பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 25, 2008

தி.மு.க., எம்.எல்.ஏ., தீ மிதிப்பு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு நாள் முன்பருந்தே கோவில் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தது குறிப்படத்தக்கது.
கலந்து கொண்டு தீ மிதித்தவர்கள்
சத்தியமங்கலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,
தர்மலிங்கம், காங்கேயம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
விடியல்சேகர், கோவை எம்.எல்.ஏ.,
பொன்னுசாமி, கோவை ஐ.ஜி.,
சஞ்சய் அரோரா, சென்னை டி.ஐ.ஜி.,
பாலசுப்பரமணியம், நீலகிரி எஸ்.பி,
வித்யா குல்கர்னி
ஆகியோர் குண்டம் இறங்கியவர்களில் முக்கியமானவர்கள்.
பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

3 Comments:

Anonymous said...

என்னைக்கு கலைஞர் மஞ்சள் ஜட்டி .... மன்னிக்கவும்.., மஞ்சள் துண்டு போட்டாரோ, அன்னைக்கே தி.மு.க வினருக்கு கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது...ஆன்மீகத்தில் ஈடு பட...பெரியார், கொள்கை எல்லாம் தூக்கி குப்பையில் போடு என்றாகி விட்டது..போதாக்குறைக்கு, சாய்பாபா ஆசிர்வாதம் வேறு ., கலைஞர் குடும்பத்தினருக்கு...

இப்படி இருக்க, எம்.எல்.ஏ, மற்றும் தொண்டர்களை நோவானேன் ??

நடக்கட்டும்..நடக்கட்டும்...

இலவசக்கொத்தனார் said...

இந்த வருசம் இம்புட்டுக் காட்டுமிராண்டிகளா?
அடக்கடவுளே!!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

Where is "Ration"alist Veera(?)mani?