பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

டி.ஆர்.பாலு - 100% guilt, 0% regret !

தனது குடும்ப நிறுவனத்துக்கு எரிவாயு வழங்குமாறு பெட்ரோலிய அமைச்சரை அணுகியதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு ஒப்புக் கொண்டார். 100% guilt, 0% regret!.

ஆனால் இதற்காக அவர் அனுப்பிய லெட்டர் எவ்வளவு தெரியுமா ? எட்டு !

November 13, 2007
November 27, 2007
December 3, 2007
December 19, 2007
January 1, 2008
January11, 2008
January 21, 2008
February 4, 2008

அகிய தேதிகளில் அனுப்பியுள்ளார்.

“I put in a word with the petroleum minister. What is wrong in it?” நேற்று பாலு பார்லிமெண்டில் சொன்ன பதில். அடேயப்பா !
""குடும்ப நிறுவனத்துக்காக தனது அதிகாரத்தை மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு துஷ்பிரயோகம் செய்ததாக,'' அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வி. மைத்ரேயன் குற்றம் சாட்டினார். புதன்கிழமை மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இப்பிரச்னை எழுப்பப்பட்டது.

""தனது மகன்கள் மற்றும் மருமகள்கள் நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு எரிவாயு வழங்க வேண்டும் என பெட்ரோலிய அமைச்சரை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டுள்ளார். இது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம்," என்று மைத்ரேயன் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர். பாலு, "ஆமாம், எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலிய அமைச்சரைக் கேட்டுக் கொண்டேன். அதில் என்ன தவறு இருக்கிறது," என்று கேட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முன்னர் இவ்விரு நிறுவனங்களிலும் தலைவர் பதவியை வகித்ததாக பாலு கூறினார்.

இவ்விரு நிறுவனங்களுக்கும் 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் எரிவாயு சப்ளை செய்வதாக இந்திய எரிவாயு ஆணையம் ("கெயில்') ஒப்புக் கொண்டது. தேசிய ஜனநாய கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக 2003-ல் விலக்கிக் கொண்டது. அப்போது மத்திய அமைச்சர் பதவியையும் டி.ஆர். பாலு ராஜிநாமா செய்தார். இதையடுத்து பாஜக அரசு எரிவாயு விநியோகத்தை ரத்து செய்தது.

""இவ்விரு நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் இத்தகைய கோரிக்கையை வைத்தேன்,'' என்று பாலு கூறினார்.

முந்தைய பாஜக அரசு என்மீது பழிவாங்கும் நோக்கில் எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்னையை மைத்ரேயன் எழுப்பியபோது அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதை எதிர்த்து திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள கிங் கெமிக்கல்ஸ் மற்றும் கிங் ஹை பவர் நிறுவனங்களுக்கு பாலு தலைவராக பொறுப்பு வகித்தார். தற்போது இவ்விரு நிறுவனங்களையும் அவரது மகன்கள் நிர்வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க வீட்டில கூட காஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டது, பெட்ரோலிய துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்யலாம் என்று இருக்கேன்

7 Comments:

Hariharan # 03985177737685368452 said...

I put in a word with the petroleum minister. What is wrong in it?”


ஐ கேட்ச் யூர் பாயிண்ட் மாவீரன் டி.ஆர்பாலு... வாட் ஈஸ் ராங்?இதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லீங்களா!

வாட் ஈஸ் ராங்ன்னு கேட்டுத் தன் சீரிய வெங்காய பகுத்தறிவுப் பாசறைப் பயிற்சியை நாடாளுமன்றத்தில் நிலைநாட்டிய குருவை மிஞ்சிய சிஷ்யன் -மாவீரன் டி ஆர் பாலுவுக்கு அடுத்த சிலை நாடாளுமன்றத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்படுகிறது!

We The People said...

//""இவ்விரு நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் இத்தகைய கோரிக்கையை வைத்தேன்,'' என்று பாலு கூறினார்.//

சபாஷ்! என்ன தைரியம்!!

Anonymous said...

"அஞ்சா நெஞ்சன்" டி.ஆர்.பாலு-வின் திராவிட வீரத்தை புரிந்து கொள்ளாமல் அவரை விமர்சிக்கும் ஆட்டை மந்தை கூட்டமே நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

வேண்டுகோள் வைக்கிறதுல என்ன தப்பு இருக்குது. இது எப்படி அதிகார துஷ்பிரயோகமாகும். அப்படீன்னா பா.ஜ.க சப்ளையப் புடிங்கினது என்னவாக்கும்?

கேஸ் சப்ளை விஷயத்தை கொஞ்சம் பாருங்க எனச் சொல்வதோ அதை விரைவில் செய்ய வேண்டி கடிதம் அனுப்புவதோ ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட செயலா? ஹ்ம்ம்ம்..

கொஞ்சம் பாத்து செய்யுங்க :)

Anonymous said...

ஆனாலும், டி. ஆர். பாலுக்கு திமிர் மிகவும் அதிகம். இப்போது இந்தக்கேள்வி: கொஞ்ச நாட்கள் முன்பு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பையே "இதற்கென்ன அவசரம்" என்று குமுறிய களவாணிப்பயல் தானே அவன்.

Hariharan # 03985177737685368452 said...

//வேண்டுகோள் வைக்கிறதுல என்ன தப்பு இருக்குது. இது எப்படி அதிகார துஷ்பிரயோகமாகும்.//

சிறில்,

டி.ஆர்.பா(ஆ)லுவின் கிங் கெமிக்கல்ஸுக்கு தமிழகத்தில் கொங்கு மாவட்டத்தில் சில கரும்பு ஆலைகளில் இருந்து ஸ்பிரிட் வெளிமார்க்கெட் விலையை விட 50% குறைவாக சப்ளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டவாறே இருக்கின்றார்கள்.

ஸ்பிரிட்டுக்கு இதர கம்பெனிகளையும் அழைத்து பொதுவில் டெண்டர் விட்டால் சர்க்கரை ஆலை மேனேஜர் பரலோகத்துக்கு பதவி உயர்வு தருவதாக வாய்மொழியாக வாக்குறுதி தந்திருப்பதை நான் அறிந்த ஆடிட்டர் சொல்லி அறிந்திருக்கிறேன்.

சயிண்டிபிக் ஊழல் இது! வெகுவாக மார்க்கெட் இருக்கும் ஸ்பிரிட்டைPreferential Bidder எனும் வகையில் மிரட்டித் தன் கிங் கெமிக்கல்ஸுக்குப் பெற்றுவருபவர் டி.ஆர்.பாலு! வேண்டுகோள் அல்ல வழிப்பறியில் கில்லாடி பாலு! Sorry T.R. Baalu! (பகுத்தறிந்து அவர் நம்பும் நம்பர் ராசியை நான் கெடுப்பானேன்!)

Anonymous said...

Enna vadyara Enga thalivaru request mattum than vacharu adukku poi nee kachu moochu nu kathikinukeera, Nanga india cement 3 kappala vangum podu kooda yarayum meraratave ellai request than vachom(They bought the ICL Shiping compnay in very low price with high political pressure). Unukku theriyuma adu. Ennum emma visiyam keethu theriyuma, sappa mettara ellam persu pannatha. We are very professional hi.....hi.....hi...