பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 16, 2008

விகடன், குமுதம் - மன்னிப்பு, மறுப்பு

விகடன், குமுதம் வாரம் இரண்டு பக்கங்கள் இந்த மாதிரி மன்னிப்பு/மறுப்புக்களுக்கு ஒதுக்கியுள்ளது.விகடன் விளக்கம்
ஆனந்த விகடன் 20.2.2008 இதழில் வெளியான எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 9.3.2008 அன்று நடந்த கூட்டத்தின்போது, கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வேறு சில நண்பர்களும், அமைப்பினரும் அறவழியில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோரைப் பற்றி வருந்தத்தக்க விமர்சனங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதைக் கண்டு, எல்லோரையும் போலவே நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த இரு மாபெரும் சிகரங்கள் மீது பற்றும் பாசமும்கொண்ட மக்களின் முன்பு அதை வைத்து, நியாயம் கோரும் விதமாகவே அக்கட்டுரையின் சில பகுதிகளை வெளியிட்டதோடு, அது குறித்து எங்களின் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அந்தக் கட்டுரையிலேயே பதிவு செய்திருந்தோம்.

மற்றபடி, குறிப்பிட்ட அக்கட்டுரையை வெளியிட்டதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமும் கிடையாது. இருப்பினும், குறிப்பிட்ட அக்கட்டுரையால் பலர் மனம் புண்பட்டதை உணர்ந்து, அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைப்படத் துறை மீதும் திரைக் கலைஞர்கள் மீதும் ஆனந்த விகடன் என்றென்றும் மாறாத மதிப்பும் அன்பும்கொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்!

-ஆசிரியர் ( விகடன் )
படிக்க வேண்டிய பதிவு: விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

நியாயமா விஜயகாந்த் ?

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது! 27.2.08 தேதி குமுதம் இதழில் வெளிவந்திருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பேட்டியைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர், முதல்வர் கலைஞருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைத்தான் சொல்கிறோம்! தனது பதில்கள் தான் சொன்னவாறு வெளியிடப்படவில்லை என்று குமுதம் மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருந்தார்.

சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் டேப்பில் அப்படியே உள்ளன. ஒரு முறைக்கு இருமுறை தெள்ளத்தெளிவாகச் சொல்கிறார். விஜயகாந்த் 'எழுதுங்க' என்று நம்மிடம் சொல்லிவிட்டு நோட்டில் எழுத வசதியாக பொறுமையாகவும் சொல்லியிருக்கிறார். சொல்லியபின் அவரது உதவியாளர் பார்த்தசாரதி 'கலைஞர் அசிங்கமாகப் பேசினார்' என்று மட்டும் போடுங்க என்று கேட்டுக் கொள்ளா விஜயகாந்த் தயங்கியவாறு யோசித்துவிட்டு 'கச்சத்தீவு பற்றி எனக்கு தெரியாது என்கிறீங்களே. அனந்த நாயகியை சட்டசபையில் இந்த வார்த்தை கேட்டு நான் படிச்ச ஞாபகம் எனக்கு இருக்கே அது மட்டும் எப்படி ... அந்த மாதிரி அதைப் போடுங்க..." என்கிறார்.

இப்படி பேசிவிட்டு முழு புசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? சில விஷயங்களை வேண்டும்மென்றே குமுதம் தவிர்த்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். ஒரு விதத்தில் அது உண்மையே! பத்திரிக்கை நாகரிகம் கருதி சிலவற்றை நாங்கள் பிரசுரிக்கவில்லை 'மூதறிஞர் ராஜாஜிக்கு தலைவர்' என்ன பட்டப் பெயர் வைத்தார் ?' என்ற விபரம் உள்பட டேப்பில் உள்ள விஷயங்களை வேண்டுமென்றேதான் தவிர்த்தோம்.

பேட்டி தவறாக இருந்தால் வெளியான மறு நாளே அல்லவா, நம்மைத் தொடர்பு கொண்டு தங்கள் அதிருப்தியை தெரிவித்திருக்க வேண்டும் ? சொல்லப்போனால் பேட்டி வெளியான அன்று இரவே, விஜயகாந்தின் உதவியாளர் பார்த்தசாரதி நம்மைத் தொடர்பு கொண்டு 'பேட்டி பிரமாதம் அண்ணே. நிறைய ஃபோன்' என்று பேசியதை மனசாட்சி இருந்தால் மறுக்க முடியாது.

நளைய முதல்வராக வரக் துடிப்பவர் மனம் போனபடி பேசிவிட்டு திடீரென்று 'நெருக்கடி வரும் போது அந்தர்பல்டி அடிப்பதும், தூற்றுவதும் அவரது தகுதிக்கும் தலைமைக்கும் பெருமை சேர்க்காது. இறுதியாக ஒரு விஷயம், செய்தியாளர் தூண்டுவது போல கேள்விகளைக் கேட்டுள்ளதாகச் சொல்லியிருப்பதை விஜயகாந்த் தன்னையறியாமல் தெரிவித்த பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறோம். ஒரு பத்திரிக்கையாள்ரின் வேலையும் அதுதான். அதற்காக விஜயகாந்திற்கு நன்றி!.

படிக்க வேண்டிய பதிவு: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு

5 Comments:

Anonymous said...

In Camera Kannayiram, the text below the photo is not readable. Pls. fix it.

Anonymous said...

ஜெயமோகன் தான் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து எழுதியதை தன் தளத்திலிருந்து நீக்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர் குறித்து எழுதியதை
மறுபிரசுரம் செய்த வசந்தம் ரவிக்கு
ஜெமோ சார்பாக சிறில் அலெக்ஸ் அதை நீக்ககோரி அவரும் எடுத்து
விட்டார். அதைப் படித்தவர்கள்
பிரதி எடுத்து இணையத்தில்
இட்டால் ஜெமோவால் ஒன்றும்
செய்ய முடியாது.

விகடனின் மன்னிப்பு கோரல்
எதிர்பார்த்ததுதான். அரசைப் பகைத்துக்
கொள்ளலாம், கருத்து சுதந்திரம் காப்போம் என்று கொடி பிடிக்கலாம்,
ஆதரவு திரட்டலாம்.அரசு ஒரளவிற்கு மேல் ஒன்றும் செய்யாது. ஆனால் சினிமாத் தொழிலில் உள்ளவர்களை பகைத்துக் கொண்டால் அதை விட ஆபத்து. சீரியல்,சினிமா எடுக்க முடியாது என்பதை விகடன் உணர்ந்து பணிந்திருக்கிறது.

இனி இவர்களெல்லாம் கருத்து
சுதந்திரம் குறித்து பேசாமல்
இருப்பதே நல்லது.

Anonymous said...

//In Camera Kannayiram, the text below the photo is not readable. Pls. fix it.//

அனானி, அது "இட்லி வடை" தின மலர் லேந்து சுட்டது...வேனும்னாக்க "தினமலர்" வெப்சைட் க்கு போயி பாத்துக்குங்க..

keyven said...

நாயை அடிப்பானேன் !!! பீயை சுமப்பானேன் !!

Indian Voter said...

இந்த பேட்டி, குமுதம் மீது பாய்ச்சல், குமுதத்தின் மறுப்பு - இவை அனைத்துமே விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியில் ஒரு பெரிய சறுக்கல். உணர்ச்சிவசப்பட்டு வீர வசனம் பேசி பேட்டி கொடுத்து விட்டார். சாதாரண நிகழ்வாக இருந்தால் இப்படி பல்டி அடித்திருக்க வேண்டியிருக்காது. ஆனால், விஜயகாந்த் அந்த பெட்டியில் குறிப்பிட்டது சட்டமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி. சட்டமன்றதிற்க்குள் பேசியதை சிறிதேனும் தவறாக பேட்டியிலோ அல்லது அறிக்கையிலோ குறிப்பிட்டுவிட்டால் privilege issue ஆகி விடும். மனிதர் அதனால் தான் பயந்து விட்டார் போலிருக்கிறது.