பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 13, 2008

ரூபாய் நோட்டு மாலைக்கு தடை

மாலை அணிவிப்பதற்கு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கூடாது ரிசர்வ் வங்கி அறிக்கை

அலங்கார வளைவு அமைத்தல், வழிபாட்டு தலங்களில் மாலைகளாக அணிவித்தல், பொது நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு ரூபாய் நோட்டு அணிவித்தல் என்று பல்வேறு வகைகளில் ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், `இது போன்ற செயல்பாடுகளால் ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலம் குறையும் அபாயம் உள்ளது. நாடு முழுவதும் தூய்மையான நல்ல நோட்டுகளை வினியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது'

3 Comments:

Anonymous said...

1:5 என ஆசிரியர் நியமனம் நடைபெற்றால் ரூபாய் நோட்டு மாலை யாருககு அதிகம் கிடைக்கும்?
"மார்ச் 13:அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில் 1,398 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் உள்பட 854 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்று ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்வு வா‌ரிய அ‌திகா‌ரி க‌ண்ண‌ன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுவரை ஒரு காலி இடத்திற்கு ஒருவர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வந்தனர். அரசின் புதிய உத்தரவுப்படி பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒரு காலி இடத்திற்கு 5 பேர்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்."
1:5 என்ற அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடைபெற்றால் லஞசம் பெருகவும்,முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதைப் பற்றி ஆராய்ந்து அலசும் பதிவை எதிர்பார்த்து இப்பின்னூட்டம்...

வால்பையன் said...

//இது போன்ற செயல்பாடுகளால் ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலம் குறையும் அபாயம் உள்ளது//

ஐயோ இது இல்லைனா நம்ம அரசியல்வாதிகளோட ஆயுள் குறைஞ்சுடுமே

வால்பையன்

Anonymous said...

டான்ஸ் பார் ல, திருமண நிகழ்சிகள்ளே... "North Indians" நோட் நோட்டா திருஷ்டி சுத்தி வுடுவானுன்களே !! அத்த எங்கே போயி சொல்லுறது... இப்பிடி செய்யுரவனுங்கள செருப்பாலேயே..அடிக்கோணும்..