பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 11, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-04-08

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

அன்புள்ள பா.கா.முனி,

போ மாசம் அதிமுக ஜோதி அதிமுகலேருந்து திமுகவுக்கு ஓட்டம். இந்த மாசம் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம். ஆக மாசத்துக்கு ஒரு ஜோதி ஓட்டம்னு ஆயிடுத்து.

“திமுக ஆட்சியில் தமிழகமே இருண்டு கிடக்கிறது என்று நேற்று தான் ஜெயலலிதா அறிக்கையில் சொல்லி இருந்தார். அதனால் தான் இருண்டு கிடக்கிற தமிழகத்தை ஒளி பெறச் செய்ய ‘ஜோதி’யை அனுப்பி இருக்கிறார்”
என்று கலைஞர் சொல்லியிருக்காரே, அப்படீன்னா திமுக ஆட்சில தமிழகம் இருண்டு கிடக்குன்னு தானும் ஒத்துக்கறாராமா?

திபெத் மக்களுக்கு தான் ஆதரவா இருக்கறதாவும், ஆனா ஒலிம்பிக் போட்டிகளையும் சீனாவோட மனித உரிமைப் பிரச்சனைகளையும் தான் வேறுபடுத்திப் பார்க்கறதாவும் அமீர்கான் தெரிவிச்சிருக்காரு. ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்துல தான் பங்கெடுக்கறது சீனாவுக்கு ஆதரவா இல்லைன்னும், அப்ப திபெத் மக்களுக்காகவும், உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களால பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தான் பிரார்த்தனை செய்யப் போறதா அவர் சொல்லியிருக்காரு. இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் இல்லைன்னா திபெத் பிரச்சினை இவ்ளோ தூரம் பரவியிருக்குமான்னு சந்தேகம்தான். ஒலிம்பிக் ஜோதி, ஆஞ்சநேயர் வால்ல வெச்ச நெருப்பு மாதிரி ஆயிடுத்து பாத்தியோன்னோ!

6ஆம் தேதி கல்யாண உற்சவம் பாத்தியா? முக்கியமா அதுக்கு வந்திருந்த கூட்டதைப் பார்த்தையா ? திமுக, திக காரங்க அதைப் பாத்து என்ன நினைச்சிருப்பாங்க பாவம்? இத்தனைக்கும் அந்த கல்யாண உற்சவங்களுக்காகக் கொண்டுவரப்படற அந்த உற்சவர், திருப்பதி தேவஸ்தான அர்ச்சகரின் வீட்டுல இருக்கறவராம். ஒரிஜினல் உற்சவப் பெருமாள்தான், திருமலையை விட்டு ஒருபோதும் இறங்கமாட்டாரே. சரி, நீ என்ன பிராத்தனை செஞ்சுண்ட?

தோனி செஞ்ச பிராத்தனை என்ன தெரியுமா? ஆஸில இந்தியா ஜெயிச்சு திரும்பினப்பறம் ஜெயிச்சதுக்காக ஒரு ஆட்டை பலி கொடுத்திருக்காரு. இன்னும் எவ்வளவு ஆடு பலி கொடுக்க போறாரோ, அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்.

சென்னை கிரிக்கெட் போட்டில இந்த தடவை எனக்கு ரெண்டு ஏமாத்தம். ஒன்னு, இந்திய டீம் விளையாடின விதம். ரெண்டாவது ஏமாத்தம், மழை வரலை.

மெகா சீரியல் கேள்விப்பட்டிருக்கோம். (இதால பாதிக்கப்படாத ஆண் யாரு இருக்கா?) ஆனா மெகா தொடர்? ரிப்போட்டர்ல பா.ராகவன் 200 வாரம் ஒரு தொடர் எழுதியிருக்கார். அவரா பார்த்து 'முற்றும்'னு போட்டாதான் நாம பொழைப்போம். கல்கில, "கால் கிலோ காதல், அரை கிலோ கனவு"ன்னு ஒரு தொடர் கதையை ஆரம்பிச்சிருக்காரு. தெருவில் போஸ்டர் பார்த்தேன். முக்கால் கிலோ காமம், முழுசா ஒரு குழந்தை-ன்னு முடிக்காம இருந்தா சரி.

இந்தியால இன்னிக்கி தேதில 7 சதவீதம் பண வீக்கம் அதிகரிச்சிருக்கு, வளரும் நாடுகள்ள பண வீக்கத்துல இந்தியா இப்ப 79-வது இடத்துக்கு உயர்ந்திருக்கு. இதன் எதிரொலியா உணவு, பருப்பு, எண்ணெய், காய்கறிகள்னு மக்களோட அன்றாட அத்தியாவசிய தேவை பொருட்களோட விலை எல்லாம் ஒம்மாச்சி படத்துல பகவான் விசுவரூபம் எடுக்கறமாதிரி கிடுகிடுன்னு உயர ஆரம்பிச்சிருக்கு. கோதுமை பற்றாக்குறை வேறயாம். இதற்கு சரத்பவார் என்ன காரணம் சொல்லுறாராம் தெரியுமா? இப்பல்லாம் தமிழர்கள் நிறைய சப்பாத்தி சாப்பிடறாங்களாம். அதனாலதான் கோதுமை பற்றாக்குறைங்கறார். மெய்யாலுமா முனி? நாட்டுப்பற்றுள்ள தமிழன் பின்ன திரும்ப அரிசிச்சோறுக்கே மாறணுமா?

நாட்டுப்பற்றுன்னதும்தான் நினைவுக்கு வருது. ஞாநி சில வாரங்களுக்கு முன்னால இப்படி எழுதியிருக்கார்...

"சென்னையில் ஒரு திரையரங்கில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ஜனகணமன பாடலை காட்டிவருகிறார்கள். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் தயவுசெய்து எழுந்து நில்லுங்கள் என்று ஒரு கார்டு வேறு. இந்திய அரசு நிர்ணயித்துள்ள தேசியகீதமான ஜன கண மன பாடலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட டெம்போ (கதி) இருக்கிறது. அதன்படி பாடினால் எத்தனை செகண்டுகளில் பாடல் முடியும் என்று ஒரு வரையறை இருக்கிறது.

ஆனால் ரகுமான் _ எஸ்.பி.பி ஜனகணமன பாட்டோ அசல் மெட்டை நீட்டி முழக்கி அரசு நிர்ணயித்துள்ள வரையறையைப் பின்பற்றாமல் படு ஸ்லோவாக அமைக்கப்பட்டிருந்தது. இப்படி தேசிய கீதத்தைப் பாடுவது அதை அவமதிப்பதாகும். எனவே அடுத்த முறை நான் அரங்குக்குச் சென்றபோது, இந்தப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்துவிட்டேன்."


ஞாநிக்கு ஜெயஸ்ரீ செஞ்ச பொருள்விளங்கா உருண்டை ஒன்னை அனுப்பிவைக்க வேண்டியதுதான். நல்ல வழவழன்ணு இருக்கு. ஜெயமோகன் எழுதாததாலதான் ஜெயஸ்ரீ எழுதலைன்னு நீ என் காதோட சொன்ன கிசுகிசு ஊத்திக்கிச்சு. வெறுத்துப் போயிட்டேன்.

எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அதோட முடிவால வெறுத்துப் போயிருப்பாங்க. இந்த படம் மட்டும் வேறு விதமா முடிஞ்சிருந்தா நன்னா இருக்குமேன்னு தோணும். புன்னகை மன்னன், கீரிடம் மாதிரி சில படங்கள் இப்படி ரசிகர்களோட கருத்தைப் புரிஞ்சுண்டு அதோட முடிவை மாத்தியிருக்காங்க. howitshouldhaveended.com அப்படீங்கற தளத்துல திரைப்பட ரசிகர்கள் தாங்க பார்த்து ரசிச்ச படங்களுக்கு அவங்களுக்கு விருப்பமான முடிவுகளை எழுதி இடம்பெற வைக்கறதுக்கான இணையதளம் இது. ரசிகர்கள் எப்படியெல்லாம் படங்களோட முடிவுகள்ல விளையாடி இருக்காங்கன்னு போய்ப் பாரு.

இந்தக் கடிதத்தோட கடைசிச் செய்தி: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை (ஏப்.14) மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக பழைய தமிழ் புத்தாண்டு அம்பேத்கர் ரூபத்துல வந்திடுச்சு. உனக்கு வழக்கம்போல பூஜை, படையல் எல்லாம் ஒன்னும் கொறையிருக்காது. சந்தோஷமா?

வருஷ முடிவுல உனக்கு ஒரு காமெடி:

suresh-
i suggets you, it is better to do your wife's jacket hook (sorry, the words are not mine but your's) rather than writing film criticism or reading my articles. mind your words friend.i am your fellow writer. give and get respect. try to write your own views on the films i wrote about. yamuna rajendran i am posting this as anonymous as because i do not have an id with this site

( இதற்கான லிங்க் - இது )

இது சுரேஷ் கண்ணனுக்கு யமுனா ராஜேந்திரன் எழுதின ஒரு கமெண்ட். அப்படி சுரேஷ் கண்ணன் என்ன தான் எழுதினார்னு படிக்க ஆசைப்படறியா? அது இங்க...

யமுனா ராஜேந்திரன் என்றொரு ஆசாமி இருக்கிறார். பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதக் குறிகளை உரைநடையிலும் கையாள முடியும் என்று தெரிய வைத்தவர். குறைந்தது 20 பக்கங்களாவது நீளும் இவரது விமர்சனங்களை முழுவதும் படித்து முடிப்பவர்கள், மனைவியின் ஜாக்கெட்டுக்கு ஊக்கு தைக்கும் உருப்படியான வேலை கூட இல்லாத வெட்டி ஆசாமிகளாகத்தானிருக்க முடியும்.


இதற்கான லிங்க் இங்கே

அன்புடன்,
இட்லிவடை

6 Comments:

Anonymous said...

//இது சுரேஷ் கண்ணனுக்கு யமுனா ராஜேந்திரன் எழுதின ஒரு கமெண்ட்//

லின்க் ப்ளீஸ்

Boston Bala said...

---முக்கால் கிலோ காமம், முழுசா ஒரு குழந்தை-ன்னு முடிக்காம இருந்தா சரி.---

:) :))

Boston Bala said...

Jana Gana Mana sung two ways

ஹரன்பிரசன்னா said...

//மெகா சீரியல் கேள்விப்பட்டிருக்கோம். (இதால பாதிக்கப்படாத ஆண் யாரு இருக்கா?) ஆனா மெகா தொடர்? ரிப்போட்டர்ல பா.ராகவன் 200 வாரம் ஒரு தொடர் எழுதியிருக்கார். அவரா பார்த்து 'முற்றும்'னு போட்டாதான் நாம பொழைப்போம். கல்கில, "கால் கிலோ காதல், அரை கிலோ கனவு"ன்னு ஒரு தொடர் கதையை ஆரம்பிச்சிருக்காரு. தெருவில் போஸ்டர் பார்த்தேன். முக்கால் கிலோ காமம், முழுசா ஒரு குழந்தை-ன்னு முடிக்காம இருந்தா சரி.
//

:)))))

IdlyVadai said...

சாமிகளா,

உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று தெரியாமா போச்சு. (சுரேஷ்)கண்ணனுக்கும் யமுனைக்கும் உள்ள லிங்கை தந்திருக்கிறேன். கோபியர் போல் அதில் குதித்து பரவசம் ஆக வாழ்த்துகிறேன் :-)

அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

யமுனா ராஜேந்திரனுக்கும் சோபா சக்திக்கும் நடக்கும் குஸ்தியை
படிச்சதில்லையா.