பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 03, 2008

"வார்த்தை" - 'ஜெஜெ' ன்னு இல்லை

"வார்த்தை" - ஜெஜெ' ன்னு இல்லை

வார்த்தை மாத இதழ் வந்துவிட்டது வாழ்த்துகள். மங்களகரமான மஞ்சள் அட்டை, ஸ்டாம்ப் சைஸ் படங்கள் என்று அழகாக இருக்கிறது.

உள்ளே ஓவியங்கள் படங்கள் எல்லாம் மற்ற சிறுபத்திரிகைகளை நினைவுபடுத்துகிறது.

முதல் இதழ் என்பதால் ஆர்வம்+டென்ஷனுடன் என்ன இருக்கும் என்று திறந்தால், இனிப்பு விளம்பரமும், "ஆம் ! இந்தியா உலகிற்களிக்கும்!" என்ற தலையங்கமும். (பி.கே.சிவகுமார்)

இந்திய கலையிலக்கிய மரபின் செழுமை, தொன்ம மேன்மை, ஜனநாயகப் பண்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பெருமைப்படுகிறவர்கள் தங்களையும் பிறரையும் அறியும் முயற்சி 'வார்த்தை'....என்ற தலையங்கம் நல்லவேளையாக சுத்தமாகப் புரியவில்லை. கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு' என்ற வரி மட்டும் புரிகிறது. :)

"வார்த்தையில் குறைகள் இருக்கலாம், அவை புதிய குறைகளாக இருப்பின் மகிழ்வோம்" என்கிறார்.

ஆனால் விளம்பரத்தில் கொடுத்திருந்தபடி ஜெயமோகனார் எழுதியது எதுவும் இல்லை. அதனால் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனும் எழுதவில்லை(சமையல் மாமி அக்கா ). இவர்களை ஈடுகட்டுவதற்காக இன்னும் அதிகமான பேரை எழுதவைத்திருக்கிறார்கள். அப்படியும் முதல் இதழ் ஜெ'ஜெ'ன்னு இல்லை.

"தமிழின் முக்கியமான, முக்கியம் பெறப் போகும் படைப்பாளிகள் முதல் இதழை அணி செய்கிறார்கள். அறிவித்த சிலர் எழுத இயலாமைக்கு வருந்துகிறோம். அறிவிக்காத பலர் எழுதியிருப்பது மகிழ்ச்சி'" என்ற குறிப்பைப் போட்டு சமாதானம் செய்கிறார்கள்.

இருவரும் எழுதாதாததால் மனமுடைந்து நாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரன் பிரசன்னா ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார் என்று தெரிகிறது. (ஜெயமோகன் சார், இந்த விளைவுகளை யோசித்தாவது நீங்கள் கொஞ்சம் பெரியமனது பண்ணியிருக்கலாம்.)

இந்த இதழில் என்னவெல்லாம் இருக்கிறது ?

கேள்வி பதில் பகுதி - ஜெயகாந்தன். சாம்பிளுக்கு ஒன்று...

நவீனத்துவ நோக்கில் எஸ்.ராமகிருஷ்ணன் ஜெயமோகன் குறித்து உங்கள் பார்வை என்ன ?

எல்லாரைக் குறித்தும் ஏதாவது பார்வை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு நியதியா என்ன? நான் ஒரு விமரிசகனும் அல்ல, வாசகனும் அல்ல.

(இவர்களுக்கெல்லாம் கேள்வி அனுப்பி பதில் எதிர்ப்பார்ப்பவர்கள் பொறுமைசாலிகள்.)

* குறியிட்ட கேள்விக்கு துக்ளக் ஸ்டைலில் 100ரூ பரிசு. அந்த கேள்வியை படிக்க பக்கம் 3-4க்குச் செல்லவும்.

கட்டுரைகள் 13 இருக்கின்றன. துகாராம், கோபால்ராவ், செழியன், சேதுபதி அருணாசலம், ரெ.கார்த்திகேசு, வ.ஸ்ரீநிவாசன், நாகரத்தினம் கிருஷ்ணா, லதா ராமகிருஷ்ணன், சுகா, கே.எம்.விஜயன், இரா.முருகன், எம்.கே.குமார், மணி வேலுப்பிள்ளை, பி.ச.குப்புசாமி

அஞ்சலி கட்டுரை - கோபால் ராஜாராம்,

புத்தக விமர்சனம் - வே சபாநாயகம்

சிறுகதை - நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், எஸ்.ராமகிருஷ்ணன், பா.வண்ணன், வெ.இறையன்பு

கவிதை - தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, நிர்மலா, பி.கே.சிவகுமார், வ.ஜ.ச.ஜெயபாலன், ஹரன் பிரன்சன்னா. (அந்தப் பக்கங்களை சுலபமாகத் தாண்டி ஓடியேவிட்டேன்.)

மொத்தம் 96 பக்கங்கள். லேயவுட் சூப்பர்.

ஒரு கதையும், இரண்டு கட்டுரைகளும் குறிப்பிடும்படி இருந்தன. அடுத்த இதழ் வரும் வரை இந்த விமர்சனம் போதும்.

கடைசியாக 'ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' (பி.ச.குப்புசாமி) நன்றாக இருந்தது.

டென்ஷனாக படிக்க ஆரம்பித்த எனக்கு கடைசியில் 'நோ-டென்ஷன் டிராக்டர்' விளம்பரம் அந்த டென்ஷனைப் போக்கியது.

வார்த்தை குழுவிற்கு இட்லிவடையின் வாழ்த்துகள். அடுத்த விமர்சனம் இதன் ஒரு ஆண்டு நிறைவு மலருக்கு.

10 Comments:

ஜயராமன் said...

வார்த்தை இதழுக்கு இவ்வளவு சீக்கிரம் சுடச்சுட விமர்சனம் எழுதி வழக்கம்போல இட்லிவடை - முந்திவிட்டார். அந்த பத்திரிக்கையையே இந்த ஞாயிறுதான் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார்கள்!!

வார்த்தை இதழ் தமிழில் இலக்கிய பத்திரிக்கைகளை "அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்" (இந்த வார்த்தைகளை போடாட்டா எப்படி!!) ஒரு நல்ல முயற்சி. இதை நாம் எல்லோரும் மனமுகர்ந்து வரவேற்போம்.

ஹரன் பிரசன்னா ஐயா விலகிவிட்டார் என்பது உண்மையானால் மிகவும் வருத்தப்பட வேண்டியதே. அதுவும் நீங்கள் சொன்ன காரணத்திற்காக என்று நம்ப முடியவில்லை. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.

நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

//ஹரன் பிரசன்னா ஐயா விலகிவிட்டார் என்பது உண்மையானால் மிகவும் வருத்தப்பட வேண்டியதே. அதுவும் நீங்கள் சொன்ன காரணத்திற்காக என்று நம்ப முடியவில்லை. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.//

ஜயராமன் நகைச்சுவைக்காக சொன்னது. மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

Boston Bala said...

நன்றி :)

ILA (a) இளா said...

//ஹரன் பிரசன்னா ஐயா விலகிவிட்டார் //
அடப் பாவமே....

*வாழ்த்துக்கள் PKS. "வார்த்தை" ஜாலம் பெறட்டும்..

Anonymous said...

ஜெஜென்னு இல்லை, ஒரு ஜெ இருக்கிறார், இன்னொரு ஜெ இல்லை
என்பதை இப்படி சொல்கிறாரா இட்லிவடையார்.உள்ளடக்கத்தைப் பார்த்தால் ஒன்றும் பெரிய வித்தியாசம்
இல்லை. இது போன்ற பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கு ஒரு 20 பேர் இருக்கிறார்கள்.அவர்களே இந்த அரை டஜன் ‘மிடில்' லெவல்
பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருப்பார்கள். திண்ணையில் தொடர்ந்து எழுதும் சிலர் (உ-ம்) ஜெயபாரதன் இதில் எழுதவில்லை.
ஜெயகாந்தன் கேள்வி பதில் தேவையேயில்லை.புதிய பத்திரிகை
புதிய எழுத்தாளர்களுக்கு அதிக
இடம் தர வேண்டும்.

ஜயராமன் said...

/// ஜயராமன் நகைச்சுவைக்காக சொன்னது. மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ///

என்னமோ போங்க! நீங்க பண்ணின இந்த 'நகைச்சு-வை' யை பொறுக்க முடியாம, ஜெயஸ்ரீ அவர்கள் கூட கோபமாய் ஒரு பதிவு போட்டுட்டாங்க!

ரொம்பவும் தொட்டாற்சுருங்கிகளாய் இருக்கிறார்களா! இல்லை, நீங்கள்தான் விஷமம் பண்ணுகிறீர்களா என்று அவரவர்களே தீர்மானம் செய்துகொள்ளட்டும்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

முன் அட்டை ஆரம்பித்து பின் அட்டை வரை ஒரே வறட்சியான எழுத்து.

நீளமான வாசகங்கள் எழுதினால் தான் பிரசுரிப்போம் என்று சொல்லிவிட்டார்கள் போலும்.

செழியன் எங்கெங்கோ படித்து அதை மொழி பெயர்த்து தமிழை கொலை செய்யாமல் விடுவதில்லை என்று வைராக்கியமாய் எழுதி தள்ளியிருக்கிறார். கடைசியில் Bibliography மாதிரி ஒரு நூல் பட்டியல் வேறு.

நாஞ்சில் நாடனுக்கு பூகோளப் பாடம் எடுக்கணும் போலிருக்கு “காவிரிக்குக் கொள்ளிடம் போல, பழையாற்றுக்கு நாகர்கோவில்" என்று உளறியிருக்கிறார்.

கொள்ளிடம் காவிரியின் துணை நதி. ஊர் இல்லை. கொள்ளிடம் நதிக்கரையில் கொள்ளிடம் என்று ஊர் இருக்கிறது. கொள்ளிடம் ஊருக்கும் காவிரிக்கும் சம்பந்தம் இல்லை.எதையுமே படிக்காமல் எழுதினால் இப்படிதான்.

ஜெயகாந்தன் போன்ற OUTDATED ஆசாமிகளுக்கு இந்த மாதிரி ஒரு கூட்டம் வேண்டியிருக்கிறது. பாவம் மனுஷன் !! வேற யாரும் மதிக்கலைன்னா ஒரு ”வார்த்தை” பேச இடம் வேண்டமா?

பி.கே. எஸ் உங்களுக்கு ஒரு விண்ணப்பம்:

எந்தரோ மஹானு பாவலு அந்தரிக்கி நா வந்தனமுலு”

”நா” விட்டு விட்டீரர்கள்.

தியாகராஜரின் இந்த கீர்த்தனையை நீங்களெல்லாம் கையாளுவீர்கள் என்று அவருக்கு தெரியவில்லை. பாவம்.
( edited )

Anonymous said...

http://ninaivu.blogspot.com/

இந்த வலைப்பதிவு (edited) தெரிந்த பதிவு தானே.

ஆயினும் கூட சிறுகதைகள் என்று தலைப்பிடப்பட்ட ஒன்று கூட தரமாய் இல்லயே. ஒரு வேளை ”அட்லாண்டிக்குக்கு அப்பால் ” வேறு மாதிரி போலும்.

தனது குழந்தைகளின் வலைப்பதிவுகளை கூட இலக்கியம் என்று சொல்ல (ஜிங் ஜங் !! ஜிங் ஜங் !!) அவருக்கு அபிமானிகள் இருக்கும் போது எதற்கு கவலைப்பட வேண்டும் என்று விட்டு விட்டாரோ என்னவோ !!
(edited)

பொய்யன் said...

jeyakandan outdated endru pathivu potta anaami maalanaame