பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 10, 2008

கண்டன கூட்டம் - தீர்மானம்

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் அவமரியாதையாக எழுதிய ஒரு எழுத்தாளரையும், வார பத்திரிகையையும் கண்டித்து நடிகர்-நடிகைகள் கூட்டம் நடந்தது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜிஆரையும், `நடிகர் திலகம்' சிவாஜிகணேசனையும் அவமரியாதை செய்யும் வகையில், ஜெயமோகன் என்ற ஒரு எழுத்தாளர் `இன்டர்நெட்'டில் செய்தி வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதை, ஆனந்த விகடன் வார இதழ் பிரசுரம் செய்து இருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர்-நடிகைகளின் கூட்டம், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஏராளமான நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* அதிக மக்கள் பார்க்காத இன்டர்நெட் செய்தியை, வார இதழில் வெளியிட்டு எம்.ஜிஆர், சிவாஜிகணேசன் ஆகிய இருவரையும் அவமதித்த நிறுவனத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.

( நிறைய படத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போல நையாண்டு செய்தால் பரவாயில்லையா ? சன் டிவியில் டாப்-10 என்ற நிகழ்ச்சியில் செய்த நையாண்டியை விடவா ஜெயமோகன் எழுதிவிட்டார் ? நீங்கள் கடுமையாக கண்டித்ததால் ஜெயமோகனுக்கு ஜுரமாம்)

* அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி பொது மன்னிப்பு கேட்க தவறினால், அந்த வார இதழில் அந்த நிறுவனம் தொடர்புள்ள எந்த மாத, வார, தினசரி இதழ்களிலும் தமிழ் திரை உலகை சார்ந்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பேட்டியோ, புகைப்படமோ இனி பயன்படுத்தக் கூடாது.

( இது விகடனுக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன். நடிகை நடிகர்கள் இல்லாமல் விகடன் நல்ல பத்திரிக்கை என்று பேர் எடுத்தால் அதற்கு ஜெயமோகனுக்கு தான் நன்றி சொல்லனும் )

* மேற்கண்ட நிறுவனத்துடன் தமிழ் திரையுலகம் எந்தவித தொழில் ஒத்துழைப்பும் வைத்துக்கொள்ளாது.

( நல்ல விஷயம் தானே ! )


* எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோரை தன் எழுத்தால் அவமதித்த எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக கண்டிக்கிறோம். இன்டர்நெட்டில் அவர் வெளியிட்டுள்ள தவறான-உண்மைக்கு புறம்பான செய்திகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழ் திரையுலகில் ஜெயமோகன் எந்த துறையில் பணிபுரிந்தாலும், அவருடன் தமிழ் திரையுலகம் இணைந்து பணியாற்றாது.

( சபாஷ். வேற என்ன சொல்ல ? )

* திரைப்படங்களுக்கு சென்சார், நாடகம் நடத்த போலீஸ் அனுமதி என்று நடைமுறையில் இருக்க, இன்டர்நெட்டுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால், முறையற்ற பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. எனவே மத்திய அரசு இன்டர்நெட்டுக்கு சென்சார் போன்று ஒரு தணிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

( இது எல்லாம் கொஞ்சம் ஓவர் )

14 Comments:

வெங்க்கி said...

இது ரொம்ப மொக்கையா இருக்கு...நானும் திரைப்பட துறையை (இசை அமைப்பு) சார்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்...அந்த கூட்டத்துக்கு சென்ற சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது..அடித்த கமெண்ட் கள்.. சில....

"நாமெல்லாம் Friends மத்தில பேசிக்கிரத ஜெயமோகன்..பப்ளிக் ஆக எழுதி.....புண்ணாக்கி கிட்டாரு, பாவம்.., இன்னைக்கு எல்லா டிவி சேனல் ல வர காமெடி நிகழ்ச்சிகளிலும் எம் ஜி ஆரு, சிவாஜி யோட மிமிக்கிரி இல்லாங்காட்டி, பொழைப்பு ஓடாது...அந்த லிஸ்ட் ல இப்போ கேப்டனும் சேர்ந்துட்டாரு..அவரியும் இஷ்டத்துக்கு மிமிக்க்ரி செஞ்சி வெறுப்பு எத்துறாங்க.., நடிகர் சங்கம் இதுக்கு கண்டனம் தெரிவிக்கலேன்னா நடிகர் திலகம் குடும்பத்தில வருத்தப்படுவாங்க ன்னு இப்படி ஒரு Show-off.. எம் ஜி ஆருக்கு தான் யாரும் கிடையாதே ... ADMK தவிர (அவிங்களும் அவர தேர்தல் சமயத்தில தான் Use பண்ணிக்கிவாங்க....) இது ஒரு உருப்படாத மீட்டிங்...சும்மா கெடந்த ஆண்டி ஊதி கேடுதானம் சங்க..ங்கற மாதிரி.."

இப்படியாக நண்பர் கூறினார்...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

உங்க கமெண்ட் பத்தி == அதானே.

வெங்க்கி said...

சாமான்யன் !! உங்க கமெண்ட் ஒண்ணும் புரியல..வெளக்கமா எழுதுங்க..நாங்க மங்குணி மகராசனுங்க. !!

Ravi said...

IV sir, why not we boycott their films (avanga solra maadhirye)? I don't understand where such people are heading to? Avvalavu sahippu thanmai, sense of humour kooda illaama pochaa? Every person - however great s/he may be, is bound to be made fun of. Taking it in the same sense of fun is what makes a good human. I wonder if these people are humans at all. (btw, unga comments soooper and so is the response from keyven).

Anonymous said...

நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி அதை பின்பற்றாமல் இருப்பது புதிதா
என்ன. இதுவும் அதுல ஒண்ணு.

Anonymous said...

internet ku censor a?

kanna ivinga comedy keemedy panlayeeeeeeeee

Anonymous said...

//திரைப்படங்களுக்கு சென்சார், நாடகம் நடத்த போலீஸ் அனுமதி என்று நடைமுறையில் இருக்க, இன்டர்நெட்டுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால், முறையற்ற பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. எனவே மத்திய அரசு இன்டர்நெட்டுக்கு சென்சார் போன்று ஒரு தணிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.//

semma comedy........

Anonymous said...

இந்த சினிமாக் காரங்க கிண்டல் பண்ணாத விஷயமே கிடையாது இப்ப வந்து பேச வந்துட்டாங்க.

அறவாணிகளை ஒன்பது என தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி அவங்களை இழிவாகப் பார்க்கும் நோக்கத்தை நிலைபெறச் செய்தவங்க இவங்கதான்.

தமிழ்நாட்டில எந்த தெய்வத்தையும் எப்படி வேணும்னாலும் திட்டலாம் ஆனா சில மனுச தெய்வங்கள ஒண்ணும் சொல்லிடக் கூடாது.

பகுத்தறிவு மண்ணாங்கட்டின்னு ஒளறிட்டே மனுசன தெய்வமாக்கி பாக்குற கூட்டம்.. சுத்தி ஜால்ரா தட்டிகிட்டிருந்தாத்தான் இவனுகளுக்கு உயிர் இருக்கும்.. இல்லைண்ணா தண்ணி அடிச்சி செத்து போவானுங்க..

Anonymous said...

ஜெயமோகன் எழுதிய post-க்கு link யாராவது புண்ணியவான் குடுங்க...

சீனு said...

ada pongkappaa...oree sirippu sirippaa varuthu. inimelaachum a.v. sinimaa sambanthamaa illaama nalla nalla cover story poduvangannu nambuvom...

Anonymous said...

Today's newspaper has carried a news that tv channels in India are full of only 3 C's: Cinema,Cricket and Crime. And in Tamilnadu it is
only the first C, only Cinema and
nothing else. Coming to the subject
on hand, we Indians are generally
intolerant of comment, cannot appreciate pun, humour and pulling
legs harmlessly, can never laugh
at ourselves. As IV says, the greataest service this condemnation meeting has done is to
indirectly ask Ananda Vikatan to
pursue matters of greater values
and relavance in life than the
bellys and thighs of belles.The
decline in values is directly
attributable to magazines like AV
stooping to so low a standard.
I would like only to add that there are thousands of "Bushism" quotes
and yet George w. Bush has taken it all in his stride.

Anonymous said...

அப்ப ஜெ மோ வசனம் எழுதி பாலா இயக்கிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இரூக்கும் நான் கடவுள் ரீலீஸ் ஆகவே ஆகாதா? ஐ ஜாலி :))) இனிமேல் ஜெயமோகன் எழுத மட்டுமே செய்யலாம் சினிமா செய்ய வேண்டாம், சினிமாவுக்கும், ஜெயமோகனுக்கும் நல்ல காலம். சினிமாவில் தாக்குப் பிடித்த எழுத்தாளர் சுஜாதா மட்டுமே. இப்படி ஏதாவது தீர்மானம் போட்டு ஜெயமோகனை சினிமாவில் இருந்து கட்டாயமாக விலக்கி வைக்கா விட்டால் அவர் மற்றும் ஒரு வியட்நாம் வீடு சுந்தரமாக மாறி வீணாய்ப் போய் விடுவார். நடிகர் சங்கத்துக்கு நன்றி. எக்கேடும் கெட்டு உருப்படாமல் போங்கடா

Anonymous said...

//ஜெயமோகன் எழுதிய post-க்கு link யாராவது புண்ணியவான் குடுங்க...//

He has removed those controversial blogs on his site http://jeyamohan.in

Narayanan Venkitu said...

Vetti pasanga.!!! Velai illai.!

Kevalamaana padangal moolamaga...samudhayathai baadhikkum thiraith thurai makkaLai ..naan vanmaiyaga kandikkiren!