்கபட வேண்டும் என்பது தலையெழுத்து. எழுத்துரு மாற்றம் எல்லாம் வலைப்பதிவு டெம்பிளேட் மாற்றம் மாதிரி தான். கண்டுக்கவேண்டாம்.

4. தி.நகர் உஸ்மான் ரோட்டில் சென்னை சில்க்ஸ் மற்றும் சில கடைகள் மட்டுமே 4 மாடிக்கு மேல் உள்ள தளங்கள் இடிக்கப்பட்டன. சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை 7 மாடிவரை கட்டியுள்ளனரே ? அதெப்படி ஒரே சாலையில் ஒருவர் கட்டியுள்ளதற்கு அனுமதி மற்றவருக்கு இடி ? எம்.எம்.டி.ஏ ரூல்ஸ் என்ன ?

கோடம்பாக்கம் பாலத்தை பெரிசாக்காமல் கோயம்பேடு பாலத்தை மட்டும் ஏன் பெரிசாக்கினார்கள் என்று கேட்டால் எப்படி பதில் சொல்லுவது ? அதே போல் தான் இதுவும்.

5. பாஸ்கியும் சேதுவும் கொட்டம் அடிக்கும் அரி-கிரி அசெம்பிளியின் சிவப்பு கலர் சோபா செட் எப்படி ?

பிரகாஷ் காரத், ராஜாவிற்கு பிடித்திருக்கலாம், எனக்கு பிடிக்கவில்லை. ஒரிஜினல் அசெம்பிளி பச்சைக் கலர் சோபாவுக்கு முன்னால் பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை.

அனானி கேள்விகள்....
6 இட்லி வடை குழு உறுப்பினர் பாஸ்டன் பாலா சென்னை வந்தது
பற்றி இட்லிவடையில் ஏன் மூச்சே இல்லை.

'வார்த்தைக்கு' 'வார்த்தை' பாஸ்டன் பாலா பற்றி கேட்டால் சரக்கு மாஸ்டருக்கு கோபம் வந்துடும்.

மெயிலில் வந்த கேள்விகள் ...

7. ஹோட்டல்களில் வடைகறிக்கென்று தனியே வடை சுடுவார்களா? முந்தையநாள் மீதி வடைகள்தான் வடைகறியாகின்றனவா?

தினமும் மெனுவில் இந்தால் கறிக்காகவே வடை. "இன்றைய ஸ்பெஷல் வடை கறி" என்றால் (முந்தையநாள்) வடை கறியானது.

8. மெதுவடையின் நடுவே ஏன் ஓட்டை போடப்படுகிறது?
ஓட்டையற்ற வடை போடும் ஓட்டல் உண்டா உலகில்?

வடை சாப்பிட்டால் வயிறு உபதை ஏற்படும் என்பதை குறிக்க தொப்புள் போல வடையில் ஓட்டை இருக்கிறது. ஒட்டையற்ற வடை இருக்கு அதற்கு பேர் போண்டா. ஓட்டையான மீட்டிங்கில் தரப்படுவது.

9. இட்லிக்கு வெல்லம் தொட்டுச் சாப்பிடும் பிரகஸ்பதிகளை கழுவிலேற்றலாமா? சுட்டுக்கொல்லலாமா ?

இரண்டும் வேண்டாம். இவர்களை வடைக்கு சீனியை தொட்டுக்கொள்ள சொல்லணும்.

கானகம் கேள்விகள்..

10. சென்னையில் மொத்தம் எத்தனை எஃப் எம் சானல்கள் உள்ளன?? இணையத்தில் கிடைப்பவை எவை எவை??

உங்க மொபைல் ஃபோனில் "Search for Stations" என்ற ஆப்ஷனை யூஸ் செய்யுங்கள். இடத்துக்கு தகுந்தார் போல் 8-12 சேனல் வரை வரும். எதை கேட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆஹா FM குமுதம் சைட்டில் வரும், ராத்திரி நல்ல நிகழ்ச்சிகள் முன்பு வந்துக்கொண்டிருந்தது.

Read More...

Tuesday, June 24, 2008

சோனியா பற்றி இணையத்தில் அவதூறாக எழுதியவர் கைது

"ஏன் சோனியாவை வெறுக்கிறேன்?" என்று எழுதி இந்த மாத ஆரம்பத்தில் ஒருவர் கைதானார்.

இன்று அதே போல் மற்றொருவர் கைதாகியிருக்கிறார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் போலீஸ் ஐ.பி முகவரி போன்ற தகவல்களை கூகிளிடம் கேட்டு வாங்கியிருக்கிறது. மேலும் தகவல் இங்கே

Read More...

RCV X SCV - ஜெ அறிக்கை

மதுரைமாவட்ட மக்கள்அனைத்து தொலைக்காட்சிசேனல்களையும்பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், கேபிள்ஆபரோட்டர்கள்ராயல்கேபிள்விஷனில் இணையுமாறு ஆளும்கட்சியினரால்மிரட்டப்படுவதாகவும்அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வ ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அறிக்கை கீழே...

துன்பங்கள் தனியாக வருவதில்லை, துரத்திக் கொண்டு வரும் என்ற பழமொழிக்கேற்ப, இரண்டு ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வழிகளில் புதுப்புது துன்பங்கள் தமிழக மக்களைதுரத்திக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதையும், அது விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருப்பதையும் தமிழக மக்கள் நன்குஅறிவார்கள் என்றும் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அளவில் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ட்ராய் விதிப்படி பொதுமக்கள் பார்ப்பதற்குவசதியாக தொலைக்காட்சி நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்களுக்குதங்கள் சேனல்களைபாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று ராயல் கேபிள் விஷன் நிறுவனமும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க. அழகிரி, கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுகிறார் என்று சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனமும் ஒன்றைஒன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி அறிக்கைப் போரில் இறங்கியுள்ளதைசெல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவு என்னவென்றால், அனைத்து தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்க முடியாத அளவுக்குமதுரைமாவட்ட மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும், மதுரைமாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுவதாகவும், இதுகுறித்த புகாரைஆளுங்கட்சியின் தலையீடு காரணமாக காவல் துறையினர் வாங்கவேமறுப்பதாகவும், தகவல்கள் வருவதாக அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பிரச்னைகாரணமாக, தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைஅளிப்பதாக செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் கம்பி வட இணைப்பமைவு நிறுவனத்தார்களின் செயல்பாடு குறித்து புகார்கள் வந்ததால், பொதுமக்களுக்குவழங்கப்படும் வசதிகளில் குறைபாடு, அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்தல், மக்கள் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஒருசில தொலைக்காட்சி அலைவரிசைகளைதெளிவில்லாமல் ஒளிபரப்பு செய்தல் போன்றவற்றைத் தடுப்பதற்குஏதுவாக, தமிழ்நாடு கம்பிவட தொலைக்காட்சி இணைப்பமைவு மற்றும் பன்முக சேவைஒளியிழைச் செய்தி பரிமாற்றம் உள்ளடங்கலான மேலாண்மையைகையகப்படுத்துதல், சொத்துரிமைமாற்றம், அதனைமேற்கொள்வதற்கான சட்ட முன்வடிவு 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்து ஒன்றாம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதாக செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட அரைமணி நேரத்திற்குள், கருணாநிதி தயாநிதி மாறனுடன் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்து இந்த சட்டமுன்வடிவுக்குஒப்புதல் தரக்கூடாது என்று கூறியதையும் செல்வி.ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குக் காரணம், அப்போது மாறன் குடும்பத்தினரிடமிருந்து கருணாநிதிக்குபணம் வந்து கொண்டிருந்தது-எனவே, சுயநலத்தின் காரணமாக மக்கள் நலனைகொல்லைப்புற வழியாகச் சென்று கருணாநிதி முடக்கினார்-ஆனால் தற்போது நிலைமைமாறுபட்டு, மாறன் குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்தினருக்குமிடையேபிரிவினைஏற்பட்டதால் கருணாநிதி குடும்பத்திற்குவருமானம் வருவது நின்றுவிட்டது-இதில் தன் மகன் மு.க. அழகிரியின் பக்கம் நின்று குடும்ப வருமானத்தைப் பெருக்க கருணாநிதி தயாராகிவிட்டார் என்றும் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் தற்போது நிலவும் பிரச்னைகுறித்து மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அரசு கேபிள் கார்ப்பரேஷன் என மாநில அரசின் பொதுத்துறைநிறுவனத்தைதமிழக அரசேதொடங்கிநடத்த உள்ளதாகவும், அதன்மூலம் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் பிரச்னைஏற்பட்ட ஒருசில மாதங்களிலேயேஇரண்டு தொலைக்காட்சி சேனல்களைஆரம்பித்த கருணாநிதிக்கு, அரசின் பொதுத்துறைநிறுவனத்தைத் தொடங்க என்ன தடைஇருக்க முடியும்? இதில் ஏன் தாமதம்? எல்லாம் சுயநலம்தான்!என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும், அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா? என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லைதன்னுடைய மகனைமீறி தைரியமாகச் செயல்படக்கூடிய நிலையில் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி இல்லைஎன்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது என்றும் செல்வி.ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் அநியாயமான விலைஉயர்வு, கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலைஉயர்வு, மறைமுக பேருந்துக் கட்டண உயர்வு, தொடர் மின்வெட்டு, பணவீக்கம் அதிகரிப்பு, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலைஉயர்வு என பல்வேறு துன்பங்களைதமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், கவலையைமறந்து ஏதோசிறிது நேரமாவது தொலைக்காட்சியில் தங்களுக்குவிருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்து பொழுதைக் கழிப்பதற்குவழியில்லாத நிலைமதுரைமாவட்டத்தில் தற்போது உருவாகிஉள்ளதாக செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் படுகொலை, தினகரன் பத்திரிகைஅலுவலகம் எரிப்பு, அதன் காரணமாக 3 பேர் மரணம் ஆகியவற்றின் காரணமாக, பொதுமக்களும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மரணபயம் மக்களைதற்போது கவ்விக் கொண்டிருக்கிறது- சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பொதுமக்கள் அஞ்சி, நடுங்கிஅடிமைகள் போல் வாழந்து கொண்டிருக்கின்றனர்- இதுபற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், மாநாடு என்ற போர்வையில் ஆங்காங்கேஅரசுப் பேருந்துகளைமாநாட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்குவிடுமுறைஅளித்தும் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் பொதுமக்களைதுன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கருணாநிதிக்குஉண்மையிலேயேநாட்டு மக்கள் மீது அக்கறைஇருக்குமானால், மதுரைமாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப அனைத்து தொலைக்காட்சி சேனல்களையும் கண்டு மகிழ்வதற்கும், அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும் நியாயமான வழிமுறையைசுயநலமின்றி வகுக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். குடிமக்கள் அஞ்சி நடுங்கும்படியாக கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும் என்ற வள்ளுவரின் வாக்கைஇந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-06-08

இந்த வாரம் தசாவதாரம் ஸ்பெஷல். முனி மன்னிப்பாராக....
அன்புள்ள முனி,

தசாவதாரம் சீசன் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. படம் எப்படி என்று தெரிந்துக்கொள்ள எங்க ஆபிஸில் பையனிடம் (Office Boy) "படம் எப்படி ?" என்று கேட்டேன். "சார் படம் சூப்பர் ஆனா ஒண்ணும் புரியலை, அதனால இன்னொரு தபா பார்க்க போறேன்" என்கிறான். ஆக B-C செண்டர்களில் ஏன் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று புரிகிறதா ?

குருவி பார்ட்-2, முகுந்தா முகுந்தா என்று படத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த இரண்டு 'A' கிளாஸ் வலைப்பதிவர்கள், உள்ளூரில் பார்த்தால் அடி விழும் என்று சேர நாட்டுக்கு போய் இரண்டாம் ஆட்டம் இரண்டாம் தடவை பார்த்திருக்கிறார்கள். ஆக 'A' செண்டர்களிலும் ஏன் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று புரிகிறதா ? ஆஸ்கர் ரவிசந்திரன் பயப்படவே வேண்டாம்.

நான் உனக்கு கடிதம் எழுதுவது போய் இப்ப உனக்கு இணையத்தில் நிறைய ரசிகர்கள் வந்துட்டாங்க, அப்படி ஓர் இணைய ரசிகர் உனக்கு எழுதிய கடிதம் கீழே...


அன்புள்ள முனிக்கு

இந்த தசாவதாரம் தசாவதாரம் என்னும் ஒரு படத்தைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கே உனக்கும் அது பற்றிய லேட்டஸ்ட் விபரம் தெரிய வேண்டாமா என்பதற்காக இந்தக் கடிதம்.

இணைய உலகில் இந்தத் தசாவதாரத்தைப் பற்றி எழுதாத எவரும் இணையப் பிறவியாகவே கருதப் படமாட்டார் என்பதனினாலும். நேற்று படம் பார்க்க நேர்ந்ததினாலும், பார்த்ததை வீணாக்காமல் பதிந்து வைப்போமே என்ற எண்ணத்தினாலும் இங்கே உன்னிடம் மட்டும் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். படத்தில் நடிப்பு, காமிரா, இசை போன்ற விஷயங்களையெல்லாம் ஏற்கனவே கையில் கீ போர்ட் கிடைத்த அனைவரும் எழுதித் தீர்த்து விட்டதால் அவற்றையெல்லாம் நான் தொடப் போவதில்லை பயப்படாதே. நான் தொடப்போவது பரவலாகப் பேசப் பட்டு வரும் இந்த சினிமாவின் அரசியல் பின்புலம் மட்டுமே. சரியா?

சென்ற வாரம் என் பக்கத்து க்யூப் அம்மணி இந்த சினிமாவைப் பார்த்து விட்டு வந்து "ரொம்ப நன்னாருக்கு ஒரு தடவை பார்த்திடுங்கோ" என்று சிபாரிசு பண்ணினார். அவர் ஆச்சாரமான வடகலை ஐயங்கார் பெண்மணி. "அப்படி என்னங்க அதில ஸ்பெஷல்?" என்று நான் கேட்க்க அதில் ஐயர் ஐயங்கார் சண்டையெல்லாம் சூப்பரா வைச்சிருக்கார் என்று பரவசப் பட்டார். "அது சரி கமலஹாசன் தென்கலை நாமம் போட்டுண்டு வர்ராரே இருந்துமா படம் பிடிச்சது?" என்று நான் கேட்டுத் தொலைக்க, அவருக்கு சுருதி இறங்கி அது வரை பிடித்திருந்த படம் திடீரென்று பிடிக்காமல் போய் விட்டதாகத் தோன்றியது :)) இப்படி இந்தப் படத்தை அப்பாவித்தனமாகப் பார்ப்பவர்கள்தான் அனேகம் பேர். ஏராளமான ஐயங்கார்களுக்கு இது ஏதோ ஐயங்கார்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு படம் என்று ஒரு வித பெருமிதம் வேறு இருப்பதாக ஒரு சிலரிடம் பேசியதிலும் ஒரு சில குழுக்களைப் படித்ததிலும் தெரிந்து கொண்டு சுவற்றில் முட்டிக் கொண்டேன். தேவர் மகன் சினிமா வந்த பொழுது அதில் தங்கள் இனத்தின் குறைகளைச் சொல்லுகிறார் என்பது கூடப் புரியாமல் பதினெட்டு பட்டியில் இருந்தும் மாட்டு வண்டி போட்டுக் கொண்டு வந்து சினிமா பார்த்தது போல ஐயங்கார்கள் எல்லோரும் ஒரே குஷியாகக் கிளம்பிப் போய் இந்தப் படத்தைப் பார்த்து வருவதாகக் கேள்வி. இதில் கமலஹாசன் தென்கலை நாமம் அணிந்து வருவதால் அது பிடிக்காத ஒரு சில வடகலை இணையப் பிரபலங்கள் இந்தப் படத்தைக் கடுமையாகச் சாடி விமர்சித்திருப்பதாகக் கருடன் சொல்கிறது :))


இந்த சினிமாவில் அப்பாவி ஆஸ்திகர்களையும், வைணவர்களையும் ஏமாற்றி விஷ்ணுதான் புரண்டு படுத்து உலகத்தை ரட்சித்தார் என்ற எண்ணம் ஏற்பட வைக்கும் படியான பல காட்சிகள் பல உள்ளன.. அதே நேரத்தில் கடவுள் இல்லை, பகுத்தறியும் திறன் இல்லாதவனே கடவுளை நம்புவான் என்பதை வலியுறுத்தும் பல காட்சிகளும் உள்ளன. சினிமாதானே இதையெல்லாமா போய் பார்ப்பார்கள் சும்மா ஜாலியாகப் போய் பார்த்து விட்டு வரலாமே என்று பார்த்து விட்டு இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளாதவர்களும் அறிந்து கொள்ள விரும்பாதவர்களுமே பெரும்பாலானவர்கள் என்பதினால் இது மக்களிடையே ஏதோ நாஸ்திக உணர்வை வளர்த்து விடும் என்ற அச்சம் எல்லாம் யாருக்கும் வேண்டியதில்லை. தமிழ் நாட்டு ரசிகர்கள் புத்திசாலிகள். கமலஹாசன் சொல்ல வருவதை விட்டு விட்டு மற்றதை மட்டும் கபக்கென்று பிடித்துக் கொள்வார்கள். பின்னே சும்மாவா ஈ வெ ராவும் கருணாநிதியும் ஓவர் டைம் போட்டு நாஸ்திகப் பிரச்சாரம் செய்தும் வருடா வருடம் திருப்பதிக்கும் ஐயப்பனுக்கும் பழனிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது? பகுத்தறிவுக் குஞ்சுகளே இன்று மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டும், பாபாவிடம் மோதிரம் வாங்கி மாட்டிக் கொண்டும் திரிகின்றன? ஒரு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இதே தசாவதாரம் என்ற பெயரில் குடும்பப் படம் எடுக்கும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஒரு நிஜமான தசாவதாரக் கதை சினிமாவாக வந்தது. அதில் இந்திராவின் எமெர்ஜென்சியைக் நாரதர் கிண்டல் அடிக்கும் அரசியல் வசனங்கள் எல்லாம் இருக்கும். அந்தப் படம் ஏற்படுத்தாத பக்தி அலையை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளதாகக் கேள்வி. அது கமலோட ராசி.


இருந்தாலும் சித்தாந்த அடிப்படையில் பார்த்தால், எடுத்தவரின் கொள்கைப் படி இது ஒரு நாஸ்திக பிரச்சாரப் படம் என்பதினால் இந்து அமைப்புகள் எதிர்ப்பதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது, இது போன்ற பலமான எதிர்ப்புகள் நாளைக்கு இது போன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்களை தயங்கச் செய்யும் என்பதற்காகவும் அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தலும் அவசியம். சாமான்ய மக்கள் இதில் சொல்லப் பட்டிருக்கும் நாத்திகங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியான சினிமா என்ற ரீதியில் பார்த்து விட்டுப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நிற்க.

இது ஆஸ்திகத்தை வளர்க்கும் படமா அல்லது நாஸ்திகத்தை வளர்க்கும் படமா? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தும் அளவிற்கு கமலஹாசன் மிக சாதுர்யமாக பக்தி, ஐயங்கார் பிராண்ட் புளியோதரை , நாஸ்திக மசாலா எல்லாம் சேர்த்து ஒரு கலவையாக மேல்பார்வைக்கு இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று புரியாத சைவ அசைவக் கடைக் குழம்பு போல கலங்கலாகக் காட்சியளிக்கிறது.. கொஞ்சம் உள்ளே போய் கலக்கிப் பார்த்து விடலாம்

இதில் ஆஸ்திக மற்றும் கடவுள் நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் கருத்துக்கள்/காட்சிகள் எவை எவை என்பதை முதலில் பார்த்து விடலாம்.

1. முதலில் வரும் ரங்கராமானுஜ நம்பி தீவீரமான வைணவ பக்தராகக் காட்டப் பட்டு அவர் நமோ நாராயணாய நமஹ என்று சொல்வது போன்ற காட்சிகள் பெருமாள் பக்தர்களையாவது கொஞ்சம் புல்லரிக்கச் செய்திருக்கும். பிற பக்தர்களையும் கன்னத்தில் போட வைத்திருக்கும். கொஞ்சம் கிராமப் புறத் தியேட்டரானால் கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தா போட்டிருப்பார்கள்.

2. படம் முழுக்க பெருமாள் பெயர் படைத்த ஆட்களும் உபகரணங்களுமே தக்க சமயத்தில் தோன்றி தர்மத்திற்குத் துணை நிற்கின்றார்கள். அதாவது தர்மம் ஜெயிக்க ஆண்டவனாகிய விஷ்ணு பல் வேறு உருவில் தோன்றி உதவுவார் என்ற நம்பிக்கை படம் முழுக்கக் காட்சிகளாகக் காண்பிக்கப் படுகின்றன. ஹீரோ தப்பிக்க வேண்டுமானால் அவர் உயரமான இடங்களில் இருந்து குதித்தாலும் கீழே ஸ்ரீராம ஜெயம் என்ற பெயருடன் சங்கு சக்கிர நாமம் தாங்கிய லாரிகள் ஓடி வந்து தாங்கிக் காப்பாற்றி விடுகின்றன. பல் வேறு கமலஹாசன்கள் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள். அதாவது ஏதாவது ஒரு பெரிய கட்டிடத்தின் விளிம்பில் நின்று தொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கை நழுவும் பொழுது பெருமாள் அனுப்பிய வைக்கோல், காய் கறி லாரிகள் வந்து மொத்து மொத்தென்று தாங்கிக் கொள்கின்றன. கோவிந்தா கோவிந்தா என்று பிண்னனியில் பாட்டு பாடாதது ஒன்றுதான் பாக்கி.

3. விஷ்ணுவின் பல நாமங்களை உடையவர்கள் தொடர்ந்து ஹீரோவுக்கு உதவுகிறார்கள். அமெரிக்காவில் தக்க சமயத்தில் பி எம் டபிள்யு ஓட்டி உதவி செய்பவர் பெயர் ராம், சாய்ராம். கொரியர் ஆபீஸில் முக்கியமான தகவல்களைத் தந்து உதவும் பையன் பெயர் நரசிம்மராவ். இறுதியில் சுனாமியில் இருந்து பெருமாளைத் தேடிச் சென்ற இருவரும் காப்பாற்றப் படுகின்றனர். இப்படியாகப் பூடகமாக கடவுள் நம்பிக்கையைச் சொல்லும் பல காட்சிகள் நிறைந்துள்ளன. கமலுக்கு உதவும் இன்ஸ்பெக்டரோ பரதன்.

4. சுனாமியை உருவாக்கி வைரஸ் பரவலைத் தடுத்ததே கோவிந்தராஜப் பெருமாளின் சிலைதான் என்ற செய்தி வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாகச் சொல்லப் படுகிறது. படம் பார்த்த பாதி பேருக்கு இந்த செய்தி தெரியாது ஏனென்றால் இதை வெளிப்படையாக படத்தில் சொல்வதில்லை. படம் பார்ப்பவர்களே அனுமானித்துக் கொள்ள வேண்டும் அல்லது விஷ்ணு புரம் உப பாண்டவம் போன்ற நாவல்களைப் படித்துப் கொட்டை போட்டுப் பழம் தின்ற பின் நவீனத்துவவாதியாக இருத்தல் வேண்டும்.

5. பெருமாளின் யானை துர்நோக்கத்துடன் வரும் செக்ஸ் வில்லியான மல்லிகா ஷ்ராவத்தைத் தூக்கி எறிந்து ஹீரோவுக்கு உதவி செய்கிறது.

6. பெருமாளை நம்பி பிசின் போல் ஒட்டிக் கொள்ளும் அசின் கடைசி வரை காப்பாற்றப் படுகிறார். பெருமாளை நம்பிய பாட்டியும் சுநாமியில் அழிவதில்லை.

7. 12ம் நூற்றாண்டில் பெருமாளை நம்பிச் சரண்டைந்த நம்பியும் அவரது மனைவி ஆண்டாளும் 21 நூற்றாண்டில் மறு பிறவி எடுத்து தங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக அதே பெருமாளின் முன்பாகவே மீண்டும் இணைகிறார்கள். இது மறு பிறவி. புண்ணியம் காக்கும் போன்ற இந்து மத நம்பிக்கைகளை வலுவாக நிலை நிறுத்தும் காட்சிகள்.

8. கமலஹாசனைப் புகழ்ந்து பாடப் படும் கல்லைக் மட்டும் கண்டால் பாட்டில் சீனிவாசன் மகனும் விஷ்ணுதாசன் தான் என்று வைணவர்கள் மனம் குளிர என்ன தான் கமலஹாசன் மேடையில் நாத்திகம் பேசினாலும் அவரும் ஒரு வைணவர்தான் அதை மறந்து விடாதீர்கள் என்று குறிப்பால் உணர்த்தப் படுகிறது.

இன்னும் இது போல சப்டிலாக பல காட்சிகள் இருக்கலாம். இவற்றையெல்லாம் பார்த்து விட்டுப் புளங்காகிதம் அடையும் ஆஸ்திகவாதிகளும், வைணவர்களும், பெருமாளைப் பற்றி உயர்வாகத்தானே சொல்லி படம் எடுத்திருக்கிறார் என்று நம்பும் அப்பாவி இந்துக்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் நாம் சிதற அடிக்க வேண்டாம்.

ஆனால் இந்தப் படம் இறுதியாகச் சொல்ல முயல்வது என்ன? மேற்படி காட்சிகள் மூலம் இந்த சினிமா மக்களிடையே இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையும் பரவலாகக் கொண்டு செல்கிறதா? வைணவர்களைப் பெருமையாகக் காண்பிக்கிறதா? உண்மையிலேயே இது ஆஸ்திகத்தைப் பரப்பும் ஒரு படம்தானா?


ஒரு சினிமா ஒரு சித்தாந்தத்தை, ஒரு பிராச்சாரத்தை ஒலிக்குமானால், ஒரு சினிமாவை உருவாக்கும் படைப்பாளியின் தனிப்பட்ட கருத்தே, கொள்கையே அந்த சினிமாவின் கொள்கையாகவும் இருக்கும். இதை நாம் பைத்ருக்கம் என்றொரு மலையாளப் பட உதாரணத்தின் மூலமாகப் பார்க்கலாம். பைத்ருக்கம் இங்கு ஒரு சரியான உதாரணம். கம்னியுசத்தின் கடுமையான பிடியில் சிக்கித் தவிக்கும் கேரள மண்ணில் துணிந்து இந்து மத நம்பிக்கைகளைப் பரப்பும் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் சுரேஷ் கோபியும், ஜெயராஜும். அந்தப் படத்தில் பல்வேறு நாஸ்திகக் கருத்துக்களும் பேசப் பட்டாலும் கடவுள் நம்பிக்கையே இறுதியில் வெல்கிறது அதை எந்த விதத் தயக்கமும் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், வெட்கமோ போலித்தனமோ இல்லாமல் மிகத் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். அது இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு படம். அதில் இயக்குனரின் கருத்தே, சொந்த நம்பிக்கையே அந்தப் படத்தின் இறுதித் தீர்ப்பாக, பிரச்சாரமாக வெளிப்படுகிறது. இயக்குனர் ஜெயராஜும், நடிகர் சுரேஷ் கோபியும் பெரும் ஆன்மீகவாதிகள். அந்தப் படத்தில் நாஸ்திகராக நடிக்க நேர்ந்த பாவத்தைப் போக்க சுரேஷ் கோபி பின்னர் பல பரிகாரங்களைச் செய்திருப்பதாகத் தயக்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார். அவர்கள் தனிப்பட்ட நம்பிக்கையே படத்தின் மையக் கருத்தாகவும் ஒலித்தது.


ஆனால் இந்த தசாவதாரத்தை எடுத்தவரோ ஒரு தன்னன ஒரு நாஸ்திகராக அறிவித்துக் கொண்டவர். ஈ வெ ராவின் வாரிசாக தன்னன வரித்துக் கொண்டவர். வீரமணியால் பகுத்தறிவு வளர்த்தப் பார்ப்பான் என்று புகழப் படுபவர். கருணாநிதியால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கப் பட்டவர். இந்து மதத்தை அழிக்கக் கிளம்பியுள்ள நச்சுச் சக்திகளுடன் ஒட்டி உறவாடுபவர். ஒரு நாஸ்திகவாதி தனது சினிமாவில் தன் கொள்கையான நாஸ்திகத்தையே பரப்புவான் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. அப்புறம் ஏன் படத்தில் மேற்படி பக்தி ஸ்பெஷல் காட்சிகள் ? ஏனென்றால் படம் விற்க வேண்டுமே. அடிப்படையில் ஒரு வியாபாரி என்ன செய்வானோ அதையே கமலஹாசன் செய்திருக்கிறார். இது வரை அவர் படங்களில் பிராமணக் காட்சிகள் இருந்த படங்கள் எல்லாம் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பிராமணக் காட்சி சேர்க்காத படங்கள் நிறைய தோல்வி அடைந்துள்ளன ஆகவே எதை வைத்தால் படம் ஓடுமோ, எதுக்கு ஆதரவு இருக்கோ? எதுக்கு மார்க்கெட் இருக்கோ அதை கடை பரத்தியிருக்கிறார். கடை விரித்திருக்கிறார் கொள்வாரும் உளர். மதுரையில் எண்ணெய்ப் பலகாரக் கடை என்று ஒரு சங்கிலித் தொடர் கடைகள் எல்லா இடங்களிலும் இருக்கும்,. அதை நடத்துபவர் ஒரு தி க காரர். ஆனால் பிண்னனியில் தனது கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றும் வேலையைச் செய்யும் தேவனுக்கு சகாயம் செய்யும் ஒருவர். ஆனால் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இந்தக் கடைகளில் மிக்சர், காராச்சேவு வாங்க அலை மோதும். கவனமாக அந்த சீசனில் "கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி" என்ற போர்டைக் கழற்றி வைத்து விடுவார்கள். அப்பாவி ஐயப்ப சாமிகளுக்கு தங்களைக் கேவலமாக இழிவாகப் பிரச்சாரம் செய்பவன் என்பது தெரியாமல் கசாப்புக்காரன் பின்னால் போகும் ஆடுகள் போல கூட்டம் கூட்டமாக வாங்குவார்கள். அது போல இருக்கிறது இது வைண்வத்தைத் தூக்கி நிறுத்தும் படம் என்று அப்பாவித்தனமாக, அசட்டுத்தனமாக ஐயங்கார்கள் எண்ணிக் கொள்வதும். உங்களை வைத்து உங்களில் ஒருவன் நல்ல வியாபாரம் செய்கிறான் என்பது கூடத் தெரிவதில்லையே.

சினிமாவை விற்க வேண்டியும், கூட்டத்தைக் கவர வேண்டியும் சில ஆஸ்திக/கடவுள் நம்பிக்கையைப் படம் முழுக்க தெளித்து விட்டிருந்தாலும் இறுதியில் அழுத்தமான தன் நாஸ்திகக் கருத்துக்களையே இந்தப் படம் அழுத்திச் சொல்கிறது. ஆகவே இது தீர்மானமாக இந்து மத/கடவுள் நம்பிக்கையை எதிர்க்கும் ஒரு சினிமாவே. அதற்கான சான்றுகளாக பின் வரும் காட்சிகள் அமைகின்றன.

1. படத்தின் ஆரம்பத்திலும் படத்தின் இறுதியிலும் ஒரு விஞ்ஞானியின் நாஸ்திகக் கருத்துக்களே அழுத்தமாகவும் இறுதியாகவும் சொல்லப் பட்டு மக்களின் நம்பிக்கை என்பது பகுத்தறிவு இன்மையினால் வருவது என்ற கருத்துப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.

2. ஒரு விஞ்ஞானி மூலமாக இந்தக் கருத்துச் சொல்லப் படுவதால் பார்க்கும் அப்பாவி மக்கள் மனதில் ஒரு பெரிய விஞ்ஞானியே சொல்கிறார் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் என்ற எண்ணம் பதியப் படுகிறது, நம் மக்களுக்கு படித்தவர்கள் சொல்கிறார்கள் என்றால் ஒரு மதிப்பும், நம்பிக்கையும் இருக்கும். மன்மோகன் சிங்கை இன்னமும் உலகின் மிகப் பெரிய பொருளாதார மேதை என்று நம்பிக் கொண்டே ஒரு கிலோ அரிசிக்கு 50 ரூபாய் கொடுக்கும் இளிச்சவாயர்கள் இருக்கும் தேசம் இந்தியா. முட்டாள் இந்தியர்களுக்கு படித்தவர்கள் மேல் இருக்கும் மரியாதையை பயன் படுத்தி ஓட்டு வாங்க ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலப் பள்ளி என்னும் டுயுட்டோரியல் காலேஜில் இத்தாலியில் இருந்து ஸ்போக்கன் இங்க்லீஷ் படிக்க வந்தவளையெல்லாம் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் படித்தவர் என்று பொய் சொல்லி ஏமாற்ற முனைகிறார்கள். படித்தவன் செய்யும் சூதை நம்பும் கூட்டம் உள்ள தேசமாகையினால் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானியின் வார்த்தைகளாக நாஸ்திகப் பிரச்சாரம் கன ஜோராக நடக்கிறது.

3. விஞ்ஞானியாகிய கோவிந்தராஜன், மக்கள் எல்லோரும் தங்களுக்கு மேலே ஒரு சக்தி இருக்கும் என்று நம்புகிறார்கள் ஆனால் நமக்கு மேலே இருப்பதென்னவோ மேலே பறக்கும் சாட்டிலைட்டுகள் மட்டுமே ஆம் அது சக்தி வாய்ந்ததுதான் என்று மக்களின் நம்பிக்கையைக் கிண்டலடிக்கிறார்.

4. பகுத்தறிவு அதிக மக்களைச் சென்றடைவதின் மூலமே மக்களிடையே கடவுள் நம்பிக்கை என்னும் மூட நம்பிக்கை மறைந்து அறிவியல் பூர்வமான நம்பிக்கை வளரும் என்று இறுதியாக தன் பேச்சை முடிக்கிறார். அதன் அர்த்தம் பகுத்தறிவு (ஈ வெ ரா பிராண்ட்) வளர வேண்டும், ஆன்மீகம் (முக்கியமாக இந்து மதம் மட்டும்) அழிய வேண்டும் என்ற கருத்தே படத்தின் முடிவாகவும், தீர்மானமாகவும், மக்கள் மூளையில் பதிய வைக்கப் படும் நச்சுக் கருத்தாகவும் இந்த சினிமா மூலமாகச் சொல்லப் பட்டு பரப்பப் பட்டு வருகிறது.

5. பிற மத நம்பிக்கைகளை இந்தப் படம் விமர்சிப்பதோ கேள்வி கேட்ப்பதோ இல்லை. ஆனால் இந்து மத நம்பிக்கைகளும், மடங்களும் மட்டுமே ஏளனம் செய்யப் படுகின்றன. மடத்தில் கிரிமினல் இருக்கமாட்டார்களா என்ற கேள்வியும், அழகிய சிங்கர் என்றால் மடோனாவா என்ற கிண்டலும், இன்னும் பல நாஸ்திகக் கருத்துக்களும் எவ்வித தயக்கமும் இல்லாமல் சொல்லப் படுகின்றன ஆனால் இஸ்லாமியர்கள் என்று வரும் பொழுது அவர்களை உயர்வாகவும், அவர்கள் நம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் காண்பிக்கப் படுகின்றன. ஆகவே இந்தப் படத்தின் உள்நோக்கம் இந்து மதத்தைப் பற்றி மட்டுமே இழிவாகச் சித்தரிப்பது என்பது தெளிவாகின்றது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்குள் இருந்ததினால்தான் நாம் பிழைத்தோம் என்று இஸ்லாமியப் பெரியவர் நாகேஷ் சொல்லும் பொழுது அருகே நிற்கும் பின் லாடர் நெட்டைக் கமலஹாசன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் மட்டும் நிற்கிறார். அவர் ஏன் அல்லா மற்றவர்களைக் கொன்றார் அப்படிக் கொன்ற அல்லா என்ன ஒரு கடவுள் என்று எதிர் கேள்வி கேட்டு தன் பகுத்தறிவுப் புலமையை டார்ச் அடித்துக் காட்டுவதில்லை. ஆனால் இதே கேள்வி இந்துக் கடவுள் பற்றி மட்டும் சயிண்டிஸ்ட் கமலால் கடவுள் பக்தியுள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் கேட்க்கப் படுகிறது. ஆக இவர்கள் நாஸ்திகம், பகுத்தறிவு எல்லாம் இந்துக்களிடம் மட்டும் தான் செல்லுபடியாகும் இந்து மதத்தை இழிவு செய்வதும், கேலி செய்வதும் மட்டுமே தன் ஈ வெ ரா பிராண்ட் பகுத்தறிவு என்று கமலஹாசன் மிக வெளிப்படையாக காண்பிக்கிறார். அதையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் வைணவத்தை வளர்க்கிறார் என்று அறிவு கெட்டுப் போய் நம்பித் திரிகிறது மடத்துக்குள் கிரிமினல்கள் இருக்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பி தன் தி க ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கிக் கொள்ளும் அதே கமலஹாசன் அதே போன்ற ஒரு வ்சனத்தை பள்ளிவாசலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லும் இடத்தில் வைப்பதில்லை. ஆக இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் மதிக்கப் பட வேண்டியவை இந்துக்களின் மடங்கள் கிரிமினல்களின் கூடாரங்கள். நீ யோக்கியன் என்றால் பள்ளி வாசலில் குண்டுகள் ஒளித்து வைப்பது குறித்தும் தேச விரோதப் பிரச்சசரம் செய்யப் படுவது குறித்தும் அல்லவா விமர்சித்திருக்க வேண்டும்?

6. சைவ வைணவச் சண்டை என்பதோ இந்து மதத்தின் பல பிரிவுகளுக்குள் சண்டை என்பதோ வரலாற்றில் எப்பொழுதுமே தீவீரமாகவோ பேரழிவுடனோ இருந்ததில்லை என்ற வரலாற்று உண்மை இருக்கும் பொழுது அதைத் திரிக்கும் விதமாக யேசுவும்,முகமதுவும் இந்தியாவுக்குள் பரவுவதற்கு முன்பாக இந்து மதம் என்ற ஒன்றே இல்லாதாது போலவும், அவர்களுக்குள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொண்டது போலவும், ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பின்பே இந்து மதக் குழுக்கள் அடித்துக் கொள்ளாமல் ஒன்றாக இருப்பது போலவும் வரலாற்று உண்மை திரிக்கப் பட்டு மக்களையும் அதை நம்பும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது. இந்தக் காட்சி மட்டும் மிக அழுத்தமாக பதியும் விதத்தில் படமாக்கப் பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் தென்கலை நாமம் அணிந்து வருவது கூட வைணவர்களுக்கிடையேயும் பிளவை ஏற்படுத்தும் ஒரு சதியோ என்று எண்ணத் தோன்ற்கிறது :)))



ஆகவே இந்தப் படத்தின் முழுப் பொறுப்பாளியான கமலஹாசனின் நாஸ்திகக் கொள்கையைக் கருத்தில் கொண்டும், படத்தின் இறுதிப் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டும், இது ஒரு முழு இந்து எதிர்ப்பு நாஸ்திகப் பிரச்சார சினிமாவே என்று தீர்மானமாகக் கூறுவேன்.



படத்தின் அரசியல்களைக் களைந்து விட்டு ஒரு அப்பாவி பாமரத் தமிழ் சினிமா பார்வையாளனின் கண்ககளில் பார்த்தால் இது ஒரு நல்ல பொழுது போக்கு சினிமாவாக காட்சியளிக்கிறது. தமிழ் சினிமாவில் பல நல்ல பொழுதுபோக்கக் கூடிய எண்டெர்டெயின்மெண்ட் சினிமாவை கமலஹாசன் அளித்திருக்கிறார். அதில் இதுவும் ஒன்று. தமிழ்ப் படத் தரத்திற்கும் இந்தியப் படத் தரத்திற்கும் இதில் எடுக்கப் பட்டுள்ள பிரமாண்டமான காட்சிகளும், ஒரு சில மேக்கப் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவையே. உலக சினிமாவின் தரத்திற்கு இதை ஒப்பிட முடியாது. மாடர்ன் தியேட்டர்ஸ்ஸின் ஜெய்சங்கர் படங்களை ஜேம்ஸ்பாண்டு தர படங்கள் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தை ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாவின் தரத்திற்கு டெக்னிக்கலாக இது ஒரு பிரமாண்டமான படமே.



ஒரு சினிமாவில் ஏன் ஒரே நடிகரே அனைத்து ரோல்களையும் செய்ய வேண்டும்? இது என்னவிதமான மன நோய் என்று சிலர் கேட்க்கிறார்கள்? ஆனால் இந்தப் படத்தில் தனக்கு உரிய வாய்ப்பு இருந்தும் எத்தனை விதமான ரோல்களை அவரே நடிக்காமல் தியாகம் செய்திருக்கிறார் என்பதை சிறுமதியாளர்கள் காணத் தவறி விடுகிறார்கள். இதில் கமலஹாசன் பெரிய மனது பண்ணி நடிக்காமல் நிறைய ரோல்களை விட்டு விட்டார். அசின், மல்லிகா, ஆராய்ச்சி சாலை குரங்கு, கோவில் யானை, சிறுவன், சிறுமி, பட்டாம் பூச்சி, ஜீப், கார், ஏரோப்ளேன், துப்பாக்கி, போன்ற ஏராளமான பாத்திரங்களில் கமலஹாசன் நடிக்காதது அவரது பெருந்தன்மையையே காண்பிக்கிறது என்றால் மிகையில்லை.

புஷ்ஷுக்குக் காமென் சென்ஸ் கிடையாது என்று கிண்டலடிக்கிறார் சரி. இந்தப் படம் எடுத்தவர்களின் ஐ க்யூ காமெண் சென்ஸ் எல்லாம் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை சற்று பார்க்கலாம்.

1. எந்த ஆய்வுக் கூடத்தில் எந்த விஞ்ஞானி எப்பொழுதும் கெமிக்கல் காம்பவுண்டின் பார்முலாப் பெயரை மட்டுமே சொல்லிப் பேசிக் கொள்கிறார்கள். விஞ்ஞானிகள் எப்பொழுதும் அந்த என் ஏ சி எல் ஐக் கொட்டு, இவ்வளவு என் ஏ சி எல் வேண்டும் என்று மட்டுமே பேசிக் கொள்கிறார்கள், சோடியம் க்ளோரைடு என்று பேசிக் கொள்வதேயில்லை. என் ஏ சி எல் என்றால் என்ன என்று புஷ்ஷைக் கேட்க்க வைத்து அவரை ஒரு முட்டாளாகக் காண்பிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர இது பயன்பாடு அல்ல என்ற ஒரு எளிய விஷயம் கூட இவர்களுக்குத் தெரியவில்லை.


2.. ரா என்ற ரிசர்ச் அநாலிஸிஸ் விங்கின் நோக்கம் என்ன? அதன் பிண்னனி என்ன? ஒரு ரா அதிகாரியின் நோக்கம் என்ன? போன்ற அடிப்படைகள் கூடத் தெரியாமல் ஏதோ பரவலாகக் கேட்ட துறையாக இருக்கிறதே என்று கேனத்தனமாக ஒரு சாதாரண விசாரணை அதிகாரியை ரா அதிகாரி என்கிறார்கள். ஒரு விமானத்தில் ஆள்/பொருள் கடத்தல் இருந்தால் முதலில் சுங்கத் துறை அதிகாரிகள் மட்டுமே விசாரிப்பார்கள். அவர்கள் கையை மீறிய விஷயம் என்றால் விமானக் கண்ட்ரோல் போலீஸின் சூப்பிரண்டு வருவார். அவரையும் மீறிய விஷயம் என்றால் ஐ பி துறையினர் வருவார்கள். இதில் இந்திய வெளிநாட்டு ராஜாங்க ரீதியான சதி ஏதும் இருப்பின் வேண்டுமானால் ரா அதிகாரிகள் இறுதியில் விசாரிப்பார்கள். இப்படி ஒரு ரா அதிகாரி ஜூப்பை எடுத்துக் கொண்டு போலீஸ்காரர்களுடன் சாதாரண இன்ஸ்பெக்டர் ரேஞ்சுக்கு ஊர் ஊராகத் திரிய மாட்டார்கள். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் வெளிநாட்டுச் சதிகாரர்கள் இருந்த போதிலும் அதிக பட்சம் விசாரித்தது சி பி ஐ தான். ரா பின்னால் இருந்து தகவல் சேகரித்திருக்கும். நேரடியாக சந்து பொந்தில் துரத்தி சிவராஜனைக் கொன்றது எல்லாம் சி பி ஐ யின் எஸ் ஐ டி தானே அன்றி ரா அல்ல. இந்த காமென் சென்ஸ் கூட இல்லாதவர்கள் புஷ்ஷைக் கிண்டல் அடிக்கக் கிளம்பி விடுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

3. தமிழ் படங்களில் ஜியாகரஃபி இருக்காது என்பதினால் தூரம், டிரெயின், சாலைக் குழப்பங்களை நான் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன்.

4. முதல் காட்சியாக எல்லோராலும் பெரிதும் சிலாகிக்கப் படும் எல்லோரையும் சீட்டு நுனியிலும் அதற்குக் கீழேயும் தள்ளி விட்ட காட்சிக்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என்று யாருமே எங்குமே சொல்வதில்லை. ஆரம்பத்தில் விஞ்ஞானி ஏதோ 12ம் நூற்றாண்டுக்கும் நடந்த விஷயத்திற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்று சொல்லி விட்டு அதென்ன அப்படியாகப் பட்ட முக்கியமானத் தொடர்பு என்பதை முக்கியமாகச் சொல்ல மறந்து விடுகிறார்கள். ஒரு கதையின் ஆரம்பத்தில் துப்பாக்கி தோன்றினால் கதை முடியும் முன் அது வெடிக்க வேண்டும் என்பது சிறுகதை இலக்கணம் என்று செக்காவ் சொன்னதாகச் சொல்வார்கள். அது ஒரு வேளை சினிமாவுக்குப் பொருந்தாதோ. ஆகப் பெரிதான முதலும் முக்கியமும் ஆன அந்தக் காட்சி எல்லோரையும் சீட்டு நுனிக்குக் கொண்டு போய் குப்புறத் தள்ளிய காட்சிக்கும் மீதிப் படத்திற்கும் என்ன புண்ணாக்கு ஐயா சம்பந்தம்? இதற்கு டிஸ்கவரி சானலில் இருந்தோ , இண்டியானா ஜோன்ஸில் இருந்தோ ஒரு காட்சியைக் காண்பித்திருந்தால் கூட அதற்கும் மக்கள் சீட் நுனிக்குப் போய் கீழே விழுந்துதானே தொலைத்திருப்பார்கள்? அதற்கும் இந்தப் படத்திற்கும் கூடத்தான் ஒரு மயிறு சம்பந்தமும் இருந்திருக்காது. தொடர்பு இருக்கிறது என்றால் அது முக்கியமானது என்றால் ஏன் சொல்லவில்லை? சொல்ல மாட்டார்கள், சொல்ல முடியாது. ஏன்? அதைச் சொன்னால் இவர்கள் நாஸ்திகப் பிரச்சாரம் பல்லிளித்து விடும். ஆகவே படத்தின் முக்கியமான முதல் காட்சிக்கும் படத்தின் மொத்த கட்டுமானத்திற்கும் உள்ள சம்பந்தம் சொல்லப் படுவதில்லை. பூடகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பி ந எழுத்தாளர்கள் ரேஞ்சுக்குச் சொல்கிறார்கள். ஏன் சொல்லவில்லை?

6. ஏன் சொல்லவில்லையென்றால் இதில் சொல்லப் படும் மேல்நாட்டுக் கடவுள் மறுப்புச் சித்தாந்தமான கேயாடிக் தியரி அடி பட்டுப் போய் விடும். வைரஸ் கிருமியை அழிக்கக் கடல் பொங்கி எழ வேண்டும். ஆக அங்கு ஒரு காரணம் வந்து விடுகிறது. ஒரு காரணத்தின் பொருட்டு நடக்கும் செயல் கயோட்டிக் செயல் ஆகாது அது திட்டமிடப் பட்டச் செயல் ஆகி விடும். இங்கு உலகத்தைக் காக்கும் பொருட்டே காக்கும் கடவுளான விஷ்ணு தன் சிலையைத் திருப்பிப் படுப்பதன் மூலம் ஒரு சுனாமியை உருவாக்குகிறார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டி வரும். இது இந்த முட்டாள்களுக்கு கடைசியில்தான் உறைத்திருக்கிறது. அட கயோட்டிக் தியரிக்கும் முதலில் காண்பிக்கும் காட்சிக்கும் ஒத்து வரவில்லையே, இந்த சிலை கடலினடியில் போய் அது டெக்டானிக் உரசலை எழுப்பியதால்தான் சுனாமி வருகிறது என்று காண்பித்து அதை அழுத்திச் சொன்னால் அது கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா அமையும் என்று கடைசியில் இந்த ஈ வெ ரா குருவின் சிஷ்யர்களுக்குத் தோன்றி, அப்படியானால் அதைச் சொல்லாமலேயே விட்டு விடலாம் என்று மொட்டையாக விட்டு விட்டார்கள். ஆக படத்தின் சீட் நுனிக்குத் தள்ளி மக்களின் பல்லை உடைத்த முதல் காட்சிக்கும் மீத சினிமாவுக்கும் சம்பந்தமில்லாமல் கமல்ஹாசன் பல சீன்களில் கட்டிட விளிம்புகளில் தொங்குவது போலத் தொங்குகிறது. இதற்குப் பதிலாக ஒரு ஜேம்ஸ் பாண்டு படத்தின் முதல் காட்சியை வைத்திருந்தாலும் அதுவும் இதே போல் சீட் நுனிக்குத் தள்ளித் தொங்கிக் கொண்டிருக்கும். அது சரி, நுனிக்குத் தள்ளினால் தொங்கத்தானே செய்யும்?

7. ஐயா தெரியாதையா. பைனாகுலர் மூலமாக 300 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் வைரஸ் கிருமிகள் நெளிவது எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியுமா ஐயா? சொல்லிப் போடுங்க ஐயா, நான் சீட் நுனிக்குப் போய் இறங்க முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அப்புறம் எதுக்கு மைக்ராஸ்கோப்பு, எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பு எல்லாம்? லாபில் அவற்றையெல்லாம் எடுத்துக் கடாசி விட்டு ஆளுக்கு ஒரு பைனாகுலர் வாங்கிக் கொடுத்து விடலாமே. ஸ்பஷ்டமாகத் தெரியுதே வைரஸ் கிருமி எல்லாம்?

8. அமெரிக்காவில் உள்ள ஒரு பயோ டெக்னாலஜி கம்பெனியில் நிறைய தமிழர்கள் வேலை பார்க்கச் சாத்தியக் கூறுகள் உள்ளன இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இப்படியா முக்கியமான போர்ட் மீட்டிங்கில் கூட எல்லோரும் தமிழில் பேசிக் கொள்வார்கள்? அந்த அளவுக்கு வளர நாம் என்ன ஜப்பான் நாட்டினரா? அவர்கள்தான் தங்கள் கம்பெனிகளில் பிறர் இருந்தாலும் பொருட்படுத்தாமல் ஜப்பானிய மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்: ஆனால் தமிழிலோ இந்தியிலோ நம் இந்தியர்க்ள் கூடும் ஆபீஸ் கூட்டங்களில் கூட அமெரிக்காவில் யாருமே பேசத் துணிவதில்லை. இந்த சினிமாவில் மட்டும் எல்லோரும் தமிழிலேயே பேசிக் கொள்கிறார்கள் ஜப்பானியப் பெண்மணி உட்பட. நான் அந்தக் குரங்கு கூடத் தமிழில் பேசி சாக்லேட் கொடு என்று கேட்குமோ என்று ஆர்வத்துடன் சீட் நுனிக்குப் போய் விட்டேன்.

9. மேக்கப் ஒவ்வொன்றும் காணச் சகியாமல் ஆளாளுக்கு பத்து கிலோ மைதா மாவைப் பிசைந்து மூஞ்சி மேலே அப்பிக் கொண்ட மாதிரி அசிங்கமாக இருக்கிறது. டி வி யில் புஷ், சோனியா, அத்வானி போன்றோரைக் கிண்டல் அடிக்க ஒரு முகமூடி போட்டுக் கொண்டு வருவார்கள் அந்த முகமூடிகளின் அணிவகுப்பு இந்த சினிமா.

10. அதென்ன ரெங்கராமானுஜ நம்பி பெருமாள் பக்தரா அல்லது குஸ்தி பயில்வானா? குகை வழியாக வந்தும் கூட கோடி பட்டு வேட்டியில் ஒரு அழுக்கு பிசுக்குப் படாமல் வந்து சண்டை போடுகிறார். அவரது சம்சாரமோ புதுப் பட்டுப் புடவையோடு வந்துதான் கணவனைக் காப்பாற்றப் போராடுவார் போலும். ஒரு வேளை சிதம்பரத்தில் பெரிய லாண்ட் லார்டு அண்டு குஸ்தி பயில்வானாக இருந்திருப்பார் போலும்.
கேயாட்டிக் தியரிப் படி உலகின் எந்தவொரு காரியமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களாகிய நாம் அதையே 'எல்லாமே அவன் செயல்' 'அவ்ன் இன்றி ஒரு அணுவும் அசையாது' ' தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்', நமக்குள் இருப்பது அவனே, அணுவுக்குள் இருப்பதும் அவனே, அவனே பரம்பொருளாகிய ஈஸ்வரன் என்பதைப் புரிந்து கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை நாம் ஈசனின் அம்சமாகக் கண்டு வணங்குகிறோம். நாஸ்திகவாதிகள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளுதல் கவுரவக் குறைச்சல் ஆகவே நாம் சொல்லும் அதே 'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே', 'கிருஷ்ணன் ஒரு சோற்றுப் பருக்கை உண்டால் உலகே பசி அடங்குகிறது" என்ற அதே தத்துவத்திற்கு வேறு ஒரு பெயர் கொடுத்து கயோட்டிக் தியரி என்று பம்மாத்துச் செய்கிறார்கள். என்னைப் பொருத்தவரை கயோட்டிக் தியரியை நம்புவதும் கடவுளை நம்புவதும் ஒன்றே. வேறு எந்தவிதத்திலும் அதை விளக்க முடியாது. நான் கடவுளை நம்புகிறேன் என்பதை வேறு மொழியில் சொல்லும் பம்மாத்து இந்த தியரிகள்.



கயோட்டிக் தியரியின் அடிப்படையில் அலெஜாண்ட்ரோ கோன்சாலஸ் (பெயர் சரிதானே?) இயக்கிய அமோரஸ் பெரோஸ் (இதை மணி ரத்தினம் காப்பியடித்து ஆயுத எழுத்து என்று எடுத்தார்), 21 க்ராம்ஸ், பேபல் என்ற முப்பட வரிசை சினிமாக்கள் குறிப்பிடத்தக்கவை. முகமூடி போட்டுக் கொண்டு பத்து வேடங்களில் நடிப்பது, நாப்பது வேடங்களில் நடிப்பது போன்ற கோமாளித்தங்களையெல்லாம் கமலஹாசன் நிறுத்தினால் அவரும் கூட இது போன்ற உலகப் புகழ் வாய்ந்த படங்களை எடுக்கலாம். இந்த படங்கள் அனைத்துமே ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாத நபர்களை ஏதோ ஒரு சம்பவத் தொடர்ச்சிகள் எப்படி இணைக்கின்றன என்பதைப் பற்றிய படங்களே. இந்த மாதிரி படங்களைப் பார்த்த பின்னாலும் ஒரு சினிமாவில் வரும் மரம் , மட்டை, குரங்கு, நாய் , தெருப்புழுதி என்று அனைத்திலுமே தானே நடிப்பேன் என்று ஒருவர் சர்கஸ் செய்து கொண்டிருக்கிறார். நாமும் சீட்டு நுனிக்குப் போய் பாராட்டி மகிழ்ந்து கொண்டேயிருக்கிறோம்.


ஒரு வேளை நான் பத்து வயதில் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் நானும் கூட ஒரு வேளை சீட் நுனி வரை போய் திரும்பி வந்திருப்பேன் முதல் காட்சியில் சீட் நுனிக்குப் போனவன் அதற்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் நுனியிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு

சீட் நுனி வரைக்கும் போய் விட்டுக் இறங்க முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவி ரசிகன்
(சீக்கிரமே மெத்தை அல்லது வைக்கோல் ரொப்பிய உன் பெயர் போட்ட ஒரு பிக் வேனை கீழே வருமாறு அனுப்பி வை, குதிக்கக் காத்திருக்கிறேன்)

சரி, இவர் இப்படி சொல்றார் ஆனால் படத்தை பார்த்த தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், "யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை பகுத்தறிவுக் கொள்கை உணர்வோடு செய்திருக்கிறீர்கள். உங்கள் சாதனையை, உங்களால் மட்டுமே முறியடிக்க முடியும்" என்று பாராட்டு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். இருவரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அப்பா தலைசுத்துது, உன்னிடம் தலைவலி மாத்திரை இருந்தா எனக்கு உன் பதிலோடு அனுப்பு
இப்படிக்கு,
இட்லிவடை

Read More...

Monday, June 23, 2008

எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் - கலைஞர்

வழக்கம் போல் கலைஞர் பேசியுள்ளார் டென்ஷன் ஆகாதீங்க :-)
எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜ் டி.வி.யின் 24 மணிநேர செய்தி சேனலைத் தொடங்கி வைத்து அவர் பேசியது...

எனது பெயரிலேயே ஒரு டி.வி. சேனல் இருக்கும்போது மற்றொரு டி.வி. சேனலுக்கு விளம்பரம் தருகிறாரே என்று சிலர் கருதலாம். எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான். எல்லா டி.வி.யும் நான் வளர்க்க வேண்டிய டி.வி.தான்.

ராஜ் டி.வி. வளர்ந்து அரசுக்கும் அதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மை கிடைக்குமானால் அதனை நான் பாராட்டுவேன். போற்றுவேன். அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பேன்.

எப்போதுமே விழாவுக்கு அழைப்பவர்கள் உண்மையும் பேச வேண்டும். உண்மைக்கு மாறானதையும் பேச வேண்டும். அதைத்தான் "பொய்மையும் வாய்மையிடத்து' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நல்லது நடக்கும் என்றால் பொய்கூட சொல்லலாம் என்ற வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றி பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் என்று அழைத்து வந்துவிட்டு என்னைப் பேச வைத்து விட்டார்கள்.

தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனால்தான் திமுக அரசு இலவச கலர் டி.வி.க்களை வழங்கி வருகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன

Read More...

கனிகா: ஒரு கடிதம்

Hello,

I am a regular reader of your blog. Your is very entertaining and you give excellent punch.
In your blog there was a photo of a marriage (seems to be a Brahmin marriage) in which the girl was in the 9 yards saree and the boy was in panchagacham vesti. The photo was nice. But who are these people and why did you put it?
Sorry if I sound out of touch with news. But the photo was nice and I am just being inquisitive.
Regards

KK [.....]

அன்புள்ள கேகே,

படத்தில் நீங்கள் பார்த்தது நடிகை கனிகா, யுஎஸ்ஸை சேர்ந்த ஷ்யாம் ராதாகிருஷ்ணன் திருமணம் சென்னையில் போன திங்கட்கிழமை நடைபெற்றது. திருமணத்திலிருந்து ஒரு புகைப்படம் தான் அது.

இவர் முன்பு பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்தவர்.

இவர் நடித்த படத்தின் ஸ்டில் இங்கே

Read More...

சினிமா புதிர்


ஏன் சார் என் தலையே பார்க்கறீங்க அதில கூலிங் கிளாஸ் மட்டும் தான் இருக்கு ;-)

இந்த நடிகையின் பெயர் என்ன இவர் நடிக்கும் படம் என்ன ?

Read More...

திமுக மகளிர் அணியின் மாநாடு - தொகுப்பு

கடலூரில் திமுக மகளிர் அணியின் 2 நாள் மாநில மாநாடு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த மாதம் 14 தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனால் கடலூரே குலுங்கியது என்று பேசிக்கொண்டார்கள். அதன் தொகுப்பு...

ரிப்போட்டர் செய்தி:
கலக்கலாகவே நடந்து முடிந்திருக்கிறது கடலூர் தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு. ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற ஒரு குறைளைத் தவிர.

`கனிமொழிக்காகத்தான் இந்த மாநாடு நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில், இந்த மாநாட்டை எப்படியாவது நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்தார். இரண்டுமுறை தேதி தள்ளிப் போனதே தவிர, மாநாட்டை அவரால் நிறுத்த முடியவில்லை' என்றெல்லாம் பேச்சுகள் இருந்தன. இந்த நிலையில் இரண்டுநாள் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது வந்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை நிலவியது. ஆனால் தப்பித்தவறிக் கூட அது நடக்காமல் போய்விட்டது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, 14-ம்தேதி காலையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கொடியேற்று விழா நடந்தபோது, அதில் எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. அய்யோ! அவ்வளவுதான்! மாலையில் நடக்கப்போகும் பேரணியும் அழுதுவடியப் போகிறது என்று அங்கலாய்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பீச் ரோட்டில் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய பேரணியில் நல்ல கூட்டம். ஆறு மணி நேரம் வரை நீடித்த பேரணி, முடிந்தபோது இரவு பத்து மணி.

பேரணியைத் தொடங்கி வைத்த கனிமொழி, ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே வந்தார். பேரணியைப் பார்வையிட தனிமேடையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், அழகிரியின் மகள் கயல்விழி ஆகியோர் புடைசூழ அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு மாநாட்டுப் பந்தலை நோக்கி நடந்தார் கனிமொழி. அவரை வழிமறித்த அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், கலைஞர் இருந்த மேடையில் ஏறச் சொன்னபோது, அதை மறுத்துவிட்ட கனிமொழி, அமைச்சர்கள் ஏறியிருந்த மற்றொரு மேடையில் ஏறி நின்று பேரணியில் வந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

பேரணி தொடங்கிய இடத்திலிருந்து குத்தாட்டம் போட்டுக் கலக்கியபடி வந்த ஒரு குழு, கலைஞர் இருந்த மேடை அருகே வந்ததும் நல்ல பிள்ளைகளாக மாறி, அவருக்கு பவ்யமாக மரியாதை செலுத்தி விட்டுக் கடந்தது ரசிக்கும்படியாக இருந்தது. பேரணி முடிய நேரமானதால் அன்று பேச இருந்த கனிமொழி மறுநாள் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

மறுநாள் 15-ம்தேதி காலை பத்து மணிக்கே மாநாட்டு மேடைக்கு வந்து விட்டார் கலைஞர். அன்று பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி, ``கருணாநிதிக்கு மார்க் போட யாரும் பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது. ஜெயலலிதா போன்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குஜராத்தாகி விடும்'' என்பது போன்ற பல பஞ்ச் களுடன் பேசி முடித்தார். கனி மொழி பேசி முடித்ததும் அவருக் குக் கை கொடுத்துப் பாராட் டினார் அமைச்சர் துரைமுருகன். அழகிரி மகள் கயல்விழி அவரது கன்னிப்பேச்சைத் தொடங்குமுன் கருணாநிதியின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு, ஏதோ பேச்சுப் போட்டிக்கு வந்த பள்ளி மாணவி போல படபடவென பொரிந்து தள்ளினார். அவர் பேசி முடித்தபோது அழகிரி மட்டுமல்ல; மாநாட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இறுதியாகப் பேசிய முதல்வர் கருணாநிதி, ``பா.ம.க., தொடர்பாக நாங்கள் நான்கு பேர் இங்கே கூடிப்பேசி முடிவெடுக்க முடியாது. 17-ம்தேதி அறிவாலயத்தில் நடக்கும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் கூடி விவாதித்து தான் முடிவெடுக்கப்படும். யாரோ அவசரப்படுகிறார்கள் என்பதற்காக நானும் அவசரப்பட்டுவிட முடியாது'' என்று கூறி பா.ம.க.வுக்கு ஒரு பஞ்ச் வைத்தார். ``ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு முப்பது ரூபாய் குறைக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்திவிடும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த மாநாட்டால் தமிழக அரசுக்கு நூறுகோடி நஷ்டம். இதை நான் இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்கிறேன்'' என்று நகைச்சுவையாகப் பேசி முடித்தார் அவர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வராததால் பத்திரிகைகளில் அந்த விஷயம் ஹைலைட்டாகி விடும் என்பதால், அதை மாற்றிக்காட்டும் விதத்தில் இந்த காஸ் சிலிண்டர் விலைக் குறைப்பை மாநாட்டில் முதல்வர் அறிவித்ததாக தி.மு.க. தொண்டர்கள் பலர் பேசிக் கொண்டனர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வரவில்லை என்றாலும் அவரது பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு அங்கே குறையிருக்கவில்லை. மாநாட்டின் முதல் நாளன்று அழகிரி அவரது மகள் கயல்விழி ஆகியோருக்கு மருந்துக்குக் கூட பேனர், கட்அவுட்டுகள் இல்லை. ஆனால் இரண்டாம் நாள் திடீர்திடீரென பல இடங்களில் இருவரது பேனர்களும் முளைத்திருந்தன. கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பெயரில் அந்த பேனர்கள் இருந்தன.

`இதுநாள்வரை தென்மாவட்டங்களில் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த அழகிரிக்கு வட மாவட்டங்களில் அவ்வளவாக ஆதரவாளர்கள் இல்லை. இந்த நிலையில், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான பொன்முடி, கடலூர் மாவட்டத்திலும் மூக்கை நுழைத்து தொடர்ந்து தொல்லை தந்ததால், கடுப்பாகி இருந்த பன்னீர்செல்வத்தை அழகிரி சமயம் பார்த்துத் தன்பக்கம் இழுத்துவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு பவர்ஃபுல் இலாகாவான சுகாதாரத் துறையை வாங்கிக்கொடுத்ததே அழகிரிதான். அதற்கு நன்றிக்கடனாகத் தான் பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இருக்கிறார். இதன்மூலம் அழகிரியின் அரசியல் பரப்பளவு தற்போது வடதமிழகம் வரை விரிந்திருக்கிறது. அழகிரியின் வடமாவட்டத் தளபதியாக பன்னீர்செல்வம் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்' என்றெல்லாம் மாநாட்டில் அங்கங்கே தொண்டர்கள் பேசிக் கொண்டதை நம்மால் கேட்க முடிந்தது.

`ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியும், கனிமொழியும் கரம்கோத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டார்கள். இதற்கு ஸ்டாலின் எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்' என்றும் சிலர் பேசிக்கொண்டனர்.



விகடன் - ரிப்போர்ட்
கடலூரில் தொடங்கிய கவுன்ட்-டவுன்

'ஸ்டாலினுக்கு நெல்லையில் இளைஞர் அணி மாநாட்டைப் போல, கனிமொழிக்குக் கடலூரில் மகளிர் அணி மாநாடு' என்ற பேச்சோடு நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு. பல கதம்ப நிகழ்வுகளுடன் களைகட்டியிருந்த இம் மாநாட்டில் மற்றொரு ஆச்சர்யம்... கனிமொழிக்குப் போட்டியாக அழகிரி தன் மகள் கயல்விழியையும் பேச வைத்ததுதான்!


மகளிர் மாநாடு பற்றிய அறிவிப்பு வந்ததுமே, 'கனிமொழியை அரசியலில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிதான் இது' என்று பேச்சுக்கள் கிளம் பின. அதை நிரூபிப்பது போல மாநாட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் கனிமொழியின் உருவம் தாங்கிய டிஜிட்டல் பேனர்கள்தான்! கூடவே, கயல்விழிக்கும் மாநாட்டில் பேனர்கள் வைத்து அசத்திவிட்டார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

''கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநாடாக இருந்தபோதும் அந்த மாநாட்டில் அழகிரி கலந்துகொண்டதன் காரணமே, மகள் கயல்விழிதான்! இந்த மாநாட்டில் மகளை அரசியலில் முன்னிறுத்துவதற்காகத்தான் மைக் முன் நிறுத்தினார் அழகிரி. கனிமொழி, கயல்விழி இருவரும் என்ன பேசப் போகி றார்கள்... யார் அரசியல் பேசுவது என்று பட்டிமன்றம் நடக்கும்அள வுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார்கள். கனிமொழிக்கான முக்கியத்துவத்தையும் தாண்டி, கயல்விழியைப் பற்றிய பேச்சுக் கள் கிளம்பும் என நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை!'' என்று சொல்லி, வியக்கிறார் நெடுங்கால கழக விசுவாசி ஒருவர்.

இலக்கியக் கூட்டங்களில் சரளமாக முழங்கும் கனிமொழிக்கு அரசியல் மேடை சற்றுப் புதுசு தான். எம்.பி-யான பிறகு நெல்லை இளைஞர் அணி மாநாட்டில் பேசியதுதான் கடைசி மேடை அனுபவம். அப்போதும்கூட அவர் பேச்சில் அரசியல் வாடை பெரி தாக இல்லை. ஆனால், கடலூர் மாநாட்டில் கனிமொழி முன்னேறி இருந்தது கண்கூடு!

''நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த ஒரு நண்பர், சேது சமுத்திரத் திட்டம் குறித்து கலைஞர் கூறிய கருத்தைக் கிண்டலடிக்கிறார். தந்தை பெரியாரே 'சமூகத்துக்கு ஏதாவது பயன் ஏற்படுகிறதென்றால், நானே விபூதி பூசுவேன்' என்றார். பெரியாரின் பாதையைப் பின்பற்றித்தான் கலைஞரும் ராமர் பெயரைக் கூறியாவது தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி எனச் சொன்னார்'' என மறைமுகமாக விஜயகாந்த்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்தபோது, பலத்த கரகோஷம். டாக்டர் கலைஞர் என்று குறிப்பிட்ட கனிமொழி, ஒரு கட்டத்தில் 'டாக்டர், டாக்டர்' என்று சொல்லிக்கொண்டே வந்து, அதற்கு பன்ச்சாக... 'டாக்டர் என்று சொல்வதால், வேறு யாரையாவது புரிந்துகொள்ள வேண்டாம்' என்று சொல்லி, மறுபடியும் கைத்தட்டல் வாங்கினார். கூடவே, 'கலைஞருக்கு மார்க் போட யாரும் பிறக்கவில்லை' என்ற போது உணர்ச்சி வேகத்தில் அவரது முகம் சிவந்து இருந்தது.

தாத்தாவின் காலைத் தொட்டு ஆசி வாங்கிய கையோடு மைக் முன் வந்த கயல்விழி, தனக்குக் கொடுக்கப்பட்ட 'வள்ளுவரும் வாய்மையும்' என்ற தலைப்பில் இருந்து விலகாமல் பேசினார். ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் வரை பிசிறு இல்லாமல் கயல்விழி பேச, மேடையில் இருந்த கனிமொழி ஆச்சர்யத்தோடு ரசித்துக்கொண்டு இருந்தார்.

''டெல்லி அரசியலை மையப்படுத்தி கனிமொழி எம்.பி-யாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழக அரசியலில் அவர் பங்கு இல்லாமல் இருக்காது! ஆனாலும் இப்போது கயல்விழியும் களத்துக்கு வந்திருப்பதுதான் தொண்டர்கள் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது. இம்மாநாட்டின் மூலம் கயல்விழியும் கனிமொழி போல ஒரு சக்தியாக உருவெடுப்பார் என்றே தோன்றுகிறது. அப்படி நடந்தால் 'கனிமொழியா? கயல்விழியா? அரசியல் ரேஸில் முந்துவது யார்?' என்ற பேச்சுக்கள் எதிர்காலத்தில் கிளம்பி நிற்கும். இப்போதைக்குத் தன் மகளுக்கான அரசியல் கவுன்ட்-டவுனை கடலூர் மாநாட்டில் அழகிரி அனைவரின் ஆசீர் வாதத்தோடும் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது!'' என்கிறார் தி.மு.க. சீனியர் ஒருவர் அர்த்த புஷ்டியோடு!


''தளபதியே வரல..!''

'பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகவும் பெண்களின் உரு வத்தை விளம்பரப் பொருளாகவும் பயன்படுத்தும் போக்கினைக் கண்டிக்கிறோம்' என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள். ''செட் போட்டு சின்னத் திரையில் நடிகைகளை நனையவிட்டு ஆடவிடுகிற 'கலைஞர் தொலைக்காட்சி'யின் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை மறந்துட்டாங்க போல' என்று பத்திரிகையாளர் வரிசையிலிருந்து எழுந்தது ஒரு காமென்ட்!

மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, பேரன் என ஒட்டுமொத்தக் குடும்பத்தோடு ஆஜர் ஆகியிருந்தார் அழகிரி. மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி தன் மனைவியோடு வந்திருந்தார். தமிழரசு, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் என்று எல்லா குடும்பமும் ஆஜராக ஸ்டாலின் குடும்பம், செல்வி குடும்பம் எல்லாம் சொல்லி வைத்தாற்போல ஆப்சென்ட்! 'தளபதியே வரல... அவருக்கு ஆதரவா இருக்கிறவங்களும் எப்படி வருவாங்க' என்று அடிமட்டத் தொண்டர்கள்கூடக் கிசுகிசுத்தனர்!

கயல்விழி பேசி முடித்தபோது, அவருக்கு சால்வை போட கிட்டத்தட்டச் சண்டையே நடந்தது. ஆனால், கனிமொழி பேசிய போது அப்படியெல்லாம் யாரும் அதிரடியாக 'இம்ப்ரெஸ்' பண்ண முயலவில்லை!

'மகளிர் அணியினர் இந்த மாநாட்டை நடத்தியதால் அரசுக்கு நூறு கோடி ரூபாய் நஷ்டம்' என்று, மாநாட்டின் இறுதியில் பேசினார் கருணாநிதி. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் மிகவும் நொந்து போயிருப்பதை உணர்ந்து, அதை ஈடுகட்டும்விதமாக, 'மகளிர் அதிகம் பயன்படுத்தும் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதனால், தமிழகத்தில் ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் 50 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதலாக செலவிடப்பட வேண்டிய 50 ரூபாயில் 30 ரூபாயைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்' என்று ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுக் கைத்தட்டல்களை அள்ளி, 'மாநாட்டால் ஏற்பட்ட பயன்' என்று எல்லோரையும் பேச வைத்துவிட்டார் கருணாநிதி!


கல்கி தலையங்கம் - கடலூர் மாநாடு - கடலளவு ஏமாற்றம்!

கடலூாில் தி.மு.க. பெண்கள் அணியினாின் குத்தாட்டம் நடைபெற்ற அதே நேரத்தில், புதுவையில் மதுக்கடைகளில் ஆண்கள் கூட்டம் அலை மோதியிருக்கிறது! வழக்கத்துக்கதிக மான இக்கூட்டம், மகளிரணி மாநாடுக்கு வந்த பெண்களின் துணைவர்கள் கூட்டம் என்று ஆதாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு மேலாக, தி.மு.க. மகளிர் அணி மாநாடு எதையாவது சாதித்ததா என்று பார்த்தால், நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது!

கனிமொழி, தமிழச்சி போன்றோர் தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு ஏற்ற பின், புதுவெள்ளம் பாய்ந்து, புதிய சிந்தனைகளும் செயல்திட்டங்களும் பிறக்கும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, கடலூர் மாநாடு, கலைஞர் புகழ் பாடுதல், எதிர்க்கட்சியினரைத் தாக்குதல், பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு கோருதல், இறைநம்பிக்கையை ஏளனம் செய்தல், ஹிந்து மதக் கோட்பாடுகளைத் திாித்துப் பேசுதல் போன்ற வழக்கமான தி.மு.க. ஃபார்முலாவிலேயே அரங்கேறி முடிந்துள்ளது.

ஒரே கேஸ் சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு, அதன் விலையில் முப்பது ரூபாய் தள்ளுபடி அறிவித்திருப்பது அநீதி. வேறு எாிபொருளுக்கே வழியில்லாத நிலையில், எத்தனையோ ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வயிற்றை, வாயைக் கட்டி இரண் டாவது சிலிண்டருக்கு டெபாஸிட் கட்டிப் பெறுகின்றனர். இவர்களுக்குச் சலுகை மறுக்கப்படுகிறது!

ஒரு முக்கிய கட்சியின் பெண்கள் அணி, கையில் எடுக்கக் கூடியவையாக இன்று அனேக விஷயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன:

பெண் கல்வி, பெண் சிசுக் கொலை, பெண்களை இழிவுபடுத்தும் கலாசார சீரழிவு, இதனைத் தூண்டும் ஊடகங்கள், பெண்களுக்குச் சட்டம் குறித்த விழிப்புணர்வு, பெண் வாழ்வில் பெரும் சுமையாக அழுத்தும் குடிநீர்ப் பிரச்னை... என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இவற்றுள் எது குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கவில்லை; செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

மதுக்கடைகளைத் திறந்து வைத்து, தமிழகப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வரும் தி.மு.க. அரசுக்கு, மகளிர் அணியினரே சிந்தித்து மாற்று வருமானத்துக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆலோசனை வழங்கியிருக்கலாம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரசியல் மயமாவதையும் அரசியல் கட்சிகளின் பிடிக்குள் சிக்குவதையும் எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கலாம். அக்குழுவினரை எச்சாித்து, கட்சி நிர்ப்பந்தங்களுக்குப் பணியாமல் இயங்க, துணிவூட்டியிருக்கலாம். இவற்றையெல்லாம் கடலூர் மாநாட்டில் செய்திருந்தால், தமிழ்நாடே புத்துணர்ச்சி பெற்றிருக்கும்.

இதற்கெல்லாம் பதிலாக, கனிமொழியுடன், கருணாநிதி குடும்பத்தின் அழகிாி பிாிவையும் அரசியலில் அசைக்க முடியாமல் அமர்த்தும் முயற்சியாக மட்டுமே கடலூர் மாநாடு நடந்துள்ளது. அதற்கு ஸ்டாலின் குடும்பத்தினர் வராமல் போனது, கட்சியில் நிலவும் குடும்பப் பிணக்கைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில், கடலூர் மாநாடு ஏமாற்றம் அளித்ததுடன் தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து, கேள்வியும் எழுப்பியிருக்கிறது! கவலைக்குாிய அக்கேள்வியில் தமிழகத்தின் எதிர்காலமும் சிக்கியிருப்பது வருத்தத்துக்குாிய உண்மை!


குமுதம் - ஓ-பக்கங்கள்
வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.

இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று......... எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.

என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட' நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.

கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.

முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?

செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?

செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?

செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.

செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்' என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

Read More...