பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 24, 2008

ஓய்வறையில்...சொல்லதான் நினைக்கிறேன்

ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள்!!! என்ற பதிவை தொடர்ந்து ..நீங்க ஓய்வறையில் இருக்கிறீர்கள், உங்களுக்கு சில தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் பதில்கள்....


யாரோ: ரொம்ப எக்கொ கேக்குது, கொஞ்சம் மெதுவா பேசுங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: பக்கத்து ரூம்ல இருந்து பதில் வருது நான் என்ன செய்ய ?


மாமனார்: மாப்பிளை சென்னையில ஒரே மழைபோல? பேசறப்பவே தண்ணி சத்தமா கேட்குதே. அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: உங்களுக்கு ஆயுசு நூறு! இப்ப தான். உங்களை பத்தி நினைச்சேன்.

மனைவி: நான் தாங்க. வீட்டில குழா லீக்காகுது, பிளம்பரை மறக்காம ஃபோன் செஞ்சு வர சொல்லுங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: முதல்ல இங்கே வரச்சொல்லலும்.

மேனேஜர்: இப்ப தான் கஸ்டமர் கால் செஞ்சாங்க. உங்க லேடஸ்ட் டெலிவிரியில ஏதொ மெமரி லீக்காம். உடனே வாங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: எங்கே போனாலும் லீக் விட மாட்டேங்குது. இருங்க கழுவிக்கிட்டு வரேன்.

ராங் கால்: சார் நாங்க திறந்திடு சீஸேம் நிகழ்ச்சியிலிந்து கால் செய்யறோம். தய்வு செய்து உங்கள் டிவி வால்யூமை கொறச்சுட்டு பேசுங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: பக்கதுல ரூம்ல யாரோ சத்தமா பாட்டு பாடறாங்க நான் என்ன சார் செய்ய முடியும்.

நலம் விரும்பி: எவ்வளவோ படிச்சவரு நீங்க...அதில போய் எப்படிங்கமாட்டிகிட்டீங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: ஆமாங்க மாட்டிகிச்சு, அது எப்படி உங்களுக்கு தெரியும் ?

நண்பர்: இட்லிவடையில உங்க Flash news பார்த்தேன். எப்படி சார் உங்களுக்கு உடனே கிடைக்குது ?
சொல்லதான் நினைக்கிறேன்: இருங்க, Flash'சை முதல்ல Flush செய்யனும்.

( ஹரன்பிரசன்னா 'ஈ-ஓட்டும்' பதிவு போட சொன்னதால் இந்த பதிவு, ஈ-ஓட்ட விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்துக்கு செல்லவும்... )

2 Comments:

சின்னப் பையன் said...

இந்த ச்சின்னப்பையன் பதிவுக்கு இணைப்பு கொடுத்தற்கு நன்றி ஐயா!!!
நீங்க 'சொல்ல நினைக்கறதும்' நல்லாத்தான் இருக்கு....

ஆமா, மாமனாரை நினைக்க வேறு இடமா இல்லை......:-)

வெங்க்கி said...

ஈ ஓட்டற மாதிரி தெரியல...மொக்கை போடற மாதிரி போஸ்ட் ஆ இருக்கு,,,

இ.வ ...ஒண்ணும் சரியில்லை...போணியாகாத நாசுவன் ...கொரங்குக்கு Free யா ஷேவிங் பண்ணானாம்..அப்படி இருக்கு.... கடந்த... சில வாரமா உங்க வெப் blogs... சரி பண்ணுங்க நண்பரே..!!