பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 07, 2008

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தை விட முன்னேறிவிடும் - சோ

`தி நேம் ஈஸ் ரஜினிகாந்த்' என்ற பெயரில், ரஜினிகாந்த் பற்றி டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது.

புத்தகத்தை நடிகரும், எழுத்தாளருமான சோ வெளியிட, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா பெற்றுக்கொண்டார்.

சோ பேச்சு...


``இது, ஒரு வினோதமான நிகழ்ச்சி. இந்த புத்தகத்தை வெளியிட்ட எனக்கு, புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. புத்தகத்தை என் கண்ணில் காட்டவில்லை. ஆனால், கமலஹாசன் படித்து விட்டார்.

ரஜினிகாந்த் சினிமாவில் இருந்தாலும், பகட்டை விரும்பாதவர். அவர், அரசியல் பேசுவார். ஆனால் அரசியல்வாதி அல்ல. அவர், ஆன்மிகம் பேசுவார். ஆனால் சன்னியாசி அல்ல. அவர், கடவுளின் அற்புத படைப்பு.

கடவுள் சொல்வதை யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் கடவுளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றும் ஒரே மனிதர், ரஜினிகாந்த்தான்.

ரிஷிகேஷ்

எந்த ஒரு நடிகரும் தன் வாழ்நாளில், வருடத்தில் பதினைந்து நாட்களை ரிஷிகேசில் கழிக்க மாட்டார்கள். ரஜினி ஒருவரை தவிர. வருடத்தில் பதினைந்து நாட்கள் அவர் ரிஷிகேசில் ஓட்ஸ் கஞ்சியையும், வெறும் பழங்களையும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வாழ்கிறார்.

``நீங்க ஏன் அடிக்கடி ரிஷிகேஷ் போறீங்க?'' என்று நான் அவரிடம் கேட்டேன். ``உங்களை மாதிரி ஆட்கள் முகத்தை பார்க்காமல் இருக்கலாம் அல்லவா?'' என்று தமாசாக பதில் அளித்தார்.

ரஜினிக்கு, சோ தான் ஆலோசகர் என்று கூறுகிறார்கள். அவர் என் ஆலோசனையை கேட்டு இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்று இருக்க மாட்டார். என் ஆலோசனைகளை கேட்டு யார் உருப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது உங்களுக்கு தெரியும்.

அரசியலுக்கு வந்தால்...

ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்திலும், அடுத்தவர்களிடம் கருத்து கேட்பார். எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்காதே என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை ரஜினிகாந்த் பின்பற்றுகிறார். சிறந்த நிர்வாகம் பண்ணுவதற்கான தகுதி இது. குஜராத்தில் நரேந்திரமோடி இதைத்தான் செய்தார். அதனால்தான் அவர் ஜெயிக்க முடிந்தது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு, குஜராத்தைவிட ஒரு படி மேலே முன்னேறிவிடும். நியாயமும், தர்மமும் ரஜினியிடம் குறையாமல் இருக்கிறது. அவர் ஊழல் அற்றவர். அவரின் தலைமையில் அமையும் நிர்வாகமும் ஊழல் இல்லாமல் இருக்கும்.

ரஜினி சர்வதேச பிரச்சினைகளை அலசும் திறனும், அவருடைய உலக ஞானமும் என்னை பிரமிக்க வைத்து இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவார் என்று இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார்கள். சரித்திரத்தில், உலகிலேயே முதல்முறையாக எல்லா தரப்பு மக்களும் சேர்ந்து, அரசியலுக்கு வா என்று எந்த ஒரு நடிகரையும் அழைக்கவில்லை. அது ரஜினி விஷயத்தில் நடந்திருக்கிறது.

வெற்றி

ரஜினி, தலைக்கனம் இல்லாதவர். கொஞ்சம் பணம், புகழ் வந்தால், சிலருக்கு தலைக்கனம் வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. `சிவாஜி' படத்தின் வெற்றியில் தன் பங்கு எதுவும் இல்லை என்று சொன்னவர். அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் ஷங்கரும், சரவணனும்தான் என்றார்.

ஒரு முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், தன்னை விட அந்த பதவி உயர்ந்தது என்று கருதவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவர், ரஜினிகாந்த்தான். அவருக்கு பதவி ஆசையும், பணத்தின் மீது ஆசையும் கிடையாது.''

3 Comments:

Unknown said...

பாவம் சோ விடமாட்டார் போலிருக்கிறது, ரஜினியை அரசியலுக்கு வா வா என்று அழைத்தது இவர்தான் அதிகம், இவரின் எழுத்துக்களைப் படித்துதான் ரஜினிக்கு பயமே வந்திருக்கும், அர்சியல்வாதிகள் துக்ளகில் படும்பாடு பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்

செல்வி

Anonymous said...

Why you people are trying to support cho? he is half -baked chikenguniya man ..leave the mad man alone and let him vomit and go away soon.
no one dare-to-care cho in Tn or india.

Anonymous said...

DONT SAY ANONYMOUS.SIMPLY TELL PORAMBOKE. THEY ONLY TELL LIKE THIS ABOUT MR.CHO.