பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 20, 2008

தஸ்லிமா இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினார் ?

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் (46). இவரது புத்தகங்கள் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ளன. நேற்று இந்தியாவை விட்டுவெளியேறினார் - செய்தி

ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். இஸ்லாமிய ஓட்டு தங்களுக்கு அடுத்த தேர்தலில் கிடைக்காது என்று தற்போதைய மதசார்பற்ற அரசு நினைத்திருக்கும். வேற என்ன ?


கொல்கத்தா நகரில் தங்கியிருந்த அவரை வெளியேற்றவேண்டும் என்று இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். கொல்கத்தாவில் பெரும் கலவரமும் வெடித்தது. இதனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தஸ்லிமா நஸ்ரீன் கடந்த 6 மாதங்களாக மத்திய அரசின் கண்காணிப்பில் டெல்லியில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீன் நேற்று டெல்லியில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கண்காணாத(சுவிடன்) இடத்திற்கு அவர் தலைமறைவானார்.

பேட்டி:

இந்தியாவில் இருந்தபோது எனக்கு மிகுந்த மன உளைச்சல் இருந்தது. அப்போது அரசின் கண்காணிப்பில் இருந்ததால் என்னால் எதுவும் பேச இயலவில்லை. அந்த அளவிற்கு அவர்களால் துன்புறுத்தப்பட்டேன். டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் சித்ரவதை அறையாகவே இருந்தது. அப்போதுதான் அதை கொஞ்சம் கொஞ்சமாக மரண அறை என்பதை உணர்ந்து கொண்டேன்.

மத அடிப்படைவாதிகள் பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு இந்திய அரசு என்னை நடத்தியது.

தற்போது என் முகம் வெளியுலகிற்கு நன்கு தெரிந்து விட்டது. அதனால் இனி நான் எங்கே தங்கப்போகிறேன் என்பதை தெரிவிக்கப்போவதில்லை. அப்படித் தெரிவித்தால் மத தீவிரவாதிகள் என் உயிருக்கு குறி வைத்து விடுவார்கள்.

0 Comments: