பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 27, 2008

பிரபாகரன் படம் - இளைஞர் காங்கிரஸ் போலீஸில் புகார்

`பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம் - விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை

அதை தொடர்ந்து தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன் னாள் துணை தலைவர் சபீர் அலி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.மனு விவரம்:

சென்னை கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேப்பில் `பிரபாகரன்' என்ற சிங்கள சினிமா பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது. இந்த படத்தை பெரிஸ் என்பவர் பிரிண்ட் எடுப்பதற்காக இங்கு வந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத் ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், டைரக்டர் சீமான் ஆகியோர் தலைமையில் அங்கு சென்ற சிலர் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக படம் எடுத்திருப்ப தாக கூறி பெரிஸ் என்பவரை தாக்கியுள்ளனர்.

பிரபாகரனுக்கு ஆதரவாக செயல்பட யாருக்கும் உரிமை இல்லை. பிரபாகரன் பற்றிய இந்த படத்தை திருமாவளவன், ராமதாஸ் ஆகியோரிடம் போட்டுக் காட்டிய பின்னர் அதில் பிரபாகரன் பற்றி தவறாக சித்தரித்து இருந்தால் அந்த பட பிரிண்டுகளை தீ வைத்து எரிப்போம் என்று கூறி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

எனவே தமிழர் என்ற போர்வையில் விடுதலைப்புலி களை ஆதரிப்போர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதோ இளைஞர் காங்கிரஸ்காரர்கள் மட்டும் கொஞ்சம் உப்பு போட்டு திங்கிறாங்க போல

4 Comments:

Anonymous said...

Yes only Congress people may eat with salt BUT WHAT THOSE SALVES EAT ?, That is a problem.
Who wrote this comment please completely know the issue and write before this.
read this,
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=11752

Anonymous said...

All the 3 rowdies & their goons should be immediately arrested & put behind bars for supporting the conspirator & murderer of a former PM of India.

Anonymous said...

//ஏதோ இளைஞர் காங்கிரஸ்காரர்கள் மட்டும் கொஞ்சம் உப்பு போட்டு திங்கிறாங்க போல //


இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் தமிழனா என்று சோதித்து பார்க்கவேண்டும்

Anonymous said...

Seriya sonnenga idlyyaare