பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 17, 2008

ஜோதி - கண்டனமும், பாராட்டும்

ராஜ்யசபை எம்பி பதவி கிடைக்காததால் வழக்கறிஞர் ஜோதி அதிமுகவிலிருந்து விலகல்
அதிமுக கண்டனம், திமுக பாராட்டு....

அதிமுக அறிக்கை
அதிமுக சட்ட ஆலோசகர் பொறுப்பி லிருந்தும், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ந.ஜோதி, ராஜினாமா செய்வதாக 13.3.2008 அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி வேட்பாளராக நா. பாலகங்கா அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்ட வுடன், தனக்கு மீண்டும் மாநிலங் களவை உறுப்பினராகும் வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் 12.3.2008 அன்று அதிமுக பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே நீதிமன்றத்தை விட்டு ஜோதி வெளியே வந்து மீண்டும் நீதிமன்றத் திற்கு செல்லாமல் அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திரும்பிவிட்டார்.

மறுநாள் அதாவது 13.3.2008 அன்று காலையிலேயே அதிமுக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி, அதிமுக சம்பந்தப்பட்ட வழக்குகள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக பிரமுகர்களும் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவை சார்ந்தவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் ஆகிய அனைத்து வழக்குகளிலிருந்தும் தான் விலகுவதாகவும், வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் பெற்றுக் கொள்ளுமாறும் ந.ஜோதி தெரிவித்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, வழக்கறிஞர் தொழில் தர்மத்தையே படுகொலை செய்து புதைகுழியில் புதைக்கும் செயல் ஆகும்.

தான் நடத்திக் கொண்டிருந்த ஒட்டுமொத்த 113 வழக்குகள் பல்வேறு நிலைகளில், பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வாறு அனைத்து வழக்குகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக ஜோதி தெரிவித்த செயல் இதுவரை சட்டத்துறையில் கேள்விப்பட்டிராத இழி செயலாகும்.

இவ்வாறு அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், அதிமுகவிற்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாகும் விதத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அதிமுக உறுப்பினர்கள் யாரும் இவருடன் இனி எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலைஞர் கேள்வி பதில் அறிக்கை
கேள்வி: அதிமுகவிற்காகவும், ஜெயலலிதாவிற்காகவும் வாதாடிய வழக்கறிஞர் ஜோதியின் ராஜினாமா பற்றி?
பதில்: உண்மை புரிவதற்கு திறமைசாலிகளுக்கே காலம் தேவைப்படத்தான் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜோதி


2 Comments:

Indian Voter said...

அரசியல் கணக்குகளை விட்டு விட்டு தொழில் முறையில் பார்த்தால் ஜோதியின் செயல் unprofessional ஆகத் தெரிகிறது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், அதிமுக வின் உள்-அரசியல் எவரும் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள முடியாதது. கட்சித் தலைமையை பொறுத்த வரை பலருக்கு பதவியளித்து திருப்திப்படுத்த வேண்டிய சூழ்நிலை. எதிர்க்கட்சியாக உள்ள நேரத்தில், ஒருவருக்கே மீண்டும் மீண்டும் பதவி வழங்கிக் கொண்டிருப்பது (தலைமை பதவியும், தலைமையின் குடும்பத்தினர் வகிக்கும் பதவிகளையும் தவிர்த்து) சாத்தியமற்றது என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விஷயமாயிற்றே.

அறிஞர். அ said...

* அதிமுக சம்பந்தப்பட்ட வழக்குகள்,
* அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும்,
* அதிமுக பிரமுகர்களும் சம்பந்தப்பட்ட வழக்குகள்,
* ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்குகள்,
* ஜெயலலிதாவை சார்ந்தவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள்
//

அப்பாடா, ஒருமுறை தலை சுற்றியது... இது போல் திமுகவும் எவ்வளவு வழக்குகள் இருக்குதுன்னு ஓப்பன் ஸ்டேட்மண்ட்டா வெள்ளை அறிக்கை தந்தால் நல்லது.

மாஹிர்