பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 25, 2008

FLASH: பதவியிலிருந்து ராஜினாமா

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான், தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது. இலங்கை ராணுவ தளபதி பொன்.சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்திற்கு உரியது. அதற்காக ஒட்டுமொத்த இலங்கையில் வாழும் தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணையை வைத்துவிட்டு, தமிழ் இனத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ்விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 29ந் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ந் தேதி சென்னையிலும் லட்சிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன்.

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதில் துவங்கி தமிழக மக்கள் பிரச்சனைக்காக லட்சிய திமுக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா கடிதத்தை எப்போது வழங்கினீர்கள் என நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, இன்று காலை முறைப்படி விலகல் கடிதத்தை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.

ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் பதில் அளித்தார்

5 Comments:

Hariharan # 03985177737685368452 said...

பதவிக்காக லட்சியத்தை அடமானம் வைத்த விஜய.டி.ராஜேந்தர் சிறுசேமிப்புத் துணைத்தலைவர் பதவியில் இருந்தபடியே தானே அடமானமாக வைத்த தன் லட்சியத்தை சிறுகச் சிறுக மீட்டு எடுத்திருக்கிறாராமா இப்போ???

//ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் பதில் அளித்தார் //

கொளுகைக் கவரிமான்??

விஜய டி.ராஜேந்தர் வெட்கம் , மானம், லட்சியம் உதிர்த்த அக்மார்க் தமிழ்நாட்டு அரசியல் கழுதை!

சந்தர்ப்பவாத பதவி , பலன், மாட்டு(ம்) சந்தையில் சரியானபடிக்கு தலைமையின் கை விரல்களைப் பிடித்துவிட்டால் இப்படியான இரும்புமாதிரி கொளுகைக் களுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிடும்!

மற்றபடிக்கு நம்ம விஜய டி. ராஜேந்தரின் அரிய அரிய அரிதினும் அரிய மற்றும் கண்களுக்கு எளிதில் காணக்கிடைக்காத கலைப்படைப்பான வீராச்சாமி ஆஸ்காருக்கோ / கேன்ஸ் திரைத்திருவிழாவிலோ வென்றால் மட்டும் தயவு செய்து ஃப்ளாஷ் போடவும்!

Anonymous said...

veru padhavi vendum enbathai-thaan ippadi comedy-ya sollugiraar.....

Anonymous said...

அய்யா ராசா !
வண்டலூர் ஜூ விலே "அரசு சிறப்பு கரடி " இடம் காலியா இருக்காம்...அங்கன டி ஆர அனுப்புங்கையா !! நேரடி தேர்வு, வேலை கடிதம்..எதுவும் வேண்டாம்..ஜஸ்ட் அங்கே போயி... உடுப்புகளை அவிழ்த்து விட்டு அம்மணமா கூண்டுக்குள்ள நின்னா போதும்...மாசம் பொறந்தா சம்பளம், கரடி முடி வித்த காசு..பேட்டா எல்லாம்...சரியா வீடு போயி சேரும்...
லட்சிய தி மு க, அதாங்க அவரோட கட்சி பேரு...கொள்கை உலக அளவிலே புகழ் பெரும்...சீக்கிரம் போகச்சொல்லுங்க...திருமா வளவன் அந்த போஸ்ட் க்கு கலைஞரிடம் அடி போடுறதா கேள்வி..!!

இலவசக்கொத்தனார் said...

//
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்திற்கு உரியது. அதற்காக ஒட்டுமொத்த இலங்கையில் வாழும் தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.//

விஜய டி யே சொல்லிட்டாரு! அடுத்த பிரதமர் ஈழத் தமிழர்தான் போல!!

ஆமாம், ஒருத்தர் வெளிநடப்பின் போது கூட வரலைன்ன உடனேவே இன்னும் ஒருத்தர் பதவி விலகறாரே!!

இந்த ஆக்ஷன் ரியாக்ஷன் எல்லாம் புரியவே மாட்டேங்குது சாமி!

Anonymous said...

That Tamil Nadu can take anything is proved by people like Vijay T Rajender. It is the media and incorrigibly tolerant population that is responsible for the proliferation of such personalities and their phenomenal confidence.
But the state needs him for the comic relief he provides amidst day-to-day problems