பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 20, 2008

விட்டுக் கொடுக்கவேண்டாம் - சரப்ஜித்சிங் மனைவி

பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி உள்ள இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு விடுதலை கிடைப்பதற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு பதிலாக இந்திய சிறையில் உள்ள கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாரையும் விடுதலை செய்து விடாதீர்கள் என்று சரப்ஜித்சிங்கின் மனைவி சுக்பிரீத் கவுர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது கணவருக்காக தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவதை நானோ, என் மகள்களோ விரும்பவில்லை. எங்களை விட நாடு பெரியது. தாயக நலனுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். எனது கணவரை சந்திக்க அவரது சகோதரிக்கு விசா வழங்குவதுபோல், எனக்கும், என் மகள்களுக்கும் விசா வழங்க வேண்டும்.

நிச்சயம் இவரை பாராட்ட வேண்டும்!

3 Comments:

Anonymous said...

இந்தப் பெண்மணிக்குப் பாத பூஜை செய்து அந்த பூஜை நீரை மன்மோகன் குடிக்க வேண்டும். முதுகெலும்பில்லாத (edited) மன்மோகன் ஹனீஃப் கைதான பொழுது தூக்கம் போனதாகச் சொன்னான். இன்று இந்த வீரப் பெண் சொல்வதை அனைவரும் கேளுங்கள். என் கணவனைத் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காக இந்திய சிறையில் இருந்து எந்தத் தீவீரவாதியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது, விடுதலை செய்யக் கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தச் செய்தி உண்மையானால் இந்தப் பெண்மணியின் பாதங்களை வணங்கக் காத்திருக்கிறேன். மன்மோகன் (edited) இருந்தும் கூட இந்தியா இன்னும் வாழ்கிறது என்றால் அது இது போன்ற தியாகிகளின் வீரத்தாலும் தியாகத்தாலும் மட்டுமே. அந்தப் பெண்மணியை வணங்குவோமாக. இந்த நிலையில் கடத்தப்ப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கள் உறவினர்களள விடுவிக்கக் கோரி அசிங்கமாகப் போராடிய ஆட்களின் நினைவும் வருகிறது.திருமதி சரப்ஜித் சொன்னதைப் படித்த பொழுது நெகிழ்ச்சியில் உறைந்து போனேன். இவரைப் போன்றோரால்தான் நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அவரது விலாசம் கண்டு பிடித்து நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்
( edited )

Unknown said...

சரப்ஜீத் சிங் எதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்?

Anonymous said...

Why don't the UPA Govt. get Sarbjit Singh back by exchanging him with Kaduvetti Guru or PMK Ramadoss? Ore kallula rendu mangai. It will shut the mouth of BJP as well as PMK. UPA and MK can rule in peace.