பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 14, 2008

நோ கமெண்ட்ஸ்


"கோக், பெப்ஸி போன்ற பானங்களின் விற்பனைக்குத் தடைவிதித்து, பதநீரைப் பதப்படுத்தி, பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் விற்கலாம்' - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

பிகு: நிறைய பல்டி அடித்தால் தாகம் எடுக்கும்இந்த வார குட்டு

சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் நையாண்டி செய்து இண்டர்நெட்டில் எழுதியதை திரும்பப் பெறும்வரை எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் திரையுலகில் பணியாற்ற ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று தீர்மானம் போட்டதற்காக நடிகர் சங்கத்துக்கு இ.வா.குட்டு. ஊனமுற்றவர்களை நையாண்டி செய்து காமெடி; பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச நடனங்கள்; போலீஸ், அரசியல்வாதிகளைக் கேவலப்படுத்தும் காட்சிகள்; என்று ஒட்டு மொத்த சமூகத்தையே இழிவுபடுத்தி திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று அடுத்தபடி அறிவிக்கும் துணிச்சல் நடிகர், நடிகைளுக்கு உண்டா?
( ஓ-பக்கங்கள், குமுதம் )

5 Comments:

வால்பையன் said...

இங்கே கூட்டணியில் பிரச்சனை செய்தால் மேலே அன்புமணியின் மந்திரி பதவிக்கு ஆப்பு வரும் என்று தானே பல்டி அடித்தார், அதை ஏன் சொல்லவில்லை

வால்பையன்

Anonymous said...

O Pakkangal eppodu Kumudathukku
odipochu? AV yilerundu kazhatti
vittaargala? AV Dhi Mu Ka vukku
bhayappadaradhaa? Pathirigai
Sundhandhiram ellaam enge pochu??

கூடுதுறை said...

இவருடைய பல்டிகள் கணக்கில் அடங்காதவை. தமிழ் மக்களின் சகிப்பு தன்மை வாழ்க...

Anonymous said...

பதநீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கிறார்கள்.இளநீரும் இப்போது வேறு சில பானங்கள் போல் பாக்
செய்யப்பட்டு கிடைக்கிறது.அரசு, தனியார் இதில் முனைந்து ஈடுபட்டால்
நிறைய செய்ய முடியும்.பதநீரை மிக குறைந்த விலையில் விற்க முடியும்.
வேலைவாய்ப்பும் பெருகும்.பதநீரின்
சுவை அலாதியானது.

Anonymous said...

விகடன் மன்னிப்பு கேட்டு விட்டதாமே?
விகடனுக்கு திரைப்பட உலகின் ஒத்துழைப்பு தேவை.அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.அடுத்து யாரிடம் மன்னிப்பு கேட்பார்கள்- அரசியல்வாதிகள், போலிஸ்காரர்களிடமா ? :(