இந்த வாரம் சில கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்.....
1. வை.கோ என்ன செய்கிறார் ? அரசியலில் அவர் என்ன தான் சாதிக்க எண்ணுகிறார் ?
அம்மாவிடம் சேர்ந்தவகள் சும்மாதான் இருக்கணும். புத்தக கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினார். அதை படித்துக்கொண்டு இருப்பார்.
2. தமிழகத்தின் முதல்வராக ப.சிதம்பரம் வர சாத்தியம் உண்டா ? வந்தால் தமிழ்நாடு முன்னேறுமா ? இல்லை அவர் கார்த்திக்கு பதவி வாங்குவதில் தான் முயற்சியை
செயல்படுத்துவாரா ?
கலஞரிடம் கருத்து கேட்டுவிட்டு காமாக இருக்கணும்.
3. டெக்கான் கிரோனிகிளின் சென்னை விளம்பர பலகைகள் படம் எடுத்து இங்கு இட முடியுமா ? (சில பலான படங்களும் உண்டாமே ?)
சென்னை படம்:
சென்னை சம வேஸ்ட் ஹைத்திராபாத்தில் தான் பல நல்ல படங்கள் என்று கேள்விப்பட்டேன்.
சில படங்கள்
4.
( டி.ஷர்டில் என்ன எழுதியிருக்கு ? கண்டுபிடியுங்க )
4. ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக என்னாகும் ? அவர் ஏன் அடிக்கடி ஓய்வில் இருக்கிறார் ? 84 வயதில் கலைஞரின் அசாத்திய உழைப்புக்கு முன் இவர் இப்படி
அடிக்கடி ஓய்வு எடுக்கும் நிலையில் தான் அவர் உடல் நிலை உள்ளதா ?
கலைஞர் தன் உடல் நிலையை நன்றாக வைத்துள்ளார். சமீபத்தில் கலைஞரை நேரில பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது, அவர் உடல் நிலையை பார்த்து வியந்து போனேன். ஜெயை பார்க்க போயஸ் பக்கம் போனேன் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
5. கல்கி பத்திரிக்கையின் தற்போதைய சர்குலேஷன் எவ்வளவு ? தற்போதைய
காசு கொடுத்து கல்கி படிக்கும் வாசகர்கள் யார் ? எத்தகையவர் ?
நான் காசு கொடுத்து தான் பத்திரிக்கை வாங்குகிறேன்.
தமிழ் நாட்டின் ஜனத்தொகை 70000000(7 கோடி) என்று வைத்துக்கொண்டால்,
எனக்கு வரும் Ratio.
விகடன் = 1:140
குமுதம் = 1:175
கல்கி = 1:2333
துக்ளக் = 1:1750
குங்குமம் = 1:466
ராணி = 1:233
மங்கையர் மலர் = 1:466
இவை எல்லாமே சிறு பத்திரிக்கை தான்.
6. தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டி பெருந்தலைகள் பி.சி.சி.ஐ யில் பெரிய பதவிகள் வகித்தாலும் தமிழகவீரர்களுக்கு சான்ஸ் கொடுப்பதில் ஏன் முனைவதில்லை ?
எல்.பாலாஜி, ஸ்ரீராம், சரத், பத்ரிநாத், சடகோபன் ரமேஷ் என நல்லவர்கள் வேறு
மாநிலம் / ஐசிஎல் தேடும்படி நிலைமை ஏன் ? சென்னையின் டிவிஷன் லீக் போட்டிகள் எந்த நிலையில் உள்ளன ?
இந்த கேள்வியை பத்ரியிடம் தான் கேட்கணும். பத்ரி பதில் சொல்லுவாரா ?
7. பெரும்பாலான (டெல்லி) செய்தி சானல்கள் (அதுவும் ஆங்கிலம்) ஏன் சிவப்புப் பின்னணியையே கொண்டிருக்கின்றன ? (ஹெட்லைன்ஸ் டுடே - ஆரஞ்சு) - தலைப்பு போடும் பகுதிகளில், லோகோவில், சிக்னேச்சர் டியூனில் என
good news are reduced
bad news are covered
தினத்தந்தி, மாலைமலர், மாலைமுரசு, கல்கி, குமுதம், ரிப்போட்டர் கூட சிகப்பு நிறம் தான்
8. த ஹிண்டு, டெக்கான் கிரோனிக்கிள், த நியு இண்டியன் எக்ஸ்பிரஸ், த டைம்ஸ் ஆஃப் இண்டியா - சென்னை ஆங்கிலப் பத்திரிக்கை நிலவரம் இன்னும் 6 மாதத்தில் எப்படி இருக்கும் ?
ஹிந்து எக்ஸ்ப்ரெஸ் படிப்பாங்க. மத்தது எல்லாம் சதாப்தி ரயிலிலும், இண்டிகோ விமானத்தில் ஓசியில் கொடுக்க தான் பயன்படும்
9. குமுதத்தில் வரும் 'பத்திகிச்சு' பகுதி கிசுகிசுக்கள் பற்றிய க்ளுக்கள் இட்லிவடையில் கொடுக்கப்படுமா ? ஏன் பிரகாஷ்ராஜைப் பாவம் இந்த மாதிரி வாராவாரம் கட்டுரை எழுதி நாஸ்தி பண்ணுகிறார்கள் ?
அட நல்ல ஐடியாவா இருக்கு. கிசுகிசு கிச்சாமியை தான் கேட்கவேண்டும்.
இன்று பிரகாஷ்ராஜ் நாளை வேற ஏதாவது ஃபிரஷானராஜா.
10. பாலகுமாரனுக்கு கேள்வி அனுப்பினால் இட்லிவடையின் கேள்விகள் என்னவாக இருக்கும் ?
ஒரு நாளைக்கு எவ்வளவு முறை தாடியை தடவுவீர்கள்
11. சாரு ஆன்லைன் பற்றி உங்கள் கருத்து - எப்படி மனசாட்சி இல்லாமல் தன்னை ஒரு எழுத்தாளர் என்கிறார்.
சாரு யாரு ?
12. ராமதாசை இரண்டு கழகங்களும் கழட்டி விடும் காலம் வருமா ?
கழக கண்மணிகள் கழட்டிவிடாமல் பார்த்துக்கொள்ளுவார்கள். ஜாதி ஓட்டு இருக்கும் வரை அதை டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள்.
13. ஓவர்நைட் யோசிச்சா வந்த கேள்வி..... ஒண்ணும் ஒண்ணும் எம்பூட்டு?
இரண்டு என்று சொல்ல மாட்டேன். இதற்கு நாணும் ஓவர்நைட் தூங்கணும்.
14. இட்லிவடை பின்னூட்டம் இடாமல் இருப்பதன் அவசியம் என்ன ? அல்லது காரணம் என்ன ?
குழுவில் பத்து பேர் இருக்கிறார்கள், யார் பின்னூட்டம் போடுவது என்று அடிக்கடி சண்டை வருது.
15. தினமலர் பத்திரிக்கை நெல்லை மாநாடு ஸ்பெஷல் எல்லாம் போட்டாங்களே? அப்படியும் எப்படி கைது பண்ணாங்க? அரசன நம்பி புருஷன கதையா?
நோ கமெண்ட்ஸ்
6. ரொம்ப நாளா கேப்டன் செய்தி இல்லையே?
கேப்(டன்) நமுத்துவிட்டது.
7. கர்நாடக அரசியல் நிலவரம் எப்படி இருக்கு? அதுவும் கிருஷ்ணா வந்த பிறகு?
கடமையை செய் பலனை எதிர்(கட்சி) பார்த்துக்கொள்ளும் என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் செய்த உபதேசம்.
9. திபெத்ல என்ன நடக்குது?
பார்க்க படம்
கேள்விகள் இருந்தால் கமெண்ட் பெட்டியில் கேட்கவும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 31, 2008
இட்லி வடை பதில்கள் 31-3-2008
Posted by IdlyVadai at 3/31/2008 09:59:00 PM
Labels: இட்லிவடை-பதில்கள்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
பதில்னால கேள்வி நல்லா இருக்கா, கேள்வியினால பதில் நல்லா இருக்கான்னு தெரியாத அளவுக்கு இருக்கு.
இது வாராந்திரமா மாதாந்திரமா இல்லை பதிவுக்கு மேட்டர் கிடைக்காதப்ப மட்டுமா?
/பதில்னால கேள்வி நல்லா இருக்கா, கேள்வியினால பதில் நல்லா இருக்கான்னு தெரியாத அளவுக்கு இருக்கு.//
:-)
இது வாராந்திரமா மாதாந்திரமா இல்லை பதிவுக்கு மேட்டர் கிடைக்காதப்ப மட்டுமா?
எதை கேட்கறீங்க ?
இட்லிவடை பதில்களைத்தான் - இதில என்ன கன்பூசன்?
//இட்லிவடை பதில்களைத்தான் - இதில என்ன கன்பூசன்?//
வார வாரம் தான் முடியும். கேள்விகள் கேட்கணும் சும்மா பதில் சொல்ல முடியாது. அப்பறம் நானே கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டியிருக்கும் கலைஞர் ஸ்டைலில்
கூல்!!!
இட்லிவடை, 7aam விடையைப்பார்க்கும்போது, எனக்கு நினைவுக்கு வந்தது:
http://www.youtube.com/watch?v=ssjRGx4W5XI
Neenga Nallavara? ....illa kettavara?!
//இட்லிவடை, 7aam விடையைப்பார்க்கும்போது, எனக்கு நினைவுக்கு வந்தது://
மூன்று முறை பாத்தேன், பத்து முறை சிரித்தேன்.
ஜி. சங்கர்
நன்றி - இட்லிவடை. பதில்கள் அருமை. வாராவாரம் - தொடரட்டும் இந்த ஆரவாரம்.
இந்த வாரக் கேள்விகள் (ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருக்கின்றன - திருத்தவும்). அப்படியே கேள்விகளைக் கேட்டவரின் பெயரையும்/தேதியையும் போட்டால் சிறப்பு.
1. சன் டிவியின் முத்தான திரைப்படங்கள் - பழைய (1994- 95ல்) போடப்பட்ட 'வாரம்' படங்களே திரும்ப வருகின்றன - சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ, நகைச்சுவையோ வேறு பழைய நல்ல படங்களே இல்லையா ?
2. ஹேமா ஆனந்த தீர்த்தன் என்று ஒரு ஈசிசேர் எழுத்தாளர் இருந்தாரே. அவரது கிளுகிளுப்பு கதைகள் படித்ததுண்டா ? அவரின் கடைசி கதை படித்ததுண்டா?
3. ப்ரியா கல்யாணராமன் (க.ராமச்சந்திரன்) = பதலக்கூர் ஸ்ரினிவாசலு ?
4. கலைஞரை சுஜாதா வீட்டில் சந்தித்தீர்கள் சரி. போயஸ் தோட்டத்துக்கெல்லாம் எதுக்கு சார் போறீங்க ? (சோ மூலம் பா.ஜ.க. விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க அம்மையார் முயல்வதாக டீக்கடை பெஞ்ஜ் சொல்கிறது)
5. சன் டிவியின் பங்குகள் வாங்கி வைக்கலாமா ? லாபம் வருமா ?
6. ஏஷியாநெட் தினமும் (வாரநாட்கள்) இரவு 8.30மணிக்கு வரும் ஸ்டார் சிங்கர் பார்ப்பதுண்டா? கொஞ்சி கொஞ்சிப் பேசும் சேச்சியின் பேர் ஏனாணம் ?
7. ஜெயமோகன், எஸ். ரா, பா.ரா. சாருநிவேதிதா - யார் பதிவுகள் சுவாரஸ்யம் அதிகம் ?
(பா.ரா என சேம் சைட் கோல் போடக்கூடாது).
8. பத்ரி இலைவடாம் பதிவு மீள்பதிவு செய்வாரா ? ஏன் இப்போதெல்லாம் பத்ரியின்
பதிவுகள் அவ்வளவு சுரத்தாக இல்லை ?
9. மர்மயோகியில் கமலுக்கு ஜோடியார் ? கதை - இயக்கம் ?
10. நடிக்கவும் வராது. படமும் ஹிட்டாகாது ஆனால் தொடர்ந்து சரத் படங்கள் வந்துகொண்டிருகின்றனவே யார் இவரை நம்பி படம் எடுக்கிறார்கள் ?
இட்லிவடை, அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன். TR video பின்னூட்டம் இட்டது நான் தான். சும்மா தமாஷுக்கு தான். பதிலை ஏன் edit செய்து விட்டீர்கள்? நன்றாக தான் இருந்தது. (பதிவு இடுவதை விட கிண்டல் பின்னூட்டம் இடுவது சுலபம், அதனை நீங்கள் மதிக்க வேண்டாம்!)
//இட்லிவடை, அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன். TR video பின்னூட்டம் இட்டது நான் தான். சும்மா தமாஷுக்கு தான். பதிலை ஏன் edit செய்து விட்டீர்கள்? நன்றாக தான் இருந்தது. (பதிவு இடுவதை விட கிண்டல் பின்னூட்டம் இடுவது சுலபம், அதனை நீங்கள் மதிக்க வேண்டாம்!)//
உங்களால் எடிட் செய்யவில்லை. கிண்டல் இல்லாமல் இட்லிவடை இல்லை, அதனால் தாராளமாக செய்யலாம்.
idly vadai-kku sariyana jodi - sambaraa illai chutneyaa ?
Post a Comment