பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 07, 2008

இன்விசிபல் பேனா மூலம் 'காப்பி'

தற்போது பிட் அடிக்க காகிதங்களுக்கு பதிலாக மாணவர்கள் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். பார்முலா, தமிழில் குறள்கள், பிற பாடங்களுக்கு குறிப்புகள், தலைப்புகளை எழுதி வைக்க இன்விசிபில் பேனாவை கொண்டு கை பகுதியில் எழுதி வைத்து செல்கின்றனர்.

இந்த பேனா மூலம் எழுதினால் எழுத்துக்கள் வெளியே யாருக்கும் தெரியாது. இதனால் மாணவர்கள் பேனாவின் மூடியில் உள்ள லைட்டை போட்டு கையில் எழுதி இருப்பதை பார்த்து காப்பி அடிக்கிறார்கள். இந்த பேனா சாதாரண காலங்களில் ரூ.10-க்கு விற்றது. தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த 3-ந்தேதி முதல் பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் 6 1/2 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மறந்து போய் இதே பேனாவில் தேர்வு எழுதினால் அப்பறம் எந்த லைட் அடித்தாலும் மார்க் தெரியாது.

4 Comments:

Unknown said...

There is a grammatic error in poll - if you read the sentance together with question mark - you will get opposite meaning. This poll will unintentionally mislead voters to give wrong answer.

Pl correct it.

VS

Anonymous said...

அது என்ன சனி க்தயிறு மட்டும் அப்டேட் பண்றதே இல்ல? இந்த ரெண்டு நாள்ல மட்டும் தமிழ்நாட்டுல பரபரப்பா எதுவுமே நடப்பதில்லையா அல்லது இட்லி வடைக்கு லீவ் வா?

IdlyVadai said...

ராஜா சனி, ஞாயிறு நியூஸ் ரொம்ப கம்மி. அப்பறம் ஆபிஸ் லீவு :-)

Arun said...

IV... செம கலாயல்.. ;-)
பட்டைய கெலப்பிட்டீங்க!