பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 03, 2008

தீர்ப்பு பற்றிய சர்ச்சை துக்ளக் தலையங்கம்

முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வரும் கொஞ்சம் நாட்களுக்கு முன் அறிக்கை குஸ்தி போட்டது நினைவிருக்கலாம்.
அதை பற்றிய துக்ளக் தலையங்கம்

"பொடா' வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? இதுபற்றி ஒரு சர்ச்சை, தமிழக முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் இடையே
நடந்துகொண்டிருக்கிறது. "பொடா'வே, போய்விட்ட சட்டம் என்றாலும் – "தீவிரவாதம் பற்றி அரசின் அணுகுமுறை என்ன?' என்ற கேள்வி, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பதால், இது கவனத்திற்குரியது.

முதல்வர், சட்டசபையில் தான் பேசியதைக் குறிப்பிட்டு, தனது அறிக்கையில் இப்படிச் சொல்லியிருக்கிறார் : "...நான் பேசும்போது... தடைசெய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலே ஒரு வரி வெளிவந்திருக்கிறது... என்று கூறி, அது அவைக் குறிப்பிலும் இடம்பெற்றிருக்கிறது'.
முதல்வரின் பேச்சினுடைய இந்தப் பகுதியைப் பற்றித்தான், ஜெயலலிதா கேள்வி எழுப்பி பேசினார்; அறிக்கை வெளியிட்டார். "தடைசெய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது – என்று
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலே ஒரு வரி வெளிவந்திருக்கிறது' என்ற தனது பேச்சுக்கு கலைஞர் ஆதாரம் காட்ட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா.

முதல்வர் குறிப்பிட்ட அந்த ஒரு வரி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் சர்ச்சைக்குட்பட்டுள்ள விஷயம். அந்தத் தீர்ப்பில் அப்படி ஒரு வரி இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால், முதல்வர் அந்தத் தீர்ப்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டி, அப்பகுதி தான் கூறியது உண்மை என்று நிரூபிப்பதாக – தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இதுவும் சரியில்லை. அவர் எடுத்துக்காட்டியிருக்கும் பகுதியில் கூட, சுப்ரீம் கோர்ட் "தடைசெய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும், ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது' என்று கூறவில்லை.

சரி, அந்த அர்த்தமாவது வருகிறதா என்று பார்த்தால், அதுவுமில்லை.

(சுப்ரீம் கோர்ட்டின் அந்தக் கருத்தை பார்ப்பதற்கு முன் ஒரு விஷயம் : தடைசெய்யப்பட்ட இயக்கம் – என்று நீதிமன்றம் கூறவில்லை; பயங்கரவாத அமைப்புகள் பற்றியே இந்த இடத்தில் நீதிமன்றம் குறிப்பிடுகிறது.) பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு; கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது; உதவுவது; அல்லது கூட்டத்தில் பேசுவது; ஆதரவைக் கோருவது... போன்ற நடவடிக்கைகள் பொடாவின் கீழ் குற்றங்கள். நீதிமன்றம் தனது தீர்ப்பில், இதை ஆமோதித்துவிட்டு, இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு "உள்நோக்கம்' – அதாவது, "பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டம், அல்லது எண்ணம் இருக்கவில்லையென்றால் – அந்தப் பேச்சு, அல்லது கூட்டத்தில் பங்கேற்பது போன்றவை குற்றமல்ல' என்று கூறியது.

இது "ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது' என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக எப்படி ஆகும்? "நோக்கம் இருந்தால் ஆதரவுப் பேச்சு குற்றம் ஆகும்; நோக்கம் இல்லை என்றால் ஆதரவுப் பேச்சு குற்றம் ஆகாது' என்பதுதான் நீதிமன்றம் கூறிய கருத்து. (இது கூட குழப்பத்தை உருவாக்கும்; உள்நோக்கத்தை நிரூபிப்பது கடினம்; ஆகையால் இந்த தீர்ப்பின் இந்த அம்சம் மறுபரிசீலனைக்குரியது – என்று நாம் அந்த தீர்ப்பு (2003ல்) வந்தபோதே கருத்து தெரிவித்தோம்).

ஆக, ஆதரவுப் பேச்சு, ஊக்குவிக்கும் நோக்கம், இரண்டும் தேவை – என்பது
சுப்ரீம் கோர்ட் கூறியது. இதை வைத்து, ஆதரவுப் பேச்சு குற்றமல்ல என்று எப்படிக் கூறுவது? ஒருவர் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தால் – அவருக்கு அதன் நடவடிக்கையை ஊக்குவிக்கிற நோக்கம் இருந்ததா இல்லையா என்று பார்க்க வேண்டுமே தவிர – பேச்சு குற்றமல்ல என்று அரசு சும்மா இருந்துவிட முடியாது. அப்படி சும்மா இருந்தால், உள்நோக்கம் உடைய ஆதரவுப் பேச்சு கூட, குற்றமற்றதாகி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அர்த்தமற்றதாக்கிவிடும்.

முதல்வர் "உள்நோக்கமின்றி' ஆதரவுப் பேச்சு பேசுவது குற்றமாகாது' என்று
நீதிமன்றம் கூறியதாகச் சொல்லவில்லை. "ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று தீர்ப்பில் ஒரு வரி இருக்கிறது' என்று மிகத் தெளிவாக, ஆணித்தரமாக, சந்தேகத்திற்கிடமின்றி – தவறான தகவலைப் பேசினார்.

ஆகையால், ஜெயலலிதா கோரியபடி அதற்கு ஆதாரத்தை அந்தத் தீர்ப்பில் அவரால் காட்ட முடியாது.

இதுவாவது, முடிந்துபோன பொடாவின் கதை பற்றியது. இதைவிட முக்கியம், "சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வரும்' என்று அரசு கூறியதும், அதை செயல்படுத்த மறுப்பதும். அந்த சட்டத்தின் கீழ், தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதே குற்றம்; இதில் நோக்கம் என்ன என்று கூட பார்க்கத் தேவையில்லை. அதன் கீழ் நடவடிக்கை வரும் என்று கூறிய அரசு, திருமாவளவனின் பேச்சுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – என்பது ஜெயலலிதாவின் கேள்வி. அதற்கு முதல்வரிடம் பதில் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பை அரைகுறையாக எடுத்துக்காட்டி, இனி நடவடிக்கை வரும் என்று கூறி, இப்போதைக்கு புலி ஆதரவுப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை இல்லாமல் பார்த்துக்கொள்வதே அரசின் நோக்கம் என்பதுதான் இந்த சர்ச்சையில் தெளிவாகிறது.

இது நல்லதல்ல. தமிழக அரசினுடைய இந்தப் பரிவின் முடிவு, தமிழக
அமைதியினுடைய சரிவின் ஆரம்பமாக அமைந்து விடக்கூடியது.
(நன்றி: துக்ளக் )

12 Comments:

ஜயராமன் said...

ஐயா,

சோவின் இந்த விமர்சனங்கள் எதிர்பார்க்கக் கூடியவையே. மருத்துவர் ஐயா ராமதாசு இன்று "இங்கு இலங்கைத்தமிழர்களுக்குக்காக கண்ணீர் விட்டாலே குற்றம்" என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான் கருணாநிதியின் அரசு இருக்கிறது. இதில் சுனக்கம் காட்டினால் தனது அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவார்களோ என்ற பயம் ஒருபக்கம், தமிழ்க்காதல் பூச்சாண்டி ஓட்டுக்களுக்காக இந்த விடுதலைப்புலி ஆதரவு ஒருபக்கம் என்று கலைஞர் வழக்கமான தன் ராஜபார்டில் நன்றாக டபிள்ஆக்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இது கலைஞர் பிடிச்ச புலிவால் - கடைசியில் மஞ்சள் துண்டுதான் மிஞ்சப்போகிறது. தலையில் போட்டுக்கொள்ள அளவு சரியாக இருக்குமா?

நன்றி

ஜயராமன்

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

//இது நல்லதல்ல. தமிழக அரசினுடைய இந்தப் பரிவின் முடிவு, தமிழக
அமைதியினுடைய சரிவின் ஆரம்பமாக அமைந்து விடக்கூடியது. //
தமிழின உணர்வு ஏன் பார்ப்பனர்களை இந்தப் பாடு படுத்துகிறது?

ஜயராமன் said...

ஞாயிறு அவர்களின் பின்னூட்டம் முட்டாள்தனமானது. விடுதலைப்புலிகளின் ஆதரவு என்பது தமிழின உணர்வு என்பதாக திரித்த ஒரு மலிவான முயற்சி. தமிழின உணர்வுக்கும் தமிழ்நாட்டில் குண்டு வைத்து தீவிரவாதம் பரப்பும் ஒரு பாசிச கூட்டத்தை ஆதரிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா. விடுதலைப்புலிகள்தான் ஈழத்தமிழின தலைவர்களின் கொலைக்கு பெறும்பான்மை காரணம் என்பது கூட தெரியாதா, இல்லை மறைக்கிறாரா?

நன்றி

ஜயராமன்

Anonymous said...

//தமிழின உணர்வு ஏன் பார்ப்பனர்களை இந்தப் பாடு படுத்துகிறது?//
பாடுபடுத்தவில்லை என்றால் தான் ஆச்சர்யம்!

Anonymous said...

//இது நல்லதல்ல. தமிழக அரசினுடைய இந்தப் பரிவின் முடிவு, தமிழக
அமைதியினுடைய சரிவின் ஆரம்பமாக அமைந்து விடக்கூடியது.//

என்னே கவலை!

தமிழகத்தின் அமைதியை கெடுத்த கோவை குண்டுவெடிப்பு, சேரன்-ரயில் குண்டுவெடிப்பு..... காரணம் வி.பு.?

மற்றபடி, சரிவு-பரிவு சூப்பர்!

Anonymous said...

ஓரிடத்தில் சாலை மறியல் நடந்தால் கூட அக் கலகக்காரர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் இங்கே தடை செய்யப் பட்ட இயக்கம் என்று கூறி இது வரை இலங்கை-ஈழ பிரச்சனையில் இந்தியா தலையிடுவதில்லை. இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் பிரச்சனை முடிவுக்கு வரப்போவதில்லை. அப்படி வேறு நாட்டின் (அமேரிக்கா?) தலையீட்டால் அதன் விளைவு இந்தியாவிற்கு பாதகமாகவே அமையும் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு பெரும் அபாயம். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான முயற்சிகள் பின்நோக்கியே செல்கிறது. சந்தண கடத்தல் வீரப்பனிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தும் நீங்கள் ஏன் இப்பிரச்சனையில் தயங்குகிறீர்கள். வங்கப்பிரிவினை வெற்றிகரமாய் முடித்த இந்தியாவிற்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. நார்வே நாட்டை விட இந்தியாவிற்கே உரிமையும் கடமையும் உள்ளது.

ஜயராமன் said...

ஜீயார் ஐயா,

//// ஓரிடத்தில் சாலை மறியல் நடந்தால் கூட அக் கலகக்காரர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் இங்கே தடை செய்யப் பட்ட இயக்கம் என்று கூறி இது வரை இலங்கை-ஈழ பிரச்சனையில் இந்தியா தலையிடுவதில்லை. ///

தவறான பார்வை. எந்த உள்நாட்டுப் பிரச்சனையுமே வெளிநாடுகளின் தலையீட்டால் சரிசெய்திட முடியாது. இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை எல்லா சார்பாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கையில், இந்தியாவின் தலையீட்டு அங்கிருக்கும் பங்காளர்களை தீர்விலிருந்து மாற்றி இந்தியாவுக்கு எதிரான விரோதங்களையே வளர்க்கும். அப்படியே தீர்வு அமைந்தாலும், அது நிரந்தர தீர்வாய் இருக்காது.

/// இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் பிரச்சனை முடிவுக்கு வரப்போவதில்லை. ///

இது என்ன, தங்கள் எண்ணமா இல்லை இலங்கை அரசின் அதிகார பூர்வ கொள்கையா? :-))) விடுதலைப்புலிகள் தரப்பில் இருக்கும் தவறுகளை இந்தியா பாரபட்சமில்லாமல் எடுத்துச்சொல்லி விடுதலைப்புலிகள் மாறும் சூழல் நிச்சயாமாக இல்லை. நான் செய்வதைத்தான் செய்வேன், ஆனால், தீர்வு வேண்டும் என்று புலிகள் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்தியாவின் குறுக்கீடு என்பது ஒரு தலைப்பட்சமாகவே இலங்கை அரசாங்கத்தால் பார்க்கப்படும். இதனால் நிரந்தர தீர்வு ஏற்படாது.

//// அப்படி வேறு நாட்டின் (அமேரிக்கா?) தலையீட்டால் அதன் விளைவு இந்தியாவிற்கு பாதகமாகவே அமையும் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு பெரும் அபாயம். //

அமெரிக்க அரசு பல முட்டாள்தனங்களை செய்திருந்தாலும், இலங்கையில் தலையிடும் அளவுக்கு மூடர்களாக ஆக மாட்டார்கள் என்றுதான் தோண்றுகிறது. :-))

/// ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான முயற்சிகள் பின்நோக்கியே செல்கிறது. சந்தண கடத்தல் வீரப்பனிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தும் நீங்கள் ஏன் இப்பிரச்சனையில் தயங்குகிறீர்கள். ///

வீரப்பனிடம் பேச்சு வார்த்தை கடத்தல் சமயத்திலே மட்டும்தான். அதனால் இந்த உதாரணம் தவறானது.

/// வங்கப்பிரிவினை வெற்றிகரமாய் முடித்த இந்தியாவிற்கு இது ஒரு பிரச்சனையே இல்லை.///

வங்கம் இன்று முழுக்க தலிபான் கூட்டமாகி இந்தியாவின் விரோத சக்திகளுக்கு ஆதரவாய் திகழ்கிறதே. இதனால், பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாமே!!

/// நார்வே நாட்டை விட இந்தியாவிற்கே உரிமையும் கடமையும் உள்ளது. ////

நார்வே நாடு ஒரு ந்யூட்ரல் அம்பயர். இந்தியா அல்ல. அதுவும் இந்திய அரசு கருணாநிதியின் கைப்பாவையாக இருக்கும்போது இலங்கை அரசு இந்தியாவை புலிகளின் ஒரு அங்கமாகத்தான் பார்க்கும்.

நன்றி

ஜயராமன்

Ravi said...

I second Jayaram's views. LTTE or Karunanidhi are not the sole representatives of Tamils. Opposing LTTE does not mean opposing Tamils in general. And as one fellow blogger remarked, if we were to list the atrocities by LTTE towards the Tamil community, SriLanka govt. would to be good. Its better to keep away from this ruthless organisation called LTTE. Until LTTE is around, peace for Tamils in Srilanka would be a far off dream.
[Gnayiru's comments seem so immature and irrelevant!]

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

//தமிழின உணர்வுக்கும் தமிழ்நாட்டில் குண்டு வைத்து தீவிரவாதம் பரப்பும் ஒரு பாசிச கூட்டத்தை ஆதரிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா.//
அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் (அரசு) ஒன்றை சரியில்லை என்று முடிவு செய்து கொண்டு, யாரும் அதற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்று ஃபோர்ஸ் செய்வது தவறு.

சுதந்திரமான பேச்சை மறுப்பது மனித குலத்துக்கு எதிரானது. நீங்கள் நினைப்பது உங்களுக்கு உண்மை. நான் நினைப்பது எனக்கு உண்மை.

விருப்பமுள்ள தமிழர்கள் ஈழ விடுதலைபோரில் தமது சொந்தங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது அவர்களின் உரிமை. அதை மறுக்கும் சட்டங்கள் எல்லாம் மிகப் பெரிய அநியாயம். அக்கிரமம்.

Anonymous said...

If we ban RSS, VHP and BJP, peace ont only in TamilNadu but also in India is very much guaranteed !

ஜயராமன் said...

ஞாயிறு ஐயா,

தங்களின் தொடர் பின்னூட்ட பதில்கள் மிகவும் நகைச்சுவையாய் இருக்கின்றன. அதுவும் நீங்கள் சீரியஸாய் எழுதும்போது இன்னும் காமெடி. வாழ்த்துக்கள்.

/// அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் (அரசு) ஒன்றை சரியில்லை என்று முடிவு செய்து கொண்டு, யாரும் அதற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்று ஃபோர்ஸ் செய்வது தவறு. ///

/// சுதந்திரமான பேச்சை மறுப்பது மனித குலத்துக்கு எதிரானது. நீங்கள் நினைப்பது உங்களுக்கு உண்மை. நான் நினைப்பது எனக்கு உண்மை. ///

முதலில் அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று எழுத வேண்டியது. அதற்கு பதில் சொன்னதும், வேறு ஜம்ப் பண்ணி அது குறித்து எல்லோரும் பேசுவது தவறா என்று கேட்க வேண்டியது. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவது (மட்டும்) சட்டப்படி குற்றமில்லை என்று அரசே சொல்லிவிட்டதே. நீங்கள் உங்கள் தீவிரவாத கும்பலுக்கு ஆதரவாக ஒரு மீட்டிங் போட வேண்டியதுதானே.. நல்ல காமெடி.

எப்படியாய் இருந்தாலும், அரசு தலையீடு செய்ய முடியாது என்று ஒத்துக்கொண்டால் சரி.

//// விருப்பமுள்ள தமிழர்கள் ஈழ விடுதலைபோரில் தமது சொந்தங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது அவர்களின் உரிமை. அதை மறுக்கும் சட்டங்கள் எல்லாம் மிகப் பெரிய அநியாயம். அக்கிரமம். ///

எது அநியாயம். ஒரு தேசத்தின் தலைவரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்ற ஒரு பாசிச கூட்டத்திற்கு நீங்கள் உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள், அதற்கு அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? உங்களைப் பிடித்து நாலு போட்டு உள்ளே தள்ளவேண்டும் ஐயா. இப்படி ஆளாளுக்கு கிளம்பினால், தேசம்என்னாவது? ஒருத்தன் நக்ஸல் பாரிகளுக்கு பரிதாபப்பட்டு உதவுவான். இன்னொரு முஸ்லிம் ஒசாமாவுக்கும், மதானிக்கும் பரிதாபப்பட்டு உதவுவான். ஏன், சிலர் இலங்கை அரசுக்கே கூட உதவலாம். இதெல்லாம், தேசதுரோக நடவடிக்கைகள் அல்லவா? இது அநியாயமா, இல்லை உங்களைப்போன்ற விடுதலைப்புலியின் வக்கீல்கள் சொல்வது அநியாயமா? தேசத்தின் அடிப்படை இறையாண்மையை கூட அறியாமல் எழுதுகிறீர்களே? ஒரு தேசத்தின் சட்டம் என்பது எல்லா குடிமகன்களுக்கும் பொது. அதில் சாய்ஸ் இல்லை. முடிந்தால் நீங்கள் ஜனநாயகவழியில் தேர்வு பெற்று சட்டத்தை மாற்றுங்கள். இல்லை, வீண் சவடால்வேண்டாம்.

நன்றி

ஜயராமன்

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

//தங்களின் தொடர் பின்னூட்ட பதில்கள் மிகவும் நகைச்சுவையாய் இருக்கின்றன. அதுவும் நீங்கள் சீரியஸாய் எழுதும்போது இன்னும் காமெடி. வாழ்த்துக்கள்.//
நன்றி. உங்களுடைய பதில்களில் அறிவின் ஒளி வீசுகிறது.

//
முதலில் அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று எழுத வேண்டியது. அதற்கு பதில் சொன்னதும், வேறு ஜம்ப் பண்ணி அது குறித்து எல்லோரும் பேசுவது தவறா என்று கேட்க வேண்டியது. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
//
அரசு தலையிட வேண்டும் என்று சொன்னது ஜீயார். நானல்ல. இருந்தாலும் அரசு தலையிட வேண்டிய பிரச்சினையில் மக்கள் விவாதிப்பதும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் தவறா என்ன?

//எது அநியாயம். ஒரு தேசத்தின் தலைவரை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்ற ஒரு பாசிச கூட்டத்திற்கு நீங்கள் உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள், அதற்கு அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? உங்களைப் பிடித்து நாலு போட்டு உள்ளே தள்ளவேண்டும் ஐயா. இப்படி ஆளாளுக்கு கிளம்பினால், தேசம்என்னாவது? ஒருத்தன் நக்ஸல் பாரிகளுக்கு பரிதாபப்பட்டு உதவுவான். இன்னொரு முஸ்லிம் ஒசாமாவுக்கும், மதானிக்கும் பரிதாபப்பட்டு உதவுவான். ஏன், சிலர் இலங்கை அரசுக்கே கூட உதவலாம். இதெல்லாம், தேசதுரோக நடவடிக்கைகள் அல்லவா? இது அநியாயமா, இல்லை உங்களைப்போன்ற விடுதலைப்புலியின் வக்கீல்கள் சொல்வது அநியாயமா? தேசத்தின் அடிப்படை இறையாண்மையை கூட அறியாமல் எழுதுகிறீர்களே? //
என்ன செய்வது, எனக்கு அந்த ஒரு தலைவரின் கொலை நிகழ்வை விட, பல இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த நிகழ்வு அதிகம் பாதிக்கிறது. மேலும், அந்தத் தலைவரின் கொலைக்குப் பின்னாலானா காரணங்களும் போரியல் அறங்களின்பால் சரியாகத் தெரிகிறது. நான் நினைக்கிறேன், எனக்குள் தமிழ் இரத்தமும், உங்களுக்குள் இந்திய இரத்தமும் ஓடுகிறது என்று. இது உங்களுக்கு மீண்டும் காமெடியாகத் தெரியலாம். நன்றாக சிரியுங்கள். :)

//ஒரு தேசத்தின் சட்டம் என்பது எல்லா குடிமகன்களுக்கும் பொது. அதில் சாய்ஸ் இல்லை. முடிந்தால் நீங்கள் ஜனநாயகவழியில் தேர்வு பெற்று சட்டத்தை மாற்றுங்கள்.//
இந்திய தேசத்தின் சட்ட, திட்டங்கள் மய்ய அரசு என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து எழுகின்றன. மய்ய அரசின் நலன், இந்திய தேசத்துக்குள் சிக்குண்ட ஒரு தேசிய நலனின் நலனுக்கு எதிராக இருந்தால் என்ன செய்வது?