பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-03-08

இந்த வாரம் பாடிகாட் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்


அன்புள்ள இட்லிவடை,

முதல்ல ஒரு தண்டோராச் செய்தி :
அரசு அறிவிப்புகளை `தண்டோரா' அடித்துச் சொல்ற முறை நடைமுறைல பெரிய அளவுல இருந்தது. இப்பவும் கிராமங்கள்ல ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதைச் செய்துவராங்க. அதனால தண்டோரா அடிச்சு அறிவிக்கற முறையை ரத்து செய்யணும்னு அரசுக்கு கோரிக்கை விட்டிருக்காங்க. கூடிய சீக்கிரமே இது நிறைவேறும்னு தெரியறது. அதே மாதிரி இரட்டை டம்ளர் முறையையும் அடியோட ஒழிப்பதற்கான வழிமுறைகளையும், எப்படி ஒழிக்கறதுன்னும் முதலமைச்சர் கருணாநிதி ஆலோசித்து வராறாம். எப்படியோ நல்லது நடந்தா சரி. என்ன நாஞ் சொல்றது?

மிழ்நாட்டுல என்னதான்யா நடக்குது? இந்த வாரம் பிரகாஷ்ராஜ் வாரம் போல. எல்லா பத்திரிகைலயும் ப்ரகாஷ்ராஜ் பத்திதான் கவர் ஸ்டோரி. ஞாநி கூட ஓ-பக்கங்கள்ல ப்ரகாஷ்ராஜ் பத்தி தான் எழுதியிருக்காரு.

அதே ஓ-பக்கங்கள்ல கடைசில இப்படியும் எழுதியிருக்கார் ஞாநி..


கார்ல் எந்த அளவுக்கு எதையும் ஜாலியாகத் தருபவர் என்பதற்கு ஒரு உதாரணம் farting பற்றி அவரது இணைய தளத்தில் இருக்கும் ஆய்வறிக்கைகள். அதையெல்லாம் தமிழில் சொன்னால் நீங்களும் என்னோடு சேர்ந்து ரசிப்பீர்கள் என்றாலும், குனேகா செண்ட் தடவி சிறப்பிதழ்கள் வெளியிடும் பாரம்பரியம் உள்ள இதழுக்குப் பொருந்தி வராது என்று சொன்னாலும் சொல்வீர்கள் என்பதால்..... எழுதவில்லை. ரொம்ப ஆர்வமுள்ளவர்கள் karl Krsuszelnickiயின் இணையத்தளத்தைத் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னால் farting என்பதற்கு என்ன பொருள் என்று டிக்ஷனரியில் பார்த்துவிடுவது நல்லது..


இதைப் படிச்சவுடனே எனக்கு நீ எழுதின 'அடிக்கடி கேட்கபடாத கேள்விகள்' பதிவுதான் நெனைவுக்கு வந்தது.

பெப்சி உமா கலைஞர் டிவியிலேருந்து வெளியே போயிட்டாங்களாமே, அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் நிஜமான ஜாக்பாட் யாருக்கு தெரியுமா ? குஷ்புக்கு தான். ஒரு ஷோ செய்ய 1 லட்சமாம்.

போன வாரம் தமிழகத்துத் தலைப்புச் செய்திகள்ல 'ஆறுமுகசாமி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடியது' பத்தி நிறைய படிச்சிருப்பே. வாழ்க்கைப் பாட்டை நான் சொல்றேன். சிதம்பரத்தில் அவருக்கு ஒரு வீடு கூட கிடையாது. ஒரு ஹோட்டல்ல இருந்து ஆறுமுகசாமிக்கு மூணு வேளை சாப்பாடு இலவசமாகத் தராங்க. ஒரு கல்யாண மண்டபத்துல இரவுநேரம் தங்க இடவசதி செஞ்சு கொடுத்திருக்காங்க. இந்த அறுமுகசாமிக்கு அரசு உதவித் தொகை அறிவிச்சிருக்கு. மாத உதவித்தொகை மூவாயிரம் ரூபாய் அப்றம் மருத்துவப்படி பதினைந்து ரூபாயாம். பதினைந்து ரூபாய்க்கு எந்த மருந்து வாங்கலாம், உனக்குத் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி பத்தி எழுதி, ஜெயமோகன் பாப்புலர் ஆனாரு, இப்ப ஜெயமோகன் பத்தி எழுதி மத்தவங்க பாப்புலர் அகிறாங்க...
பாமரன் எழுதாளர் ஜெயமோகன் பத்தி அடிச்ச கமெண்ட்டைக் கேளு...


போனவாரம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு மாணவர் எக்குத்தப்பாகக் கேட்ட கேள்வியில் திக்குமுக்காடிப் போனேன்.

பல சொப்புக் கள்ளும் குடித்துவிட்டு... கொஞ்சம்பாக்கெட் சாராயத்தையும் உள்ளே தள்ளிவிட்டு... போதாததற்கு ஒரு போதை ஊசியும் போட்டுக்கொண்டு... என் சிந்தனைக்குதிரையைத் தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். ‘‘எனக்கு எழுத வருமா...?’’ என்றார்.

‘‘நிச்சயம் வரும்... ஆனால் அது ஜெயமோகனின் கண்டுபிடிப்பைப் போல இருக்கும்... பரவாயில்லையா?’’ என்றேன்.

ஆடிப் போய்விட்டான் அந்த இளைஞன்.

பின்னே என்னங்க...?

மனுஷ்யபுத்திரனுக்கு மண்டைல மசாலாவே கிடையாது...

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புண்ணாக்கு...

சாருநிவேதிதா ஒரு தத்தி...

கலைஞர் இலக்கியவாதியே அல்ல...

பெரியார் சிந்தனையாளரே கிடையாது...

என்றெல்லாம் குரங்கு கள்ளு குடிச்சதைப் போல உளறும் ஜெயமோகனே தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும்போது... அந்த மாணவனுக்கு மட்டும் எழுத வராதா என்ன?


எல்லாரும் பேதிக்கு மருந்துகொடுத்த மாதிரி இவரைப்பத்தி பொழிஞ்சுகிட்டே இருக்காங்க டென்ஷன்ல.

யசுப் பசங்க வயத்துல பாலை வார்க்கற மாதிரி "எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம்"னு ஆரூட நல்வாக்கு சொல்லியிருக்காரு நம்ப வாக்குச் சித்தர் பாலகுமாரன் குமுதத்துல. தேமேன்னு பிராத்தனை செய்துகிட்டிருந்தவரை குமுதத்துல எழுதச் சொன்னால் இப்படித்தான் எழுத முடியும். அந்தப் பத்திரிக்கை ராசி அப்படி.

ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகர்கள் காக்கி அரை டிராயர் போட்டிருப்பதைப் பார்த்திருப்பியே. இப்ப அவங்க வேணும்னா பர்முடாஸ் கூட போடலாமாம். 45,000 பேர் இப்ப கூடுதலாகியிருக்காங்க. அதே மாதிரி பெங்களூர், பூனா, நொய்டாவ்ல 'சாப்ட்வேர் சுயம் சேவகர்கள்' கூட அதிகரிச்சிருக்காங்களாம்.

ராமாயணம் தொடரை திரும்ப என்டிடிவி ஒளிபரப்ப ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தொடருக்குக் கிடைக்கற நல்ல வரவேற்பைப் பாத்து மத்த சானல்களும் பழைய பிரபல தொடர்களையெல்லாம் எடுத்து தூசி தட்டி, புது வடிவத்துல கொடுக்கத் தயாராகிகிட்டிருக்காங்க. 1988கள்ல தூர்தர்சன்ல கலக்கின மகாபாரதம் மெகா தொடரை இப்ப ஸ்டார் பிளஸ் சானல் மும்முரமா தயாரிக்குது. ஒரு லைன் கதையையே நம்ப சீரியல்கார்ங்க 30 எபிசோட் இழுக்கத் தெரிஞ்சவங்க. ஆனா பாரு, உலகத்துலயே அதிகப் பாடல்கள் கொண்ட இதிகாசம் மகாபாரதம். இதுல 74,000 செய்யுள் இருக்காம். கேக்கவே வேணாம். ஆனா இதை விறுவிறுப்பா கொடுக்க ஸ்டார் பிளஸ் திட்டமிட்டிருக்காம். அடுத்த மாசம் (ஏப்ரல்)லேருந்து மகாபாரதத்தை சின்னத்திரையில் நீ கண்டுகளிக்கலாம்.

சன்வழித் தோன்றல் ராமனோட புதிய ராமாயணம் சன் டிவில சண்டே சண்டே காலைல பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகுது. அப்ப புதிய மகாபாரதம் கலைஞர் டிவில ஒளிபரபாகுமோ?

சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு. இவரோட ராமாயண சந்தேகங்களைத் தொகுத்த ராமாயணத்தைவிட சுவாரசியமா இருக்கும்போல இருக்கு. ஒரு வேளை
காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது போலீஸ் என்ன செய்துக்கொண்டிருந்தார்களோ அதே தான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற போது செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ யார் கண்டது.

தூர்தர்ஷல 1990கள்ல தொலைக்காட்சி நேயர்களுக்கு மாபெரும் விருந்து படைச்ச நிகழ்ச்சி சுரபி. நாடெங்கும் இருக்கற ருசிகரத் தகவல்களை நேயர்கள் கண்டு களிச்சு பல புதிய விஷயங்களை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிஞ்சுண்டாங்க. சித்தார்த்த கக், ரேணுகா சகானி ரெண்டுபேரும் புன்னகை ததும்ப தொகுத்து வழங்கின இந்த நிகழ்ச்சி மீண்டும் என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சில வரப்போகுதாம். என்னவோ போ, திரும்பவும் கீதாஞ்சலி ஐயர், மீனு நியூஸ் படிக்காம இருந்தா சரி.

ட்ஜெட்டின்போது வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு செய்திருக்கு ஆனால் அவங்களோட ம.தி.மு.க. வெளியே போகலை, கவனிச்சியா? எம்.பி. ‘சீட்’டாக கிடைச்ச அனுபவம்னு நினைக்கறேன்.

ல்கியில் கடந்த சில வாரமாக நரேந்திர மோடி பற்றி ஸ்பெஷல் கவரேஜ் கொடுக்கிறார்கள். உடனே கல்கியில் வந்த கேள்வியை பாரு
"எங்களுக்கு தெரியாதா இந்த குஜராத் டுடே விஷயம்.. தமிழ்ர்களை மட்டம் தட்டுவதற்காகவே நடக்கும் பார்ப்பன சூழ்ச்சி இது! குஜராத்தைக் காட்டிலும் பன்மடங்கு நன்றாகச் செயல்படுகிறது தமிழகம். 'தமிழகம் டுடே' யும் கொண்டு வாருங்கள்..."
எல்லோருக்கும் எங்கோயோ எரியுது என்ன செய்ய...

புலிகள் அல்கொய்தா தொடர்பு' இது தற்போதைய நியூஸ் எனக்கு என்னவோ எல்லா தீவிரவாதிகளிடமும் தொடர்பு உள்ள ஒரே நபர் பா.ராகவன் தான் :-)

இந்த வார நல்ல செய்தி:
Dr.ரெய்ரு கோபால், அவரது மனைவி Dr.சகுந்தலா இரண்டு பேரும் கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற கிராமத்தில் எழைகளுக்கு கிளினிக் நடத்தறாங்க. டாக்டர் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா வெறும் 2 ரூபாய்.

இந்த வார கவர்ச்சி படம்:

(ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் வைத்த கட்டவுட் )
இப்படிக்கு,
பாடிGod முனி

7 Comments:

Boston Bala said...

--- திரும்பவும் கீதாஞ்சலி ஐயர், மீனு நியூஸ் படிக்காம இருந்தா சரி.---

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...
அதைக் காணும் இன்பநாளுமே வந்து சேருமோ :)

IdlyVadai said...

பாபா நீங்க என்ன அவ்வளவு வயசான இளைஞனா ?

இலவசக்கொத்தனார் said...

ஐயா,

இந்தப் பதிவையும் மேற்கோள் காட்டி அடியேன் (இப்போ எல்லாம் அப்படித்தான் சொல்லணுமாமே, நன்றி கேஆர்எஸ்) ஒரு பதிவு போட்டு இருக்கேன்.

நீங்க வந்து கருத்து சொல்ல மாட்டீங்க என்பது தெரியும் என்றாலும் நான் இங்கே போஸ்டர் ஒட்டிக் கொள்வதையும் மறுக்க மாட்டீர்கள். எனவே ஒன் போஸ்டர் ஒன்லி ப்ளீஸ்.

நம்ம பதிவு!

Anonymous said...

பாபா தன் குழந்தைப் பருவ நாட்களை நினைத்து உருகுகிறார்:)
கீதாஞ்சலி ஐயரைக் காட்டித்தான் சோறு ஊட்டினார்களோ என்னமோ :)

மெளலி (மதுரையம்பதி) said...

பாபா! தெய்வமே!!!!

//--- திரும்பவும் கீதாஞ்சலி ஐயர், மீனு நியூஸ் படிக்காம இருந்தா சரி.---

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...
அதைக் காணும் இன்பநாளுமே வந்து சேருமோ :)//

பின்னூட்டமிட காப்பி பண்ணிட்டு கீழ வந்தா நீங்க ஆல்ரெடி போட்டிருக்கீங்க... :)

Anonymous said...

கீதாஞ்சலி அய்யர் ..மீனு... பழைய நியூஸ் படிக்குற அம்மணிங்க மேலே..ஜொள்ளு விடறது..
இதெல்லாம்..ரொம்ப ஓவர்..பாபா !!! உங்க நாக்கு பாதத்தை தொடறது.. இங்கே தெரியுது....திருந்தவே மாட்டேங்களா ?? :-)

வீட்டுக்கு வந்து வத்தி வெச்சா தெரியும்...என்ன பூசை நடக்கும்னு... :) :)

Anonymous said...

>>> அதற்கு முன்னால் farting என்பதற்கு என்ன பொருள் என்று டிக்ஷனரியில் பார்த்துவிடுவது நல்லது..

இதைப் படிச்சவுடனே எனக்கு நீ எழுதின 'அடிக்கடி கேட்கபடாத கேள்விகள்' பதிவுதான் நெனைவுக்கு வந்தது.
>>>>>

இது தான் பா.ரா.வின் 11ஆவது தீராத பிரச்னையா :-)