பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 04, 2008

தேவாரம், திருவாசகம் ஓதுவதை தடுத்தால் நடவடிக்கை - முதல்வர்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அரசாணையின்படி தேவாரம், திருவாசகத்தை ஓதி வழிபடுவதை தீட்சிதர் உட்பட யாரும் தடுத்திட கூடாது. இந்த வேண்டுகோள் மீறப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் ஓதுவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்று ஒரு சாரார் புகார் கூறியதை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேவாரம், திருவாசகம் பாடி வழிபடுவதற்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஓதுவார் ஆறுமுகசாமி தலைமையில் கடந்த ஞாயிறன்று ஒரு பிரிவினர் கோயிலுக்குள் செல்ல முயன்றபோது தீட்சிதர்கள் அவர்களை தடுத்தார்கள். இதனால் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக 8 வழக்கறிஞர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். ஓதுவார் ஆறுமுக சாமியும் நீதிமன்றத்தில் சரணடைந் தார். அவர்கள் அனைவரும் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 10 தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டனர். இதனி டையே ஆலய பொது தீட்சிதர்களின் செயலர் எஸ்.எஸ்.தன்வந்திரி தீட்சிதர் விளக்கமளித்தார்.

நடராஜர் கோயிலில் தினமும் 6 கால பூஜை முறையாக நடைபெறுகிறது. இந்த 6 கால பூஜைகளிலும் தமிழ் வேதம் என்று சொல்லக் கூடிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவை ஓதி முடிந்தவுடன் ஒவ்வொரு கால பூஜையும் நிறைவு பெறுகிறது.

மார்கழி மாத மகோற்சவத்தில் மாணிக்கவாசகரின் திருவெண்பாவை பதிகங்கள் பாடி சாய்ரட்சையில் ஆராதனை செய்து சிறப்பு வழிபாடாக சைவ அன்பர்களால் போற்றி வரப்படு கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

உண்மை இவ்வாறிருக்க ரத்தின சபாபதிக்கு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடக்கின்ற இடத்தில் 6 கால பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சம்பிரதாய மரபுகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் ஒரு பிரிவினர் குந்தகம் விளைவித்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தீட்சிதர் களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம், திருவாசகம் பாடி, தாய்த் தமிழ்மொழியில் வழிபடுவதற்கு அரசு செயலாளர் இது தொடர்பாக உத்தரவிடலாம் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில் அற நிலையத்துறை செயலாளரும் அவ்வாறே ஆணையிட்டதைத் தொடர்ந்து அதைப் பாடி வழிபட ஆலயத்திற்குள் சென்ற ஓதுவார்கள் உள்ளிட்ட பக்தர்கள் அங்கு திரண்டு வந்த தீட்சிதர்களால் தடுக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட அமளியில் இரு தரப்பினர் மீதும் காவல் துறையினரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான அந்த வழக்கின் முடிவு ஆலயத்தில் நடைபெற்ற தேவையற்ற அந்த கலவரத்தின் அடிப்படையில் தீர்ப்பாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அதற் கிடையே ஏற்கனவே, வெளியிடப் பட்ட அரசு ஆணையின்படி, தேவார திருமுறைகளை ஓதி வழிபட விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டணம் ஏதும் செலுத்திடாமல் வழிபடலாம்.

இதனைத் தீட்சதர்கள் உள்ளிட்ட யாரும் தடுத்திடக் கூடாது என்று கேட்டுக் கொள்வதோடு, இந்த வேண்டுகோள் மீறப்பட்டால் சட்டப் படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப் படுகிறார்கள்.

2 Comments:

Anonymous said...

poongada
rational group never going to change

Thobey srinivasan said...

It is interesting to note that Aarumughasaamy was accompanied by the members of rabidly anti-Hindu Ma.Ka.E.Ka, Dalit Panthers, D.K and a few Islamic outfits.What business does a non-beleiver has in a place of worship?

Will these elements who normally insist on EVR's statue being put up selectively in front of Hindu temples and make a fuss about archans in Tamil display the same guts and fervour to demand Muslims to switch to Tamil from Arabic in their mosques?

If Arumugasamy's intention was to sing Thevaram, he could have very well done it outside the elevated platform.
Where was the need for him to ride an elephant to come to the temple??

Tomorrow, if these groups demand to enter the temple with their footwear on, should it be tolerated in the name of 'reform'?