பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 28, 2008

இட்லிவடை கேள்வி பதில்கள்

முன்பு இட்லிவடை 1008 என்ற பதிவு நினைவு இருக்கலாம்.

இரண்டு நாட்களாக ஒருவர் என்னை பின்னூட்டதில் துரத்தி துரத்தி நான் கேள்வி கேட்கணும் நீங்க பதில் சொல்லணும் என்று அடம்பிடிக்கிறார்.

அவருடன் கேள்வி கேட்க விரும்புகிறவர்கள் பின்னூட்டதில் கேட்கலாம்.
இந்த வருஷம் எந்த எந்த ஃசாப்ட்வேர் கம்பெனிகள் எவ்வளவு சம்பளம் உயர்வு கொடுத்துள்ளார்கள் என்று தகவல் அறிய இங்கே போகவும்.
( அடேயப்பா இவ்வளவு சம்பள உயர்வா ? )

11 Comments:

பாண்டி-பரணி said...
This comment has been removed by the author.
பாண்டி-பரணி said...

உங்களுக்கும் தினமலருக்கும் என்ன சம்பந்தம் ?

Anonymous said...

கேள்விகளைக் கேட்பது: ஜி.சங்கர்

1. வை.கோ என்ன செய்கிறார் ? அரசியலில் அவர் என்ன தான் சாதிக்க எண்ணுகிறார் ?

2. தமிழகத்தின் முதல்வராக ப.சிதம்பரம் வர சாத்தியம் உண்டா ? வந்தால் தமிழ்நாடு முன்னேறுமா ? இல்லை அவர் கார்த்திக்கு பதவி வாங்குவதில் தான் முயற்சியை
செயல்படுத்துவாரா ?

3. டெக்கான் கிரோனிகிளின் சென்னை விளம்பர பலகைகள் படம் எடுத்து இங்கு இட முடியுமா ? (சில பலான படங்களும் உண்டாமே ?)

4. ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக என்னாகும் ? அவர் ஏன் அடிக்கடி ஓய்வில் இருக்கிறார் ? 84 வயதில் கலைஞரின் அசாத்திய உழைப்புக்கு முன் இவர் இப்படி
அடிக்கடி ஓய்வு எடுக்கும் நிலையில் தான் அவர் உடல் நிலை உள்ளதா ?

5. கல்கி பத்திரிக்கையின் தற்போதைய சர்குலேஷன் எவ்வளவு ? தற்போதைய
காசு கொடுத்து கல்கி படிக்கும் வாசகர்கள் யார் ? எத்தகையவர் ?

6. தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டி பெருந்தலைகள் பி.சி.சி.ஐ யில் பெரிய பதவிகள் வகித்தாலும் தமிழகவீரர்களுக்கு சான்ஸ் கொடுப்பதில் ஏன் முனைவதில்லை ?
எல்.பாலாஜி, ஸ்ரீராம், சரத், பத்ரிநாத், சடகோபன் ரமேஷ் என நல்லவர்கள் வேறு
மாநிலம் / ஐசிஎல் தேடும்படி நிலைமை ஏன் ? சென்னையின் டிவிஷன் லீக் போட்டிகள் எந்த நிலையில் உள்ளன ?

7. பெரும்பாலான (டெல்லி) செய்தி சானல்கள் (அதுவும் ஆங்கிலம்) ஏன் சிவப்புப் பின்னணியையே கொண்டிருக்கின்றன ? (ஹெட்லைன்ஸ் டுடே - ஆரஞ்சு) - தலைப்பு போடும் பகுதிகளில், லோகோவில், சிக்னேச்சர் டியூனில் என

8. த ஹிண்டு, டெக்கான் கிரோனிக்கிள், த நியு இண்டியன் எக்ஸ்பிரஸ், த டைம்ஸ் ஆஃப் இண்டியா - சென்னை ஆங்கிலப் பத்திரிக்கை நிலவரம் இன்னும் 6 மாதத்தில் எப்படி இருக்கும் ?

9. குமுதத்தில் வரும் 'பத்திகிச்சு' பகுதி கிசுகிசுக்கள் பற்றிய க்ளுக்கள் இட்லிவடையில் கொடுக்கப்படுமா ? ஏன் பிரகாஷ்ராஜைப் பாவம் இந்த மாதிரி வாராவாரம் கட்டுரை எழுதி நாஸ்தி பண்ணுகிறார்கள் ?

10. பாலகுமாரனுக்கு கேள்வி அனுப்பினால் இட்லிவடையின் கேள்விகள் என்னவாக இருக்கும் ?

IdlyVadai said...

பாண்டி பரணி - ஒரு சம்பந்தமும் இல்லை.

ஜி.சங்கர் நல்ல கேள்விகள் :-)

Anonymous said...

1. சாரு ஆன்லைன் பற்றி உங்கள் கருத்து - எப்படி மனசாட்சி இல்லாமல் தன்னை ஒரு எழுத்தாளர் என்கிறார்.
2. ராமதாசை இரண்டு கழகங்களும் கழட்டி விடும் காலம் வருமா

Anonymous said...

//ஓவர்நைட் யோசிச்சா வந்த கேள்வி..... ஒண்ணும் ஒண்ணும் எம்பூட்டு?//

ஓவர்நைட் யோசிச்சா வந்த கேள்வி..... ஒண்ணும் ஒண்ணும் எம்பூட்டு?

Anonymous said...

இட்லி வடையும் சங்கு மாமாவும் ஒருவரோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது?

IdlyVadai said...

//இட்லி வடையும் சங்கு மாமாவும் ஒருவரோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது?//

எனக்கு கூட அந்த சந்தேகம் உண்டு. அதனால் தான் சங்குமாமாவின் பின்னூட்டங்கள் நிறைய நான் அனுமதிப்பதில்லை. கொஞ்சம் எல்லை மீறி சங்கை ஊதுகிறார் சில சமயம்.

Anonymous said...

தினமலர் பத்திரிக்கை நெல்லை மாநாடு ஸ்பெஷல் எல்லாம் போட்டாங்களே? அப்படியும் எப்படி கைது பண்ணாங்க? அரசன நம்பி புருஷன கதையா?

ரொம்ப நாளா கேப்டன் செய்தி இல்லையே?

கர்நாடக அரசியல் நிலவரம் எப்படி இருக்கு? அதுவும் கிருஷ்ணா வந்த பிறகு?

மண்டு பத்திரிக்கை இந்தியாவின் தேசிய பத்திரிக்கையா இல்லை சீனாவின் தேசிய பத்திரிக்கையா?

திபெத்ல என்ன நடக்குது?

கானகம் said...

Idly vadai pinnoottam idamal iruppathin avasiyam enna?? alladhu karanam enna??

Anonymous said...

//இட்லி வடையும் சங்கு மாமாவும் ஒருவரோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வருகிறது?//

NO.......NO........

இட்லி வடை மெஸ் போட்டோ விலே ஒரு மாமா சாம்பார் ஊத்துறார் இல்லையா ? அது தான் சங்கு மாமா...வீணாக குழப்பிக்கொள்ள வேணாம்...

என் கேள்வி..

டி ஆரின் அரசியல் எதிர்காலம் பற்றி இட்லி வடை என்ன ஜோசியம் சொல்கிறது ?