பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 19, 2008

சென்னை ஐபிஎல் பிராண்ட் அம்பாசடர்களாக - விஜய், நயன்

சென்னை அணி விளம்பர தூதர்களாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் ஆகி யோர் நியமிக்கப்பட்டனர். விளம்பர நட்சத்திர தூதர் களாக நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை அறிமுகப் படுத்தும் விழா இன்று தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. விஜய் பெயரை தூதராக அறிவித்தனர். உடனே அவர் மேடையில் தோன்றினார். நயன்தாரா ஷூட்டிங் சென்று இருப்பதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
( அதனால் அவர் படம் கிடைக்கவில்லை, கூகிளில் தேடியதில் கிடைத்த படத்தை போட்டிருக்கேன். பெரிய வித்தியாசம் இல்லை, டையர் கூட இருக்கு )

விஜய் பேட்டி:

நான் தீவிர கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது கிரிக்கெட் போட்டி நடந்தால் அவ்வப்போது ஸ்கோரை கேட்டு தெரிந்து கொள்வேன். ஆனால் இப்போது வேலை இருந் தாலும் அதை விட்டு விட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். இதற்கு எனது மகனும் ஒரு காரணம். அவன் ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்ப்பான். அவனுடன் சேர்ந்து நானும் கிரிக்கெட் பார்க்கிறேன். என்னை சென்னை அணி விளம்பர நட்சத்திர தூதராக இருக்க இந்தியா சிமெண்ட் நிறுனம் கேட்டுக்கொண்டது. உடனே நான் ஒத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த அணிக்கு ஆதரவு தர வேண்டும்.

சென்னை அணி இளம் அதிரடி வீரர் டோனி மற்றும் முன்னணி வீரர்களை கொண்டுள்ளது. டோனி இந்த அணிக்கு கிடைத்தது பெருமை. இதே போல இந்த அணிக்கு தூதரராக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததையும் பெருமையாக கருதுகிறேன். முதல் போட்டி ஏப்ரல் 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. அதில் நானும் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி வீரர்களை தேர்வு செய்த ஒருங்கிணைப்பாளர் வி.பி.சந்திரசேகரன் இது பற்றி கூறும்போது, "சென்னை அணியை பிரபலபடுத்தும் வகையில் நடிகர் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்'' என்று கூறினார்.

இந்த நிக ழ்ச்சியில் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்தியா சிமெண்டு செயல் தலைவர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏவிஎம்மின் அடுத்த படத்தில் விஜய்யும், நயனதாராவும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

0 Comments: