பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 20, 2008

நடிகர் சோபன்பாபு மரணம்


பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சோபன் பாபு இன்று காலை சென்னை யில் திடீரென்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71. யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான சோபன் பாபு. ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை மேத்தா நகர் ராஜாராம் காலனியில் அவருக்கு வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து தங்குவார். 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னைக்கு வந்திருக்கிறார்.

இன்று காலை தனது வீட்டில் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அவருக்கு மூக்கிலிருந்தும் ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு சோபன் பாபுவின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்தவர் சோபன் பாபு. அவரது இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ். 1937 ஆம் ஆண்டு ஜனவரி 14ந் தேதி அவர் பிறந்தார். அவருக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உண்டு.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு விஜயவாடாவில் மேற்படிப்பை தொடர்ந்த அவர் பின்னர் சென்னையில் சட்டக் கல்வி பயின்றார். ஆனால் சட்டப் படிப்பை முடிக்கவில்லை.

1958ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தெய்வ பலம் எனும் திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். எனினும் பக்த சபரி எனும் திரைப்படமே முதலில் வெளியானது.

இந்த படத்தில் அவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து வந்த பல படங்களில் அவர் சிறிய பாத்திரங்களில்தான் நடித்து கொண்டிருந்தார்.

முதல் முறையாக 1965 ஆம் ஆண்டு வீர அபிமன்யு படத்தில் கதாநாயகனாக அவர் நடித்தார். பின்னர் மனுசுலு மாரலி எனும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அந்த படம் பெறும் வெற்றி பெற்று அவரை முன்னணி நாயகனாக்கியது. அதன் பிறகு அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

சோபன் பாபு மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து அழகாக தோன்றக் கூடியவர். ஆந்திர திரைப்பட உலகிலேயே மிகவும் அழகான நடிகர் என்று அவர் பாராட்டப்பட்டார்.

அவர் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். பல்வேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அவர் மிகவும் ஸ்டைலாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.

பாடல் காட்சிகளில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து தோன்றுவதை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் விரும்பி வரவேற்றனர். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அவர் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

பிலிம்பேர் விருதுகளை நான்கு முறை வென்றுள்ள அவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளை ஐந்து முறை வென்றிருக்கிறார். மேலும் பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சாரதா, வாணிஸ்ரீ, ஜெயசுதா ஆகிய நடிகைகளோடு அவர் அதிக படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா உட்பட பல முன்னணி நடிகைகளோடும் அவர் நடித்திருக்கிறார். ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மொத்தம் 250 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாரிசுகளை அவர் திரைப்பட துறையில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
(நன்றி: மாலைசுடர் )

2 Comments:

Anonymous said...

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு புகழ்பெற்ற நடிகர்கள் மரணமடைவது வருத்தமாக இருக்கிறது. சோபன் பாபு படங்கள் எதுவும் பார்த்த நினைவில்லை. எனினும் அவரது குடும்பத்தார்க்கு எமது அஞ்சலிகள்.

ஆமாம் திமுகவினர் அடிக்கடி 'சோபன் பாபுவைக் கேள்' என்றெல்லாம் மேடையில் முழக்கமிடுவார்களே. இனிமே அந்த மாதிரி சொல்ல முடியாதே ? அப்புறம் "ஊட்டி கான்வெண்டில படிக்கற" என்றும் சொல்வார்களே - அந்த செய்தி உண்மையா ? இப்போதாவது வெளிவருமா ?

சம்பந்தப்பட்டவர் ஹைதராபாத் செல்வாரா இல்லை சென்னையிலாவது அஞ்சலி செலுத்துவாரா ? இட்லிவடை இந்தப் பின்னணி பற்றிய உண்மைகளை கண்டுபிடித்து (!) வெளியிடமுடியுமா ?

Anonymous said...

Anna enaganna ,
How you forgot -
"Iam now going-Study with him"- BY Jaya.

please na wake -up ,Antha poonula thuki podu na