பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 30, 2008

மை கன்ட்ரி, மை லைப் - அத்வானி


தொடர்பான செய்திகள்...

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ..

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற தோல்விக்கு யாரும் தனிப்பட்ட காரணம் அல்ல. அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தனிப்பட்ட யாரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது.

தோல்விக்கு யாரையும் தனித்து குற்றம் சாட்டும் பண்பாடு பாஜகவுக்கு கிடையாது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதுதான் பண்பாடு. 1998ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றபோது அதற்கு நரசிம்மராவையும், 1999ம் ஆண்டு கிடைத்த தோல்விக்கு சீதாராம் கேசரியையும் குற்றம் சாட்டினர். இருவரும் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் 2004ம் ஆண்டு நடந்த தேர்தல் தோல்விக்கு அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை பலிகடாவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெங்கையா நாயுடுவே, தானாக முன்வந்து தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுதான் பாஜகவின் பண்பாடு.

அப்போது வெங்கையாவுக்கு அடுத்து தலைவர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் யாராவது கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என அனைவரும் முயன்றோம். ஆனால் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன், நரேந்திர மோடி என சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் அப்போது தயார் நிலையில் இல்லை என்ற கருத்து எழுந்தது.

இளம் தலைவர்களை கட்சியை வழி நடத்திச் செல்ல பயிற்றுவிக்க வேண்டும் என்று நான்தான் யோசனை தெரிவித்தேன். எனக்கு மீண்டும் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அந்த சமயத்தில் மூத்த தலைவர் ஒருவர்தான் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கட்சியில் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்ததாலும், அடல் பிகாரி வாஜ்பாய் வலியுறுத்திக் கூறியதாலும், நான் எனது கொள்கையை விட்டு விட்டு கட்சித் தலைவராக தீர்மானித்தேன். அப்படித்தான் நான் பாஜகவில் ஐந்தாவது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு வந்தேன்.

கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சில தளர்ச்சிகள் ஏற்பட்டதுண்டு. அதை நான் மறுக்கவில்லை. கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சிலர் வெளிப்படையாக பொதுவில் கொண்டு வந்ததுண்டு. பத்திரிக்கைகளை தங்களது குறை கூறும் ஊடகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவையெல்லாம் கோஷ்டி மோதல்களோ அல்லது வேறு மோதல்களோ இல்லை. சாதாரண கொள்கை மோதல்கள், முரண்பாடுகள்தான்.

ஆனால் இந்த கருத்து மோதல்கள் வெளிப்படையாக கிளம்பியதால் கோஷ்டி மனப்பான்மையும், குழு செயல்பாடுகளும் வெளிக் கிளம்பின. இது கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கட்சி பாஜக என்பதில் நான் பெருமைப்பட்ட நிலையில் சில மீடியாக்கள், வேறுபாடுகளுடன் கூடிய கட்சி பாஜக என்று செய்தி வெளியிட்டது எனக்கு அதிக வேதனையைத் தந்தது என்று கூறியுள்ளார் அத்வானி.கே.ஆர்.நாராயணன்தான் காரணம்
வாஜ்பாய் அரசு பதவியேற்க விடாமல் தடங்கலாக இருந்ததும், பதவியேற்ற ஒரே ஆண்டில் அது கவிழவும் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் காரணம் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

அத்வானி எழுதியுள்ள மை கன்ட்ரி, மை லைப் என்கிற புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி. பல்வேறு பரபரப்பான அம்சங்களை உள்ளடக்கிய அந்த நூலில், பாஜக அரசு அமையக் கூடாது என்று கே.ஆர். நாராயணன் மிகுந்த பிரயாசைப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது நூலில் அத்வானி கூறியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்,

கடந்த 1993 ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.க தனி பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஆனால், வாஜ்பாயை பிரதமராக பதவியேற்று, ஆட்சி அமைக்க அழைக்காமல் கே.ஆர்.நாராயணன் தாமதம் செய்தார்.

சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு பின், கூட்டணி அல்லது தனிப் பெரும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; பதவியேற்ற பின், சபையில் நம்பிக்கை பெற அவகாசம் அளிக்க வேண்டும் என்று தான் அரசியல் சட்டம் சொல்கிறது.

இதைத்தான், கர்நாடக முதல்வர் பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி பரிந்துரைத்த அறிக்கையில், சர்க்காரியா கமிஷனும் இதையே கூறியிருந்தது.

இவற்றின் அடிப்படையில் தான், முன்பு குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா போன்றோர் நடந்து கொண்டனர். ஆனால், கே.ஆர்.நாராயணன், அவர்கள் கடைபிடித்த விதிகளை மாற்றினார். தனக்கென புதிய விதிகளை உருவாக்கி, அதன்படி பாரபட்சமாக நடந்து கொண்டார்.

1998ம் ஆண்டு தேர்தலுக்கு பின், வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைக்க பத்து நாள் தாமதம் செய்தார். அப்போது நடந்த தேர்தலில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தனி பெரும் கட்சியாக பா.ஜ.க இருந்தது. ஆனால், பா.ஜ.க. வை ஆட்சி அமைக்க அழைக்க தாமதப்படுத்தி, காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் நாராயணன்.

பா.ஜ.க ஆட்சி வரவிடாமல் தடுக்க, சில கட்சிகளுடன் காங்கிரஸ் பேரம் பேசியதற்கு நாராயணன் கொடுத்த அவகாசம் தான் காரணம். அப்படி தாமதம் செய்தும், கடைசியில் வாஜ்பாயை தான் அழைக்க வேண்டியதாகி விட்டது.

ஆனால், ஓராண்டுக்கு பின், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. சோனியா செய்த அரசியல் சதி தான், அந்த அரசு கவிழ காரணமாக இருந்தது.

'ஜின்னாவால் ஏற்பட்ட வேதனை':

2005ம் ஆண்டு நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, முகம்மது அலி ஜின்னா குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கண்டு வேதனையுற்றேன்.

அது சாதாரண சர்ச்சைதான். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வலியை அது ஏற்படுத்தி விட்டது. 1996ம் ஆண்டு ஹவாலா மோசடி வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டதை விட இது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

ஆனால் ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது போல ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை.
நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அமைதியன் தூதுவராகத்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். இரு நாட்டு உறவையும் சுமூகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். எனது நோக்கம் ஓரளவு நிறைவேறியது என்றே இப்போதும் நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அத்வானி.


அத்வானி கூறியுள்ளது தவறு
காந்தஹார் விமானக் கடத்தலின்போது தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு அதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை என்று அத்வானி கூறியுள்ளது தவறு. அனைத்து அமைச்சர்களும் கூடித்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது என்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

மை கன்ட்ரி, மை லைப் என்ற பெயரில் அத்வானி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அத்வானி பல்வேறு முக்கிய சம்பவங்களை வர்ணித்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைசகளை எழுப்பி வருகிறது. பாஜகவுக்குள்ளும் இது புயலைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்துக்களுக்கு அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்து இதுதான்: ஐ.சி.814 விமானத்தில் கடத்தப்பட்ட 189 பயணிகளை மீட்பதற்கு, இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவின் படி, பயங்கரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் செல்வார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.

பெர்னாண்டஸ் மறுப்பு:

இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறுகையில்,

பயங்கரவாதிகளை விடுவிப்பது, காந்தகாருக்கு தனி விமானம் அனுப்புவது, அதில் ஜஸ்வந்த் சிங் செல்வது ஆகிய அனைத்தும், அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்ற கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அத்வானியும் இடம் பெற்றிருந்தார்.

பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற விமானம், முதலில் அமிர்தசரஸ் சென்று, அதன் பின், காந்தகாருக்கு சென்றது. இந்த முடிவு, ஒட்டு மொத்த அமைச்சரவையின் ஒருமித்த முடிவு தான் என்று அவர் கூறியுள்ளார்.

பி.சி.கந்தூரியும் மறுப்பு:

இதே போல, வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும்
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய உத்தரகண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும், அத்வானியின் கருத்தை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்கு தான் சம்மதிக்காததாக அத்வானி கூறியிருப்பது தவறு. அப்போதைய சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு சாதக, பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து தான், அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், எவை தவறு என்றும், எவை சரியானவை என்றும் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

0 Comments: