பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 30, 2008

பரமசிவன் கழுத்துப் பாம்பாக பாலு!

பரமசிவன் கழுத்துப் பாம்பாக பாலு! என்ற தலைப்பில் பாலு விவகாரம் குறித்து கல்கி தலையங்கம்.


விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது என்கிறார் டி.ஆர்.பாலு! தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமது மனைவி - மகன்களின் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் எாிவாயு பெற்றுத் தரவில்லை என்று மறுக்கிறார். தாம் அமைச்சராக இல்லாத காலகட்டத்தில், 1999லேயே போடப்பட்டு, 2004ல் அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கே அந்நிறுவனங்கள் போராடி வருவதாகக் கூறுகிறார்!

அப்படியெனில், மார்ச் 2007ல் பாலு எதற்காக கெயில் உயர் அதிகாாியிடம் இந்த நிறுவனங்களுக்கான எாிவாயு சப்ளை குறித்துப் பேச வேண்டும்? அதுவும் பெட்ரோலியத் துறை அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேச வேண்டும்?

சுப்பிரமணியம் சுவாமியின் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுப்படி, பாலு தமது குடும்ப நிறுவனங்களுக்கு எாிவாயு சப்ளை செய்ய அவ்வதிகாாிகளை வற்புறுத்தியுள்ளார். அதற்கான ஒப்பந்தம்போட ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அத்துமீறிய ஆணையை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம், பெட்ரோலியத் துறை அமைச்சாிடம் முறையிட்டது; நீதிமன்றத்திலும் முறையிட்டு தடையுத்தரவு பெற்றது.

நீதிமன்றத் தடையானது, ஊழல் நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருந்தாலன்றி வழங்கப்பட்டிருக்காது. ஆனால், தமது குடும்பத்துக்குத்தான் ஏதோ பாிெய அநீதி நிகழ்ந்துவிட்டதுபோல பாலு ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

நல் மரபுகளில் நம்பிக்கைகொண்ட அமைச்சராயிருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும். எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் எனில், அதனை நிரூபித்துவிட்டு மீண்டும் பதவியில் அமரலாம்.

ஆனால், பாலுவோ தமது பாிேலான புகார்கள் பிரதமாிடம் தரப்பட்டிருப்பதால் பிரதமர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரமசிவன் கழுத்துப் பாம்பாகப் பேசுகிறார்! மன்மோகன் சிங் இது குறித்து வாயே திறக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.வோ மூச்சுக்கூட விடவில்லை!

முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டதாக நிரூபணமானால்தான் குற்றமேயொழிய, ஆட்சியிலும் பதவியிலும் உள்ளோர் தங்கள் குடும்ப நலனுக்கும் கட்சி நலனுக்குமான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள தங்களது பதவி - செல்வாக்கைப் பயன்படுத்துவது தப்பேயில்லையாக்கும் என்ற போலித்தனமான வாதத்தைத்தான் இச்சம்பவம் வலியுறுத்து கிறது!

சொந்த விருப்பு - வெறுப்புகளின் சந்தையாகிப் போன அரசியல் பொதுவாழ்வில், ஒரு தயாநிதி மாறன் ‘கட்சி விரோத’ப் பணிக்காக உடனே வெளியே அனுப்பப்படுகிறார். ஆனால், ஒரு டி.ஆர்.பாலு, ஊழலுக்கான ஆவண சாட்சியங்கள் இருந்தும் பதவியில் தொடர அனுமதிக்கப்படுகிறார்.

இந்தப் போக்கு தொடர்ந்தால், தேசத்தின் உயிரும் ஆன்மாவுமான அதன் நேர்மைப் பண்பு வற்றிச் சுருங்கிவிடும். பொருளாதார முன்னேற்றமும் தொழில்நுட்பச் சாதனையும், உண்மை உறங்குகிற சவப்பெட்டிக்குப் போர்த்தப்பட்ட பகட்டலங்காரமாக மட்டுமே திகழும்!

Read More...

ஜாக்கி சான் எந்த தண்ணீர் குடித்தார் ?

தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். - செய்தி

மருத்துவர் ராமதாஸும், கம்யூனிஸ்டுகளும் Aquafina குடிக்கும் போது, ஜாக்கி சான் எப்படி இந்திய தண்ணீர் குடிப்பார் ?

Read More...

Tuesday, April 29, 2008

மன்மோகன் சிங் இது நியாயமா ?

டி.ஆர். பாலு நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்கக் கோரும் கடிதம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தி உள்ளது. இதைவிட கேவலமாக பிரதமர் அலுவலகம் செயல் பட முடியாது. இருக்கும் நல்ல கொஞ்சம் நல்ல பெயரை முழுவதும் கெடுத்துக்கொண்டு தான் போவேன் என்று சபதம் போட்டிருக்கும் பிரதமரை நாம் என்ன செய்ய முடியும் ? ..

ஒரு கடிதம் நமக்கு வருகிறது என்றால் உடனே அதை படித்துக்கூட பார்க்காமல் "பார்வர்டு" செய்வோமா ? முட்டாள்கள் தான் இந்த மாதிரி செய்வார்கள். பிரதமர் அலுவலகம் "பார்வர்டு" செய்தால் அது சிபாரிசு என்று தானே அர்த்தம். சம்பந்தபட்ட துறைக்கு கடிதத்தை அனுப்பியதாலேயே கடிதத்தில் பாலு எழுதியவற்றுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது என்றார் சிங்கவி. நல்ல ஜல்லி.

உதாரணத்துக்கு எனக்கு ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினால் உடனே அதை சம்பந்தபட்ட துறைக்கு "பார்வர்டு" செய்வார்களா ?

எரிவாயு ஒதுக்கீடு செய்வதில் பிரதமர் அலுவலகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொதுவாழ்க்கையில் நேர்மை என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்று சிங்வி கூறினார். என்ன காமெடி பார்த்தீர்களா ?

தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே இது குறித்து பிரதமர் விளக்கம் அளிப்பது மன்மோகன் சிங் கடமையாகும். பார்க்கலாம்.

நேற்று ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது 'இஸ்ரோ'. அடுத்த முறை இது போன்று எல்லா எம்.பிக்களையும் ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தினால் அது இந்தியாவிற்கு நல்லது.

Read More...

Monday, April 28, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-04-08

பாடி காட் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்....

சிரஞ்சீவி இட்லிவடைக்கு,

நலமா ? நீ ஸ்ரீராமருக்கு எழுதிய கடிதத்தை அவரிடம் நேரில் கொடுத்தேன். முழுவதையும் படித்துவிட்டு,

"ஏன் இந்த மாதிரி நேரத்தை இட்லிவடை வீண் செய்கிறார். இந்தியாவில் நிறைய பேர் இந்த மாதிரி வெட்டியா இருக்கிறார்களே. நான் என்ன செய்வேன்!" என்று ரொம்ப வருத்தப்பட்டார்.

நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்.

இந்த வார ராமர் செய்தி :-)
ராமர் பாலம் பாதுகாக்க வேண்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில், ஏராளமான பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். ஆண்கள் பேசிக்கொண்டும், பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் செயலில் ஈடுபடுகிறார்கள். பெண்களுக்கு இருக்கும் தைரியம் பல ஆண்களுக்கு இருப்பதில்லை என்பது தான் உண்மை.

சில வாரங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சோனியா சொன்னது
"ராகுல் காந்தியை அமைச்சராக்க தீர்மானித்தேன். அவரிடமும் கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்." என்ன ஒரு பெருந்தன்மை, தியாகம் என்று முதலில் தோன்றும். ஆனால் பகுத்தறிவு இருந்தால் அமைச்சரவை விரிவாக்கம் பிரதமர் முடிவு செய்ய வேண்டியது சோனியா இல்லை என்று தெரியும்.

பிரதமர் இப்படி சொல்லுகிறார் "ராகுல் காந்தி கட்சியில் முக்கியத் தலைவர். எனவே அவருடன் முக்கிய விஷயங்களில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திலும் அவரது ஆலோசனை கேட்கப்பட்டது" இந்தியா விளங்குமா ?

"ஸ்டீல் விலை உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது" இது பிரதமரின் அடுத்த கவலை. . "100% steel 0% gas" என்ற நியூ இந்தியன் எஸ்பிரஸ் விளம்பரத்தை பார்த்திருந்தால் அவர் கவலை பட்டிருக்க மாட்டார். பிரதமர் செய்ய வேண்டியது இது தான், எல்லா நியூ இந்தியன் எஸ்பிரஸ் பேப்பரையும் எடுத்துக்கொண்டு பழைய பேப்பர் கடையில் எடைக்கு எடை போட்டிருந்தா 100% ஸ்டீல் கிடைத்திருக்கும். கூடவே பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதங்களையும் பழைய பேப்பர் கடையில் போட்டால் நிறைய பணம் வரும்.

அந்த விளம்பரம் பார்க்க தவறியவர்களுக்காக:


ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஐபிஎல் போட்டிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் சந்தோஷம், ஹர்பஜன் சிங் வருத்த பட வேண்டாம், அவருக்கு இருக்கவே இருக்கு WWF. அதில் அவருக்கு நல்ல எதிர் காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

காலையில் வாக்கிங் சென்றால் உடம்புக்கு நல்லது. வாக்கிங் போக முடியாதவர்கள் ? சென்னை மின்சார ரெயிலில் போகவேண்டியது தான். நான் சொல்லுவது புரியலையா ?

சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் எந்தவித காரணமின்றி 20 நிமிடம் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் வரை பயணிகள் நடந்து செல்லும் நிலை தினமும் ஏற்படுகிறது. கூடிய சீக்கிரம் இந்த ஸ்டேஷனுக்கு 'பிரச்சனை பிரிட்ஜ்' என்று பெயர் மாற்றம் நடக்க போகுதாம்.

கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பி பாடிய "மண்ணில் இந்த..." மூச்சு விடாத பாடல் பிரசித்தம். அதே போல சிவமயம் என்ற படத்தில் "ஷேத்ரம்.." என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியுள்ளாராம். பக்தி சீசன் காலை தூக்கத்தை கெடுக்க இன்னொரு பாடல் ரெடி.

தசாவதாரம் சிடி ரிலீஸ் விழாவை கலைஞர் டிவியில்(ஆர்காடு வீராஸ்வாமி தயவில்) நேற்று பாக்க முடிந்தது. நடுநடுவே நீண்ட விளம்பர இடைவேளையின் போது சன் டிவி தயவில் 'தமிரு' படம் வேற. சண்டேனா இரண்டு!

விழாவிற்கு ஏன் ரஜினி வரலை என்பது தான் புரியாத புதிர். ரஜினி குடும்ப மக்கள் கூட யாரும் வரலை. என்ன காரணம் ? பல காரணங்கள் சொல்லப்படுகிறது ஆனால் எனக்கு தெரிந்த காரணம் கமல் ஹீரோவாக நடிக்கிற படம் இது. இதில் ரஜினி கலந்து கொண்டால் மொத்த அட்ராக்ஷனும் அவர்மேல்தான் இருக்கும். அவர் லேசாக தலையை திருப்பினாலோ, அல்லது தலையை கோதினாலோ, அதையே பெரிதாக விசிலடித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். மேடையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு இவர்கள் ஏன் இந்த வயசான மனிதரை பார்த்து கொண்டாடுகிறார்கள்? என்றெல்லாம் விளக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தர்ம சங்கடங்களை தவிர்க்கலாமே என்பதால்தான் ரஜினி இந்த விழாவை புறக்கணித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

மதுரை ரஜினி ரசிகர்கள் நேற்று என்ன செய்தாகள் தெரியுமா ? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆண்களும், ஐம்பது பெண்களும், 11 ஆடுகளும் எல்லா தெருக்களிலும் ஊர்வலமாக சென்று, கடைசியில் ஆடுகளை பலி கொடுத்திருக்கிறார்கள். எல்லோர் கைகளிலும் "தமிழ் நாட்டின் இருளை அகற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்" என்று கையில் தட்டி வேற.

பதினொரு ஆடுகளும் இறப்பதுக்கு முன் என்ன நினைத்திருக்கும் ? "ரஜினி ரசிகர்கள் சரியான ஆட்டு மந்தை" என்று நினைத்திருக்கும்.

பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பிரியாணியாகியது. தமிழ்நாட்டு மக்களுக்கு இருள் நீங்குமா என்று தெரியலை ஆனால் பிரியாணி கிடைப்பது நிச்சயம்.

நேற்று நடத்துவதாக இருந்த தனது நெருப்பு சாகச மேஜிக் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் ரத்து செய்து விட்டார். தனது தாயார், ரசிகர்கள், மலையாள நடிகர் சங்கம் ஆகியோர் இந்த மேஜிக் நிகழ்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவித்ததாலும், விபரீதம் வேண்டாம் என கேட்டுக் கொண்டதாலும் இந்த நிகழ்ச்சியை தான் செய்யப் போவதில்லை என்று மோகன்லால் தெரிவித்தார். நீதி: செய்தாலும் விளம்பரம், செய்யாவிட்டாலும் விளம்பரம் சினிமா நடிகர்களுக்கு

இன்று வந்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் சென்னையில் தான் அதிக முதியோர் இல்லங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

"உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.'' இது ஜாக்கிசான் சொன்னது ( நன்றி கலைஞர் பேச்சு )

சன் டிவியில் திருவிளையாடல் மெகா சீரியல் வருவது தெரிந்திருக்கும். முதல் 15 எடிசோடுக்கு செலவு 1 கோடி ரூபாயாம். சினிமாவில் பார்த்தது சிவனில் சில லீலைகள் தான், ஆனால் சீரியலில் 64 லீலைகள் இருக்காம். ஆக இது மெகா சீரியல் இல்லை மாகா மெகா சீரியல்.

"இன்னும் சன் டிவி அண்ணா அறிவாலயத்தில் தான் இருக்கிறதா? என்று மெயில் அனுப்பி கேட்ட நண்பருக்கு பதில் - ஆமாம். இதில் என்ன சந்தேகம் ? சன் டிவி ஆபீஸ் ஆழ்வார் பேட்டைக்கு மாறி இரண்டு மாதம் ஆகிறது.

Read More...

Sunday, April 27, 2008

பாம்பை பார்த்து எனக்கு பயம் கிடையாது - நமிதா

சேலை கட்டுவது எனக்கு அசவுகரியாமா இருக்கு, பம்பை கண்டால் பயம் கிடையாது போன்ற முக்கியமான விஷயங்களை சொல்லுகிறார் நமிதா

வெளி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஏன் கவர்ச்சியாக உடை அணிந்து வருகிறீர்கள்?'' என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். கவர்ச்சி உடைகள் அணிந்துகொள்வது, எனக்கு சவுகரியமாக இருக்கிறது. சேலை கட்டிக்கொள்வது, அசவுகரியமாக இருக்கிறது. ஏதாவது பண்டிகை மற்றும் விசேஷ காலத்தில் மட்டுமே சேலை கட்டுகிறேன்.

ரசிகர்களுக்கு நீங்க சேலை கட்டாத நாள் தன் பண்டிகை

ஆண்கள் சவுகரியமாக லுங்கி கட்டிக்கொண்டு வெளியே வருவது போல் பெண்களால் வர முடியாது. ஆண்களுக்கு லுங்கி மாதிரி, எனக்கு பிடித்த உடை, ஜீன்ஸ்.''

ஆண்களுக்கு பிடித்த உடை நீங்க உடுத்தும் உடை தான்.


கேள்வி:- ஒரு படத்துக்காக, மலை பாம்பை தோளில் போட்டுக்கொண்டு ஆடியிருக்கிறீர்களே...உங்களுக்கு பயமாக இல்லையா?

பதில்:- நான் பாம்பை பார்த்து பயப்பட மாட்டேன். இருட்டைப் பார்த்தால்தான் பயமாக இருக்கும். பெரிய சுறா மீன்களுக்கும் பயப்படுவேன். வேறு எதற்கும் பயப்பட மாட்டேன். இயல்பாகவே நான் துணிச்சல் மிகுந்த பெண். வேகமாக `பைக்' ஓட்டுவது போன்ற சாகச காட்சிகளில், `டூப்' இல்லாமல் நானே நடித்து இருக்கிறேன்.

பாம்பிற்கு உங்களை கண்டால் பயம் என்று கேள்விப்பட்டேன், உண்மையா ?

கேள்வி:- நீங்கள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கிறதே...?

பதில்:- நமீதா போகிற நிகழ்ச்சிகளில் அது கூட இல்லை என்றால் எப்படி? என் மீது ஆர்வம் காட்டும் ரசிகர்கள் மீது நான் கோபப்படுவதே இல்லை. மாறாக, அவர்கள் மீது எனக்கு அன்பு அதிகம்.
முள்ளை முள்ளால் தான் எடுக்கணும், அதை தான் போலீஸ் செய்கிறார்கள்

கேள்வி:- உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

பதில்:- பேட்மிண்டன், நீச்சல், ஸ்னோ பவுலிங்.
எங்களுக்கு எல்லாம் பிடிக்கும், ஆனா அதில நீங்க விளையாடணும் :-)

Read More...

Saturday, April 26, 2008

ஹர்பஜன் சிங் Vs ஸ்ரீசாந்த்

மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ஹர்பஜன் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஸ்ரீசாந்தை நேற்ற நடந்த ஐ.பி.எல் போட்டியின்போது அறைந்தார். இந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பி.சி.சி.ஐ விதிமுறைகளை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பி.சி.சி.ஐ ஹர்பஜனின் செயலை வன்மையாக கண்டித்துள்ளது. ஹர்பஜனுக்கு ‌எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்றும் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் மைதானத்தில் ஈடுபட்டுவிட்டு பின்பு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்ணையை நாங்களே சரி செய்து விட்டோம் என்று கூறுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று தேம்பி, ‌தேம்பி அழுத ஸ்ரீசாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திடீரென பல்டி அடித்து ஹர்பஜன் என் மூத்த சகோதரர் மாதிரி என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி ஹர்பஜன் மீது புகார் ஏதும் செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் செய்தது தவறாக இருந்தால் கூட, ஸ்ரீசாந்த் இந்த அடியை வாங்கியதில் எனக்கு சந்தோஷம் தான். அவர் நடத்தைக்கு கிடைக்க வேண்டிய பரிசு, என்ன கொஞ்சம் லேட்டாக கிடைத்துவிட்டது.

சிம்பு, சிம்ரன் மாதிரி இது கூட நாடகமாக கூட இருக்கலாம். ரூமில் அடிவாங்கியவர் ஏன் மைதானத்தில் வந்து கண்ணீர் விட வேண்டும் ?

Read More...

`தசாவதாரம்' விழா பேச்சுக்கள்

ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம் போல தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

`கலைஞரின் பாராட்டு, என் அசதிகளை எல்லாம் ஆனந்தமாக மாற்றி விட்டது'' என்று கமலஹாசன் கூறினார்.

அமிதாப்பச்சன், கமலஹாசன் ஆகியோருடன் நான் இணைந்து நடிக்க விரும்புகிறேன்'' என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கூறினார்.


விவரம் கீழே...

( ஜாக்கிசான் போல் தமிழ்நாட்டில் எல்லோரும் இருந்திருந்தால், தமிழ்நாடு என்றோ சுத்தமாக இருந்திருக்கும் - செய்தி விளக்கம் கடைசியில் )
கருணாநிதி பேச்சு

தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும் போது கூறியதாவது:-

ஒரு நாள் என் இல்லத்திற்கு காலை நேரத்தில் கமல் வந்தார். தசாவதாரம் படத்தைப்பற்றி பேசும்போது இதுவரையில் எடுத்திருக்கின்ற புகைப்பட ஸ்டில்களை என்னிடத்திலே காட்டினார். நான் பார்த்தது படமல்ல, புகைப்படங்கள்தான். ஸ்டில்கள்தான். அந்த ஸ்டில்களில் கமல் மாத்திரமல்ல, ஒரு வேதியர், ஒரு அமெரிக்க நாட்டு அதிபர், தமிழகத்தின் தலைவர் என்று இப்படி கமல் 10 உருவங்கள் கமல் ஒப்பனையால் அந்த படங்களில் விளங்கிய காட்சிகளை கண்டேன்.

கமலுக்கு முத்தம் கொடுத்தேன்

உள்ளபடியே நான் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது, இதுயார், யாரைப்போல என்று கமலைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அவ்வளவு இயற்கையாக, அற்புதமாக அப்படியே அச்சாக ஒப்பனை செய்யப்பட்டிருந்த அந்த காட்சியை கண்டு நீங்கள் பெருமையாகக் கருதினாலும் சரி அல்லது கேலியாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது பாசத்தின் உச்ச கட்டமாக கருதிக் கொண்டாலும் சரி அல்லது கலைத் திறனை இந்த கருணாநிதி எப்படியெல்லாம் ரசிக்கிறான் என்று தெரிந்து கொண்டாலும் சரி கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.

நான் முத்தம் கொடுத்தது எனக்கே தெரியாது. அவ்வளவு மெய் மறந்து போனேன். அந்தப் படங்களை பார்த்து, அப்போதே சொன்னேன். ஸ்டில்களே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன் கமல் என்று நான் என்னுடைய உணர்வுகளை அன்றைக்கு வெளிப்படுத்தினேன்.வைராக்கியத்தை புலப்படுத்தும் வகையில்

தசாவதாரத்தில் முதல் காட்சியாக ராமானுஜரை, நீ இனிமேல் நாராயணா என்று சொல்லக்கூடாது, பரமசிவத்தின் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்று மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு இணங்க மறுத்த ராமானுஜர், தன்னுடைய மனைவி, மக்கள், குடும்பம், உற்றார், உறவு என்ற அத்தனை பேருடைய கெஞ்சுதலுக்கும் இணங்காமல் தியாகத்திற்கு தயாராகிறார். நான் தியாகம் செய்தாலும் செய்வேன். என்னுடைய உயிருக்குயிராக எந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றேனோ, அந்த பெயரை நான் மறக்க மாட்டேன், அதை மாற்றிச் சொல்ல மாட்டேன் என்று அதே பெயரைத்தான் அவருடைய கொள்கை வெறியை, அவருடைய வைராக்கியத்தை புலப்படுத்துகிற வகையில் அந்த காட்சி அமைந்திருக்கிறது. அப்போது என்னிடத்தில் கமல் சொன்னார். கொள்கை மாறக்கூடாது, ஒருவர் ஒரே நிலையில் இருக்க வேண்டும். மனதிலே சஞ்சலம் ஏற்படக்கூடாது என்ற உறுதிக்கு நீங்கள் கொண்டிருக்கின்ற கொள்கை உரத்திற்கு இது பக்தி கலந்த காட்சியாக இருந்தாலுங் கூட, இந்த காட்சியின் மையம் அத்தகையப் பொருளைத் தருகிறதா அல்லவா என்று கேட்டார்.

ஆதங்கத்தோடு..

நான் எண்ணிக்கொண்டேன். ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால், இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்ற ஆதங்கத்தோடு தான் இந்த படத்தை நான் புகழ்ந்து கொண்டே வெளிவந்தேன்.

கமலஹாசனுக்கும், ஜாக்கிசானுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கமலஹாசன் பிறந்த ஆண்டும் 1954. ஜாக்கிசான் பிறந்த ஆண்டும் 1954. கமலஹாசன் பிறந்தது 7.11.1954. ஜாக்கிசான் பிறந்தது 7.4.1954. ஆக இருவரும் பிறந்தது 7-ம் தேதிதான். கமலைவிட ஜாக்கிசான் சரியாக 7 மாதங்கள் தான் மூத்தவர். கமல் தனது 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் முதன் முதலாக நடித்தார். ஜாக்கிசான் அவருடைய 8-வது வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாங்க் டின் பார்'' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.

ஜாக்கிசான் நடித்த புகழ் பெற்ற படங்கள் ஆர்மர் ஆப் காட், "போலீஸ் ஸ்டோரி'', ரஷ் அவர் போன்றவை. ஜாக்கிசான் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கமல் இதுவரையில் 240 படங்களில் நடித்திருக்கிறார்.உயிரோடு இருக்கும் போதே வணங்குங்கள்

ஜாக்கிசான் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதாக அவரைப்பற்றிய புத்தகத்திலே நான் படித்து பார்த்தேன். "உங்களுடைய பெற்றோரை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே வணங்கி விடுங்கள். இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்கு சென்று வணங்குவதை விட இது சிறந்தது.''

இன்னொன்று, உலகமே ஜாக்கிசானை சூப்பர் ஹீரோ என்று அழைத்தாலும் கூட, அவர் தன்னுடைய ஹீரோ யார் என்று சொல்லிக் கொண்டாரென்றால் "காவல் துறையைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக தீயணைப்பு படை வீரர்களையும் தான் நான் நிஜ ஹீரோக்கள் என்பேன். உயிருக்கு உலை வைக்கும் வேலையில் இருந்து கொண்டு இவர்கள் ஆற்றும் சமுதாய பணி பாராட்டுக்குரியது'' என்று சொன்னவர் ஜாக்கிசான்.

"களத்தில் குதிப்போம்-வெற்றியை குவிப்போம்'' இதுவே ஜாக்கிசானின் தாரக மந்திரமாக போற்றப்படுகிறது.

ஜாக்கிசானின் பிறப்பு

அவருடைய சண்டைக்குழுவில் புதிதாகச் சேருபவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் எடுபிடி வேலைகள் தான் தரப்படுமாம். அவர் சொல்கிறார். "எனது குழுவினரை என் குழந்தைகள் போல் காப்பேன். (இப்போதுள்ள ஸ்டண்ட் நடிகர்களுக்கு தரவேண்டிய பாடம் இது) அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் தான் பொறுப்பு. உண்மையான அக்கறை செலுத்துவதால் நான் என்ன சொன்னாலும் அதை என் ஆட்கள் செய்கிறார்கள். கட்டிடத்திலிருந்து குதித்து கீழே காரில் கண்ணாடியில் தலைக்குப்புற விழ வேண்டுமானாலும் தயங்காமல் மறு நொடியே செய்வார்கள். ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியாத எவ்வித சண்டைக் காட்சிகளையும் அவர்களை விட்டு நான் செய்யச் சொல்வதில்லை'' என்று ஜாக்கிசான் கூறியிருக்கிறார்.

இவருடைய பிறப்பு, வளர்ப்பு இரண்டுமே அதிசயமானது, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, படித்தறிந்து தெரிந்து கொள்ளவேண்டியது.

சார்லஸ்-லீலீசான் தம்பதியருக்கு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்னும் இடத்தில் பிறந்தவர் ஜாக்கிசான். ஜாக்கிசானின் தந்தையிடம் பிரசவ சிகிச்சையின் செலவான 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலையில் அந்தக் குடும்பம் தடுமாறியது. அவருடைய பெற்றோர்களுக்கு அவர் பிறந்த போது பிரசவ செலவிற்காக மருத்துவர்களுக்கு 500 ஹாங்காங் டாலர்களை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, என்ன செய்வதென்று தடுமாறியபோது, அப்போது மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர், ஜாக்கிசானின் தந்தையிடம் "எத்தனையோ பேருக்கு பிரசவம் பார்க்கும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. மருத்துவ செலவுத் தொகையை நானே கட்டிவிடுகிறேன். மேலும் 1500 டாலர் தருகிறேன். உங்கள் மகனை தத்து கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டார்.

நன்மைகளில் ஒன்று ஜாக்கிசான்

ஜாக்கிசானின் தந்தை இரண்டொரு நாளில் பதில் கூறுவதாகச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால் உறவினர்கள் எல்லாம் கண்டித்தனர். நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தனர். அதனைக் கொண்டு மருத்துவ மனையிலே பணத்தைக் கொடுத்து விட்டு குழந்தையுடன் வீடு திரும்பினார். இது நடக்காமல் போயிருக்குமேயானால் இன்றைக்கு நாம் ஜாக்கிசானை காண முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே உலகத்தில் அதிசயங்கள், ஆச்சரிய நிகழ்வுகள், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவதால் உலகுக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகளில் இதுவும் ஒன்று. அப்படி கிடைத்த நன்மைகளிலே ஒன்றுதான் நம்முடைய நண்பர் ஜாக்கிசான் ஆவார்.

கிரீடத்தில் ஒரு முத்து

நம்முடைய கலைஞானி கமலஹாசனுடைய புகழ் கிரீடத்தில் இன்னும் ஒரு முத்து பதிக்கப்பட்டது போன்ற விழா, இந்த விழா என்று கூறி, கமலை வாழ்த்தி, இந்த படம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, வாரக்கணக்கில் அல்ல, மாதக்கணக்கிலே, வருடக்கணக்கிலே தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியத் திருநாட்டிலும், வெளியிலே உள்ள பகுதிகளிலும் இந்த படம் வெற்றிபெற்று நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை உங்களுடைய வாழ்த்துகளோடு இணைந்து கமலுக்கு வழங்கி விடைபெறுகிறேன்.
கமலஹாசன் பேச்சு

``பழகிய சில நிமிடங்களிலேயே ஜாக்கிசான் என் நண்பர் என்று சொல்லும் தைரியத்தை அவர் எனக்கு கொடுத்து விட்டார். ஒரே பிரசவத்தில் பத்து பிள்ளைகள் பெற்ற பிள்ளையை பார்த்து குதூகலிக்கிற தாயை போன்றவர், முதல்-அமைச்சர் கலைஞர். அவருடைய பாராட்டுகள், எனக்கு பல்சுவை விருந்து போல் இருந்தது. கே.எஸ்.ரவிகுமாரை சிகரத்தில் தூக்கிவைக்கும் படமாக `தசாவதாரம்' இருக்கும்.

இந்த படத்தை பற்றிய செய்திகளை இரண்டு வருட காலமாக இருட்டடிப்பு செய்தோம். இனி, அவைகள் ஒவ்வொன்றாக வெளிவரும். படத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் குறையக்கூடாது என்பதற்காகத்தான், செய்திகளை பதுக்கி வைத்தோம்.ஆனந்தமாக மாறியது

`தசாவதாரம்' படத்தின் சில காட்சிகளை கலைஞர் பார்த்துவிட்டு பாராட்டினார். நான் இந்த படத்துக்காக உழைத்த உழைப்பில் ஏற்பட்ட அசதிகளை எல்லாம் அவருடைய பாராட்டு ஆனந்தமாக மாற்றிவிட்டது.

நாம் இனிமேல் கைகோர்த்தபடி நடக்கலாம் என்று கூறியதன் மூலம் ஜாக்கிசானின் நல்ல உள்ளம் புரிந்தது. அவருடைய எளிமை என்னை கவர்ந்தது. அவருடைய மனிதநேயம் என்னை கவர்ந்தது. இன்று முதல் எங்கள் நட்பு தொடரும்.''

விஜய் பேச்சு

``ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி மூன்று பேரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. இது, ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.

நான், ஜாக்கிசானின் மிகப்பெரிய ரசிகர். அவருடைய படங்களை பலமுறை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். அவருடைய சண்டை காட்சிகளை பார்த்து கைதட்டியதில், என் கைகள் எல்லாம் சிவந்து போய் இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய வெறித்தனமான ரசிகன், நான்.

ஸ்டைல்


அமிதாப்பச்சனின் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்திய சினிமாவில் அவருக்கு மாற்றாக யாரும் இல்லை. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அவர்தான். யதார்த்தமான நடிப்புக்கு, மம்முட்டி. அவரிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களில், நானும் ஒருவன்.

கமலஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்களை பார்த்து, ஒரு உண்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். சில போலீஸ் அதிகாரிகளே இதை என்னிடம் கூறியிருக்கிறார்கள். 25 வருடங்களுக்கு முன் அவர் நடித்த `அபூர்வ சகோதரர்கள்' படத்தை பார்த்த பிரமிப்பு எனக்கு இன்னும் நீங்கவில்லை. அந்த குள்ளமான கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார்? என்ற ரகசியம் இதுவரை தெரியவில்லை.

ராம நாராயணன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் பேசும்போது, ``கலையுலகின் மூத்த மகன் சிவாஜி 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். அவருடைய கலைவாரிசு கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார். இன்னும் 10 வருடங்கள் கழித்து 100 வேடங்களில் நடித்து, அவருடைய சாதனையை அவரே முறியடிப்பார்'' என்றார்.

ஹேமாமாலினி

நடிகை ஹேமாமாலினி பேசும்போது, ``10 வேடங்களில் ஒரு நடிகர் நடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. கமலஹாசன் மிக திறமையான நடிகர். இந்த படம் அவருக்கு ஒரு `லேன்ட் மார்க்' ஆக இருக்கும்'' என்றார்.

நடிகை ஜெயப்பிரதா பேசும்போது, ``தசாவதாரம் படத்தில் நானும் நடித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் 40 வருடங்கள் கழித்து கூட என் நினைவில் நிற்கும் படமாக தசாவதாரம் இருக்கும்'' என்றார்.

நடிகை மல்லிகா ஷெராவத், ``வணக்கம் சென்னை...இவ்வளவு பெரிய மேதைகள் கலந்துகொண்ட மேடையில் நானும் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.

அசின்

நடிகை அசின் பேசும்போது, ``தசாவதாரம் ரொம்ப விசேஷமான படம். இந்த மாதிரி ஒரு படத்தில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் ரொம்ப வித்தியாசமானது மட்டுமல்ல. விறுவிறுப்பாகவும் இருக்கும்'' என்றார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து, தெலுங்கு சினிமா பாடல் ஆசிரியர் வென்னிலகன்டி, இந்தி பாடல் ஆசிரியர்கள் புவனசந்திரா, அமீர் ஆகியோருக்கு கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வரவேற்று பேசினார். விழா நிகழ்ச்சிகளை நடிகை ஷோபனா தொகுத்து வழங்கினார்.ஜாக்கிசான் பேச்சு
``இந்த விழாவில் நான் கலந்துகொள்வதற்கு, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை எனக்கு 25 வருடங்களாக தெரியும். அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார்.

நான் நடித்த பல படங்களை அவர் இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து என் படங்களை அவர் இந்தியாவில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் நான் அடிக்கடி சென்னை வர முடியும். மீண்டும் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.

சேவை-நன்மை

முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். சினிமாவுக்கு அவர் நிறைய சேவை செய்து இருக்கிறார். பல நன்மைகளை செய்து இருக்கிறார்.

அமிதாப்பச்சனை, எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர், சூப்பர்ஸ்டாருக்கு சூப்பர்ஸ்டார். `தசாவதாரம்' பட காட்சிகளை பத்து நிமிடங்கள் பார்த்தேன். வாவ்...வாவ்...வாவ்...அமிதாப்பச்சன், கமலஹாசன் ஆகியோருடன் நான் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன். நானும் ஒரு நடிகர்தான். எனக்கும் நடிக்க தெரியும். பாட தெரியும். சண்டை போட தெரியும். `டைம்' இருந்தால், கூப்பிடுங்கள். நாம் சேர்ந்து படம் பண்ணலாம். நடிக்க வேண்டிய காட்சிகளில், நீங்கள் இருவரும் நடியுங்கள். காதல் காட்சிகளை மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள். நான் நடிக்கிறேன்.''

அமிதாப்பச்சன்

``எனக்கு முதல் விருது சென்னையில்தான் கிடைத்தது. `சவுத் ஹிந்துஸ்தானி' என்ற படத்துக்காக, கலைஞர் கருணாநிதி கையினால் அந்த விருதை பெற்றேன். அதனால் எனக்கு சென்னையை மிகவும் பிடிக்கும்.

நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், கமலஹாசனை சந்திப்பேன். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றரை படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதில், ஒரு படம் திரைக்கு வந்தது. இன்னொரு அரை படம் வெளிவரவில்லை.

கமலஹாசன், திறமையான நடிகர் மட்டுமல்ல. தனித்துவமானவர். `தசாவதாரம்' படத்தில் அவர் நடித்த காட்சிகளைப் பார்த்து, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொறாமையாக இருந்தது. எங்களால் செய்ய முடியாததை, கமலஹாசன் செய்து கொண்டிருக்கிறார்.''

மம்முட்டி

``இந்த விழாவுக்கு நான் வந்ததே, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்களை எல்லாம் பார்க்கத்தான். உங்களை (ரசிகர்களை) மாதிரிதான் நானும் பார்க்க ஆசைப்பட்டேன். என்னை இங்கே உட்கார வைத்துவிட்டார்கள். கமலஹாசனுக்கு, நான் பழைய ரசிகர்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய படங்களை பார்த்து, நம்மை மாதிரியே ஒரு ஆள் நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று நினைப்பேன். அவர் நிறைய சாதனைகளை படைத்து விட்டார். பத்து வேடங்களில் நடித்தவர், உலகிலேயே யாரும் இல்லை. இது, உலக சாதனை.

கடின உழைப்பு

அவருடைய சாதனைகளுக்கு, கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் காரணம். ஒரு படத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. கமலஹாசன் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்து இருக்கிறார். இது, பேசும் படம் அல்ல. பேசப்படும் படம்.''ஜாக்கி 'மிஸ்டர் க்ளீன்':

"தசாவதாரம்' "சிடி' யை முதல்வர் கருணாநிதி வெளியிடும் போது அதை சுற்றி கட்டியிருந்த பேப்பரையும்,ரிப்பனையும் அவிழ்த்து கீழே போட்டனர். சி.டி., வெளியிடப்பட்ட பிறகு முதல்வரும் மற்றவர்களும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டனர். ஆனால் மேடையில் கிடந்த அந்த பேப்பரையும், ரிப்பனையும் பார்த்த ஜாக்கிசான் உடனே இருக்கையிலிந்து எழுந்து அந்தப் பேப்பரையும், கட்டியிருந்த ரிப்பனையும் எடுத்துக்கொண்டு போய் மேடைக்கு வெளியில் ஓரமாக போடப் போனார். அப்போது தான் அவரை பார்த்த கமல் உடனே ஓடிச்சென்று ஜாக்சானை அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைத்தார். ஜாக்சிசானின் செயலுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.நேரடி அனுபவம் - ஆசிப் மீரான்
தசாவதாரம் - இசை வெளியீடு - என் பார்வையில்

பின்குறிப்பு: கலைஞர் குறிப்பிட்ட ஜாக்கிசான் பற்றிய புத்தகம் ‘குதி'. வெளியீடு: கிழக்கு பதிப்பகம். அவர்தான் சொல்ல மறந்துட்டார் என்று எனக்கு ஒருவர் சொல்லுகிறார்.

Read More...

Friday, April 25, 2008

மனிதர்கள் கிராமத்தில் தான் இருக்கிறார்கள் !

ஊசி போட்டதில் குழந்தைகள் சாவு: `சஸ்பெண்டு' ஆன நர்சு மீது பாசம் காட்டும் கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டத் தில் தட்டம்மை ஊசி போட்டதில் 4 குழந்தைகள் உயிர் இழந்தனர். இதில் 3 குழந்தைகள் பென்னலூர் பேட்டை கிராமத்தை சேர்ந் தவர்கள். அவர்களுக்கு ஊசி போட்ட கிராம நர்சு ஜெயலலிதா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

3 குழந்தைகள் உயிர் பறி போய் விட்டதால் கிராம மக்கள் நர்சு ஜெயலலிதா மீது ஆவேசமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அங்கு நேர் எதிர்மாறான நிலை நிலவுகிறது.

நர்சு ஜெயலலிதா மீது அந்த ஊர் மக்கள் மிகவும் பாசம் காட்டுகிறார்கள். அவரை சஸ்பெண்டு செய்தது தவறு என்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்புகிறார்கள்.

இந்த கிராமத்தில் 22 ஆண்டுகளாக ஜெயலலிதா நர்சாக பணியாற்றி வந்துள்ளார். அவர் கிராம மக் களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வாராம்.

பெண்கள் கர்ப்பமாகி விட்டால் பிர சவம் ஆகும் வரை அடிக்கடி வந்து சந்தித்து தேவையான உதவிகளை செய்வதுடன் ஆறுதலாகவும் இருப்பா ராம். எனவே கிராம மக்கள் அனைவருமே அவ ருக்கு ஆதரவான கருத்துக் களையே கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜெய லலிதாவை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அப்போது அவரை மாற்றக் கூடாது என்று கிராம மக்கள் போராட்டத்தில் குதித்து மாற்றலை ரத்து செய்ய வைத்துள்ளனர்.

அன்று கூட ஊசி போட்டு குழந்தைகள் மயங்கி விழுந்ததும் துக்கம் தாங்க முடியாமல் அவர் கதறி அழுதாரார். இறந்த குழந்தை ஒன்றின் தந்தை மோகன் இது பற்றி கூறும் போது, "நர்சு ஜெயலலிதா மீது நாங்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் மீது எந்த தவறும் இல்லை'' என்றார்.

ஞானம்மாள் என்ற வயது முதிர்ந்த பெண் கூறும் போது, "நர்சு ஜெயலலிதா எப்போது எங்களுடைய சுக, துக்கங்களில் பங்கு பெற்று வந்துள்ளார். குழந் தைகள் மயக்கமாகி தாய் மார்கள் அழுது துடித்த போது ஜெயலலிதாவும் கதறி விட்டார்'' என்றார்.

ஸ்ரீனிவாசன் என்பவர் கூறும் போது, ஜெயலலிதா இங்கு 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். இதுவரை சிறு தவறு கூட செய்தது இல்லை. இந்த விஷயத்தில் யார் தவறு செய் தார்கள் என்பதை சரியாக விசாரணை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

நர்சு ஜெயலலிதா சமீபத் தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இந்த பிரச்சினையில் அவ ருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று கிராம மக் கள் கவலையை வெளி யிட்டனர்.

நர்சு ஜெயலலிதாவை இது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக மட்டும் தகவல்கள் வருகின்றன. அவருடைய செல் போனும் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜெயலலிதாவை பின்னூட்டதில் பாராட்டலாம் ;-)

Read More...

இட்லிவடை - Twitter

மக்களே - உங்களுக்கு இட்லிவடை அப்டேட்ஸ் உடனுக்கு உடன் தெரிந்துக்கொள்ள வேண்டுமா ? ( Chat அல்லது உங்க செல்ஃபோனுக்கு SMS செய்தியாக) வேண்டாம் என்று தான் சொல்லுவீங்க இருந்தாலும் லிங்க் தருவது என் கடமை(?)

நீங்க Subscribe செய்தது எனக்கு மட்டும் தான் தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது அதனால் பயப்பட வேண்டாம் ;-)

Read More...

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு - படங்கள்

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு பற்றி பத்ரி, வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியின் படங்கள்....


செய்தி:
நல்ல கார்ட்டூன்கள் தோல்வியின் வலிகளை மறக்கச் செய்யும், வெற்றிக்கு தூண்டுகோலாக அமையும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

தினமணி கார்டூனிஸ்ட் மதி வரைந்த 'அடடே' கேலிச் சித்திரங்களின் 6 தொகுதிகளை சென்னை மியூசிக் அகாடமியில் வெளியிட்டார் கலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நடிகை மனோரமா, நாடகக் கலைஞர் கிரேசி மோகன், தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் குழும அதிபர் மனோஜ் சொந்தாலியா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஊடகத்தில் கேலிச் சித்திரங்களின் பங்கு எனும் தலைப்பில் கலாம் ஆற்றிய உரையிலிருந்து...

கார்ட்டூன்கள் எனப்படும் கேலிச் சித்திரங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவை. கார்ட்டூன்கள் எனும் வார்த்தைக்கு கேலிச்சித்திரம் எனும் தமிழ்ப் பதம் சரியானதுதானா என்று எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது. காரணம் இதில் வெறும் கேலியும் கிண்டலும் மாத்திரம் தொனிப்பதில்லை. அதையும் தாண்டி பல கருத்துக்களை உள்ளடக்கியவை கார்ட்டூன்கள். வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளின் பிம்பங்கள்தான் கார்ட்டூன்கள்.

முதன்முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சுதந்திர வேட்கையைத் தூண்டியவர் மகாகவி பாரதியார். ஒரு பக்க தலையங்கத்தின் அர்த்தத்தை ஒரு சிறிய கார்ட்டூன் சொல்லிவிடும்.

தோல்வியில் துவண்டுவிழும் நேரங்களில் ஒரு உற்சாக மருந்தாகக் கூட கார்ட்டூன்கள் செயல்படும். ஒரு உதாரணம் பாருங்கள்... 1979-ம் ஆண்டு, இரவு பகலாக நாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியடைந்துவிட்டது. சுமார் ஒருமாத காலம் இந்த தோல்வியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தோம்.

அப்போது இந்திய விண்வெளித்துறை பற்றி அதுவரை வந்திருந்த கேலிச் சித்திரங்களை எங்களிடம் காட்டினார்கள். அவற்றைப் பார்த்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தோம். மன இறுக்கம் குறைந்தது. தோல்விக்கு ஒரு மருந்தாகவும் அது அமைந்தது. அதே நேரம் ஒரு வைராக்கியம் பிறந்து அதுவே அடுத்த வெற்றியைச் சாதிக்கத் தூண்டுகோலானது. நல்ல கார்ட்டூனுக்கு இலக்கணம் அதுதான்.

சரியாக ஒரு மாதம் கடுமாயாகப் போராடி 1980ம் ஆண்டு மீண்டும் பிஎஸ்எல்வியைச் செலுத்துவதில் பெரும் வெற்றி கண்டோம். அன்றிலிருந்து நான் எப்போது நாளிதழ்களைப் பிரித்தாலும் முதலில் தேடுவது கார்ட்டூன்களைத்தான்.

எனது பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் எப்போதும் சொல்வது, கார்ட்டூன்களுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுங்கள், முதல் பக்கத்தில் போடுங்கள் என்பதுதான். அதற்குக் காரணம், நல்ல கார்ட்டூன்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் சக்தி உண்டு.

ஒருமுறை டொரண்டோவில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனையின்போது, ஒரு ஆறு வயது சிறுமி, 'யார் இந்த தியாகராஜர் அங்கிள்?' என்றாள்.

என்னால் அவளுக்கு விஷயத்தைப் புரிய வைக்க முடியவில்லை. ஆனால் ஒரு நல்ல கார்ட்டூன் இந்த வேலையைச் செய்துவிடும். மதி போன்ற கார்ட்டூனிஸ்டுகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் நாட்டில் உள்ள அரசியல்- சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலில் களையப்பட வேண்டும். இந்த நாட்டில் 54 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த கார்ட்டூனிஸ்ட்கள் முயற்சிக்க வேண்டும்.

திருவள்ளுவர் சொன்னதுபோல, லட்சியங்கள் உயர்வானதாக இருந்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்றார் கலாம்.

மதியின் கேலிச்சித்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து எக்ஸ்பிரஸ் குழும நிர்வாக ஆசிரியர் மனோஜ் சொந்தாலியா பேசினார்.

முன்னதாக மதியின் கார்ட்டூன்கள் தொகுப்பை கலாம் வெளியிட அவற்றின் பிரதிகளை எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகை மனோரமா, சுவாமி ஆத்மகனானந்தஜி, கிரேஸி மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி ஷேஷாத்ரி நன்றி கூறினார்.
தினத்தந்தி எப்போதும், கார்ட்டூன்களை கேலிசித்திரம் என்று சொல்லாது, கருத்து படம் என்று தான் சொல்லும் :-)

Read More...

Thursday, April 24, 2008

டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஜெயலலிதா

அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்த டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்: முறைகேடுகளுக்குத் துணை போன பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்யவும் கோரிக்கை

குடும்ப நிறுவனங்களின் சுயலாபத்துக்காக மத்திய அமைச்சர் பதவியைதுஷ்பிரயோகம் செய்துள்ள திரு. டி.ஆர். பாலுவைஉடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் முறைகேடுகளுக்குதுணைபோயுள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங், தனது பதவியைராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயநல நோக்கத்துக்காக சேது சமுத்திரம் திட்டத்தில் பல முறைகேடுகளைச் செய்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் திரு. டி.ஆர். பாலு, மீண்டும் ஊடகச் செய்திகளில் முக்கிய இடம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பதவியைசுயநலத்துக்காக துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், ஊழல் புரிந்திருப்பதாகவும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஆர். பாலு, இக் குற்றச்சாட்டுகளைமறுக்கவில்லை; மாறாக, அவற்றைநியாயப்படுத்தியுள்ளார் என்பதைஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது மகன்கள் டி.ஆர்.பி. ராஜ்குமார், டி.ஆர்.பி. செல்வகுமார் ஆகிய இருவருக்குச் சொந்தமான கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன், கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்குகாவிரிப் படுகையிலிருந்து எரிவாயு விநியோகம் செய்வதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சகத்துக்குகடந்த 2 ஆண்டுகளாக டி.ஆர். பாலு நிர்பந்தம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் புகார்கள் வெளியாகியுள்ளன - இந்த இரண்டு நிறுவனங்களிலும் டி.ஆர். பாலுவின் 2 மனைவிகளான பொற்கொடி, ரேணுகாதேவி ஆகியோருக்குபெருவாரியான பங்குகள் உள்ளன - டி.ஆர். பாலு நிர்பந்தம் கொடுத்ததற்குஆதாரமாக, கெயில் எனப்படும் இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் திரு. யு.டி. சௌபே, ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயுக் குழுமத்தின் தலைவர் திரு. ஆர்.எஸ். சர்மாவுக்குகடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது - மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலுவுடன் கடந்த 2006 ஜூன் மாதம் தான் பேச்சுவார்த்தைநடத்தியதாகவும், அந்தச் சந்திப்பின்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கூடுதலாகக் கிடைக்கும் எரிவாயுவைகிங்ஸ் பவர் கார்ப்பரேஷன், கிங்ஸ் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குவிநியோகம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் திரு. சௌபேகுறிப்பிட்டுள்ளார் - சுருக்கமாகச் சொன்னால், தனது இரு மகன்களின் நிறுவனங்களுக்குஎரிவாயு விநியோகிக்குமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவனத் தலைவருக்குமத்திய பெட்ரோலிய அமைச்சர் மூலம் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார் என செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த விவகாரரம் ஏற்கெனவேசட்டப் பிரச்சினைஆகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டி.ஆர். பாலு மகன்களின் நிறுவனங்களுக்குகாவிரிப் படுகையில் குத்தாலம் மற்றும் நரிமணத்திலிருந்து கிடைக்கும் எரிவாயுவைவிநியோகிக்குமாறு கடந்த 1998-ல் உத்தரவிடப்பட்டது - எரிவாயு விலை,மில்லியன் மெட்ரிக் கன மீட்டருக்கு654 ரூபாயாக இருந்த அந்தச் சமயத்தில், இதனைவெறும் 250 ரூபாய்க்குக் கொடுக்க டி.ஆர். பாலு வலியுறுத்தினார் - குடும்ப நிறுவனங்களுக்காக டி.ஆர். பாலு காட்டிய இந்த பாரபட்சத்தைஎதிர்த்து மற்ற நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்ததால், இந்த எரிவாயு ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது - இறுதியில், கடந்த 2002-ல் எரிவாயு ஒதுக்கீடு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது என்பதைநினைவுகூர்ந்துள்ள செல்வி. ஜெயலலிதா, தகுந்த நேரத்தில் நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் குறுக்கிட்டிருக்கவில்லைஎன்றால், நாட்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றதும், மீண்டும் அமைச்சரான டி.ஆர். பாலு, தனது வேலையைத் திரும்பவும் தொடங்கிவிட்டார் - இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி கெயில் நிறுவனத் தலைவர் திரு. சௌபேயைஅழைத்த டி.ஆர். பாலு, தனது குடும்ப நிறுவனங்களுக்குஎரிவாயு விநியோகிக்குமாறு ஓ.என்.ஜி.சி நிறுவனத் தலைவருக்குகடிதம் எழுதுமாறு பணித்துள்ளார் - மறுநாளேஅவ்வண்ணம் சௌபேகடிதம் எழுதியுள்ளார் - இதனைதேசிய அளவில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், மாநில அளவில் ஜெயா தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின என்று நினைவுகூர்ந்துள்ள செல்வி. ஜெயலலிதா, அப்போது இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியைடி.ஆர். பாலு ராஜிநாமா செய்ய வேண்டும் என தாம் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காணுமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்குதமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடிதம் எழுதியும் பயனில்லை- குடும்ப நிறுவனங்களுக்காக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடுமாறு கோரி பிரதமர் திரு. மன்மோகன் சிங்குக்கு, ஜனதா கட்சித் தலைவர் திரு. சுப்ரமணியன் சுவாமி கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியபோதிலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுநாள் வரைபதில் இல்லைஎன்றும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். டி.ஆர். பாலு விவகாரம், ஊடகங்களில் கடந்த 21-ம் தேதி மீண்டும் தலைப்புச் செய்தியானதும், இந்தப் பிரச்சினையைநாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று

கேள்விநேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க. எழுப்பியது - இப்பிரச்சினையைஎழுப்ப நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன் முயன்றபோது தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு விளைவித்தனர் - இறுதியில் பதிலளித்துப் பேசிய டி.ஆர். பாலு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அமைச்சராவதற்குமுன்பு கிங்ஸ் கெமிக்கல்ஸ், கிங்ஸ் பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராக தான் பதவி வகித்ததைஒப்புக்கொண்டதுடன், மூடப்படும் நிலையிலிருந்த அந் நிறுவனங்களைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்குமாறு பங்குதாரர்கள் தன்னிடம் கோரிக்கைவிடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் என்று செல்வி. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் தனது மகன்களின் நிறுவனங்களுக்காக அரசு உயரதிகாரிகளைநிர்பந்தப் படுத்தியதையோ, உண்மையான விலையில் 40 சதவீத சலுகைவிலைக்குஎரிவாயுவைவாங்க முயற்சி எடுத்ததையோடி.ஆர். பாலு மறுக்கவில்லைஎன்பதைஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சுயநலத்தைமறைக்க பங்குதாரரின் நலனுக்காக இந்த நடவடிக்கையைமேற்கொண்டதாக டி.ஆர். பாலு நியாயப்படுத்தியிருப்பதைகடுமையாகக் கண்டித்துள்ள செல்வி. ஜெயலலிதா, இதேபோன்ற உதவியையும் சலுகைகளையும் நலிவடைந்த மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மோசமான நிர்வாகம், பணம் சுருட்டல் ஆகிய காரணங்களால்தான் டி.ஆர். பாலுவின் குடும்ப நிறுவனங்கள் நலிவடைந்தன - பொதுத் துறைவங்கிகளிடமிருந்து கிங்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ளது - இந்தக் கடன்தொகையை திருப்பிச் செலுத்தவோவட்டி கட்டவோஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை- கடன் தொகைபெறுவதற்காகப் பிணையமாகக் காட்டப்பட்ட நிலங்கள் பின்னர் வேறு பெயருக்குமாற்றப்பட்டுள்ளன என்றும் செல்வி. ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது சீடரான டி.ஆர். பாலு ஆகியோர் ஊழல், முறைகேடுகளில் திளைப்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் வித்தியாசமான மனிதர் என்று கருதப்பட்ட பிரதமர் திரு. மன்மோகன் சிங் இதுபோன்ற செயல்களுக்குத் துணைநிற்பது வேதனைஅளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கிமுன்னாள் கவர்னர், மிகச் சிறந்த பொருளாதார மேதைஎன்ற புகழுடன் தற்போது இந்தியாவின் பிரதமராகவும் உள்ள திரு. மன்மோகன் சிங்கின் பிரதமர் அலுவலகம், கிங்ஸ் பவர் கார்ப்பரேஷனுக்குஎரிவாயு விநியோகம் செய்யுமாறு நிர்பந்தப்படுத்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்குஒருமுறைஅல்ல 8 முறைநினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன - டி.ஆர். பாலு மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி திரு. சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதிய நான்குநாட்களுக்குப் பிறகுகடந்த பிப்ரவரி 4-ம் தேதி கடைசி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது - எனவேடி.ஆர். பாலுவின் முறைகேடுகள் குறித்து பிரதமருக்குத் தெரியாது என்று கூற இயலாது என செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமையான இன்றைய தினம் பிரதமர் மாநிலங்களவையில் இருப்பது வழக்கம் என்பதால் டி.ஆர். பாலு விவகாரத்தைஎழுப்ப அ.இ.அ.திமு.க. உறுப்பினர்கள் முயன்றபோதும் அவர்கள் தடுக்கப்பட்டனர் - அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயனைஅவையிலிருந்து வெளியேறலாம் என அவைத் தலைவர் கூறியுள்ளார் - இதனால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஓர் அமைச்சரின் ஊழல் குறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தும்கூட, அவர் சார்ந்துள்ள கட்சியின் ஆதரவு, தனது ஆட்சிக்குத் தேவைப்படுவதால், சட்டதிட்டங்களைவளைக்கும் பிரதமர் நாட்டுக்குவாய்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள செல்வி. ஜெயலலிதா, பதவிக்காக தனது நேர்மையையேபலிகொடுக்கும் நபர் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக நீடிப்பதற்குத் தகுதி இல்லைஎன்றும் தெரிவித்துள்ளார். மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் திரு. டி.ஆர். பாலுவைஉடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கைவைத்துள்ள இந்தியக் குடிமக்கள் சார்பாக தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அமைச்சரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணைபோயுள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் தனது பதவியைராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் செல்வி. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Read More...

நளினி- பிரியங்கா சந்திப்பு - சிதறப் போகும் விஷயங்கள்

ளினி- பிரியங்கா சந்திப்பால் புதிய சர்ச்சை: ராஜீவ்காந்தி கொலையில் மேலும் மர்ம முடிச்சுகள்

கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி, வேலூர் சிறை யிலிருக்கும் நளினியை, பிரியங்கா ரகசியமாக சந்தித்து திரும்பினார்.

இந்த சந்திப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான புதிய சர்ச்சை களை ஏற்படுத்த தொடங்கி யிருக்கிறது.

தனது ரகசிய சந்திப்பு வெளியே தெரிந்ததும் டெல்லியில் இருந்த பிரியங்கா "இந்த சந்திப்பின் மூலம் எனது மனபாரம் குறைந்திருக்கிறது. வேறு உள்நோக்கம் எதுவும் கிடை யாது'' என்று கூறினார்.

இருந்த போதிலும் நளினியை சந்திக்க பின் னணியில் மிக முக்கிய காரணம் இல்லாமல் இல்லை என்ற பரபரப்பு நாடு முழுவதும் நிலவிவரு கிறது.

தொடக்கத்தில் "தங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று மறுத்த ஜெயில் அதிகாரிகள் பின்னர் "முறைப்படிதான் எல்லாம் நடந்தது'' என்றனர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் பேசிக்கொண்டது என்னப

"என் தந்தை நல்லவர் தானே! அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்'' என்று பிரியங்கா கேட்ட தாகவும், "எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது'' என நளினி சொன்னதாகவும் கூறப்பட்டது.

நிஜம் அதுவல்ல! ராஜிவ் கொலையில் மேலும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. நளினியிடம் அந்த மர்ம முடிச்சுகள் பற்றிய விஷயங்களை பிரியங்கா பெற்றுச்சென்று இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர் கள்.

ராஜிவ்காந்தி கொலைச் சதி தொடர்பான ஆயுள் தண்டனைக் கைதிகளில் ரவிச்சந்திரன் என்பவரும் ஒருவர். இவரும் வேலூர் சிலையில்தான் இருக்கிறார்.

இவரது சார்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜிவ்காந்தி கொலைச் சம்பவத்தில் ஹரிபாபு என்ற போட்டோ கிராபர் எடுத்த புகைப்படம்தான் அடிப்படை ஆதாரம்.

இதனடிப்படையில் ராஜிவ்வை கொன்றவர் தணு என்கிற பெண் மனித வெடிகுண்டு ஆவார். ஆனால் அந்த தணு யார்ப அவருக்கு எந்த ஊர்ப அவரது குடும்பத்தினர், உறவினர்கள் யார்ப யார்ப என்று எந்தத் தகவல்களும் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் கொடியேந்தியபடி ஒரு பெண் புகைப்படம் வெளி யிடப்பட்டு, இவர்தான் தணு என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் தணு அல்ல. அனுஜா என்பவர் என்று கூறப்படுகிறது.

இது தவிர ராஜிவ்வை கொல்ல பயன்படுத்திய இடுப்பு பெல்ட் வெடிகுண்டு எங்கிருந்து வந்ததுப யார் தயாரித்ததுப யாரால் வரவழைக்கப்பட்டது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ராஜீவ்காந்தி கொல்லப் படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கொழும் பில் உள்ள இலங்கை தூத ரகத்திற்கு ஒரு தொலை பேசி தகவல் வந்தது. அதில் ராஜீவ் கொலை குறித்து முன்னமே தெரி விக்கப்பட்டது. இந்த விஷயம் புலனாய்வு போலீசாரால் உறுதி செய்யப்பட்டாலும்கூட, அதைப் பேசியது யார்ப எங்கிருந்து பேசப்பட்டதுப என்பதற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

இது தவிர சி.பி.ஐ.யின் தனிப்பிரிவான "மல்டி டெவலப்பிங்மானிட்டரிங் ஏஜென்சி'' என்ற புலனாய்வு பிரிவு இன்ன மும் ராஜிவ் குறித்த தனது விசாரணையை முடிக்கவில்லை.

இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து சந்தேகங்கள் தொடர் கின்றன.

இது பற்றி தணுவுக்கு நெருக்கமாக இருந்த நளினிக்கு தெரிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பிரியங்கா சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

ராஜிவ் கொலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆரம்ப காலம் முதலே மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறார் பிரியங்கா.

இது குறித்த விசாரணை யில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அவர் கருதுவதாக கூறப்படுறது.

நளினி-பிரியங்கா சந்திப்பு நீண்ட நேரமாக நடந் திருக்கிறது. அவர்கள் நிறைய பேசி உள்ளனர். தனக்கு சோனியாவால்தான் தண்டனை குறைக்கப் பட்டது என்பதால் நளினியும் ரொம்பவே மனம் விட்டு பேசியுள்ளார்.

இதற்கிடையே பிரியங்கா போல் முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகள் மோகினி கிரியும் முன்னதாக நளினியை சிறையில் சந்தித்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர் அந்த சந்திப்பின் போது ராஜிவ் கொலை பற்றி ஏராளமாக பேசியுள்ளார்.

இவை தவிர தணு யார்? என்பது தனக்கு தெரியும் என்று ரவிச்சந்திரன் புதிய வெடிகுண்டை போட்டிருக்கிறார்.

எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு விவகாரம் இதோடு நிற்க போவதில்லை. இன்னும் வெடித்துச் சிதறப் போகும் விஷயங்கள் நிறைய இருப்பதாகவே புலப்படுகிறது.

( நன்றி: மாலைமலர் )

Read More...

விவேகானந்தர் மண்டபம் - கலைஞர் பேச்சு

சட்டசபையில் இன்று விவேகானந்தர் நினைவிடம் தொடர்பான பிரச்சினை விவாதத்திற்கு வந்தது. யார் சொல்லுவது பொய் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இட்லிவடை வாசகர்கள் புத்திசாலிகள் :-)

செங்கோட்டையன் (அ.தி.மு.க.): சென்னையில் விவேகானந்தர் தங்கி இருந்த இடம் மெரீனா கடற்கரையில் உள்ளது. இந்த விவேகானந்தர் இல்லம் சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இங்கு தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அரசு முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்): விவேகானந்தருக்காக குமரி முனையில் நினைவிடம் உள்ளது. அவர் பெயரால் பல கல்லூரிகள் உள்ளது. எனவே இந்த இடத்தில் செம்மொழி மையம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை.

திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.): விவேகானந்தர் நினைவிடத்தை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் வைத்துக்கொண்டு அருகில் செம்மொழி மையம் கட்டலாம்.

ராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.): ராமகிருஷ்ண மடம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலேயே இருக்க வேண்டும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்): ஆன்மீகத்தை அரசியல் ஆக்க கூடாது. அந்த இடத்தில் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.

முதல்- அமைச்சர் கருணாநிதி: உறுப்பினர்கள் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப் படக் கூடியது. தம்பி கம்பம் ராமகிருஷ்ணன் விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலே இருக்கட்டும், "பழைய இடத்திலே இருப்பதுதான் நல்லது'' என்று சொன்னார். ஆமாம், "பழைய இடத்தில்'' இருப்பதுதான் நல்லது என்பதை நான் தம்பி ராமகிருஷ்ணனுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் - அண்ணன் என்ற முறையில்.

விவேகானந்தர் நினைவுச் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட, தமிழகத்திலே உள்ள ஆறு கோடி மக்களுக்கும் உரிமை உண்டு. குமரி முனையில் இருக்கின்ற விவேகானந்தர் ஆலயத்தை வி.வி.கிரி 1970-ஆம் ஆண்டு என்னுடைய தலைமையிலேதான் திறந்து வைத்தார்.

அதன் பிறகு சென்னை மாநகரத்தில் 1997-ஆம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்த காரணத்தினால், அதன் நினைவாக விவேகானந்தர் இல்லத்தை, சென்னை இராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கும்படி அந்த மடத்தின் தலைவர் இந்த அரசிடம் கோரியிருந்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுர அடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தில் அவருடைய நினைவாக அந்த இடத்தை அரசு அந்த மடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போது 24.2.1997 நாளிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணை எண். 89-ன்படி சில நிபந்த னைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன்முதலாக ராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்கு - ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறி, அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியதை அடுத்து -அதையும் தி.மு.க. அரசு பரிசீலனை செய்து, 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் மூன்றாண்டு கால குத்தகைக்கு ஆண் டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என 10.6.1998 அன்று வழங்கியது.

மற்றொரு கோரிக்கையாக, இதை 30 ஆண்டுக்கு குத்த கைக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கேட்ட போது நான் அது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் தான் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு ஏதாவது பகையா என்றால் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத் தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது எங்களுக்கு விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன் எடுத் துக் காட்டியதைப் போல விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. மத்தி யிலேயிருந்து எங்களுக்கு வந்த தகவல் செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்பவும், ஏற்ற முறையில் அதற்கான வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற "ஐம்பெருங்குழு'', "எண் பேராயம்'' போன்ற அமைப் புக்கள் செயல்படவும் 76 கோடி ரூபாய் உங்களுக்காக ஒதுக்கப் படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டிடம், ஒரு அமைப்பு இவைகளையெல்லாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற போது தற்காலிகமாக ஒரு இடத்தைத் தேடலாம் என்று எண்ணி அதைத் தேடிய நேரத்தில் சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டிடத்தை பிறகு கட்டுவது என்று அதற்கான முனைப்பான முயற்சிகளிலே ஈடுபட்ட போது, தற்காலிகமாக ஏதாவது அரசுக்குச் சொந்தமான இடங்கள் கிடைக்குமா என்று எண்ணிய நேரத்திலே யாரோ ஒரு கதை கட்டி அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று இன்றைக்கு சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட் டிருக்கிறார்கள். நீங்கள் சாமி யாரிடத்திலே மோத விட்டாலும், மாமி யாரிடத்திலே மோத விட்டா லும் நாங்கள் யாரும் அவை களையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதி யிருக்கிறார்கள். பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அதுப இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலு விழந்த மண்டபமாப இல்லை; வலுவான மண்ட பம். அதை யாரும் இடிக்க விரும்ப வுமில்லை, நினைக் கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை.

"அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்'' என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம். ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே - அவருடைய குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோத மானது.

இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது. குமரி முனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேக மான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப் பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக்கிற இடம் அதே காமராஜர் சாலையில் "பாலாறு இல்லம்'' - அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்க ளுக்கு அந்தப் பெரிய கட்டி டம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடை பெறும் என்பதைத் தெரி வித்து கொள்கிறேன்.

பழைய செய்தி:

கடந்த 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன், கண்காணிப்புப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் விவேகானந்தா இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சகஜானந்தாவை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். இதை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்


இந்த செய்தி பொய் என்றாலும் கூட எப்படி சரியா மாலை 6:15 மணிக்கு என்றெல்லாம் பொய் சொல்ல முடிகிறதோ. ஆண்டவா இவர்களை காப்பாத்துப்பா !

Read More...

சங்கரா டிவி உதயம்

புதிய டி.வி. ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளனர். சங்கரா டி.வி. என்ற பெயரில் வெளிவரும். இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்து சமய நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோர் இந்து மதத்தை பரப்பும் வகையில்

காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் புதிய டி.வி. இன்னும் 20 நாட்களில் ஒளிபரப்பை தொடங்கும் என்று மடத்தின் நிர்வாகி கூறினார். ஏப்ரல் 14-ந்தேதி ஒளிபரப்பை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லைசென்சு பெறுவதில் தாமதம் ஆனதால் தள்ளிப்போனது.

இன்னும் 15 நாட்களுக்குள் லைசென்சு கிடைத்து விடும். 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். முன்னோட்ட ஒளிபரப்பு தொடங்குவதற்கு 70 மணி நேரத்திற்கு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

சங்கர டி.வி.யில் கோவில் கும்பாபிஷேகம், ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கர்நாடக இசை, காலையில் சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்துக்களுக்கு குறிப்பாக வெளிநாட்டில் உள்ள இந்துக்கள் சமய நிகழ்ச்சிகளை பார்க்க வழி இல்லாமல் இருந்தது.

சங்கரா டி.வி. தொடங்க வெளிநாட்டில் வசிக்கும் இந்துக்கள் நிதி உதவி அளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். மற்ற மதங்களுக்கு தனி சேனல்களும், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒளிபரப்பும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்து மதத்திற்கு என்று தனி சேனல் எதுவும் இல்லை. இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சினிமா படங்கள் தற்போது வெளி வருகின்றன.

அதனால் இந்து சமயத்தின் சிறப்பு, வழிபாடு, புனித கோவில்கள் சிறப்புகள் போன்றவற்றை போற்றும் வகையில் சங்கரா டி.வி. நிகழ்ச்சிகள் அமையும் என்று மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சங்கரா டி.வி. நிகழ்ச்சி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பிகு: மதுரை வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக படம் பிடித்திருக்கிறார்கள் முதல் போணியாக இருக்கும்.

அப்டேட்
//இட்லி-வடை சங்கரா டி.வியில் தோன்றுவாரா?// ( அனானியின் கேள்வி )

இட்லிவடையின் பதில் இங்கே: http://idlyvadai2007.googlepages.com/shankara_tv_iv.jpg

Read More...

நளினி-பிரியங்கா சந்திப்பு - சோ கருத்து

கேள்வி : சமீபத்தில் (மார்ச் 19) தமிழகத்திற்கு ரகசியமாக வந்து சென்ற பிரியங்கா, வேலூர் சிறைச்சாலைக்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நளினியைச் சந்தித்துச் சென்றதாக வரும் செய்தி பற்றி? ...


பதில் : இது தொடர்பான செய்திகளை அவரே உறுதி செய்துவிட்டார்.

சிறைச்சாலை விதிகள் பல மீறப்பட்டு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது; இதற்கு அரசும் துணை போயிருக்கிறது என்பது கவலைக்குரியது. அரசின் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுவது இது. இது இருக்கட்டும்.

ராஜீவ் காந்தி கொலை என்பது, பிரியங்காவை மட்டும் பாதிக்கிற விஷயமல்ல.
இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அதற்கு உதவுகிற வகையில் தமிழகத்தின் நிலை அப்போது இருந்ததும், இப்போதும் கூட அந்த கொலைகாரக் கூட்டத்தினர் தமிழகத்தில் உலவி வருவதும், அவர்களுக்குப் பலர் ஆதரவு தெரிவிப்பதும் – பொதுப்பிரச்சனைகள்.
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் போலவும், அதில் ஓரிருவர், "பெருந்தன்மை'யைக் காட்டினால், குற்றமே அழிக்கப்பட்டது போலவும் தோற்றம் ஏற்படுவது சரியல்ல.

ஆகையால், பிரியங்கா தனிப்பட்ட முறையில் நடத்தின சந்திப்பாக இதை வர்ணிப்பது, ஏற்புக்குரியதல்ல. நாட்டின் சட்டத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர், சோனியா காந்தியின் "கருணை'யினால், காப்பாற்றப்பட்டார்; அது தாய் காட்டிய "கருணை' என்றால், இப்போது மகள் காட்டிய "மனிதாபிமானம்', கொலைக்குற்றம் செய்தவருக்கு ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது. விரும்பத்தகாத இந்த "கருணை'யும், "மனிதாபிமானமும்', பல கேள்விகளுக்கு இடம் தரக்கூடியவை. அதுவுமின்றி, நளினி கூட்டத்தாரால் உயிரிழந்தது ராஜீவ் காந்தி மட்டுமல்ல; அவரைத் தவிர சில போலீஸ்காரர்கள்; ஒரு சிறுமி உட்பட 15 பேர் கொலையுண்ட சம்பவம் அது. இவர்கள் சார்பாக "கருணை' காட்ட, சோனியா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது – என்ற கேள்வியை அப்போதே நாம் எழுப்பினோம். இப்போது மகள் பொழிகிற மனிதாபிமானமும், பெருந்தன்மைத் தென்றலும், அந்த 15 பேர் கொலையையும் மன்னித்துவிடுகிறதா? இவர் என்ன நீதி தேவதையா?

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது திடீரென உண்மையைத் தேடி, குற்றவாளியிடம் போக வேண்டிய அவசியம், ஏன் பிரியங்காவுக்கு வந்தது? மனிதாபிமானம் என்பது ஒரு போர்வையாகத் தெரிகிறதே தவிர, உண்மை காரணமாகத் தெரியவில்லை. நளினியின் கணவர் முருகன், ராஜீவ் கொலை தொடர்பாக ஒரு புத்தகம் எழுதுவதாகவும், அது பிரசுரமானால் சிலர், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வரும் – என்ற செய்தி வேறு வருகிறது.

Read More...

டி.ஆர்.பாலு - 100% guilt, 0% regret !

தனது குடும்ப நிறுவனத்துக்கு எரிவாயு வழங்குமாறு பெட்ரோலிய அமைச்சரை அணுகியதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு ஒப்புக் கொண்டார். 100% guilt, 0% regret!.

ஆனால் இதற்காக அவர் அனுப்பிய லெட்டர் எவ்வளவு தெரியுமா ? எட்டு !

November 13, 2007
November 27, 2007
December 3, 2007
December 19, 2007
January 1, 2008
January11, 2008
January 21, 2008
February 4, 2008

அகிய தேதிகளில் அனுப்பியுள்ளார்.

“I put in a word with the petroleum minister. What is wrong in it?” நேற்று பாலு பார்லிமெண்டில் சொன்ன பதில். அடேயப்பா !
""குடும்ப நிறுவனத்துக்காக தனது அதிகாரத்தை மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு துஷ்பிரயோகம் செய்ததாக,'' அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வி. மைத்ரேயன் குற்றம் சாட்டினார். புதன்கிழமை மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இப்பிரச்னை எழுப்பப்பட்டது.

""தனது மகன்கள் மற்றும் மருமகள்கள் நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு எரிவாயு வழங்க வேண்டும் என பெட்ரோலிய அமைச்சரை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டுள்ளார். இது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம்," என்று மைத்ரேயன் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர். பாலு, "ஆமாம், எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலிய அமைச்சரைக் கேட்டுக் கொண்டேன். அதில் என்ன தவறு இருக்கிறது," என்று கேட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முன்னர் இவ்விரு நிறுவனங்களிலும் தலைவர் பதவியை வகித்ததாக பாலு கூறினார்.

இவ்விரு நிறுவனங்களுக்கும் 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் எரிவாயு சப்ளை செய்வதாக இந்திய எரிவாயு ஆணையம் ("கெயில்') ஒப்புக் கொண்டது. தேசிய ஜனநாய கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக 2003-ல் விலக்கிக் கொண்டது. அப்போது மத்திய அமைச்சர் பதவியையும் டி.ஆர். பாலு ராஜிநாமா செய்தார். இதையடுத்து பாஜக அரசு எரிவாயு விநியோகத்தை ரத்து செய்தது.

""இவ்விரு நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் இத்தகைய கோரிக்கையை வைத்தேன்,'' என்று பாலு கூறினார்.

முந்தைய பாஜக அரசு என்மீது பழிவாங்கும் நோக்கில் எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்னையை மைத்ரேயன் எழுப்பியபோது அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதை எதிர்த்து திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள கிங் கெமிக்கல்ஸ் மற்றும் கிங் ஹை பவர் நிறுவனங்களுக்கு பாலு தலைவராக பொறுப்பு வகித்தார். தற்போது இவ்விரு நிறுவனங்களையும் அவரது மகன்கள் நிர்வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க வீட்டில கூட காஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டது, பெட்ரோலிய துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்யலாம் என்று இருக்கேன்

Read More...

கபாலி Vs கேடி கபாலிகபாலீஸ்வரர் கோயிலிலிருந்து 100 அடி தூரத்தில் இந்த பலகை இருக்கு
( நன்றி: கேமரா கண்ணாயிரம் )

பி.கு.. கீழே...


Read More...

Wednesday, April 23, 2008

தசாவதாரம் ட்ரெய்லர்( நன்றி: www.kollywoodtoday.com + தமிழ்நெஞ்சம் + கலைஞர் டிவி )

கமலின் பத்து வேடங்கள் கீழே


Read More...

ஸ்டாலின் கலக்கீட்டீங்க !

ஜூவியில் 'ஸ்டாலின் நெகிழ்ச்சி நிமிடங்கள்...' என்ற கட்டுரை. நிச்சயம் அமைச்சர் ஸ்டாலினை இதற்கு பாராட்ட வேண்டும்.


தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அது ஒரு பொன்மாலைப் பொழுது. கடந்த 17-ம் தேதி மாலை தனது மகள் செந்தாமரையையும் மருமகன் சபரீசனையும் அழைத்த ஸ்டாலின், 'ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்குப் போகிறேன், நீங்களும் கிளம்புங்கள்' என்றார். போஸ்டர் இல்லை, வரவேற்புகள் இல்லை, கோஷங்கள் இல்லை... ஸ்டாலினின் கார் போய்ச்சேர்ந்த இடம் சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கும் ராஜாஜி நகர். இந்த நகரின் குறுகலான மூன்றாவது தெருவுக்குள் கார் போக முடியாததால் மகளோடும், மருமகனோடும் இறங்கி நடக்க ஆரம்பித்தார் அமைச்சர்.

ஸ்டாலின் ஆர்வமாகக் கலந்துகொண்ட அந்த விழா, சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் ப்ளஸ்--டூ படிக் கும் பார்வையற்ற மாணவி பெனோ செபினின் பிறந்த நாள் விழா தான்! (மாணவி செபின் குறித்து ஏற்கெனவே ஆனந்த விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்).

ஸ்டாலினின் திடீர் வருகை தந்த பிரமிப்பு ப்ளஸ் இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத செபினிடம் பேசினோம். ''ஸ்டாலின் அண்ணா அவருடைய பொறந்த நாளைக்கு எங்க பள்ளிக்கு வந்தாங்க. அப்போ நான் என் க்ளாஸ் ரூம்ல இருந்தேன்.அமெரிக்காவுல நடக்கப்போற இளைய தலைவர்கள் மாநாட்டுக்குப் போக எனக்கு வாய்ப்புக் கிடைச்சிருந்தது. இந்தியாவுலயிருந்து பார்வையற்ற மாணவியாப் போற ஒரே மாணவி நான்தான்.

எங்க பள்ளியே என்னை அந்த மாநாட்டுக்குப் பரிந்துரை செஞ்சிருந்தது. அமெரிக்கா போக நிறையப் பணம் வேணுங்கறதால அந்த வாய்ப்பை விட்டுடலாம்னு முடிவெடுத்திருந்தேன்.

ஸ்டாலின் அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டா அவரு நிச்சயம் செய்வாருன்னு என்கூடப் படிக்கற பசங்க சொன் னாங்க. அவரை எப்படி சந்திக்கறதுன்னு தெரியலை.அவர் இருந்த இடத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போகச் சொன்னேன். 'உங்ககிட்ட பேசணும்ணே. அஞ்சு நிமிஷம் ஒதுக்குவீங்களா?'ன்னு கேட்டேன். 'வாம்மா வந்து உட்காரு. என்ன பேசணும்?'னு அவரே என்னைத் தன் பக்கத்துல உட்கார வெச்சுக்கிட்டார். அப்போ என் பிரச்னையைச் சொன்னேன். 'மனுவா எழுதிக்கொடும்மா. நான் ஏற்பாடு செய்யறேன்'னு சொன்னாரு. நான் மனு எழுதறதுக்குள்ளே, என்னைப்பத்தி ஸ்கூல்ல விசாரிச்சார் அண்ணன். 'உன்னோட மனுவைப் பார்க்கிறேம்மா... நல்லாப் படி'ன்னுட்டுப் போயிட்டாரு.

ரெண்டே நாள்ல திரும்பவும் அண்ணனோட ஆபீஸ்லயிருந்து பேசுனாங்க. எனக்குப் பணம் சாங்ஷன் ஆயிடுச்சுன்னு சொன் னாங்க. மார்ச் 14-ம் தேதி முதலமைச்சர் எனக்கு அமெரிக்கா போக நாலு லட்சத்து எழுபதாயிரம் ரூபா கொடுத்தார். அப்போ பக்கத்துல இருந்த ஸ்டாலின் அண்ணாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு கண்ணீர் விட்டேன். 'ஏப்ரல் 17-ம்தேதி என் பர்த்டேவுக்கு வருவீங்களாண்ணே?'ன்னு கேட்டேன். 'நிச்சயம் வர்றேம்மா'ன்னு சொன்னார். சொன்னது போலவே வந்துட்டார். அவரோட வருகை சம்பந்தமா எங்களுக்கு எதுவும் தெரியாது. வீட்டு வாசல்ல வந்து, 'செபின் இருக்காங்களா? நான் ஸ்டாலின் வந்திருக்கேன். அவங்களை வாழ்த்திட்டுப்போக வந்தேன்'னு அவரு சொல்லவும் எங்க வீட்டுல எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க. அவரு கூடவே தெரு ஜனங்களும் கூடிட்டாங்க.

'எல்லாருக்கும் வீட்டுல இடம் இருக்கா?'னு கேட்டுக்கிட்டே, 'விழாவை ஆரம்பிக்கலாமே'னு சொன்னார் ஸ்டாலின். அதுக்கு முன்னால அவர் கொண்டுவந்திருந்த தமிழ்த்தாய் வாழ்த்து கேஸட்டைப் போடச் சொன்னார். தமிழ்த்தாய் வாழ்த்தோட என் பொறந்த நாள் விழா தொடங்கிச்சு. அவரே கேக்கை கட் பண்ணி எனக்கு ஊட்டினார். அவரும் ஒரு தட்டுல கேக்கை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சார். அமெரிக்காவுல இருக்கற தமிழ்ச் சங்கத்துலயும் நான் பேசறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கறதாச் சொன்ன அண்ணன், அங்க எப்படிப் பேசணும்னு டிப்ஸ§ம் கொடுத்தார். அண்ணனோட பொண்ணு செந்தாமரையும், மருமகன் சபரீசனும் தரையில என் பக்கத்துல உட்கார்ந்து ஸ்வீட் சாப்பிட்டாங்க. ஒரு மணிநேரம் எங்க வீட்டுல இருந்துட்டு கிளம்புன ஸ்டாலின் அண்ணாக்கிட்ட, 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலைண்ணே'ன்னு சொன்னேன். 'அமெரிக்கா போய் நம்மூர்ப் பெருமையை நல்லபடியாப் பேசிட்டு வர்றதுதான் நீ எனக்கு செய்யிற கைம்மாறு'ன்னு சொல்லிட்டுக் கிளம்பினார்!'' --உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிமுடித்தார் செபின்.

அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ஸ்டாலினிட மும் பேசினோம். ''என் வாழ்க்கையில் மறக்க முடியாத அரிய விழா அது. தனக்குப் பார்வை யில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்காமல், தன்னம் பிக்கையைத் தன்னுள் தேக்கிவைத்திருக்கும் செபினை எவ்வளவு பாராட்டினாலும்தகும். பள்ளிப் படிப்பில் முதலி டம், உலக அறிவில் உச்சம் என செபினிடம் இருந்த திறமைகளைக் கண்டு வியந்துபோனேன். என் சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் சிறுமலர் பார்வையற் றோர் பள்ளி மாணவியான செபின், அமெரிக்கா செல்ல நிதி தந்து உதவுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அவர்களும் கனிவோடு அதைப் பரிசீலித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அந்தத் தொகையை செபினுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அந்த நிதியைப் பெற்றுக்கொள்ள வந்தபோது தன் பிறந்தநாள் விழாவுக்கு செபின் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவருடைய இல்லத்துக்குச் சென்றேன். இதில் வியப்படைய எதுவும் இல்லை. செபின் விஷயத்தில் எல்லாப் புகழும் தமிழக முதல்வர் அவர்களையே சேரும். செபின், தன் வாழ்க்கையின் எல்லா உயரங்களுக்கும் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கும் செபினுக்கும் ஜூ.வி-யின் வாழ்த் துக்கள்!

Read More...

விவேகானந்தர் இல்லம் - ஜெ, சோ கருத்து

விவேகானந்த இல்லம் குறித்து ஜெ, சோ, சரத்குமார், நெல்லை கண்ணன், இல.கணேசன், அர்ஜுன் சம்பத், எஸ்.வி.சேகர் மற்றும் பலர்... கருத்து

ஜெயலலிதா
கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ் செம்மொழி மையத்தில் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன் மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத்தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார்.

இந்தியத் திருநாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.

அந்த இடத்தில் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது.

பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என்றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகானந்தரை திட்டமிட்டு அவமதிப்பதுபோல் உள்ளது. தமிழ் மொழி, செம்மொழி என்று ஆரம்பித்து கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம்.

மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் விவேகானந்தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபகரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சோ
இந்து மத நம்பிக்கை தொடர்பானவற்றை இடிப்பதில் முதல்வருக்கு ஆர்வம் - சோ

இந்து மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை இடிப்பதில் முதல்வர் கருணாநிதி காட்டும் ஆர்வத்திற்கு "மதச்சார்பின்மை' என்ற பெயர் போலும் என மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி கூறியுள்ளார்.

விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்க அரசு முயற்சிப்பது தொடர்பாக "தினமணி' வெளியிட்ட செய்தி குறித்து அவர் தெரிவித்த கருத்துகள்:

செம்மொழி ஆய்வு மையம் அமைப்பதற்குச் சென்னையில் பல இடங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விவேகானந்தர் இல்லம் அப்படியல்ல. இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அவர் தங்கிய இடம் என்பதால்தான் அந்த இடமே ராமகிருஷ்ணா மிஷனுக்குத் தரப்பட்டது.

சென்னை பக்கமே எட்டிப் பார்த்திராத கண்ணகிக்கு குறிப்பிட்ட இடத்தில்தான் சிலை இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய முதல்வர், விவேகானந்தர் தங்கியிருந்த இடத்தில் அவருடைய பெயரில் ஓர் இல்லமும், கண்காட்சி அரங்கமும் நடப்பதை ஏன் குலைக்க முயல்கிறார் என்று தெரியவில்லை.

இந்துமத நம்பிக்கைகளுடனோ, சிந்தனைகளுடனோ சம்பந்தப்பட்ட ஏதாவது ஓர் இடம் இருந்தால் -அது ராமர் பாலமாக இருந்தாலும் சரி, விவேகானந்தர் இல்லமாக இருந்தாலும் சரி -அதை இடித்துவிட வேண்டும் என்பதில் முதல்வர் காட்டும் ஆர்வத்திற்கு மதச்சார்பின்மை என்ற பெயர்போலும்.

தமிழக அரசு செய்ய முயற்சிக்கும் செயல் சட்ட ரீதியாகவும் சரி, தார்மிக ரீதியாகவும் சரி -ஏற்றுக்கொள்ள முடியாதது.

"எழுங்கள், விழிப்புணர்வு கொள்ளுங்கள்' என்பது விவேகானந்தரின் வாக்கு. முதல்வரின் கண்டிக்கத்தக்க போக்கு குறித்து தமிழகத்தின் நலன் விரும்புவோர் அனைவரும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்றார் சோ ராமசாமி.

பெ.சு.மணி
பேரதிர்ச்சி - பெ.சு.மணி

"விவேகானந்தர் இல்லம் இடிக்கப்படுமா?' - என்ற செய்தியைப் படித்து பேரதிர்ச்சியுற்றேன்.

""இந்திய நாகரிகத்தின் தந்தை வடமொழி பேசும் இனம் என்றால், அதன் சிறந்த இனமான தமிழ் இனம் தாயினமாகும்'' என்றும், ""ஆதிகாலத் தமிழர்களின் தொன்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆரியர்களும் செமிட்டியர்களும் வெறும் குழந்தைகளே'' என்றும் வரலாற்றாய்வு நோக்கில் சுட்டிக்காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரை "கண்டுபிடித்ததில்' தமிழகம் பெற்ற முதன்மையை ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் நன்றியறிதலுடன் பாராட்டியுள்ளனர். இந்த ஆன்மிக பண்பாட்டு பாரம்பரியத்தின் சின்னமாகத் திகழும் விவேகானந்தர் இல்லம் ""இடிக்கப்படுமா'' எனும் வினாவிற்கு கட்சி, மத, இன எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் புகழ்பெற்ற தமிழக அரசு ஆக்கபூர்வமான விடையைத் தரும் என எதிர்பார்க்கிறேன் என்று முதுபெரும் எழுத்தாளர் பெ.சு. மணி கருத்து தெரிவித்தார்.

சரத்குமார்
ஏற்புடையதல்ல - சரத்குமார்

விவேகானந்தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக்கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

"ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக்கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல. எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை கண்ணன்
விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது:

"சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் சார்பில் விவேகானந்தர் உரையாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோவுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ்வளர்த்த பாஸ்கர சேதுபதி.

அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்பலில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற்பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங்களை வைத்து இறங்க வேண்டும்' என்றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலையில் கைவைத்து தாண்டி வந்தார். பின்னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதியையும் அவமதிப்பதாகும்.

அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந்ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகானந்தர். விவேகானந்தரை உலகம் அறியச் செய்தது சேதுபதி மன்னர்தான். அப்படிப்பட்ட விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை ஏற்படுத்தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரனின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தினார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்களுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். ""ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் நெல்லை கண்ணன்.

இல.கணேசன்
அரசு வழங்கிய விவேகானந்தர் இல்லத்துக்கான உரிமையை ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரத தேசத்தில் வாழ்ந்த துறவிகள் அனைவருமே தேசபக்தர்கள் என்றாலும் சுவாமி விவேகானந்தர் மட்டுமே தேசபக்த துறவி என அழைக்கப்பட்டவர். இப்பொழுது பேசப்படுகிற பகுத்தறிவு வாதம், சமூக நீதி, மூடப்பழக்கங்களை சாடல், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல் எல்லாவற்றையும் அவரைவிட ஆழமாக, ஆணித்தரமாக பரப்பியவர் எவருமில்லை.

அவர் பாரத நாட்டில் தங்கியிருந்த இடங்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் சில நாள்கள் தங்கியிருந்த ஐஸ்ஹவுஸ் கட்டடம், விவேகானந்தர் இல்லமாக செயல்பட்டு வருகிறது.

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீண்டகால உரிமம் வழங்குவது உண்டு.

அப்படி வழங்கப்பட்ட இடம் எந்த நோக்கத்துக்காக தரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது இருந்தாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அதை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் விவேகானந்தர் இல்லம் எந்த நோக்கத்துக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டதோ அதே நோக்கத்தில் எந்தவித பிசிறில்லாமல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு உரிமத்தை இடையில் ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை. அந்த இடத்தில் செம்மொழி மையம் அமைய உள்ளதாகத் தெரிகிறது. செம்மொழி மையம் தேவைதான். செம்மொழி மையம் எந்த இடத்திலும் அமைத்துவிடலாம். ஆனால் "விவேகானந்தர் தங்கியிருந்த இடம்' என்கின்ற பெருமை எல்லா இடத்துக்கும் கிடைத்து விடாது. நாடு முழுவதும் விவேகானந்தர் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநில அரசு கூட விவேகானந்தரை மதிக்கிறது.

எனவே தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டு விவேகானந்தர் இல்லத்துக்கு தரப்பட்டுள்ள உரிமத்தை 2010-க்கு பின்னும் 30 ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று இல. கணேசன் கூறியுள்ளார்.

அர்ஜுன் சம்பத்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்:
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது.

ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. விவேகானந்தர் தமிழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி. சேகர் (மயிலாப்பூர் எம்.எல்.ஏ): விவேகானந்தர் இல்லத்தை காலி செய்யச் சொல்லிவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கும் அரசின் முடிவு முற்றிலும் தவறானது.

தமிழ் செம்மொழி மையத்தை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். விவேகானந்தர் இல்லத்தை, அவர் தங்கியிருந்த அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அமைக்க முடியாது.

கர்நாடகத்தைப் பின்பற்றி, தமிழக அரசும் விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

எல். நடராஜன் (சமூக சேவகர், கே.கே.நகர்): கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உண்மையான கலாசார சின்னத்தை தி.மு.க. அரசு இடிக்கிறது.

ஓம் பிரகாஷ் ராய் (ஆசிரியர், அசாம்): விவேகானந்தர் இல்லம் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, ஆன்மிகத் தலமும் கூட. வெளி மாநிலங்கள், வெளிநாட்டுப் பயணிகளிடம்கூட இந்த இடம் பிரபலமாக உள்ளது. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

எஸ். மோகன் (சென்னை): அந்த செய்தியைப் பார்த்தது முதல் இதயம் முழுக்க வலியுடன் இந்த விவேகானந்தர் இல்லத்தில் அமர்ந்துள்ளேன். இந்த இடம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கோயில் போன்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் இருந்தேன். அப்போது, விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தவுடன் அந்த எண்ணம் நீங்கியது.

( நன்றி: தினமணி )

Read More...

குருவாயூர் கண்ணனுக்கு க்ரோசின் கொடுத்த பக்தர்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் எடைக்கு எடை "பாராசிட்டமால்' என்னும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரண மாத்திரையை அளித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார் கேரள பக்தர் சத்யம்.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பல்வேறு வகையில் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்குள்ள துலா பாரத்தில் எடைக்கு எடை வாழைப்பழம் மற்றும் வெல்லம் போன்றவற்றை காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் முதன் முறையாக எடைக்கு எடை "பாராசிட்டமால்' மாத்திரையைக் கொடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளார் சத்யம் .


திருச்சூர் மாவட்டம், குத்தூரை சேர்ந்த சத்யம் என்பவர், துலா பாரத்தின் ஒரு பக்கம் உட்கார, மறு பக்கம் அவரது 72 கிலோ எடைக்கு ஏற்ற வகையில் மாத்திரைகள் குவிக்கப்பட்டன. மருந்துகளை மொத்த வியாபாரம் செய்து வரும் சத்யத்தின் தந்தை வேண்டிக் கொண்டதற்க்குகிணங்க ,குருவாயூர் கிருஷ்ணனுக்கு இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டாதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகிகள், இந்த மாத்திரைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

Read More...

குருவாயூர் கண்ணனுக்கு கிரோசின் கொடுத்த பக்தர்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் எடைக்கு எடை "பாராசிட்டமால்' என்னும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரண மாத்திரையை அளித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார் கேரள பக்தர் சத்யம்.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பல்வேறு வகையில் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்குள்ள துலா பாரத்தில் எடைக்கு எடை வாழைப்பழம் மற்றும் வெல்லம் போன்றவற்றை காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் முதன் முறையாக எடைக்கு எடை "பாராசிட்டமால்' மாத்திரையைக் கொடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளார் சத்யம் .


திருச்சூர் மாவட்டம், குத்தூரை சேர்ந்த சத்யம் என்பவர், துலா பாரத்தின் ஒரு பக்கம் உட்கார, மறு பக்கம் அவரது 72 கிலோ எடைக்கு ஏற்ற வகையில் மாத்திரைகள் குவிக்கப்பட்டன. மருந்துகளை மொத்த வியாபாரம் செய்து வரும் சத்யத்தின் தந்தை வேண்டிக் கொண்டதற்க்குகிணங்க ,குருவாயூர் கிருஷ்ணனுக்கு இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டாதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகிகள், இந்த மாத்திரைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

Read More...

Tuesday, April 22, 2008

தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்

தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்

பாடல்கள் லிஸ்ட் கீழே...

Track Listings

1. UlagaNayagan (Come Dance With Me)
Singer : Vinith
Lyrics : Vairamuthu

2. Kaalai Matum Kandal
Singer : Hariharan & Chorous
Lyrics : Vaali

3. Oh…Ho..Sanam
Singer : KamalHassan & Mahalakshmi Iyer
Lyrics : Vairamuthu

4. Mukundha Mukundha
Singer : Sadhana Sargam & Kamal Hassan
Lyrics: Vaali

5. Kaa…Kaarupanukkum
Singer : Shalini Singh
Lyrics : Vairamuthu

6. Oh…Ho…Sanam (Remix)
Singer : Himesh reshmiyaa & Mahalaksmi Iyer
Lyrics : Vairamuthu

Read More...

விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்துகிறது...

சென்னை திருவல்லிக்கேணி பேருந்துகள் இனிமேல் வி.இல்லம் என்ற போர்ட் இல்லாமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்தும் என்று தெரிகிறது. இதற்கு பதில் அங்கு மத்திய அரசு செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவவுள்ளதாம். இவர்களுக்கு வேற இடமே கிடைக்கவில்லையா ?

இதுவே 'அண்ணா இல்லமாக' அல்லது அண்ணாவின் ஒன்றுவிட்ட பெரியப்பாவின் இல்லமாக இருந்தால் இது போல் செய்ய மாட்டார்கள். வாழ்க !

இந்த கட்டடத்தை பற்றி சில குறிப்புக்கள் கீழே


சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தை வரும் 24ம் தேதிக்குள் காலி செய்து விடுமாறு, ராமகிருஷ்ணா மடத்துக்கு தமிழக அரசுத் தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு கெர்னன் கோட்டை என்றும், பின்னர் ஐஸ் ஹவுஸ் என்றும் அழைக்கப்பட்ட பழமையான கட்டடம்தான் விவேகானந்தர் இல்லம். வங்கக் கடலை நோக்கி, மெரீனா கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த எழில் மிகு கட்டடம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

1897ல் அமெரிக்காவின் சிகாகோ நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிவிட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் இந்த கட்டடத்தில்தான் பிப்ரவரி 6 முதல் 15ம் தேதி வரை 9 நாட்கள் தங்கியிருந்தார்.

இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஸ் கட்டிகள் இந்த கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. அதன் பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதனால்தான் இதற்கு ஐஸ் ஹவுஸ் என்ற பெயர் வந்தது.

விவேகானந்தர் இந்த இல்லத்திற்கு வந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி 1999ம் ஆண்டு, விவேகானந்தர் இல்லத்தை, ராமகிருஷ்ணா மடத்திற்கு 10 ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போதைய திமுக அரசு. இந்த இல்லத்தில் விவேகானந்தர் குறித்த கண்காட்சியகத்தை நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன்படி அன்று முதல் இங்கு விவேகானந்தர் குறித்த நிரந்தர கலாச்சாரக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. ரூ. 65 லட்சம் செலவில் இந்தக் கண்காட்சிக் கூடத்தை ராமகிருஷ்ணா மடம் அமைத்துள்ளது.

கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கண்காட்சிக் கூடம் நல்ல சிந்தனை விருந்தாக அமைந்துள்ளது. பத்து ஆண்டு குத்தகை முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் 30 ஆண்டு குத்தகைக்கு இந்த கட்டடத்தைக் கேட்க ராமகிருஷ்ண மடம் தீர்மானித்திருந்தது.

ஆனால் இப்போது விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு தற்போது நிர்ப்பந்தம் எழுந்துள்ளதாம்.

கடந்த 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன், கண்காணிப்புப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் விவேகானந்தா இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சகஜானந்தாவை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். இதை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சட்டப்பூர்வ ஆலோசனைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவவுள்ளது. இந்த மையத்தை விவேகானந்தர் இல்லத்தில் அமைக்க அரசு விரும்புவதாக தெரிகிறது. எனவேதான் ராமகிருஷ்ணா மடத்தை, இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் ராமகிருஷ்ணா மடம் செயல்பட்டு வந்தது. பின்னர் 1906ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் ஏலத்தில் விடப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த இடத்தைக் காலி செய்து விட்டு தற்போது மயிலாப்பூரில் உள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிக்கலை விவேகானந்தர் இல்லத்தில் சந்தித்துள்ளது ராமகிருஷ்ணா மடம்.வி.இல்லத்தை பற்றி சில குறிப்புகள்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் "விவேகானந்தர் இல்லம்" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஸயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தரிடம் ஒரு நேர்முக உரையாடல்:

இந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு நிறையவே இருக்கிறது. இதைப் பற்றி நான் உங்களுக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார்.

அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஜ்கர சேதுபதியைச் சந்தித்தார்.

ராமேஜ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.

சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார்.

சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.

1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன.

அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஸனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் பாம்பன், ராமேஜ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார்.

அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.


விவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஜ் ஹவுஜ் கட்டிடத்தில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.


... புதுப்பிக்கப்படுகிறது

இந்தக் கட்டிடத்திற்கு 'ஐஸ் ஹவுஸ்'என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?

நம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஜ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஜ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே "ஐஜ் ஹவுஜ்" என்ற பெயர் ஏற்பட்டது.

"விவேகானந்தர் இல்லமாக" எப்போது இக்கட்டிடத்தின் பெயர் மாற்றப்பட்டது?

விவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு "ஐஜ் ஹவுஜ்" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு "காஜில் கெர்னன்" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.

1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு "விவேகானந்தர் இல்லம்" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.

விவேகானந்தரின் சென்னை விஸயமே ஸ்ரீராமகிருஷ்ணமடம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க முக்கிய காரணமாயிற்று-இல்லையா?

ஆம். 1897-ஆம்ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஜ் ஹவுஜ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், "சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.

1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஜில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.

விவேகானந்தர் இல்லத்திற்கு முக்கியமாக வருகை புரிந்தவர்களைப் பற்றிக் கூறவும்.

அங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஜில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இக்கட்டிடத்தில் நடைபெற்ற முக்கியமான விழாவைப் பற்றிக் கூறவும்.

1902-ஆம் ஆண்டு ஸூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஸனவரி மாதம் காஜில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக "விவேகானந்தர் ஸயந்தி" கொண்டாடப்பட்டது.

இப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்த ஸயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஸயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஜில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.

ரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கட்டிடத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஏன் இவ்வளவு காலமாகக் கவனிக்காமல் விட்டிருந்தது? இப்போதுதானே நீங்கள் இந்த விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறீர்கள்?

1897-ல் காஜில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.

1906-ஆம் ஆண்டு காஜில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.

1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.

1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.

அந்த ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை அந்தச் சிலையின் அருகில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளும், மடத்தின் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

பிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஸனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஸனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஸயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.

அன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.

விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குத் தரும்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1997-ஆம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தமிழக அரசு விவேகானந்தர் இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

அரசு வழங்கிய உடனேயே விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஏன் மேற்கொள்ளவில்லை?

தமிழக அரசு விவேகானந்தர் இல்லம் கட்டிடத்தை மட்டும்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த நிலப்பகுதியையும் தமிழக அரசு கொடுத்தால்தான், அங்கு இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

எனவே ஸ்ரீராமகிருஷ்ண மடம், இல்லத்தின் அருகிலிருக்கும் பகுதியையும் தரும்படி தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டிருந்தது.

இப்போது 1998 டிசம்பர் மாதத்தில்தான் அந்த இடத்தை தமிழ் நாடு அரசு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

அப்படி டிசம்பரில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதமே விவேகானந்தர் இல்லத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.

"விவேகானந்தர் இல்லம்" கட்டிடம் முதன்முதலில் எப்போது கட்டப்பட்டது? இக்கட்டிடத்தைச் சீரமைப்பதற்கு எவ்வளவு காலமாகும்? சுமாராக எவ்வளவு செலவாகும்?

இந்தக் கட்டிடம் 1842-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும். இப்போது இங்கு கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் ஆறு மாதத்தில் கட்டிடம் முழுவதையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.

இந்தப் பணி எல்லா விதத்திலும் சிறப்பாக நடந்தேறுவதற்கு சுமார் 1.5 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதற்கு பொது மக்களைத் தாராளமாக நன்கொடை தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

விவேகானந்தர் இல்லக் கட்டிடம் சீரமைக்கப்பட்ட பிறகு இந்த இடத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் எப்படி பயன்படுத்த இருக்கிறது?

விவேகானந்தர் இல்லத்தை இந்திய கலாசார மையம் ஆக்குவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது.

இந்த இல்லம் சென்னை மாநகரத்தில் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைய இருக்கிறது.

இங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம்.

இங்கு விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம்.

இங்கு விவேகானந்தரின் கருத்துகள் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் மூலம் விளக்கப்படும்.

அதோடு இங்கு இளைஞர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தின் கல்வியும், பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

சென்னையின் பெருமைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த விவேகானந்தர் இல்லம் அமைய இருக்கிறது.

இந்தப் பணி சிறந்த முறையில் அமைந்து, நாட்டு மக்களுக்குப் பல விதங்களிலும் பயன்படுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
( பேட்டி வருடம் : 1999 )தினமணி செய்தி

சென்னை விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய அரசு நெருக்கடி!

சென்னை, ஏப். 21: சென்னை மெரீனா கடலோரம் கம்பீரமாகக் காட்சி தரும் விவேகானந்தர் இல்லத்தை இம் மாதம் 24-ம் தேதி வியாழக்கிழ மைக்குள் காலி செய்துவிட்டு, இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ராமகிருஷ்ண மடத்தைத் தமிழக அரசு மறைமுகமாக வற்புறுத்துவதா கத் தெரிகிறது.

"ஐஸ்-ஹவுஸ்' என்று அழைக்கப்பட்ட பழங்காலத்திய அந்த கட்டடத்தில்தான் சுவாமி விவேகானந்தர், 1897-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வதேச மத மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய பிறகு பிப்ரவரி 6 முதல் 15-ம் தேதி வரை 9 நாள்கள் தங்கியிருந் தார்.

"கெர்னான் கேசல்' என்று அந்த கட்டடத்துக்குப் பெயர். பிரிட்டிஷார் காலத்தில், வெள்ளைக்கார துரைமார்களுக்காகக் கப்பலில் கொண்டுவந்த ஐஸ் கட்டிகளை முதலில் அந்தக் கட்டடத்தில் இறக்கி வைத்து, பிறகு நகரின் பல பாகங்களுக்கு அனுப்பிவந்தனர். எனவே அந்த கட்டடத்துக்கு "ஐஸ்-ஹவுஸ்' என்ற பெயரே பின்னாளில் நிலைத்தது. இவ்விதம் வரலாற்றுடன் தொடர்புள்ள அந்த கட்டடத்தை ராமகிருஷ்ண மடத்தாரிடம் ஒப்படைப்பதே பொருத்தமான செயல் என்று கருதி 1997-ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.

விவேகானந்தரின் போதனை களை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்களும் விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகமாக இந்த இல்லத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ராமகிருஷ்ண மடத்துக்கு இந்த கட்டடம் 1997 பிப்ரவரி 24-ல் குத்தகைக்கு தரப்பட்டது. அவர்களும் அவ்விதமே அதை புதுப்பித்து, 1999 டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதித்தனர். ஒரு மாதம் கழித்து, பத்தாண்டு குத்தகை என்று மடத்தாருக்கு அரசிடமிருந்து உரிய கடித மும் அனுப்பப்பட்டது. அதன்படி 2010 வரை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகை உரிமை இருக்கிறது.

விவேகானந்தர் இல்லம் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அங்கு நிரந்தர காட்சிக்கூடம் வைக்க ராமகிருஷ்ண மடம் ரூ.65 லட்சத் தைத் திரட்டியது. அத்துடன் ரூ.30 லட்சத்தைத் தொகுப்பு நிதியாகவும் ஒதுக்கியது. இப்போது அந்த இல் லம் சென்னைவாசிகளை மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பிற ஊர்க்கா ரர்களையும் பிற மாநிலத்தவரையும் வெளிநாட்டவரையும் ஈர்த்து வருகி றது.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு, மேலும் 30 ஆண்டுகளுக்குத் தங்களுக்கு இந்த இடம் குத்தகைக்குத் தரப்படும் என்று நம்பியிருந்த ராமகி ருஷ்ண மடத்தாருக்கு திடீர் அதிர்ச்சி; அரசு தரப்பிலிருந்து கண் காணிப்புப் பொறியாளர் அன்பழ கன், செயற்பொறியாளர் அண்ணா துரை ஆகிய இருவரும், இம் மாதம் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்கு ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று சுவாமி சகஜானந்தரைச் சந்தித்தனர்.

""விவேகானந்தர் இல்லத்தை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வேறு ஏதா வது கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றும், அதற் கேற்ப மாற்று பங்களாவைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரி வித்தனர்.

தமிழக முதல்வருக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கும் நெருக்கமான ஒரு தொழிலதிபர் மீண்டும் சுவாமி ஜியைத் தொடர்புகொண்டு, "ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தைக் காலி செய்து கொடுத்துவிடுங்கள்' என்று ஆலோசனை கூறினார்.

விவேகானந்தர் இல்லத்தில் தமிழ் செம்மொழி மையத்தை நிறுவ திமுக தலைமை விரும்புவதாகவும், அதற் காகத்தான் இந்தக் கட்டடத்தைக் கையகப்படுத்த விரும்புவதாகவும் தெரிகிறது. செம்மொழி மையத்தை நிறுவ வேறு பல இடங்கள் இருக்கும்போது, விவேகானந்தர் இல்லம் ஏன் குறி வைக்கப்படுகிறது என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கி றது.

பாரம்பரியக் கட்டடமான விவேகானந்தர் இல்லம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமா டிக் கட்டடம் எழுப்பப்படக்கூடும் என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.

இந்த நெருக்கடியிலிருந்து மீள, அடுத்து என்ன செய்வது என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனையை ராமகிருஷ்ண மடம் நாடியிருக்கிறது.

விவேகானந்தர் இல்லம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமாடிக் கட்டடம் எழுப்பப்படக்கூடும் என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.Read More...