பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 26, 2008

`பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம் - விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான காட்சி இருப்பதாக கூறி `பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம்-விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை - கூச்சல் குழப்பம், போலீஸ்...


சென்னையில் உள்ள ஜெமினி கலர் லேப்பில் `பிரபாகரன்' என்ற சிங்கள படம் பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், இயக்குனர் சீமான் ஆகியோர் தலைமை யில் ஏராளமானோர் அந்த லேப் முன்பு திரண்டனர். "பிரபாகரன்'' படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது அப்படத் தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத் தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்ததும் போலீ சார் விரைந்து வந்து சமரச பேச்சு நடத்தினார்கள். இதல் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் படத்தை பார்த்து ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் பிரிண்ட் எடுக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி வன்னியரசு :

பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த சினிமாவை இயக்கியுள்ள பெரிஷ் ஒரு சிங்களர். அவர் இலங்கை அரசு உதவியுடன் இப்படத்தை எடுத்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலேயே "இலங்கை அரசுக்கு நன்றி'' என்று ஆங்கிலத்தில் காட்டப் படுகிறது.

எனவே பெரிஷ் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பணம் பெற்றுக் கொண்டு பிரபா கரனைப் பற்றி இப்படத்தில் தவறாக சித்தரித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.

அதனால்தான் நாளை இப் படத்தை டாக்டர் ராம தாஸ், திருமாவளவன் ஆகி யோருக்கு போட்டு காண்பிக் கும்படி பெரிஷிடம் கூறி உள்ளோம். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தைப் பார்த்து இரு தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்தால் சென்னையில் உள்ள லேப்களில் பிரிண்ட் போட அனுமதிக்க மாட்டோம்.

பிரபாகரன் படத்தில் விடு தலைப்புலிகளுக்கு எதிரான காட்சி இடம் பெற்றிருந்தால் அப்படச் சுருளை தீவைத்து எரிப்போம்.


வன்முறை இங்கே தான் ஆரம்பிக்கிறது...

10 Comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இந்த நாதாறிகளிடம் எழவெடுப்பதற்கு பதிலாக பம்பாய் ஹைதராபாத் என்று வேறு எங்காவது சென்று போட்டுகொள்ளலாமே.

யோசிப்பவர் said...

Extreme Stupidity!!

Thobey srinivasan said...

There are more voices in Tamil Nadu expressing solidarity and support to LTTE than one could hear from among the Srilankan Tamils in Jaffna.

LTTE is not the sole voice of Srilankan Tamils. Mixing up the Srilankan Tamil issue with support to LTTE is the mistake repeatedly committed by mischievous elements in Tamil Nadu, which does not have ths support of the people.
Emotive issues centring around the Tamil language will not evoke the kind of hysteria it did in the
60s. In a state where English Medium schools proliferate even in remote villages and linguistic studies and humanities are increasingly becoming unpopular, Tamil can not inspire the IT savvy younger generation. These leaders can not sell their ideas to even 2% of Tamil Nadu's youth population because they know that these elements have sons and daughters educated in English medium with a foreign language as theri second language! It is also an acknowledged fact
The cadre of these political parties or the functionaries who matter can not speak or write two simple sentences in Tamil!!

Indian Voter said...

என்ன ஒரு அக்கிரமம் இது?

பிரபாகரன் என்ன உலகை காக்க வந்த மகாத்மாவா? அவருக்கு எதிரான கருத்து எவருக்குமே இருக்க கூடாதா? திருமா மற்றும் ராமதாஸ் என்ன தணிக்கை அதிகாரிகளா? என்ன தைரியத்தில் இதையெல்லாம் செய்கிறார்கள்? இதெயெல்லாம் நடக்க விட்டு வேடிக்கை பார்க்கும் ஆளுங்கட்சி, அந்த கட்சியின் ஆதரவை நம்பி பிழைப்பு நடத்தும் மத்திய அரசு. எல்லாம் நம் மக்களின் தலை விதி.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு இந்த கீழ்த்தரமான ஜென்மாங்களைப் பற்றி தெரியாதா? எதற்காக சென்னைக்கு வந்து அந்த படத்தை process செய்ய வேண்டும்? வேறு இடமா இல்லை?

Anonymous said...

IdlyVadai Iyarval's, Do you know waht is there in the flim ?

Anonymous said...

//IdlyVadai Iyarval's, Do you know waht is there in the flim ?//

அதானே பார்த்தேன். எங்கடா இன்னும் இட்லிவடைக்கு எவனுமே பூநூல் போடலியேன்னு... இப்ப பேசிட்டு இருக்கிற பிரபாகரன் பிரச்சினைக்கும் இ.வ. ஐயர்வாளா இல்லையான்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? ஏன் எந்த பிரச்சினைக்கும் உங்களுக்கு எதிர் கருத்து சொல்றவனோட தலையை தடவி குடிமி இருக்கா, பனியனுக்குள்ள கைய விட்டு பூநூல் இருக்கான்னு பார்க்கிறீங்க? அப்படியே ஜட்டிக்குள்ள கையவிட்டு அவன் ....பாக்க வேண்டியதுதானே? கருமம் புடிச்ச ****.....
வண்டி வண்டியா வருது வாய்ல.

இட்லி வடை இவனுங்களை எல்லாம் just ignore
Venpu: http://www.blogger.com/profile/09794724509547465558


(edited)

Anonymous said...

i agree with the "Anonymous" said you "kudumee" only always write againest tamils. I too the guy jumping here also one of the big "kudumee".

Plesae read the blog http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11752

Anonymous said...

சிங்கள இயக்குனர்க்கு அடி கொடுத்த தமிழ் அமைப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

நன்றி இட்லிவடை. கேள்விகள் விரைவில் வரும். இது பத்தி ஒரு பதிவு போட்டீங்கன்னா பலரும் கவனிப்பாங்க. என்னென்ன கேள்விகள் கேட்கலாம் ? எது கேட்கக்கூடாது என ஒரு பட்டியல் போட்டா நல்லாருக்கும்.

அப்புறம் மறுபடியும் அனுமதிக்கப்படும் பின்னூட்டங்களின் தரம் இட்லிவடை பதிவுக்கு ஏற்றதாக இல்லையே (சமீபத்திய மேலுள்ள சில பின்னூட்டங்கள்) அவற்றை எடுத்துவிடலாமே ?