பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 29, 2008

ஜட்டி மாற்றம் = மதம் மாற்றம்

இன்று வந்த இருவேறு செய்திகள்.
மதம் மாற்றம் என்பது அடுத்தவன் ஜட்டியை எடுத்து போட்டுக்கொள்ளுவது போல....

முதல் செய்தி:
நெல்லையை தொடர்ந்து திருவதிகையில் தாய்மதம் திரும்பும் விழா நடத்த உள்ளதாக இந்துமக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

நெல்லையை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் உட்பட 185 குடும்பத்தினர் வேறு மதங்களில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியை ஏப்., 14ல் நெல்லையப்பர் கோவிலில் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று அர்ஜூன் சம்பத் தலைமையில் நெல்லையில் நடந்தது. அவர் கூறியதாவது: மற்ற மதங்களில் சேர விரும்புவோர் அந்தந்த மதங்களின் வழிபாட்டு தலங்களில் மதம் மாறுகிறார்கள். அதே போல இந்துவாக மாற நெல்லையப்பர் கோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் தடையை மீறி நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்கு அனுமதி மறுத்த அறநிலையத்துறையினர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்குதொடர உள்ளோம். விழுப்புரம் மாவட்டம் எறையூரில் வன்னியகிறிஸ்தவர்களை வேறு மத அமைப்புகளை தங்கள் மதங்களுக்கு மாற்ற முயற்சிக்கின்றனர். இதனை அரசு தடுக்கவேண்டும். இதுகுறித்து கவர்னிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். திருநாவுக்கரசர் தாய் மதத்திற்கு மாறிய கடலூர் மாவட்டம் திருவதிகை பகுதியில் ஆதி திராவிட மக்கள் மீண்டும் தாய் மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியை இன்னும் மூன்று மாதங்களில் நடத்த உள்ளோம் என்றார்.

இரண்டாம் செய்தி
எறையூர் மாவட்டத்தில் மதம் மாறப் போவதாக கூறியுள்ள வன்னிய கிறிஸ்துவர்களை சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது.

எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தலித் பிரிவினர் பயன்படுத்திய வண்டியில் கொண்டு செல்லாமல், சவப் பெட்டியைத் தூக்கியபடியே சென்று அடக்கம் செய்தனர்.

மேலும், தங்களையும், தலித் கிறிஸ்தவர்களையும் தனியாகப் பிரித்து தனிப் பங்கு அமைக்க வேண்டும். இரு பிரிவினருக்கும் தனித் தனியாக சர்ச்சுகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி 20 ஆயிரம் கிறிஸ்தவ வன்னியர்களும் மதம் மாறுவோம் என்றும் அறிவித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவாகரத்தை பெரிதாகாமல் தடுக்கவும், மதமாற்ற முயற்சிகளை தடுக்கும் முகமாகவும், புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு எறையூர் வந்தது.

இந்தக் குழுவில் வன்னிய கிறிஸ்தவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்பட்டதா, இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.

ஒரே கடவுள் இயேசு-கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்:

இதற்கிடையே, தலித் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, வன்னிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கடவுள் ஒருவர், இயேசு கிறிஸ்து முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று கிறிஸ்தவ முன்னேற்றக் கழகத் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எறையூரில் உள்ள வன்னிய கிறிஸ்தவர்களில் 37 பேர் பாதிரியார்கள், 127 பேர் கன்னியாஸ்திரிகள்.

அனைவருமே இறை நம்பிக்கை கொண்டவர்கள். கிறிஸ்தவம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். மன உளைச்சலால் மத மாற்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் உளப் பூர்வமாக அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். எனவே நிச்சயம் அவர்கள் மதம் மாற மாட்டார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது என்று கூறியுள்ளார்.


5 Comments:

Anonymous said...

சாதியை விட முடியாதவங்க எங்க இருந்தா என்ன இட்லிவடை...இந்த மாதிரி மனுஷங்களுக்கு எம்மதமும் சம்மதமே!!!
இதுல இந்துமுன்னணி வேற ரொம்ப ஆசப்படறது எதுக்கு?இருக்கிர ரிப்பேரானா பேரு இன்னும் கொஞ்ஜ்ம் ஆகட்டுமேன்னா?

cgs..இது என்னா புதுசா ஐ டி ப்ரச்சினை?

Anonymous said...

ஜாதிப் பேய் என்று ஒழியும்? மதப் பிசாசு என்று மறையும்?


இயேசு,முகமது,இராமன் அனைவரையும் தூக்கில் போடுவோம். இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என்ற அடையாளங்களை துறப்போம்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா. ஜாதி, மதப்பேர் சொன்னால் தலைகுனிந்தே செல்வாயடா.

Anonymous said...

இயேசு,முகமது,இராமன் யாரையும் தூக்கில் போடமுடியதே...


நல்ல தமாச்சு ... இங்கு advice செய்ய தமிழனை பயன்படுத்தாதீங்கன்னா
.

Anonymous said...

http://jeyamohan.in/?p=337

இந்தப் பின்னணியில் ஒன்று மட்டும் எனக்குத்தோன்றுகிறது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் சமூகத்தைப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கும்தன்மை கொண்டவர் ராமதாஸ் என்றே எண்ணுகிறேன்.பல சமூகப்பிரச்சினைகளை அவரன்றி பிற தமிழ் அரசியல்வாதிகளில் பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். மிகவும் பின்தங்கி நிலைத்துக்கிடந்த தருமபுரி போன்ற பல பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஓர் வளர்ச்சியசைவை உருவாக்கியிருக்கிறது என்றுதான் நம்புகிறேன்.

--

இச்சூழலில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நிலைபாட்டைப்பற்றி சில சொல்ல வேண்டும். பொதுவான சாதிசார்பு அமைப்புகள் சாதிய முரண்பாடுகளை வளர்த்தும் சாதிமேன்மைகளை உருவாக்கியும் செயல்படும்போது அதற்கு எதிரான நிலைபாட்டையே அவர் பெரும்பாலும் எடுத்திருக்கிறார். வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே முரண்பாடுகள் உருவான காலங்களில் அவர் அம்முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்க்கவும் தலித்துக்களின் அடிப்படை உரிமைகள் பேணப்படவுமே முயன்றிருக்கிறார்.
--

Anonymous said...

யோவ் ! அனானி...பா மா கா ஒரு பக்கா ஜாதி கட்சி..இது ஊரறிந்த உண்மை...2011 ல ஆட்சிய பிடிப்போம்னு கனவு கண்டுகினு ஒரு கோஷ்டி அலையுது..அதில மருத்துவ குடியும் சேத்தி... இந்த லட்சணத்தில..இவுரு அவுருக்கு ஜால்ரா அடிக்கிறாரு..என்ன ? பா.மா.க ஆளுக கிட்ட காசு வாங்கிடீங்கள ? அடங்குங்க...