பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 05, 2008

தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு

குமுதம் இதழில் முதல்வர் கருணாநிதி பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேட்டியளித்ததாக முதல்வரின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 22ந் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதை தொடர்ந்து, குமுதம், கேப்டன் இரண்டு பேரும் கலைஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.வருந்துகிறோம்

சென்ற இதழ் குமுதத்தில் வெளியான விஜயகாந்தின் பேட்டி குறித்து கலைஞர் தரப்பிலிருந்து ஒரு வழக்கறிஞர் அறிவிப்பு நமக்கு வந்திருக்கிறது.

விஜயகாந்தின் பேட்டியில் சட்டசபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை காங்கிரஸின் அனந்தநாயகி எழுப்பியது பற்றிய ஒரு பகுதி வெளியாகியிருக்கிறது. அதற்கு கலைஞர் ஒரு பதிலை அளித்ததாகவும் விஜயகாந்த் செல்லியதுபோல் சட்டசபையில் கலைஞர் அப்படி ஒரு பதிலைத் தரவில்லை என்றும் கலைஞரை வேண்டுமென்றே இழிவுபடுத்தவும் சிறுமைப்படுத்தவும் பொய்யான செய்தியை அவர் தந்திருக்கிறார் என்றும் மாற்றுத்தரப்பான எங்கள் கட்சிக்காரரின் விளக்கம் எதூவும் கேட்காமல் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் எனவே உரிய வகையில் தகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருத்தம் கோரி செய்தி வெளியிட வேண்டூம் என்பதாக அந்த வழக்கறிஞர் அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தவரையில் விஜயகாந்தின் பேட்டி அவர் சொல்லிய வகையிலேயே பிரசுரம் செய்யபட்டுள்ளது என்பதையும், அதனை எந்தவிதத்திலும் குமுதத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது என்பதை தெளிவுபடுத்திட விரும்புகிறோம்.

மூத்த, கண்ணியமான, நாடே போற்றும் ஒரு தலைவரை பற்றி அவதூறு பரப்பும் நோக்கம் குமுதத்திற்கு என்றுமே கிடையாது என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கே நன்றாக தெரியும். பத்திரிக்கைத்துறையின் பிதாமகரான முதல்வர் அவர்கள் மனம் புண்படும்படி பேட்டியின் குறிப்பிட்ட பகுதி இருக்குமானால் அதற்காக வருந்துகிறோம்.
நோட்டீசுக்கு விஜயகாந்த் பதில்
அந்த நோட்டீசுக்கு விஜயகாந்தின் வழக்கறிஞர் இம்மாதம் 1ந் தேதி அனுப்பிய பதிலில் கூறியிருப்பதாவது:

குமுதம் வார இதழின் செய்தியாளர் வி.சந்திரசேகரன் என்பவர் தானாகவே எனது கட்சிக்காரரின் (விஜயகாந்த்) அலுவலகத்திற்கு வந்து அவரை தூண்டுவதைப் போலஉங்கள் கட்சிக்காரரால் (கருணாநிதி) பல நேரங்களில் என் கட்சிக்காரர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் தொகுத்து பல கேள்விகளை கேட்டார்.

எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் எனது கட்சிக்காரர், கேட்கப் பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளித்தார். எனது கட்சிக்காரரின் பதில்கள், அவர் கூறியவாறு அப்படியே வெளியிடப்படவில்லை.

தவறாகவும், முறைதவறியும், தேவையற்றவகையிலும் 27.2.2008 தேதி குமுதம் இதழில் அவைகள் வெளியிடப்பட்டன. டேப்பில் அந்த பேட்டி பதிவும் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர் சில பகுதிகளை அந்த டேப்பில் அழித்துவிடும்படி கூறியபின்னரும் அந்த பகுதிகள் என்ன காரணத்தாலோ அந்த இதழிலே வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் நோட்டீசிலே குறிப்பிட்டு இருப்பதைப்போல தங்கள் கட்சிக்காரரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் படியாக எதுவும் கூறவில்லை என்பதை என் கட்சிக்காரர் தெரிவித்துக் கொள்கிறார்.

எனது கட்சிக்காரர் செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது, உங்கள் கட்சிக்காரரை எப்போதும் தான் மதிக்கக்கூடியவர் என்றும், அவரை "கலைஞர்' என்று தான் அழைப்பது வழக்கம் என்றும் "கருணாநிதி' என்று கூட உச்சரிக்கமாட்டார் என்று கூறியதையெல்லாம் கூட வேண்டும் என்றே குமுதம் இதழ் வெளியிடாமல் தவிர்த்து விட்டது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.

6 Comments:

Anonymous said...

காப்டன் விஜயகாந்த் அவர்கள் இவ்வளவு தொடை நடுங்கியா!! வெட்கம்.

IdlyVadai said...

குமுதம் 'வருந்துகிறோம்' பகுதி.

Boston Bala said...

:) :))

Anonymous said...

கலைஞரை எதிர்க்கும் தில் அம்மாவிடம் மட்டுமே உண்டு. மற்றவெனெல்லாம் சும்மா!!

Anonymous said...

Why did you say like this to him. Do not go like this. Take courage and be strong.

Anonymous said...

It is good jay to be strong because she has 66 MLA SEATS.So she can be very strong but where as captain has only one MLA seat and he is being challenced by both coruption parties as like ADMK AND DMK. so what capatin said it is true, because some time the writers are not telling the true message.