பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 31, 2008

இட்லி வடை பதில்கள் 31-3-2008

இந்த வாரம் சில கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்.....

1. வை.கோ என்ன செய்கிறார் ? அரசியலில் அவர் என்ன தான் சாதிக்க எண்ணுகிறார் ?

அம்மாவிடம் சேர்ந்தவகள் சும்மாதான் இருக்கணும். புத்தக கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினார். அதை படித்துக்கொண்டு இருப்பார்.

2. தமிழகத்தின் முதல்வராக ப.சிதம்பரம் வர சாத்தியம் உண்டா ? வந்தால் தமிழ்நாடு முன்னேறுமா ? இல்லை அவர் கார்த்திக்கு பதவி வாங்குவதில் தான் முயற்சியை
செயல்படுத்துவாரா ?

கலஞரிடம் கருத்து கேட்டுவிட்டு காமாக இருக்கணும்.

3. டெக்கான் கிரோனிகிளின் சென்னை விளம்பர பலகைகள் படம் எடுத்து இங்கு இட முடியுமா ? (சில பலான படங்களும் உண்டாமே ?)
சென்னை படம்:















சென்னை சம வேஸ்ட் ஹைத்திராபாத்தில் தான் பல நல்ல படங்கள் என்று கேள்விப்பட்டேன்.
சில படங்கள்









































4.















( டி.ஷர்டில் என்ன எழுதியிருக்கு ? கண்டுபிடியுங்க )



4. ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக என்னாகும் ? அவர் ஏன் அடிக்கடி ஓய்வில் இருக்கிறார் ? 84 வயதில் கலைஞரின் அசாத்திய உழைப்புக்கு முன் இவர் இப்படி
அடிக்கடி ஓய்வு எடுக்கும் நிலையில் தான் அவர் உடல் நிலை உள்ளதா ?

கலைஞர் தன் உடல் நிலையை நன்றாக வைத்துள்ளார். சமீபத்தில் கலைஞரை நேரில பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது, அவர் உடல் நிலையை பார்த்து வியந்து போனேன். ஜெயை பார்க்க போயஸ் பக்கம் போனேன் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

5. கல்கி பத்திரிக்கையின் தற்போதைய சர்குலேஷன் எவ்வளவு ? தற்போதைய
காசு கொடுத்து கல்கி படிக்கும் வாசகர்கள் யார் ? எத்தகையவர் ?
நான் காசு கொடுத்து தான் பத்திரிக்கை வாங்குகிறேன்.

தமிழ் நாட்டின் ஜனத்தொகை 70000000(7 கோடி) என்று வைத்துக்கொண்டால்,
எனக்கு வரும் Ratio.
விகடன் = 1:140
குமுதம் = 1:175
கல்கி = 1:2333
துக்ளக் = 1:1750
குங்குமம் = 1:466
ராணி = 1:233
மங்கையர் மலர் = 1:466
இவை எல்லாமே சிறு பத்திரிக்கை தான்.


6. தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டி பெருந்தலைகள் பி.சி.சி.ஐ யில் பெரிய பதவிகள் வகித்தாலும் தமிழகவீரர்களுக்கு சான்ஸ் கொடுப்பதில் ஏன் முனைவதில்லை ?
எல்.பாலாஜி, ஸ்ரீராம், சரத், பத்ரிநாத், சடகோபன் ரமேஷ் என நல்லவர்கள் வேறு
மாநிலம் / ஐசிஎல் தேடும்படி நிலைமை ஏன் ? சென்னையின் டிவிஷன் லீக் போட்டிகள் எந்த நிலையில் உள்ளன ?

இந்த கேள்வியை பத்ரியிடம் தான் கேட்கணும். பத்ரி பதில் சொல்லுவாரா ?

7. பெரும்பாலான (டெல்லி) செய்தி சானல்கள் (அதுவும் ஆங்கிலம்) ஏன் சிவப்புப் பின்னணியையே கொண்டிருக்கின்றன ? (ஹெட்லைன்ஸ் டுடே - ஆரஞ்சு) - தலைப்பு போடும் பகுதிகளில், லோகோவில், சிக்னேச்சர் டியூனில் என

good news are reduced
bad news are covered

தினத்தந்தி, மாலைமலர், மாலைமுரசு, கல்கி, குமுதம், ரிப்போட்டர் கூட சிகப்பு நிறம் தான்

8. த ஹிண்டு, டெக்கான் கிரோனிக்கிள், த நியு இண்டியன் எக்ஸ்பிரஸ், த டைம்ஸ் ஆஃப் இண்டியா - சென்னை ஆங்கிலப் பத்திரிக்கை நிலவரம் இன்னும் 6 மாதத்தில் எப்படி இருக்கும் ?

ஹிந்து எக்ஸ்ப்ரெஸ் படிப்பாங்க. மத்தது எல்லாம் சதாப்தி ரயிலிலும், இண்டிகோ விமானத்தில் ஓசியில் கொடுக்க தான் பயன்படும்

9. குமுதத்தில் வரும் 'பத்திகிச்சு' பகுதி கிசுகிசுக்கள் பற்றிய க்ளுக்கள் இட்லிவடையில் கொடுக்கப்படுமா ? ஏன் பிரகாஷ்ராஜைப் பாவம் இந்த மாதிரி வாராவாரம் கட்டுரை எழுதி நாஸ்தி பண்ணுகிறார்கள் ?

அட நல்ல ஐடியாவா இருக்கு. கிசுகிசு கிச்சாமியை தான் கேட்கவேண்டும்.
இன்று பிரகாஷ்ராஜ் நாளை வேற ஏதாவது ஃபிரஷானராஜா.

10. பாலகுமாரனுக்கு கேள்வி அனுப்பினால் இட்லிவடையின் கேள்விகள் என்னவாக இருக்கும் ?
ஒரு நாளைக்கு எவ்வளவு முறை தாடியை தடவுவீர்கள்

11. சாரு ஆன்லைன் பற்றி உங்கள் கருத்து - எப்படி மனசாட்சி இல்லாமல் தன்னை ஒரு எழுத்தாளர் என்கிறார்.
சாரு யாரு ?

12. ராமதாசை இரண்டு கழகங்களும் கழட்டி விடும் காலம் வருமா ?
கழக கண்மணிகள் கழட்டிவிடாமல் பார்த்துக்கொள்ளுவார்கள். ஜாதி ஓட்டு இருக்கும் வரை அதை டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள்.

13. ஓவர்நைட் யோசிச்சா வந்த கேள்வி..... ஒண்ணும் ஒண்ணும் எம்பூட்டு?
இரண்டு என்று சொல்ல மாட்டேன். இதற்கு நாணும் ஓவர்நைட் தூங்கணும்.


14. இட்லிவடை பின்னூட்டம் இடாமல் இருப்பதன் அவசியம் என்ன ? அல்லது காரணம் என்ன ?
குழுவில் பத்து பேர் இருக்கிறார்கள், யார் பின்னூட்டம் போடுவது என்று அடிக்கடி சண்டை வருது.

15. தினமலர் பத்திரிக்கை நெல்லை மாநாடு ஸ்பெஷல் எல்லாம் போட்டாங்களே? அப்படியும் எப்படி கைது பண்ணாங்க? அரசன நம்பி புருஷன கதையா?
நோ கமெண்ட்ஸ்

6. ரொம்ப நாளா கேப்டன் செய்தி இல்லையே?
கேப்(டன்) நமுத்துவிட்டது.

7. கர்நாடக அரசியல் நிலவரம் எப்படி இருக்கு? அதுவும் கிருஷ்ணா வந்த பிறகு?
கடமையை செய் பலனை எதிர்(கட்சி) பார்த்துக்கொள்ளும் என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் செய்த உபதேசம்.

9. திபெத்ல என்ன நடக்குது?
பார்க்க படம்


கேள்விகள் இருந்தால் கமெண்ட் பெட்டியில் கேட்கவும்

Read More...

Sunday, March 30, 2008

டோணி இந்திய கிரிக்கெட்டின் 'ரஜினிகாந்த்': ஸ்ரீகாந்த

இது ஏப்ரல் 1 பதிவு இல்லை...

இந்திய கிரிக்கெட்டின் 'ரஜினிகாந்த்' எம்.எஸ்.டோணி என்று இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணியை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை அறிமுகப்படுத்தும் கண்கவர் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது சென்னை அணியின் கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நட்சத்திர தூதுவர்களான நடிகர் விஜய், நடிகை நயனதாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் இந்த நிழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

அப்போது பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய கிரிக்கெட்டின் ரஜினிகாந்தாக டோணி விளங்குகிறார். இருவரும் தங்களுக்கென ஒரு ஸ்டைலும், கவர்ச்சியும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் உடையவர்கள்" என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இதைக்கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து பேசிய டோணி "திறமையான ஓர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இளமையின் துள்ளலும், பழுத்த அனுபவத்தையும் உடைய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்து கோப்பையை உறுதியாக வெல்வோம்" என்றார்.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

Read More...

மை கன்ட்ரி, மை லைப் - அத்வானி


தொடர்பான செய்திகள்...

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ..

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெற்ற தோல்விக்கு யாரும் தனிப்பட்ட காரணம் அல்ல. அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தனிப்பட்ட யாரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது.

தோல்விக்கு யாரையும் தனித்து குற்றம் சாட்டும் பண்பாடு பாஜகவுக்கு கிடையாது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதுதான் பண்பாடு. 1998ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றபோது அதற்கு நரசிம்மராவையும், 1999ம் ஆண்டு கிடைத்த தோல்விக்கு சீதாராம் கேசரியையும் குற்றம் சாட்டினர். இருவரும் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் 2004ம் ஆண்டு நடந்த தேர்தல் தோல்விக்கு அப்போது பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை பலிகடாவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெங்கையா நாயுடுவே, தானாக முன்வந்து தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுதான் பாஜகவின் பண்பாடு.

அப்போது வெங்கையாவுக்கு அடுத்து தலைவர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் யாராவது கட்சித் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என அனைவரும் முயன்றோம். ஆனால் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன், நரேந்திர மோடி என சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் அப்போது தயார் நிலையில் இல்லை என்ற கருத்து எழுந்தது.

இளம் தலைவர்களை கட்சியை வழி நடத்திச் செல்ல பயிற்றுவிக்க வேண்டும் என்று நான்தான் யோசனை தெரிவித்தேன். எனக்கு மீண்டும் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அந்த சமயத்தில் மூத்த தலைவர் ஒருவர்தான் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கட்சியில் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்ததாலும், அடல் பிகாரி வாஜ்பாய் வலியுறுத்திக் கூறியதாலும், நான் எனது கொள்கையை விட்டு விட்டு கட்சித் தலைவராக தீர்மானித்தேன். அப்படித்தான் நான் பாஜகவில் ஐந்தாவது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு வந்தேன்.

கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சில தளர்ச்சிகள் ஏற்பட்டதுண்டு. அதை நான் மறுக்கவில்லை. கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சிலர் வெளிப்படையாக பொதுவில் கொண்டு வந்ததுண்டு. பத்திரிக்கைகளை தங்களது குறை கூறும் ஊடகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவையெல்லாம் கோஷ்டி மோதல்களோ அல்லது வேறு மோதல்களோ இல்லை. சாதாரண கொள்கை மோதல்கள், முரண்பாடுகள்தான்.

ஆனால் இந்த கருத்து மோதல்கள் வெளிப்படையாக கிளம்பியதால் கோஷ்டி மனப்பான்மையும், குழு செயல்பாடுகளும் வெளிக் கிளம்பின. இது கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கட்சி பாஜக என்பதில் நான் பெருமைப்பட்ட நிலையில் சில மீடியாக்கள், வேறுபாடுகளுடன் கூடிய கட்சி பாஜக என்று செய்தி வெளியிட்டது எனக்கு அதிக வேதனையைத் தந்தது என்று கூறியுள்ளார் அத்வானி.



கே.ஆர்.நாராயணன்தான் காரணம்
வாஜ்பாய் அரசு பதவியேற்க விடாமல் தடங்கலாக இருந்ததும், பதவியேற்ற ஒரே ஆண்டில் அது கவிழவும் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் காரணம் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

அத்வானி எழுதியுள்ள மை கன்ட்ரி, மை லைப் என்கிற புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி. பல்வேறு பரபரப்பான அம்சங்களை உள்ளடக்கிய அந்த நூலில், பாஜக அரசு அமையக் கூடாது என்று கே.ஆர். நாராயணன் மிகுந்த பிரயாசைப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது நூலில் அத்வானி கூறியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்,

கடந்த 1993 ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.க தனி பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஆனால், வாஜ்பாயை பிரதமராக பதவியேற்று, ஆட்சி அமைக்க அழைக்காமல் கே.ஆர்.நாராயணன் தாமதம் செய்தார்.

சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு பின், கூட்டணி அல்லது தனிப் பெரும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; பதவியேற்ற பின், சபையில் நம்பிக்கை பெற அவகாசம் அளிக்க வேண்டும் என்று தான் அரசியல் சட்டம் சொல்கிறது.

இதைத்தான், கர்நாடக முதல்வர் பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருந்தது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றி பரிந்துரைத்த அறிக்கையில், சர்க்காரியா கமிஷனும் இதையே கூறியிருந்தது.

இவற்றின் அடிப்படையில் தான், முன்பு குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா போன்றோர் நடந்து கொண்டனர். ஆனால், கே.ஆர்.நாராயணன், அவர்கள் கடைபிடித்த விதிகளை மாற்றினார். தனக்கென புதிய விதிகளை உருவாக்கி, அதன்படி பாரபட்சமாக நடந்து கொண்டார்.

1998ம் ஆண்டு தேர்தலுக்கு பின், வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைக்க பத்து நாள் தாமதம் செய்தார். அப்போது நடந்த தேர்தலில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தனி பெரும் கட்சியாக பா.ஜ.க இருந்தது. ஆனால், பா.ஜ.க. வை ஆட்சி அமைக்க அழைக்க தாமதப்படுத்தி, காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் நாராயணன்.

பா.ஜ.க ஆட்சி வரவிடாமல் தடுக்க, சில கட்சிகளுடன் காங்கிரஸ் பேரம் பேசியதற்கு நாராயணன் கொடுத்த அவகாசம் தான் காரணம். அப்படி தாமதம் செய்தும், கடைசியில் வாஜ்பாயை தான் அழைக்க வேண்டியதாகி விட்டது.

ஆனால், ஓராண்டுக்கு பின், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. சோனியா செய்த அரசியல் சதி தான், அந்த அரசு கவிழ காரணமாக இருந்தது.

'ஜின்னாவால் ஏற்பட்ட வேதனை':

2005ம் ஆண்டு நான் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, முகம்மது அலி ஜின்னா குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கண்டு வேதனையுற்றேன்.

அது சாதாரண சர்ச்சைதான். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வலியை அது ஏற்படுத்தி விட்டது. 1996ம் ஆண்டு ஹவாலா மோசடி வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டதை விட இது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

ஆனால் ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது போல ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை.
நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அமைதியன் தூதுவராகத்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். இரு நாட்டு உறவையும் சுமூகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் நான் பாகிஸ்தான் சென்றேன். எனது நோக்கம் ஓரளவு நிறைவேறியது என்றே இப்போதும் நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அத்வானி.


அத்வானி கூறியுள்ளது தவறு
காந்தஹார் விமானக் கடத்தலின்போது தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு அதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை என்று அத்வானி கூறியுள்ளது தவறு. அனைத்து அமைச்சர்களும் கூடித்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது என்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

மை கன்ட்ரி, மை லைப் என்ற பெயரில் அத்வானி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அத்வானி பல்வேறு முக்கிய சம்பவங்களை வர்ணித்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைசகளை எழுப்பி வருகிறது. பாஜகவுக்குள்ளும் இது புயலைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்துக்களுக்கு அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்து இதுதான்: ஐ.சி.814 விமானத்தில் கடத்தப்பட்ட 189 பயணிகளை மீட்பதற்கு, இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவின் படி, பயங்கரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் செல்வார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.

பெர்னாண்டஸ் மறுப்பு:

இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறுகையில்,

பயங்கரவாதிகளை விடுவிப்பது, காந்தகாருக்கு தனி விமானம் அனுப்புவது, அதில் ஜஸ்வந்த் சிங் செல்வது ஆகிய அனைத்தும், அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்ற கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அத்வானியும் இடம் பெற்றிருந்தார்.

பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற விமானம், முதலில் அமிர்தசரஸ் சென்று, அதன் பின், காந்தகாருக்கு சென்றது. இந்த முடிவு, ஒட்டு மொத்த அமைச்சரவையின் ஒருமித்த முடிவு தான் என்று அவர் கூறியுள்ளார்.

பி.சி.கந்தூரியும் மறுப்பு:

இதே போல, வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும்
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய உத்தரகண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும், அத்வானியின் கருத்தை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்கு தான் சம்மதிக்காததாக அத்வானி கூறியிருப்பது தவறு. அப்போதைய சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு சாதக, பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து தான், அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், எவை தவறு என்றும், எவை சரியானவை என்றும் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

Read More...

இட்லி கடைகளில் வருமானவரி துறை அதிரடி

சென்னை - திருச்சி - மதுரையில் முருகன் இட்லி கடைகளில் வருமானவரி துறை அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முருகன் இட்லி கடை சென்னையில் மட்டும் 8 இடங்களில் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் 4 இடங்களிலும், மதுரையில் 3 இடங்களிலும் முருகன் இட்லி கடை உள்ளது.

இந்த இட்லி கடைகளில் கோடிக் கணக்கில் வியா பாரம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் விற்பனை விவரங்களை முறைப்படி காட்டாமல் இந்த கடைகளில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வருமான வரி துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். இதையடுத்து முருகன் இட்லி கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண் காணித்து வந்தனர்.

இதையடுத்து முருகன் இட்லி கடைகளில் சோதனை நடத்து வதற்காக 60 அதிகாரி கள் அடங்கிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக் குழுவினர் நேற்று இரவு சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள முருகன் இட்லி கடைகளில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதுதவிர முருகன் இட்லி கடை உரிமையாளர் மனோகரனின் வீடு மற்றும் தி.ëநகரில் உள்ள இட்லி கடையின் மத்திய சமையற் கூடம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடை பெற்றது.

நள்ளிரவு வரை வருமான வரி துறையினரின் சோதனை நீடித்தது.

அப்போது இட்லி கடை களில் பில்கள் எப்படி பராமரிக் கப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வருமானத்தை முறைப்படி கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

Read More...

Saturday, March 29, 2008

ஜட்டி மாற்றம் = மதம் மாற்றம்

இன்று வந்த இருவேறு செய்திகள்.
மதம் மாற்றம் என்பது அடுத்தவன் ஜட்டியை எடுத்து போட்டுக்கொள்ளுவது போல....

முதல் செய்தி:
நெல்லையை தொடர்ந்து திருவதிகையில் தாய்மதம் திரும்பும் விழா நடத்த உள்ளதாக இந்துமக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

நெல்லையை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் உட்பட 185 குடும்பத்தினர் வேறு மதங்களில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியை ஏப்., 14ல் நெல்லையப்பர் கோவிலில் நடத்த இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று அர்ஜூன் சம்பத் தலைமையில் நெல்லையில் நடந்தது. அவர் கூறியதாவது: மற்ற மதங்களில் சேர விரும்புவோர் அந்தந்த மதங்களின் வழிபாட்டு தலங்களில் மதம் மாறுகிறார்கள். அதே போல இந்துவாக மாற நெல்லையப்பர் கோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் தடையை மீறி நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்கு அனுமதி மறுத்த அறநிலையத்துறையினர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்குதொடர உள்ளோம். விழுப்புரம் மாவட்டம் எறையூரில் வன்னியகிறிஸ்தவர்களை வேறு மத அமைப்புகளை தங்கள் மதங்களுக்கு மாற்ற முயற்சிக்கின்றனர். இதனை அரசு தடுக்கவேண்டும். இதுகுறித்து கவர்னிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். திருநாவுக்கரசர் தாய் மதத்திற்கு மாறிய கடலூர் மாவட்டம் திருவதிகை பகுதியில் ஆதி திராவிட மக்கள் மீண்டும் தாய் மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியை இன்னும் மூன்று மாதங்களில் நடத்த உள்ளோம் என்றார்.

இரண்டாம் செய்தி
எறையூர் மாவட்டத்தில் மதம் மாறப் போவதாக கூறியுள்ள வன்னிய கிறிஸ்துவர்களை சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது.

எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தலித் பிரிவினர் பயன்படுத்திய வண்டியில் கொண்டு செல்லாமல், சவப் பெட்டியைத் தூக்கியபடியே சென்று அடக்கம் செய்தனர்.

மேலும், தங்களையும், தலித் கிறிஸ்தவர்களையும் தனியாகப் பிரித்து தனிப் பங்கு அமைக்க வேண்டும். இரு பிரிவினருக்கும் தனித் தனியாக சர்ச்சுகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி 20 ஆயிரம் கிறிஸ்தவ வன்னியர்களும் மதம் மாறுவோம் என்றும் அறிவித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவாகரத்தை பெரிதாகாமல் தடுக்கவும், மதமாற்ற முயற்சிகளை தடுக்கும் முகமாகவும், புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு எறையூர் வந்தது.

இந்தக் குழுவில் வன்னிய கிறிஸ்தவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்பட்டதா, இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.

ஒரே கடவுள் இயேசு-கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்:

இதற்கிடையே, தலித் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, வன்னிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கடவுள் ஒருவர், இயேசு கிறிஸ்து முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று கிறிஸ்தவ முன்னேற்றக் கழகத் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எறையூரில் உள்ள வன்னிய கிறிஸ்தவர்களில் 37 பேர் பாதிரியார்கள், 127 பேர் கன்னியாஸ்திரிகள்.

அனைவருமே இறை நம்பிக்கை கொண்டவர்கள். கிறிஸ்தவம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். மன உளைச்சலால் மத மாற்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் உளப் பூர்வமாக அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். எனவே நிச்சயம் அவர்கள் மதம் மாற மாட்டார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது என்று கூறியுள்ளார்.


Read More...

Friday, March 28, 2008

இட்லிவடை கேள்வி பதில்கள்

முன்பு இட்லிவடை 1008 என்ற பதிவு நினைவு இருக்கலாம்.

இரண்டு நாட்களாக ஒருவர் என்னை பின்னூட்டதில் துரத்தி துரத்தி நான் கேள்வி கேட்கணும் நீங்க பதில் சொல்லணும் என்று அடம்பிடிக்கிறார்.

அவருடன் கேள்வி கேட்க விரும்புகிறவர்கள் பின்னூட்டதில் கேட்கலாம்.




இந்த வருஷம் எந்த எந்த ஃசாப்ட்வேர் கம்பெனிகள் எவ்வளவு சம்பளம் உயர்வு கொடுத்துள்ளார்கள் என்று தகவல் அறிய இங்கே போகவும்.
( அடேயப்பா இவ்வளவு சம்பள உயர்வா ? )

Read More...

Thursday, March 27, 2008

சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகிறார்

விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வருவார் என்று தெரிகிறது. இளங்கோவன் வருவது திமுகவிற்கு பிடிக்காது. திமுகவிற்கு பிடிக்காது என்றால் சோனியாவிற்கு பிடிக்காது அதனால் அவர் வருவதில் சிக்கல்.

சுதர் சன நாச்சியப்பன் தமிழக காங்கிரசின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல் கள் தெரிவித்தன. சோனியா தீவிர ஆலோசனைக்குப் பிறகு சுதர்சன நாச்சியப்பனை ஏகமனதாக தேர்வு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனியா இன்று அல்லது நாளை வெளி யிடுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

Read More...

பிரபாகரன் படம் - இளைஞர் காங்கிரஸ் போலீஸில் புகார்

`பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம் - விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை

அதை தொடர்ந்து தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன் னாள் துணை தலைவர் சபீர் அலி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.



மனு விவரம்:

சென்னை கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேப்பில் `பிரபாகரன்' என்ற சிங்கள சினிமா பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தது. இந்த படத்தை பெரிஸ் என்பவர் பிரிண்ட் எடுப்பதற்காக இங்கு வந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத் ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், டைரக்டர் சீமான் ஆகியோர் தலைமையில் அங்கு சென்ற சிலர் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக படம் எடுத்திருப்ப தாக கூறி பெரிஸ் என்பவரை தாக்கியுள்ளனர்.

பிரபாகரனுக்கு ஆதரவாக செயல்பட யாருக்கும் உரிமை இல்லை. பிரபாகரன் பற்றிய இந்த படத்தை திருமாவளவன், ராமதாஸ் ஆகியோரிடம் போட்டுக் காட்டிய பின்னர் அதில் பிரபாகரன் பற்றி தவறாக சித்தரித்து இருந்தால் அந்த பட பிரிண்டுகளை தீ வைத்து எரிப்போம் என்று கூறி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.

எனவே தமிழர் என்ற போர்வையில் விடுதலைப்புலி களை ஆதரிப்போர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதோ இளைஞர் காங்கிரஸ்காரர்கள் மட்டும் கொஞ்சம் உப்பு போட்டு திங்கிறாங்க போல

Read More...

Wednesday, March 26, 2008

நான் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் - பாகிஸ்தானின் புதிய பிரதமர்

தான் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹிந்தித் திரை உலகின் இசை அரசி லதா மங்கேஷ்கரின் பரம ரசிகன் என்கிறார் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யூசுப் ரஸô கிலானி.



நான் சிறையில் இருந்தபோது லதா மங்கேஷ்கரின் பாடல்களை விரும்பிக் கேட்டதுடன் ஐஸ்வர்யா ராய் நடித்த எல்லாப் படங்களையும் எனது லாப்டாப்பில் பார்த்து விடுவேன் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

சுஃபி சாதுவின் பரம்பரையைச் சேர்ந்த 55 வயதான கிலானி தேசியப் பேரவையின் தலைவராக இருந்தபோது தனது பதவியைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2001-ல் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டால் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற முஷாரபின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் சிறைத் தண்டனையையே தேர்ந்தெடுத்தவர் கிலானி என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் நிறைந்த பாகிஸ்தான் மக்களுக்கு புதிய பிரதமரின் பாலிவுட் மோகத்தால் ஹிந்தித் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Read More...

மதம் மாறினால் மகன் இல்லையா ?

மதம் மாறிய மகன்கள் மறுத்ததால்,வேறு வழியின்றி தாயின் சிதைக்கு மகள் கொள்ளி போட்ட சம்பவம் சென்னை அருகே நடந்தது.



சென்னை புழல் அடுத்த காவாங்கரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார். இவரது மனைவி ஏகாத்தம்மாள்(82). இவர்களுக்கு நாகேஸ்வரராவ், மூர்த்தி என்ற மகன்களும், ஜெயந்தி(45) என்ற மகளும் உள்ளனர். ஜெயந்தி புழலில் உள்ள ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திலீப்குமார் சிங். ஏகாத்தம்மாளின் கணவர் மன்னார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஏகாத்தம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இந்து மத முறைப்படி தாயின் சிதைக்கு தலைமகன் கொள்ளி போட வேண்டும். ஆனால் அவரது மகன்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தங்களது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர்.

தற்போது தாங்கள் கடைப்பிடித்து வரும் மதச் சட்டப்படி, தாயின் சிதைக்கு கொள்ளி போட முடியாது என மறுத்து விட்டனர். இதனால் பேரப் பிள்ளைகளும், பாட்டிக்கு கொள்ளி போட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினர் அவர்களிடம் பேசியும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி தாயின் சிதைக்கு, தானே கொள்ளி போட மகள் ஜெயந்தி முன் வந்தார். நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிச் சடங்கில், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு வரை அவர் தீச்சட்டி ஏந்திச் சென்றார். பின்னர் வழக்கமான இறுதிச் சடங்குகள் முடிந்த பின், தாயின் சிதைக்கு கொள்ளி வைத்தார். இந்த சம்பவம் உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
(செய்தி: தினமலர்)
ஏசு உங்களை மன்னிப்பாராக.

Read More...

`பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம் - விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான காட்சி இருப்பதாக கூறி `பிரபாகரன்' பட சுருளை தீவைத்து எரிப்போம்-விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை - கூச்சல் குழப்பம், போலீஸ்...


சென்னையில் உள்ள ஜெமினி கலர் லேப்பில் `பிரபாகரன்' என்ற சிங்கள படம் பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.



விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், இயக்குனர் சீமான் ஆகியோர் தலைமை யில் ஏராளமானோர் அந்த லேப் முன்பு திரண்டனர். "பிரபாகரன்'' படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது அப்படத் தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத் தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்ததும் போலீ சார் விரைந்து வந்து சமரச பேச்சு நடத்தினார்கள். இதல் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் படத்தை பார்த்து ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் பிரிண்ட் எடுக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி வன்னியரசு :

பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த சினிமாவை இயக்கியுள்ள பெரிஷ் ஒரு சிங்களர். அவர் இலங்கை அரசு உதவியுடன் இப்படத்தை எடுத்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலேயே "இலங்கை அரசுக்கு நன்றி'' என்று ஆங்கிலத்தில் காட்டப் படுகிறது.

எனவே பெரிஷ் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பணம் பெற்றுக் கொண்டு பிரபா கரனைப் பற்றி இப்படத்தில் தவறாக சித்தரித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.

அதனால்தான் நாளை இப் படத்தை டாக்டர் ராம தாஸ், திருமாவளவன் ஆகி யோருக்கு போட்டு காண்பிக் கும்படி பெரிஷிடம் கூறி உள்ளோம். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தைப் பார்த்து இரு தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்தால் சென்னையில் உள்ள லேப்களில் பிரிண்ட் போட அனுமதிக்க மாட்டோம்.

பிரபாகரன் படத்தில் விடு தலைப்புலிகளுக்கு எதிரான காட்சி இடம் பெற்றிருந்தால் அப்படச் சுருளை தீவைத்து எரிப்போம்.


வன்முறை இங்கே தான் ஆரம்பிக்கிறது...

Read More...

குடும்ப கட்டுப்பாடு விளம்பரத்தில் ராமதாஸ் - பா.ம.கவினர் கொந்தளிப்பு

`கு.க.' விளம்பர பேனரில் ராமதாஸ் படம்-பா.ம.க.வினர் கொந்தளிப்பு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் கடந்த 24-ந்தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதற்காக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பிரசார ஊர்தி வலம் வந்தது.

இந்த ரதத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைப்பாகை அணிந்திருப்பதுபோல் படம் அச்சிடப்பட்ட விளம்பரபேனர் கட்டப்பட்டு இருந்தது. அந்த பேனரில், டாக்டர் ராமதாஸ் கூறுவதுபோல், "நான் செஞ்சுக்கிட்டேன்! நீங்க எப்போ?'' என்ற வாசகமும் இடம் பெற்று இருந்தது.

இந்த ரதம் நேற்று மாலை ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பா.ம.க.வினர் பிரசார ஊர்தியில் தங்கள் கட்சி தலைவர் படம் இடம் பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பா.ம.க. நிர்வாகிகள் கலெக்டர் கிர்லோஷ் குமாரிடம் புகார் கூறினர். இதுபற்றி சுகாதாரத்துறையினரிடம் கேட்டறிந்த கலெக்டர் உடனடியாக அந்த படத்தை அப்புறப் படுத்த உத்தரவிட்டார்.

ஆனால் பிரச்சினையை சும்மாவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிய பா.ம.க.வினர் சர்ச்சைக்குரிய அந்த விளம்பர பேனரை படம் எடுத்து தலைமைக் கழகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

Read More...

Tuesday, March 25, 2008

தி.மு.க., எம்.எல்.ஏ., தீ மிதிப்பு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு நாள் முன்பருந்தே கோவில் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தது குறிப்படத்தக்கது.
கலந்து கொண்டு தீ மிதித்தவர்கள்
சத்தியமங்கலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,
தர்மலிங்கம், காங்கேயம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
விடியல்சேகர், கோவை எம்.எல்.ஏ.,
பொன்னுசாமி, கோவை ஐ.ஜி.,
சஞ்சய் அரோரா, சென்னை டி.ஐ.ஜி.,
பாலசுப்பரமணியம், நீலகிரி எஸ்.பி,
வித்யா குல்கர்னி
ஆகியோர் குண்டம் இறங்கியவர்களில் முக்கியமானவர்கள்.
பொது மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-03-08

இந்த வாரம் பாடிகாட் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்


அன்புள்ள இட்லிவடை,

முதல்ல ஒரு தண்டோராச் செய்தி :
அரசு அறிவிப்புகளை `தண்டோரா' அடித்துச் சொல்ற முறை நடைமுறைல பெரிய அளவுல இருந்தது. இப்பவும் கிராமங்கள்ல ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதைச் செய்துவராங்க. அதனால தண்டோரா அடிச்சு அறிவிக்கற முறையை ரத்து செய்யணும்னு அரசுக்கு கோரிக்கை விட்டிருக்காங்க. கூடிய சீக்கிரமே இது நிறைவேறும்னு தெரியறது. அதே மாதிரி இரட்டை டம்ளர் முறையையும் அடியோட ஒழிப்பதற்கான வழிமுறைகளையும், எப்படி ஒழிக்கறதுன்னும் முதலமைச்சர் கருணாநிதி ஆலோசித்து வராறாம். எப்படியோ நல்லது நடந்தா சரி. என்ன நாஞ் சொல்றது?

மிழ்நாட்டுல என்னதான்யா நடக்குது? இந்த வாரம் பிரகாஷ்ராஜ் வாரம் போல. எல்லா பத்திரிகைலயும் ப்ரகாஷ்ராஜ் பத்திதான் கவர் ஸ்டோரி. ஞாநி கூட ஓ-பக்கங்கள்ல ப்ரகாஷ்ராஜ் பத்தி தான் எழுதியிருக்காரு.

அதே ஓ-பக்கங்கள்ல கடைசில இப்படியும் எழுதியிருக்கார் ஞாநி..


கார்ல் எந்த அளவுக்கு எதையும் ஜாலியாகத் தருபவர் என்பதற்கு ஒரு உதாரணம் farting பற்றி அவரது இணைய தளத்தில் இருக்கும் ஆய்வறிக்கைகள். அதையெல்லாம் தமிழில் சொன்னால் நீங்களும் என்னோடு சேர்ந்து ரசிப்பீர்கள் என்றாலும், குனேகா செண்ட் தடவி சிறப்பிதழ்கள் வெளியிடும் பாரம்பரியம் உள்ள இதழுக்குப் பொருந்தி வராது என்று சொன்னாலும் சொல்வீர்கள் என்பதால்..... எழுதவில்லை. ரொம்ப ஆர்வமுள்ளவர்கள் karl Krsuszelnickiயின் இணையத்தளத்தைத் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னால் farting என்பதற்கு என்ன பொருள் என்று டிக்ஷனரியில் பார்த்துவிடுவது நல்லது..


இதைப் படிச்சவுடனே எனக்கு நீ எழுதின 'அடிக்கடி கேட்கபடாத கேள்விகள்' பதிவுதான் நெனைவுக்கு வந்தது.

பெப்சி உமா கலைஞர் டிவியிலேருந்து வெளியே போயிட்டாங்களாமே, அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் நிஜமான ஜாக்பாட் யாருக்கு தெரியுமா ? குஷ்புக்கு தான். ஒரு ஷோ செய்ய 1 லட்சமாம்.

போன வாரம் தமிழகத்துத் தலைப்புச் செய்திகள்ல 'ஆறுமுகசாமி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடியது' பத்தி நிறைய படிச்சிருப்பே. வாழ்க்கைப் பாட்டை நான் சொல்றேன். சிதம்பரத்தில் அவருக்கு ஒரு வீடு கூட கிடையாது. ஒரு ஹோட்டல்ல இருந்து ஆறுமுகசாமிக்கு மூணு வேளை சாப்பாடு இலவசமாகத் தராங்க. ஒரு கல்யாண மண்டபத்துல இரவுநேரம் தங்க இடவசதி செஞ்சு கொடுத்திருக்காங்க. இந்த அறுமுகசாமிக்கு அரசு உதவித் தொகை அறிவிச்சிருக்கு. மாத உதவித்தொகை மூவாயிரம் ரூபாய் அப்றம் மருத்துவப்படி பதினைந்து ரூபாயாம். பதினைந்து ரூபாய்க்கு எந்த மருந்து வாங்கலாம், உனக்குத் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி பத்தி எழுதி, ஜெயமோகன் பாப்புலர் ஆனாரு, இப்ப ஜெயமோகன் பத்தி எழுதி மத்தவங்க பாப்புலர் அகிறாங்க...
பாமரன் எழுதாளர் ஜெயமோகன் பத்தி அடிச்ச கமெண்ட்டைக் கேளு...


போனவாரம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு மாணவர் எக்குத்தப்பாகக் கேட்ட கேள்வியில் திக்குமுக்காடிப் போனேன்.

பல சொப்புக் கள்ளும் குடித்துவிட்டு... கொஞ்சம்பாக்கெட் சாராயத்தையும் உள்ளே தள்ளிவிட்டு... போதாததற்கு ஒரு போதை ஊசியும் போட்டுக்கொண்டு... என் சிந்தனைக்குதிரையைத் தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். ‘‘எனக்கு எழுத வருமா...?’’ என்றார்.

‘‘நிச்சயம் வரும்... ஆனால் அது ஜெயமோகனின் கண்டுபிடிப்பைப் போல இருக்கும்... பரவாயில்லையா?’’ என்றேன்.

ஆடிப் போய்விட்டான் அந்த இளைஞன்.

பின்னே என்னங்க...?

மனுஷ்யபுத்திரனுக்கு மண்டைல மசாலாவே கிடையாது...

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புண்ணாக்கு...

சாருநிவேதிதா ஒரு தத்தி...

கலைஞர் இலக்கியவாதியே அல்ல...

பெரியார் சிந்தனையாளரே கிடையாது...

என்றெல்லாம் குரங்கு கள்ளு குடிச்சதைப் போல உளறும் ஜெயமோகனே தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும்போது... அந்த மாணவனுக்கு மட்டும் எழுத வராதா என்ன?


எல்லாரும் பேதிக்கு மருந்துகொடுத்த மாதிரி இவரைப்பத்தி பொழிஞ்சுகிட்டே இருக்காங்க டென்ஷன்ல.

யசுப் பசங்க வயத்துல பாலை வார்க்கற மாதிரி "எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம்"னு ஆரூட நல்வாக்கு சொல்லியிருக்காரு நம்ப வாக்குச் சித்தர் பாலகுமாரன் குமுதத்துல. தேமேன்னு பிராத்தனை செய்துகிட்டிருந்தவரை குமுதத்துல எழுதச் சொன்னால் இப்படித்தான் எழுத முடியும். அந்தப் பத்திரிக்கை ராசி அப்படி.

ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகர்கள் காக்கி அரை டிராயர் போட்டிருப்பதைப் பார்த்திருப்பியே. இப்ப அவங்க வேணும்னா பர்முடாஸ் கூட போடலாமாம். 45,000 பேர் இப்ப கூடுதலாகியிருக்காங்க. அதே மாதிரி பெங்களூர், பூனா, நொய்டாவ்ல 'சாப்ட்வேர் சுயம் சேவகர்கள்' கூட அதிகரிச்சிருக்காங்களாம்.

ராமாயணம் தொடரை திரும்ப என்டிடிவி ஒளிபரப்ப ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தொடருக்குக் கிடைக்கற நல்ல வரவேற்பைப் பாத்து மத்த சானல்களும் பழைய பிரபல தொடர்களையெல்லாம் எடுத்து தூசி தட்டி, புது வடிவத்துல கொடுக்கத் தயாராகிகிட்டிருக்காங்க. 1988கள்ல தூர்தர்சன்ல கலக்கின மகாபாரதம் மெகா தொடரை இப்ப ஸ்டார் பிளஸ் சானல் மும்முரமா தயாரிக்குது. ஒரு லைன் கதையையே நம்ப சீரியல்கார்ங்க 30 எபிசோட் இழுக்கத் தெரிஞ்சவங்க. ஆனா பாரு, உலகத்துலயே அதிகப் பாடல்கள் கொண்ட இதிகாசம் மகாபாரதம். இதுல 74,000 செய்யுள் இருக்காம். கேக்கவே வேணாம். ஆனா இதை விறுவிறுப்பா கொடுக்க ஸ்டார் பிளஸ் திட்டமிட்டிருக்காம். அடுத்த மாசம் (ஏப்ரல்)லேருந்து மகாபாரதத்தை சின்னத்திரையில் நீ கண்டுகளிக்கலாம்.

சன்வழித் தோன்றல் ராமனோட புதிய ராமாயணம் சன் டிவில சண்டே சண்டே காலைல பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகுது. அப்ப புதிய மகாபாரதம் கலைஞர் டிவில ஒளிபரபாகுமோ?

சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு. இவரோட ராமாயண சந்தேகங்களைத் தொகுத்த ராமாயணத்தைவிட சுவாரசியமா இருக்கும்போல இருக்கு. ஒரு வேளை
காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது போலீஸ் என்ன செய்துக்கொண்டிருந்தார்களோ அதே தான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற போது செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ யார் கண்டது.

தூர்தர்ஷல 1990கள்ல தொலைக்காட்சி நேயர்களுக்கு மாபெரும் விருந்து படைச்ச நிகழ்ச்சி சுரபி. நாடெங்கும் இருக்கற ருசிகரத் தகவல்களை நேயர்கள் கண்டு களிச்சு பல புதிய விஷயங்களை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிஞ்சுண்டாங்க. சித்தார்த்த கக், ரேணுகா சகானி ரெண்டுபேரும் புன்னகை ததும்ப தொகுத்து வழங்கின இந்த நிகழ்ச்சி மீண்டும் என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சில வரப்போகுதாம். என்னவோ போ, திரும்பவும் கீதாஞ்சலி ஐயர், மீனு நியூஸ் படிக்காம இருந்தா சரி.

ட்ஜெட்டின்போது வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு செய்திருக்கு ஆனால் அவங்களோட ம.தி.மு.க. வெளியே போகலை, கவனிச்சியா? எம்.பி. ‘சீட்’டாக கிடைச்ச அனுபவம்னு நினைக்கறேன்.

ல்கியில் கடந்த சில வாரமாக நரேந்திர மோடி பற்றி ஸ்பெஷல் கவரேஜ் கொடுக்கிறார்கள். உடனே கல்கியில் வந்த கேள்வியை பாரு
"எங்களுக்கு தெரியாதா இந்த குஜராத் டுடே விஷயம்.. தமிழ்ர்களை மட்டம் தட்டுவதற்காகவே நடக்கும் பார்ப்பன சூழ்ச்சி இது! குஜராத்தைக் காட்டிலும் பன்மடங்கு நன்றாகச் செயல்படுகிறது தமிழகம். 'தமிழகம் டுடே' யும் கொண்டு வாருங்கள்..."
எல்லோருக்கும் எங்கோயோ எரியுது என்ன செய்ய...

புலிகள் அல்கொய்தா தொடர்பு' இது தற்போதைய நியூஸ் எனக்கு என்னவோ எல்லா தீவிரவாதிகளிடமும் தொடர்பு உள்ள ஒரே நபர் பா.ராகவன் தான் :-)

இந்த வார நல்ல செய்தி:
Dr.ரெய்ரு கோபால், அவரது மனைவி Dr.சகுந்தலா இரண்டு பேரும் கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற கிராமத்தில் எழைகளுக்கு கிளினிக் நடத்தறாங்க. டாக்டர் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா வெறும் 2 ரூபாய்.

இந்த வார கவர்ச்சி படம்:

(ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் வைத்த கட்டவுட் )
இப்படிக்கு,
பாடிGod முனி

Read More...

FLASH: பதவியிலிருந்து ராஜினாமா

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான், தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது. இலங்கை ராணுவ தளபதி பொன்.சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்திற்கு உரியது. அதற்காக ஒட்டுமொத்த இலங்கையில் வாழும் தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.

சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணையை வைத்துவிட்டு, தமிழ் இனத்தின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ்விஷயத்தில் இந்திய அரசின் செயல்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 29ந் தேதி மதுரையிலும், ஏப்ரல் 5ந் தேதி சென்னையிலும் லட்சிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன்.

மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது கூட்டணி கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதில் துவங்கி தமிழக மக்கள் பிரச்சனைக்காக லட்சிய திமுக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா கடிதத்தை எப்போது வழங்கினீர்கள் என நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, இன்று காலை முறைப்படி விலகல் கடிதத்தை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.

ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தை கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் பதில் அளித்தார்

Read More...

அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் மகன் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் மகன் பரிமளம். இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். அவருக்கு வயது 67. அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது விட்டில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒருமணி நேரத்திற்கு பின்னர் அவரது வீட்டிலிருந்தவர்கள் அவர‌ை கண்டு பிடித்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர்.

Read More...

Monday, March 24, 2008

ஓய்வறையில்...சொல்லதான் நினைக்கிறேன்

ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள்!!! என்ற பதிவை தொடர்ந்து ..நீங்க ஓய்வறையில் இருக்கிறீர்கள், உங்களுக்கு சில தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் பதில்கள்....


யாரோ: ரொம்ப எக்கொ கேக்குது, கொஞ்சம் மெதுவா பேசுங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: பக்கத்து ரூம்ல இருந்து பதில் வருது நான் என்ன செய்ய ?


மாமனார்: மாப்பிளை சென்னையில ஒரே மழைபோல? பேசறப்பவே தண்ணி சத்தமா கேட்குதே. அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: உங்களுக்கு ஆயுசு நூறு! இப்ப தான். உங்களை பத்தி நினைச்சேன்.

மனைவி: நான் தாங்க. வீட்டில குழா லீக்காகுது, பிளம்பரை மறக்காம ஃபோன் செஞ்சு வர சொல்லுங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: முதல்ல இங்கே வரச்சொல்லலும்.

மேனேஜர்: இப்ப தான் கஸ்டமர் கால் செஞ்சாங்க. உங்க லேடஸ்ட் டெலிவிரியில ஏதொ மெமரி லீக்காம். உடனே வாங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: எங்கே போனாலும் லீக் விட மாட்டேங்குது. இருங்க கழுவிக்கிட்டு வரேன்.

ராங் கால்: சார் நாங்க திறந்திடு சீஸேம் நிகழ்ச்சியிலிந்து கால் செய்யறோம். தய்வு செய்து உங்கள் டிவி வால்யூமை கொறச்சுட்டு பேசுங்க.
சொல்லதான் நினைக்கிறேன்: பக்கதுல ரூம்ல யாரோ சத்தமா பாட்டு பாடறாங்க நான் என்ன சார் செய்ய முடியும்.

நலம் விரும்பி: எவ்வளவோ படிச்சவரு நீங்க...அதில போய் எப்படிங்கமாட்டிகிட்டீங்க ?
சொல்லதான் நினைக்கிறேன்: ஆமாங்க மாட்டிகிச்சு, அது எப்படி உங்களுக்கு தெரியும் ?

நண்பர்: இட்லிவடையில உங்க Flash news பார்த்தேன். எப்படி சார் உங்களுக்கு உடனே கிடைக்குது ?
சொல்லதான் நினைக்கிறேன்: இருங்க, Flash'சை முதல்ல Flush செய்யனும்.

( ஹரன்பிரசன்னா 'ஈ-ஓட்டும்' பதிவு போட சொன்னதால் இந்த பதிவு, ஈ-ஓட்ட விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்துக்கு செல்லவும்... )

Read More...

குள்ளமானவர்களுக்கு பொறாமை அதிகம்

"குள்ளமானவர்களுக்கு பொறாமை அதிகம்' என்பது, ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரிகளாக விளங்கிய, நெப்போலியன், முசோலினி, ஹிட்லர் போன்றவர்கள், சராசரி உயரத்தை விட, குள்ளமானவர்கள். எனவே, இவர்கள், தங்களை மேம்படுத்தி காட்ட, அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டனர். இதை "நெப்போலியன் மனயான்மை' என்றே, அழைத்து வருகின்றனர். "குள்ளமானவர்களுக்கு பொறாமை குணம் உண்டா?' என்பது குறித்து, நெதர்லாந்தை சேர்ந்த, குரோநின்ஜென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஆப்ரகாம் என்பவர் தலைமையில், ஆய்வு நடத்தினர். 119 ஆண்களும், 230 பெண்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வின் முடிவுகள், "நியூ சயின்டிஸ்ட் ஜர்னல்' என்ற, நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:சாரசரி உயரம் இல்லாதவர்களுக்கு, எப்போதும், பாதுகாப்பின்மை மனப் பான்மை இருக்கும். மற்றவர்களை விட, தாங்கள் மேலானவர்கள் என்பதை காட்டிக் கொள்ள அசாதாரண காரியங்களில் ஈடுபடுவர். குள்ளமானவர்கள், தன்னை விட உயரமான நண்பர்களை, தோழிகளை காணும் போது, பொறமை கொள்வர். சராசரி உயரம் அல்லது அதை விட உயரமாக உள்ள ஆண்களுக்கு பொறாமை குணம் சற்று குறைவாக இருக்கும். பெண்களை பொறுத்தவரை, சராசரி உயரத்தை விட குள்ளமாக இருப்பவர்களுக்கும், உயரமாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமை குணம் இருக்கும். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உங்க உயரம் என்ன ?

(செய்தி: தினமலர் )

Read More...

Saturday, March 22, 2008

ஆ!. திமுகவிற்கு சென்ற ஜோதி



மேலே இன்றைய செய்தி படமாக

போன வார செய்தி கேள்வியாக
கேள்வி: "நீங்கள் இன்னொரு கட்சிக்குச் செல்லப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே..."

பதில்: "பிழைப்புத் தேடி வேறு கட்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. செல்லவும் மாட்டேன். ஒரு கட்சி யிலேயே தெனாலிராமன் பூனை போல் அனுபவம் கிடைத்து விட்டது. அந்த காயங்கள் ஆறவே வெகு நாட்களாகும்..."

நீதி: பூனை என்றுமே பூனை தான்

Read More...

Thursday, March 20, 2008

நடிகர் சோபன்பாபு மரணம்


பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சோபன் பாபு இன்று காலை சென்னை யில் திடீரென்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71. யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான சோபன் பாபு. ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை மேத்தா நகர் ராஜாராம் காலனியில் அவருக்கு வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து தங்குவார். 3 நாட்களுக்கு முன்பு அவர் சென்னைக்கு வந்திருக்கிறார்.

இன்று காலை தனது வீட்டில் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அவருக்கு மூக்கிலிருந்தும் ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு சோபன் பாபுவின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்தவர் சோபன் பாபு. அவரது இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ். 1937 ஆம் ஆண்டு ஜனவரி 14ந் தேதி அவர் பிறந்தார். அவருக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உண்டு.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு விஜயவாடாவில் மேற்படிப்பை தொடர்ந்த அவர் பின்னர் சென்னையில் சட்டக் கல்வி பயின்றார். ஆனால் சட்டப் படிப்பை முடிக்கவில்லை.

1958ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தெய்வ பலம் எனும் திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். எனினும் பக்த சபரி எனும் திரைப்படமே முதலில் வெளியானது.

இந்த படத்தில் அவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து வந்த பல படங்களில் அவர் சிறிய பாத்திரங்களில்தான் நடித்து கொண்டிருந்தார்.

முதல் முறையாக 1965 ஆம் ஆண்டு வீர அபிமன்யு படத்தில் கதாநாயகனாக அவர் நடித்தார். பின்னர் மனுசுலு மாரலி எனும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அந்த படம் பெறும் வெற்றி பெற்று அவரை முன்னணி நாயகனாக்கியது. அதன் பிறகு அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

சோபன் பாபு மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து அழகாக தோன்றக் கூடியவர். ஆந்திர திரைப்பட உலகிலேயே மிகவும் அழகான நடிகர் என்று அவர் பாராட்டப்பட்டார்.

அவர் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். பல்வேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அவர் மிகவும் ஸ்டைலாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.

பாடல் காட்சிகளில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து தோன்றுவதை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் விரும்பி வரவேற்றனர். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அவர் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

பிலிம்பேர் விருதுகளை நான்கு முறை வென்றுள்ள அவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளை ஐந்து முறை வென்றிருக்கிறார். மேலும் பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சாரதா, வாணிஸ்ரீ, ஜெயசுதா ஆகிய நடிகைகளோடு அவர் அதிக படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா உட்பட பல முன்னணி நடிகைகளோடும் அவர் நடித்திருக்கிறார். ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மொத்தம் 250 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாரிசுகளை அவர் திரைப்பட துறையில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
(நன்றி: மாலைசுடர் )

Read More...

சுத்தமான குடிநீருக்கு பானையை உடைக்க வேண்டும்

சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி ஆற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு பானை உடைப்பு போராட்டமும், அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஆற்காடு நகர மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்காததை கண்டித்தும், மாசுபடிந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்தும், குடிநீருக்கு அதிக வரி வசூல் செய்வதை கண்டித்தும் பாமக சார்பில் இன்று ஆற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், பானை உடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

Read More...

தஸ்லிமா இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினார் ?

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் (46). இவரது புத்தகங்கள் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ளன. நேற்று இந்தியாவை விட்டுவெளியேறினார் - செய்தி

ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். இஸ்லாமிய ஓட்டு தங்களுக்கு அடுத்த தேர்தலில் கிடைக்காது என்று தற்போதைய மதசார்பற்ற அரசு நினைத்திருக்கும். வேற என்ன ?


கொல்கத்தா நகரில் தங்கியிருந்த அவரை வெளியேற்றவேண்டும் என்று இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். கொல்கத்தாவில் பெரும் கலவரமும் வெடித்தது. இதனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தஸ்லிமா நஸ்ரீன் கடந்த 6 மாதங்களாக மத்திய அரசின் கண்காணிப்பில் டெல்லியில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீன் நேற்று டெல்லியில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கண்காணாத(சுவிடன்) இடத்திற்கு அவர் தலைமறைவானார்.

பேட்டி:

இந்தியாவில் இருந்தபோது எனக்கு மிகுந்த மன உளைச்சல் இருந்தது. அப்போது அரசின் கண்காணிப்பில் இருந்ததால் என்னால் எதுவும் பேச இயலவில்லை. அந்த அளவிற்கு அவர்களால் துன்புறுத்தப்பட்டேன். டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் சித்ரவதை அறையாகவே இருந்தது. அப்போதுதான் அதை கொஞ்சம் கொஞ்சமாக மரண அறை என்பதை உணர்ந்து கொண்டேன்.

மத அடிப்படைவாதிகள் பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு இந்திய அரசு என்னை நடத்தியது.

தற்போது என் முகம் வெளியுலகிற்கு நன்கு தெரிந்து விட்டது. அதனால் இனி நான் எங்கே தங்கப்போகிறேன் என்பதை தெரிவிக்கப்போவதில்லை. அப்படித் தெரிவித்தால் மத தீவிரவாதிகள் என் உயிருக்கு குறி வைத்து விடுவார்கள்.

Read More...

விட்டுக் கொடுக்கவேண்டாம் - சரப்ஜித்சிங் மனைவி

பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி உள்ள இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு விடுதலை கிடைப்பதற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு பதிலாக இந்திய சிறையில் உள்ள கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாரையும் விடுதலை செய்து விடாதீர்கள் என்று சரப்ஜித்சிங்கின் மனைவி சுக்பிரீத் கவுர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது கணவருக்காக தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவதை நானோ, என் மகள்களோ விரும்பவில்லை. எங்களை விட நாடு பெரியது. தாயக நலனுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். எனது கணவரை சந்திக்க அவரது சகோதரிக்கு விசா வழங்குவதுபோல், எனக்கும், என் மகள்களுக்கும் விசா வழங்க வேண்டும்.

நிச்சயம் இவரை பாராட்ட வேண்டும்!

Read More...

Wednesday, March 19, 2008

குரு மீது தூசிகூட விழுந்தால்...

குரு மீது ஒரு தூசு கூட படக்கூடாது. என் வயிற்றில் பிறக்காத பிள்ளை குரு. வெடிகுண்டு உள்பட பொய்வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும். இந்த மாவட்டம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். குருவை பழிவாங்குவது என்னை, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஒட்டுமொத்த வன்னியர்களை பழிவாங்குவது போலத்தான். - ராமதாஸ்

மேலும் காமெடி படிக்க...

வன்னியர் சங்க தலைவர் குரு மீது போலீசார் வழக்கு தொடர்ந்து இருப்பதை கண்டித்தும், அந்த வழக்குகளை வாபஸ் வாங்க கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் :

அரியலூர் மாவட்டம் மிக அமைதியாக உள்ளது.(அதனால் பா.ம.க சும்மா இருக்குமா?) இங்கு பாட்டாளி மக்கள் கட்சியை அழிக்க வேண்டும், வளரவிடக் கூடாது என்று வன்னியர் சங்க மாநில தலைவர் குரு மீது பல பொய்வழக்குகள் போட்டு உள்ளனர். மேலும் வைத்தி, பாலு ஆகியோரையும் ஒழிக்க வேண்டும் என்று வெடிகுண்டு வீசியதாக ஜோடனை வழக்கு போடப்பட்டு உள்ளது.
(அன்புமணி அமைச்சராக இருக்கும் வரை நான் இது மாதிரி ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன். கண்டுக்காதீங்க )

எப்படியும் குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாடுபடுகின்றனர். அவர் மீது பாலியல் வழக்கு போடப்பட்டது. 8 மணி நேரத்தில் அந்த வழக்கு பொய் வழக்கு என்று நிரூபிக்கப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது என்றார்கள். விசாரணைக்கு சென்ற போலீசாரே அந்த பெண்ணிடம், "இதுபோன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்ப இது கீழ்தரமான செயல்'' என்று கூறி உள்ளனர்.

நீங்கள் ஆளுங்கட்சி, அரசு உங்களுடையது, போலீஸ் உங்கள் கையில் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தால் பொய் வழக்கு போடலாம். நாங்கள் என்ன எதிர்க்கட்சியாப தோழமை கட்சி அல்லவா?
( தேர்தல் வரை தான் கூட்டணி என்று முன்பு சொன்னது ? )

மத்திய மந்திரி ராசா வெற்றி பெற நாங்கள் பாடுபடவில்லையாப ஆண்டிமடம் எம்.எல்.ஏ. சிவசங்கருக்கு ஓட்டு போடவில்லையாப தி.மு.க. சார்பில் ஆண்டிமடம் தொகுதியில் சிவசுப்ரமணியன் எத்தனை முறை நின்றார்ப வெற்றி பெற்றாராப ஆண்டிமடத்தில் குரு தேர்தலில் நின்று இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வீட்டில் படுத்துக்கொண்டிருந்தாலே வெற்றி பெற்று இருப்பார். ஜெயங்கொண்டத்தில் குரு நின்றதால் தான் அவரை தி.மு.க.வினர் தோற்கடித்தனர். இதை நான் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நேரிலே கூறி உள்ளேன்.
( இப்ப என்ன அதுக்கு )

31 எம்.எல்.ஏ. சீட்டுக்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 13 இடங்களில் தோற்று போனோம். குரு வெற்றி பெறக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தோல்வியடைய செய்தனர். மேல்-சபை எம்.பி. தேர்தலில் குருவுக்கு ஒரு சீட்டு வேண்டும் என்று கேட்டதற்கு இத்தனை வழக்குகளாப இது தான் கூட்டணி தர்மமாப நாங்கள் என்ன துரோகம் செய்தோம்ப கூட்டணி, நட்பு பற்றியெல்லாம் அய்யன் திருவள்ளுவர் இப்படித்தான் கூறி உள்ளாராப தற்போது நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல் வரை நாங்கள் துரோகம் செய்யவில்லை. அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது. பின்னர் எங்கள் குறைகளை எப்படி தெரிவிப்பதுப நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதனை அனுபவித்து இருப்பீர்கள்ப காங்கிரஸ், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உங்கள் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது என்ன வேதனைபட்டு இருப்பீர்கள்ப அதுபோல் தான் எங்களுக்கும் உள்ளது.
( திருபள்ளுவரையும் விட்டுவைக்கலையா ? )

1995-ல் விழுப்புரம் மாநாட்டில் உங்களுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து நீங்கள் தான் வருங்கால முதல்வர் என்று கூறி முதல்வர் ஆசனத்தில் அமரவைத்தோம். நாங்கள் அரியலூரில் நடத்திய மத நல்லிணக்க மாநாட்டிற்கு நீங்கள் தான் தலைமை வகித்தீர்கள்?
( அதுக்கு அப்பறம் அதிமுகவிற்கு தாவினீர்கள் அதை ஏன் மறந்தீர்கள் ? )

குருவை அழிக்க சிறையில் இருந்து விடுதலையான இளவரசனை ஆதரித்து, உங்கள் அமைச்சர் மாலை அணிவித்து வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வருகிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இளவரசனுக்கு மரியாதை கிடைக்கிறது. தமிழர் நீதிக்கட்சி என்ற புதிய பெயரில் அவர் உலா வருகிறார். குருவுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முழு பொறுப்பு. இதனை கடந்த காலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் அவரிடம் கூறி உள்ளேன். சுண்டெலியை பார்த்து யானை பயப்படாது.
( யார் சுண்டலி ? யார் யானை ? விளக்கவும் )

குரு பேசியபோது இங்கு காவல் துறை நடவடிக்கைகளை பட்டியலிட்டு கருணாநிதிக்கு தெரியாதாப என்று பேசினார். கருணாநிதிக்கு அனைத்தும் தெரியும். கருணாநிதி ஆட்சி மனுநீதி சோழன் ஆட்சி என்று கூறுகிறார்கள். மனுநீதி சோழன் பொய்வழக்கு போடலாமாப குருவோடு மோத இளவரசனை ஏன் ஆதரிக்க வேண்டும்
( கலைஞருக்கு உங்களை பற்றி நிறைய தெரியும் என்பது உண்மை )

குரு மீது ஒரு தூசு கூட படக்கூடாது. என் வயிற்றில் பிறக்காத பிள்ளை குரு. வெடிகுண்டு உள்பட பொய்வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும். இந்த மாவட்டம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். குருவை பழிவாங்குவது என்னை, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஒட்டுமொத்த வன்னியர்களை பழிவாங்குவது போலத்தான். கடந்த காலத்தில் இந்த மாவட்ட இளைஞர்கள் எப்படி இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை வன்னியர் சங்கம் மூலமும், பா.ம.க. மூலமும் ஒழுங்குபடுத்தி நல்வழிக்கு கொண்டு வந்தோம். குரு மீது ஒரு தூசு விழுந்தால் கூட இளைஞர்கள் கொதித்து எழுவார்கள் என்பதை இந்த அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
( இந்த பூச்சாண்டிக்கு குழந்தை கூட பயப்படாது, கலைஞர் பயப்படுவாரா ? முடிஞ்சதை செய்யுங்க பார்க்கலாம் )


இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதே போல் 500 போலீஸ்சாரும் கலந்து கொண்டனர் ( பாதுகாப்பிற்கு! )

ஏதோ இன்று இவர் செய்தி பேப்பரில் வந்துவிட்டது. நாளை வேறு ஏதாவது பூச்சாண்டி காண்பிப்பார். பார்க்கலாம்...



டிஜிபி அறிக்கை

06.01.2008 அன்று அரியலூரில் மாநில வன்னிய சங்க தலைவர் ஜெ.குரு, பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது மத்திய அமைச்சர் ஒருவரையும், அரியலூர் மாவட்ட நிர்வாகத்தையும் மிரட்டும் வகையிலும், சட்டம்ஒழுங்கை குலைக்க தூண்டும் விதத்திலும் ஆட்சேபகரமாக பேசியதாக முருகேசன் என்பவர் புகார் கொடுத்ததன் பேரில் அரியலூர் காவல் நிலையத்தில் 153(ஏ), 153(பிசி), 504, 505 (பி), 500, 506 (ஐ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அழிசுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாமக உறுப்பினர் கணேசன் என்பவர் 08.03.2008 அன்று மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் தனது மனைவி இந்திரா குடும்ப பிரச்சனை காரணமாக ஜெ.குருவை பார்க்க சென்ற போது அவரை அரியலூர் மாவட்ட செயலாளர் க.வைத்தி என்கிற வைத்தியலிங்கம், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கழுவந்தோண்டி மற்றும் ஜெ.குரு ஆகியோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும், தனது மனைவியை மீட்டு கொடுக்குமாறும் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் டி.பழூர் காவல் நிலையத்தில் 363வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

10.03.2008 அன்று முன்னாள் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் பாமக மாவட்ட கவுன்சில் உறுப்பினர் செல்வி செல்வம், தான் தத்தனூர் கீழவெளி கிராமத்தில் வசித்து வருவதாகவும் அதிகாலை 3 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து தனது வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றதாகவும், கட்சி முன் விரோதத்தினால் ஜெ.குரு, வைத்தி, கொளஞ்சி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கொடுத்த புகாரின் பேரில் உடையார் பாளையம் காவல் நிலையத்தில் இந்திய வெடிபொருள் சட்டம் மற்றும் 307, 109 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கணேசன் வழக்கில் அவரது மனைவி இந்திரா தானாகவே முன் வந்து தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவ்வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. மற்ற இரு வழக்குகளிலும் புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

எப்போதும் காவல் துறையினர் தன்னிச்சையாக தனி சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்வதில்லை; செய்யவும் இயலாது இவ்வாறு இருக்க காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்று சில அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானதாகும். காவல் துறையினர் மீது பொது மக்களுக்கு உள்ள நல்ல அபிப்பிராயத்தையும் கெடுக்கும் வகையில் அமையும்.

Read More...

சென்னை ஐபிஎல் பிராண்ட் அம்பாசடர்களாக - விஜய், நயன்

சென்னை அணி விளம்பர தூதர்களாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் ஆகி யோர் நியமிக்கப்பட்டனர். விளம்பர நட்சத்திர தூதர் களாக நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை அறிமுகப் படுத்தும் விழா இன்று தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. விஜய் பெயரை தூதராக அறிவித்தனர். உடனே அவர் மேடையில் தோன்றினார். நயன்தாரா ஷூட்டிங் சென்று இருப்பதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
( அதனால் அவர் படம் கிடைக்கவில்லை, கூகிளில் தேடியதில் கிடைத்த படத்தை போட்டிருக்கேன். பெரிய வித்தியாசம் இல்லை, டையர் கூட இருக்கு )

விஜய் பேட்டி:

நான் தீவிர கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது கிரிக்கெட் போட்டி நடந்தால் அவ்வப்போது ஸ்கோரை கேட்டு தெரிந்து கொள்வேன். ஆனால் இப்போது வேலை இருந் தாலும் அதை விட்டு விட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். இதற்கு எனது மகனும் ஒரு காரணம். அவன் ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்ப்பான். அவனுடன் சேர்ந்து நானும் கிரிக்கெட் பார்க்கிறேன். என்னை சென்னை அணி விளம்பர நட்சத்திர தூதராக இருக்க இந்தியா சிமெண்ட் நிறுனம் கேட்டுக்கொண்டது. உடனே நான் ஒத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த அணிக்கு ஆதரவு தர வேண்டும்.

சென்னை அணி இளம் அதிரடி வீரர் டோனி மற்றும் முன்னணி வீரர்களை கொண்டுள்ளது. டோனி இந்த அணிக்கு கிடைத்தது பெருமை. இதே போல இந்த அணிக்கு தூதரராக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததையும் பெருமையாக கருதுகிறேன். முதல் போட்டி ஏப்ரல் 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. அதில் நானும் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி வீரர்களை தேர்வு செய்த ஒருங்கிணைப்பாளர் வி.பி.சந்திரசேகரன் இது பற்றி கூறும்போது, "சென்னை அணியை பிரபலபடுத்தும் வகையில் நடிகர் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்'' என்று கூறினார்.

இந்த நிக ழ்ச்சியில் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்தியா சிமெண்டு செயல் தலைவர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏவிஎம்மின் அடுத்த படத்தில் விஜய்யும், நயனதாராவும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Read More...

நடிகர் ரகுவரன் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. தமிழ்த்திரையுலகில் தனது வித்தியாசமான வில்லத்தனத்தாலும், குணச்சித்திர நடிப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்தவர் ரகுவரன்.

கடந்த 10 தினங்களுக்கு உடல் நிலை கோளாறு காரணமாக சேத்துப்பட்டில் உள்ள மேத்தா நர்சிங் ஹோமில் ரகுவரன் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது உடல்நலம் தேறிய ரகுவரன் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ரகுவரன் இன்று காலை 6.15 மணிக்கு உயிரிழந்தார்.

ரகுவரன் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். நடிகை ரேவதி மருத்துவமனைக்கு நேரில் சென்று ரகுவரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரகுவரனின் உடல் பாண்டிபஜாரில் உள்ளஅவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு நாளை தகனம் செய்யப்படும் என தெரிகிறது.

வாழ்க்கை வரலாறு

1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந் தேதி கோவை மாவட்டத்தில் ரகுவரன் பிறந்தார். அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ரகுவரன் ஏவிஎம் தயாரித்த "மனிதன்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

தொடர்ந்து 1982ம் ஆண்டு "ஏழாவது மனிதன்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் ருக்மா, ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்களில் நடித்த ரகுவரன், எழுத்தாளர் சிவங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அந்த படத்தில் மதுவுக்கு அடிமை யான ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் பாத்திரத்தில் நடித்த ரகுவரன் தனது சொந்த வாழ்க்கையி லும் போதைப் பொருளுக்கு அடிமை யானது சோகமான ஒற்றுமையாகும்.

1986ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து திரையுலகில் தனக்கு ஏற்பட்ட தொய்வை சரி செய்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ரகுவரன் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கில் வெளிவந்த லங்கேஷ் வரடு என்ற படத்தில் ராவணனாகவும் ரகுவரன் நடித்துள்ளார். 1990ம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படத்தில் மிகச்சிறப்பாக ரகுவரன் நடித்திருந்தார். அதே ஆண்டு ரஜினியுடன் சிவா என்ற படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தார்.

தொடர்ந்து ரஜினியுடன் பல படங்களில் வில்லனாக நடித்து பெரும் புகழ்பெற்றார். பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என அவரது படங்களில் பிரதான வில்லன் பாத்திரத்தை ரகுவரனே ஏற்றார். சமீபத்தில் வெளிவந்த சிவாஜி படத்தில் கூட ரஜினியுடன் குணச்சித்திர பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார்.

விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் ஆகிய இளைய தலைமுறை நடிகர்களுடனும் பல படங்களில் ரகுவரன் நடித்துள்ளார். கடைசியாக வின்சென்ட் அசோகன் நடித்து வெளிவந்த சில நேரங்களில் என்ற படத்தில் வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார்.

சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியே ரகுவரன் கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சியாகும். தொடக்கம் என்ற படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ரகுவரன் அப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் சிறந்த வில்லன் விருதை இரண்டு முறையும், பிலிம்பேர் விருதை ஒரு முறையும் ரகுவரன் வாங்கியுள்ளார். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி ரோகிணியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.

விவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்

அவர் குடும்பத்துக்கு அனுதாபங்கள்

Read More...

Monday, March 17, 2008

ஜோதி - கண்டனமும், பாராட்டும்

ராஜ்யசபை எம்பி பதவி கிடைக்காததால் வழக்கறிஞர் ஜோதி அதிமுகவிலிருந்து விலகல்
அதிமுக கண்டனம், திமுக பாராட்டு....

அதிமுக அறிக்கை
அதிமுக சட்ட ஆலோசகர் பொறுப்பி லிருந்தும், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ந.ஜோதி, ராஜினாமா செய்வதாக 13.3.2008 அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி வேட்பாளராக நா. பாலகங்கா அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்ட வுடன், தனக்கு மீண்டும் மாநிலங் களவை உறுப்பினராகும் வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் 12.3.2008 அன்று அதிமுக பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே நீதிமன்றத்தை விட்டு ஜோதி வெளியே வந்து மீண்டும் நீதிமன்றத் திற்கு செல்லாமல் அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திரும்பிவிட்டார்.

மறுநாள் அதாவது 13.3.2008 அன்று காலையிலேயே அதிமுக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி, அதிமுக சம்பந்தப்பட்ட வழக்குகள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக பிரமுகர்களும் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவை சார்ந்தவர்கள் சம்பந்தப் பட்ட வழக்குகள் ஆகிய அனைத்து வழக்குகளிலிருந்தும் தான் விலகுவதாகவும், வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் பெற்றுக் கொள்ளுமாறும் ந.ஜோதி தெரிவித்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, வழக்கறிஞர் தொழில் தர்மத்தையே படுகொலை செய்து புதைகுழியில் புதைக்கும் செயல் ஆகும்.

தான் நடத்திக் கொண்டிருந்த ஒட்டுமொத்த 113 வழக்குகள் பல்வேறு நிலைகளில், பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வாறு அனைத்து வழக்குகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக ஜோதி தெரிவித்த செயல் இதுவரை சட்டத்துறையில் கேள்விப்பட்டிராத இழி செயலாகும்.

இவ்வாறு அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், அதிமுகவிற்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாகும் விதத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அதிமுக உறுப்பினர்கள் யாரும் இவருடன் இனி எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலைஞர் கேள்வி பதில் அறிக்கை
கேள்வி: அதிமுகவிற்காகவும், ஜெயலலிதாவிற்காகவும் வாதாடிய வழக்கறிஞர் ஜோதியின் ராஜினாமா பற்றி?
பதில்: உண்மை புரிவதற்கு திறமைசாலிகளுக்கே காலம் தேவைப்படத்தான் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜோதி


Read More...

Sunday, March 16, 2008

விகடன், குமுதம் - மன்னிப்பு, மறுப்பு

விகடன், குமுதம் வாரம் இரண்டு பக்கங்கள் இந்த மாதிரி மன்னிப்பு/மறுப்புக்களுக்கு ஒதுக்கியுள்ளது.



விகடன் விளக்கம்
ஆனந்த விகடன் 20.2.2008 இதழில் வெளியான எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 9.3.2008 அன்று நடந்த கூட்டத்தின்போது, கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வேறு சில நண்பர்களும், அமைப்பினரும் அறவழியில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோரைப் பற்றி வருந்தத்தக்க விமர்சனங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதைக் கண்டு, எல்லோரையும் போலவே நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த இரு மாபெரும் சிகரங்கள் மீது பற்றும் பாசமும்கொண்ட மக்களின் முன்பு அதை வைத்து, நியாயம் கோரும் விதமாகவே அக்கட்டுரையின் சில பகுதிகளை வெளியிட்டதோடு, அது குறித்து எங்களின் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அந்தக் கட்டுரையிலேயே பதிவு செய்திருந்தோம்.

மற்றபடி, குறிப்பிட்ட அக்கட்டுரையை வெளியிட்டதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமும் கிடையாது. இருப்பினும், குறிப்பிட்ட அக்கட்டுரையால் பலர் மனம் புண்பட்டதை உணர்ந்து, அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைப்படத் துறை மீதும் திரைக் கலைஞர்கள் மீதும் ஆனந்த விகடன் என்றென்றும் மாறாத மதிப்பும் அன்பும்கொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்!

-ஆசிரியர் ( விகடன் )
படிக்க வேண்டிய பதிவு: விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

நியாயமா விஜயகாந்த் ?

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது! 27.2.08 தேதி குமுதம் இதழில் வெளிவந்திருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பேட்டியைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர், முதல்வர் கலைஞருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைத்தான் சொல்கிறோம்! தனது பதில்கள் தான் சொன்னவாறு வெளியிடப்படவில்லை என்று குமுதம் மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருந்தார்.

சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் டேப்பில் அப்படியே உள்ளன. ஒரு முறைக்கு இருமுறை தெள்ளத்தெளிவாகச் சொல்கிறார். விஜயகாந்த் 'எழுதுங்க' என்று நம்மிடம் சொல்லிவிட்டு நோட்டில் எழுத வசதியாக பொறுமையாகவும் சொல்லியிருக்கிறார். சொல்லியபின் அவரது உதவியாளர் பார்த்தசாரதி 'கலைஞர் அசிங்கமாகப் பேசினார்' என்று மட்டும் போடுங்க என்று கேட்டுக் கொள்ளா விஜயகாந்த் தயங்கியவாறு யோசித்துவிட்டு 'கச்சத்தீவு பற்றி எனக்கு தெரியாது என்கிறீங்களே. அனந்த நாயகியை சட்டசபையில் இந்த வார்த்தை கேட்டு நான் படிச்ச ஞாபகம் எனக்கு இருக்கே அது மட்டும் எப்படி ... அந்த மாதிரி அதைப் போடுங்க..." என்கிறார்.

இப்படி பேசிவிட்டு முழு புசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? சில விஷயங்களை வேண்டும்மென்றே குமுதம் தவிர்த்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். ஒரு விதத்தில் அது உண்மையே! பத்திரிக்கை நாகரிகம் கருதி சிலவற்றை நாங்கள் பிரசுரிக்கவில்லை 'மூதறிஞர் ராஜாஜிக்கு தலைவர்' என்ன பட்டப் பெயர் வைத்தார் ?' என்ற விபரம் உள்பட டேப்பில் உள்ள விஷயங்களை வேண்டுமென்றேதான் தவிர்த்தோம்.

பேட்டி தவறாக இருந்தால் வெளியான மறு நாளே அல்லவா, நம்மைத் தொடர்பு கொண்டு தங்கள் அதிருப்தியை தெரிவித்திருக்க வேண்டும் ? சொல்லப்போனால் பேட்டி வெளியான அன்று இரவே, விஜயகாந்தின் உதவியாளர் பார்த்தசாரதி நம்மைத் தொடர்பு கொண்டு 'பேட்டி பிரமாதம் அண்ணே. நிறைய ஃபோன்' என்று பேசியதை மனசாட்சி இருந்தால் மறுக்க முடியாது.

நளைய முதல்வராக வரக் துடிப்பவர் மனம் போனபடி பேசிவிட்டு திடீரென்று 'நெருக்கடி வரும் போது அந்தர்பல்டி அடிப்பதும், தூற்றுவதும் அவரது தகுதிக்கும் தலைமைக்கும் பெருமை சேர்க்காது. இறுதியாக ஒரு விஷயம், செய்தியாளர் தூண்டுவது போல கேள்விகளைக் கேட்டுள்ளதாகச் சொல்லியிருப்பதை விஜயகாந்த் தன்னையறியாமல் தெரிவித்த பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறோம். ஒரு பத்திரிக்கையாள்ரின் வேலையும் அதுதான். அதற்காக விஜயகாந்திற்கு நன்றி!.

படிக்க வேண்டிய பதிவு: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு

Read More...

Friday, March 14, 2008

நோ கமெண்ட்ஸ்


"கோக், பெப்ஸி போன்ற பானங்களின் விற்பனைக்குத் தடைவிதித்து, பதநீரைப் பதப்படுத்தி, பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் விற்கலாம்' - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

பிகு: நிறைய பல்டி அடித்தால் தாகம் எடுக்கும்



இந்த வார குட்டு

சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் நையாண்டி செய்து இண்டர்நெட்டில் எழுதியதை திரும்பப் பெறும்வரை எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் திரையுலகில் பணியாற்ற ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று தீர்மானம் போட்டதற்காக நடிகர் சங்கத்துக்கு இ.வா.குட்டு. ஊனமுற்றவர்களை நையாண்டி செய்து காமெடி; பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச நடனங்கள்; போலீஸ், அரசியல்வாதிகளைக் கேவலப்படுத்தும் காட்சிகள்; என்று ஒட்டு மொத்த சமூகத்தையே இழிவுபடுத்தி திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று அடுத்தபடி அறிவிக்கும் துணிச்சல் நடிகர், நடிகைளுக்கு உண்டா?
( ஓ-பக்கங்கள், குமுதம் )

Read More...

மேல் சபை தேர்தல் - நிலவரம்

டெல்லி மேல்-சபை தேர்தலில்...
* தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க போவதாக பா.ம.க. அறிவித்துள்ளது.
* காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. * இந்த தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க. மறுத்து விட்டது.

Read More...

Thursday, March 13, 2008

இந்த 'Bug'கை எப்படி சரி செய்வது ?

#include "stdio.h"

int main ( )
{
int i=0;



return 0;
}

இப்படி தான்

#include "stdio.h"

int main ( )
{
int i=0;
/*

*/
return 0;
}

Read More...

ரூபாய் நோட்டு மாலைக்கு தடை

மாலை அணிவிப்பதற்கு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கூடாது ரிசர்வ் வங்கி அறிக்கை

அலங்கார வளைவு அமைத்தல், வழிபாட்டு தலங்களில் மாலைகளாக அணிவித்தல், பொது நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு ரூபாய் நோட்டு அணிவித்தல் என்று பல்வேறு வகைகளில் ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், `இது போன்ற செயல்பாடுகளால் ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலம் குறையும் அபாயம் உள்ளது. நாடு முழுவதும் தூய்மையான நல்ல நோட்டுகளை வினியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது'

Read More...

நோ கமெண்ட்ஸ்



Men will be Men...doesn't matter if they are in BLUE!!!!!

Read More...

Wednesday, March 12, 2008

200 நடிகர்கள், நடிகைகள் அமெரிக்கா செல்ல தடை

தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் டைரக்டர்கள் 200 பேருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள், டைரக்டர்களுடன் சிலர் போலி ஆவணங்கள் மூலமாக அங்கு சென்று தங்கிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சென்ற நபர்கள், நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் அல்லது விசா ஏஜெண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து செலுத்தி முறைகேடாக அமெரிக்கா சென்றிருப்பதை, அமெரிக்க துணைத் தூதரகத்தின் மோசடி தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்கள்.

அமெரிக்காவுக்கு செல்லும் திரையுலக பிரமுகர்களுக்கு எடுபிடியாகச் செல்வது போல் ஆவணங்களில் குறிப்பிட்டு, விசா பெற்று அவர்கள் சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக அமெரிக்கா சென்ற ஏராளமானோர் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களது அடையாளம் பற்றிய விவரங்கள் அமெரிக்க அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க சட்டவிதிகளுக்குட்பட்டு அவர்களது அடையாளம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

200 பேருக்கு ஆயுள்தடை

இவ்வாறாக, தங்களுடன் போலி ஆவணங்கள் மூலமாக சிலரை அமெரிக்காவுக்கு தங்களுடன் அழைத்துச் சென்ற, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் டைரக்டர்கள் 200 பேர் இனி அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வகையில் அவர்களுக்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசா பெறுவதற்காக போலியான வழிமுறைகளை கடைபிடிப்போர் மீது அமெரிக்கா அல்லது இந்தியாவில் குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது பற்றி தூதரக அதிகாரி டேவிட் ஹோப்பர் கூறுகையில், ``இந்த நடவடிக்கை இந்திய திரைப்படவுலகினருக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது. இந்திய திரையுலகுக்கு உலகம் முழுவதிலும் கிடைத்திருக்கும் புகழும், அங்கீகாரமும் அனைவரும் அறிந்ததே. மேலும், இந்திய திரையுலகினருக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு திரையுலகினருடன் அதிகரித்திருக்கும் தொடர்புகளையும் அங்கீகரிக்கிறோம். எனினும், இந்திய திரையுலகைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு உள்ள புகழினை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது'

அடுத்த கண்டன கூட்டம் இதுக்கா ?

Read More...

Monday, March 10, 2008

கண்டன கூட்டம் - தீர்மானம்

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் அவமரியாதையாக எழுதிய ஒரு எழுத்தாளரையும், வார பத்திரிகையையும் கண்டித்து நடிகர்-நடிகைகள் கூட்டம் நடந்தது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜிஆரையும், `நடிகர் திலகம்' சிவாஜிகணேசனையும் அவமரியாதை செய்யும் வகையில், ஜெயமோகன் என்ற ஒரு எழுத்தாளர் `இன்டர்நெட்'டில் செய்தி வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதை, ஆனந்த விகடன் வார இதழ் பிரசுரம் செய்து இருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர்-நடிகைகளின் கூட்டம், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஏராளமான நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* அதிக மக்கள் பார்க்காத இன்டர்நெட் செய்தியை, வார இதழில் வெளியிட்டு எம்.ஜிஆர், சிவாஜிகணேசன் ஆகிய இருவரையும் அவமதித்த நிறுவனத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.

( நிறைய படத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போல நையாண்டு செய்தால் பரவாயில்லையா ? சன் டிவியில் டாப்-10 என்ற நிகழ்ச்சியில் செய்த நையாண்டியை விடவா ஜெயமோகன் எழுதிவிட்டார் ? நீங்கள் கடுமையாக கண்டித்ததால் ஜெயமோகனுக்கு ஜுரமாம்)

* அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி பொது மன்னிப்பு கேட்க தவறினால், அந்த வார இதழில் அந்த நிறுவனம் தொடர்புள்ள எந்த மாத, வார, தினசரி இதழ்களிலும் தமிழ் திரை உலகை சார்ந்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பேட்டியோ, புகைப்படமோ இனி பயன்படுத்தக் கூடாது.

( இது விகடனுக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன். நடிகை நடிகர்கள் இல்லாமல் விகடன் நல்ல பத்திரிக்கை என்று பேர் எடுத்தால் அதற்கு ஜெயமோகனுக்கு தான் நன்றி சொல்லனும் )

* மேற்கண்ட நிறுவனத்துடன் தமிழ் திரையுலகம் எந்தவித தொழில் ஒத்துழைப்பும் வைத்துக்கொள்ளாது.

( நல்ல விஷயம் தானே ! )


* எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோரை தன் எழுத்தால் அவமதித்த எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக கண்டிக்கிறோம். இன்டர்நெட்டில் அவர் வெளியிட்டுள்ள தவறான-உண்மைக்கு புறம்பான செய்திகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழ் திரையுலகில் ஜெயமோகன் எந்த துறையில் பணிபுரிந்தாலும், அவருடன் தமிழ் திரையுலகம் இணைந்து பணியாற்றாது.

( சபாஷ். வேற என்ன சொல்ல ? )

* திரைப்படங்களுக்கு சென்சார், நாடகம் நடத்த போலீஸ் அனுமதி என்று நடைமுறையில் இருக்க, இன்டர்நெட்டுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால், முறையற்ற பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. எனவே மத்திய அரசு இன்டர்நெட்டுக்கு சென்சார் போன்று ஒரு தணிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

( இது எல்லாம் கொஞ்சம் ஓவர் )

Read More...

Friday, March 07, 2008

இன்விசிபல் பேனா மூலம் 'காப்பி'

தற்போது பிட் அடிக்க காகிதங்களுக்கு பதிலாக மாணவர்கள் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். பார்முலா, தமிழில் குறள்கள், பிற பாடங்களுக்கு குறிப்புகள், தலைப்புகளை எழுதி வைக்க இன்விசிபில் பேனாவை கொண்டு கை பகுதியில் எழுதி வைத்து செல்கின்றனர்.

இந்த பேனா மூலம் எழுதினால் எழுத்துக்கள் வெளியே யாருக்கும் தெரியாது. இதனால் மாணவர்கள் பேனாவின் மூடியில் உள்ள லைட்டை போட்டு கையில் எழுதி இருப்பதை பார்த்து காப்பி அடிக்கிறார்கள். இந்த பேனா சாதாரண காலங்களில் ரூ.10-க்கு விற்றது. தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த 3-ந்தேதி முதல் பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் 6 1/2 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மறந்து போய் இதே பேனாவில் தேர்வு எழுதினால் அப்பறம் எந்த லைட் அடித்தாலும் மார்க் தெரியாது.

Read More...

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தை விட முன்னேறிவிடும் - சோ

`தி நேம் ஈஸ் ரஜினிகாந்த்' என்ற பெயரில், ரஜினிகாந்த் பற்றி டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது.

புத்தகத்தை நடிகரும், எழுத்தாளருமான சோ வெளியிட, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா பெற்றுக்கொண்டார்.

சோ பேச்சு...


``இது, ஒரு வினோதமான நிகழ்ச்சி. இந்த புத்தகத்தை வெளியிட்ட எனக்கு, புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. புத்தகத்தை என் கண்ணில் காட்டவில்லை. ஆனால், கமலஹாசன் படித்து விட்டார்.

ரஜினிகாந்த் சினிமாவில் இருந்தாலும், பகட்டை விரும்பாதவர். அவர், அரசியல் பேசுவார். ஆனால் அரசியல்வாதி அல்ல. அவர், ஆன்மிகம் பேசுவார். ஆனால் சன்னியாசி அல்ல. அவர், கடவுளின் அற்புத படைப்பு.

கடவுள் சொல்வதை யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் கடவுளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றும் ஒரே மனிதர், ரஜினிகாந்த்தான்.

ரிஷிகேஷ்

எந்த ஒரு நடிகரும் தன் வாழ்நாளில், வருடத்தில் பதினைந்து நாட்களை ரிஷிகேசில் கழிக்க மாட்டார்கள். ரஜினி ஒருவரை தவிர. வருடத்தில் பதினைந்து நாட்கள் அவர் ரிஷிகேசில் ஓட்ஸ் கஞ்சியையும், வெறும் பழங்களையும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வாழ்கிறார்.

``நீங்க ஏன் அடிக்கடி ரிஷிகேஷ் போறீங்க?'' என்று நான் அவரிடம் கேட்டேன். ``உங்களை மாதிரி ஆட்கள் முகத்தை பார்க்காமல் இருக்கலாம் அல்லவா?'' என்று தமாசாக பதில் அளித்தார்.

ரஜினிக்கு, சோ தான் ஆலோசகர் என்று கூறுகிறார்கள். அவர் என் ஆலோசனையை கேட்டு இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்று இருக்க மாட்டார். என் ஆலோசனைகளை கேட்டு யார் உருப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது உங்களுக்கு தெரியும்.

அரசியலுக்கு வந்தால்...

ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்திலும், அடுத்தவர்களிடம் கருத்து கேட்பார். எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்காதே என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை ரஜினிகாந்த் பின்பற்றுகிறார். சிறந்த நிர்வாகம் பண்ணுவதற்கான தகுதி இது. குஜராத்தில் நரேந்திரமோடி இதைத்தான் செய்தார். அதனால்தான் அவர் ஜெயிக்க முடிந்தது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு, குஜராத்தைவிட ஒரு படி மேலே முன்னேறிவிடும். நியாயமும், தர்மமும் ரஜினியிடம் குறையாமல் இருக்கிறது. அவர் ஊழல் அற்றவர். அவரின் தலைமையில் அமையும் நிர்வாகமும் ஊழல் இல்லாமல் இருக்கும்.

ரஜினி சர்வதேச பிரச்சினைகளை அலசும் திறனும், அவருடைய உலக ஞானமும் என்னை பிரமிக்க வைத்து இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவார் என்று இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார்கள். சரித்திரத்தில், உலகிலேயே முதல்முறையாக எல்லா தரப்பு மக்களும் சேர்ந்து, அரசியலுக்கு வா என்று எந்த ஒரு நடிகரையும் அழைக்கவில்லை. அது ரஜினி விஷயத்தில் நடந்திருக்கிறது.

வெற்றி

ரஜினி, தலைக்கனம் இல்லாதவர். கொஞ்சம் பணம், புகழ் வந்தால், சிலருக்கு தலைக்கனம் வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. `சிவாஜி' படத்தின் வெற்றியில் தன் பங்கு எதுவும் இல்லை என்று சொன்னவர். அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் ஷங்கரும், சரவணனும்தான் என்றார்.

ஒரு முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், தன்னை விட அந்த பதவி உயர்ந்தது என்று கருதவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவர், ரஜினிகாந்த்தான். அவருக்கு பதவி ஆசையும், பணத்தின் மீது ஆசையும் கிடையாது.''

Read More...

Thursday, March 06, 2008

சிவராத்திரி ஸ்பெஷல்


சிவராத்திரி அன்று என்ன செய்ய வேண்டும் ? கீழே...


இன்று இரவு 10:30 மணிக்கு வடிவேலு, முரளி, மணிவண்ணன், நடித்த 'சுந்தரா டிராவல்ஸ்' முழு நீள நகைச்சுவை படம் சன் டிவியில் சிவராத்திரி ஸ்பெஷல்.
பார்த்தால் சிவபெருமான் அருள் கிடைக்கும்.

Read More...

ஜெயமோகனுக்கு எதிராக நடிகர்கள் கண்டனக் கூட்டம்

அமரர் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தரக்குறைவாக விமர்சித்து எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனையும், அதை வெளியிட்ட ஆனந்த விகடனை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 9ம் தேதி கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும், உண்மைக்குப் புறம்பாக எப்படி வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் விமர்சிக்கலாம் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தோடு அதிக பிரசங்கித்தனமாக செயல் படுவோர்க்கு ஒரு பாடமாகவும், இனி எதிர் காலத்தில் நம் தமிழ் கலை உலகை சார்ந்த யாருக்கும் இது போன்ற அவமானங்கள் ஏற்படாமல் இருக்கவும், இந்த கண்டனக் கூட்டம் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நடிகர் சங்கத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More...

விஜயகாந்த் டிவி சேனல் தொடங்குகிறார்

டி.வி சேனல் ‌தொடங்க விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபலாமான கட்சிகள் தங்களுக்கென்று ஒரு டி.வி சேனலை தொடங்கி நடத்தி வருகின்றன. தி.மு.க.,விற்கு கலைஞர் டி.வி., அ.தி.மு.க.,விற்கு ‌‌ஜெயா டி.வி., பா.ம.க., விற்கு மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றை தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சிக்கு புதிய டி.வி சேனல் தொடங்கப் படவுள்ளது.

24 மணி‌ நேர பொழுதுபோக்கு அம்சங்களுடன் துவங்கப்படும் இச்சேனலில் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார

டிவி சேனல் பெயர் என்னவாக இருக்கும் ?

Read More...

டெல்லி மேல்சபை தேர்தல் - ராமதாஸ், கலைஞர்

பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி. சீட் கொடுத்தே ஆக வேண்டும - ராமதாஸ்
பா.ம.க. கேட்பது நியாயம் அல்ல - கலைஞர்


ராமதாஸ் பேட்டி

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் டெல்லி மேல்-சபை சீட் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதால் தி.மு.க. அணியில் இருந்து விலகப்போவதாகவும் செய்தி வெளிவந்துள்ளதே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

பதில்:- இவ்வாறு வெளிவந்துள்ள செய்தி பொய்யான தகவல் ஆகும். இதுகுறித்து நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், துணை பொதுச்செயலாளர்களிடம் விவாதம் நடத்தினோம். இதன்பிறகு இன்று (வியாழக்கிழமை) எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகர் `பென்ஸ்பார்க்' ஓட்டலில் நடக்கிறது.

கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருக்கிறேன்.

கருணாநிதி மறுப்பு

எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் முதல்-அமைச்சர் கருணாநிதியை கோட்டையில் சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை சீட் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.

ஆனால், முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு சீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

கருணாநிதிக்கு கடிதம்

நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நான் ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தில் பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை எம்.பி. சீட் கொடுத்தே தான் ஆக வேண்டும் என்று எழுதியிருந்தேன். இந்த கடிதத்தை எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், முதல்-அமைச்சரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுத்தார். இந்த கடிதத்திற்கு இது வரை எந்த பதிலும் வரவில்லை. ஆகவே, தான் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் 18 இடங்களை வைத்துக்கொண்டு ஒரு சீட் கேட்கும் போது, 35 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் கூடுதலாக ஒரு சீட் கேட்கிறார்கள். இந்த நிலையில், தி.மு.க. தன்னிடம் இருக்கும் 4 இடங்களை எப்படி பங்கிட்டு கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- 2004 பாராளுமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதாக தி.மு.க. விளக்கம் அளித்துள்ளது. 2004 ஒப்பந்தத்தில் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒப்பந்தமும் ஒரு பகுதி தான். அதன் மூலம் தான் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே, 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற தி.மு.க.வின் வாதம் சரியல்ல.

எங்களுக்கு தகுதி உள்ளது

தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு 96 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த எம்.எல்.ஏ. சீட்டுகளை வைத்து டெல்லி மேல்-சபை எம்.பி. பதவிக்கு பங்கு போடவேண்டும். இவ்வாறு பங்கீடு செய்யும்போது எங்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும்.

9 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு மேல்-சபை உறுப்பினர் பதவியும், 35 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 2 மேல்-சபை எம்.பி. பதவியும் கொடுக்கப்போவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களை கொண்ட எங்களுக்கு ஒரு மேல்-சபை சீட் கொடுப்பதற்கு எல்லா தகுதியும் உள்ளது.

2010-ல் பா.ம.க.வுக்கு எம்.பி. சீëட் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, ஜி.கே.மணியிடம் கூறி உள்ளார். 18 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும்போது ஏன் இப்படி சொல்லுகிறார்கள்?

பா.ம.க.வுக்கு மேல்-சபை தேர்தலில் ஒரு இடம் வேண்டும் என்று கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சீட்டு பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மேல்-சபை சீட்டும், தி.மு.க.வுக்கு ஒரு மேல்-சபை சீட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு சீட்டும் கொடுப்பது தான் சரியானதாக இருக்கும்.

தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறது. அமைச்சர்கள் பதவி, வாரிய தலைவர்கள் பதவி எல்லாம் அவர்களிடம் உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு கடந்த 2 வருடங்களாக நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருகிறோம். இப்படியிருக்கும் சூழ்நிலையில் எங்களுக்கு தி.மு.க. ஒரு மேல்-சபை சீட் கொடுப்பதுதான் நியாயம்.

அ.தி.மு.க. ஆதரவா?

கேள்வி:- அ.தி.மு.க. அணியில் இருந்து உங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதே?

பதில்:- அரசியல் வட்டாரத்தில் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

கேள்வி:- அப்படியானால் அ.தி.மு.க. தரும் ஆதரவை ஏற்பீர்களா? அல்லது அ.தி.மு.க. ஆதரவை கேட்பீர்களா?

பதில்:- இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் இப்போது எப்படி பதில் சொல்ல முடியும். ஆலோசனை கூட்டத்தில்தான் முடிவு செய்வோம்.

கேள்வி:- இப்போது ஏற்பட்டுள்ள நிலை அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் அல்லவா, அப்படியானால் எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் இப்போது நிச்சயமாக பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- கூட்டணியில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இந்த கேள்வியே இப்போது எழவில்லை.
கலைஞர் பதில்

"டெல்லி மேல்சபை தேர்தல் குறித்து பா.ம.க.விற்கு ஓர் இடம் இந்த முறை ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் 3.3.2008 தேதியிட்டு ஒரு கடிதமும், 4.3.2008 தேதியிட்டு ஒரு கடிதமும் எழுதியதோடு 3-ந் தேதி ஒரு முறையும், 4-ந் தேதி ஒரு முறையும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை என்னிடம் அனுப்பி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென்றும், அப்படி கோருவது அவர்களுடைய உரிமை என்றும், அதை வழங்குவது கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற எனது கடமை என்றும், அது தான் கூட்டணியின் தர்மம் என்ற நம்பிக்கையில் 7-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பு பதில் தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறார்.

எனவே, இந்த விளக்கத்தினை அவருக்கும், நாட்டிற்கும் தந்திட விரும்புகிறேன்.

டாக்டர் அன்புமணிக்கு எம்.பி. சீட்டு

2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

28.6.2004 அன்று மாநிலங்கள் அவை தேர்தல் நடைபெற்ற போது, சட்டமன்றத்தில் தி.மு.க.விற்கு 30 இடங்களும், காங்கிரசுக்கு 25 இடங்களும், பா.ம.க.விற்கு 19 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 இடங்களும் இருந்த நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு இடத்தில் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்த போதிலும், அவ்வாறு தி.மு.க. தனக்கொரு இடத்தை எடுத்து கொள்ளாமல், தனது 30 வாக்குகளையும் பா.ம.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வழங்கி, அந்த இரண்டு கட்சிகளின் சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாசும், சுதர்சன நாச்சியப்பனும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட ஒத்துழைத்தது.

டாக்டர் அன்புமணி ராமதாசை அப்போது மாநிலங்களவை உறுப்பினராக, தி.மு.க. வெற்றி பெற செய்ததால்தான் அவர் மத்தியிலே மந்திரியாக முடிந்தது. இன்றளவும் மந்திரியாக நீடிக்க முடிகிறது.

திடீர் எண்ணம்

எந்த அளவிற்கு தி.மு.க. தன்னுடைய தோழமை கட்சிகளுக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தது என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். 2004-ம் ஆண்டு அவ்வாறு பா.ம.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி 29.06.2010 அன்று வரை மாநிலங்களவை உறுப்பினராக நீடிக்க இயலும். அவருடைய பதவிக்காலம் தற்போது ஒன்றும் முடிந்து விடவில்லை.

மேலும் பா.ம.க. நிறுவனத்தலைவர் 21.2.2008 அன்று என்னை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது, மாநிலங்களவை தேர்தல் குறித்தோ, அதிலே தங்கள் கட்சிக்கு ஓரிடம் வேண்டும் என்றோ கேட்கவே இல்லை. அது மாத்திரமல்ல, அன்றைய தினமே அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னை சந்தித்தது பற்றியும், பேசியது பற்றியும், விவரித்த நேரத்திலே கூட செய்தியாளர், டெல்லி மேல்சபை தேர்தல் குறித்து முதல்-அமைச்சரிடம் விவாதித்தீர்களா? என்று கேட்டபோது, அது பற்றி முதல்-அமைச்சரிடம் எதுவும் பேசவில்லை என்று டாக்டர் ராமதாஸ் விடையளித்ததாகத்தான் அவர்களது தமிழ் ஓசை 22-ந் தேதி நாளிதழே குறிப்பிட்டுள்ளது.

இதிலிருந்து இந்த தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கும் எண்ணம் திடீரென்று 3.3.2008-ல் தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.

எந்த குறிப்பும் கிடையாது

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த நேரத்திலே கூட ஒவ்வொரு கட்சியுடனும் உடன்பாடு செய்து கொண்ட போது பா.ம.க.வுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் 31 சட்டமன்ற இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதே தவிர, டெல்லி மேல்சபை உறுப்பினர் ஒன்று அவர்களுக்காக தரப்பட வேண்டும் என்று எந்த குறிப்பும் கிடையாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று வலியுறுத்திய காரணத்தால், அப்போது அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அடுத்து வரும் டெல்லி மேல்சபை தேர்தலில் ஒரு இடம் அவர்களுக்கு தருவதாக தி.மு.க. ஒப்புக் கொண்டது. அந்த வார்த்தையைக் காப்பாற்றிடும் வகையில் 2006-ம் ஆண்டு நடந்த டெல்லி மேல்சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதுவும் தி.மு.க. தோழமைக் கட்சியிடம் காட்டிய உறுதிப்பாட்டுக்கான உதாரணம்தான்.

வெற்றி

இன்னொரு உதாரணத்தைக் கூடச் சொல்ல முடியும். 1995-ம் ஆண்டு மூப்பனார் டெல்லி மேல்சபை உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்த போது, மூப்பனார் த.மா.கா. என்ற கட்சியைக் கண்டு, தி.மு.க.வுடன் உறவு கொண்டு அந்த தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றோம்.

அந்த வெற்றிக்கு பின்னர், மூப்பனார், ஜெயந்தி நடராஜன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் த.மா.கா.வில் இருந்து கொண்டு காங்கிரஸ் சார்பாக தாங்கள் பெற்ற டெல்லி மேல்சபை உறுப்பினர் பொறுப்புகளில் நீடிப்பது சரியல்ல என்ற கருத்துடன் 3 பேரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை 9.9.1997 அன்று ராஜினாமா செய்து விட்டார்கள்.

தோழமை கட்சிகளிடம் உறுதி

காலியாகி விட்ட அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் 1997-ம் ஆண்டு வந்தபோது, தி.மு.க. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 165 இடங்களைப் பெற்றிருந்தது. அதன் காரணமாக மாநிலங்களவை இடைத்தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. சார்பில் 3 பேரை நிறுத்தி வெற்றி பெறலாம் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் அந்த எண்ணத்துடன் தி.மு.க. நடந்து கொள்ளவில்லை. மாறாக மூப்பனாரிடம் கூறி த.மா.கா சார்பிலேயே 3 பேரை நிறுத்திக் கொள்ளலாம் என்றும், தி.மு.க. ஒருவரைக்கூட நிறுத்தாமல், அந்த 3 பேருக்கும் வாக்களித்து வெற்றிவாய்ப்பைத் தேடித்தரும் என்று கூறி, அந்த தேர்தலில் என்.அப்துல்காதர், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெற்றி பெற வழிவகுத்தது. இதுவும் தி.மு.க. தோழமைக் கட்சிகளிடம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்பதற்கான உதாரணம்தான்.

3 பேரை அனுப்பலாம்

தற்போது கூட தி.மு.க. சட்டப்பேரவையில் 96 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது 6 வாக்குகளையும் தி.மு.க.வுக்கு அளித்தாலே, இந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. 3 உறுப்பினர்களை தன் கட்சியின் சார்பாக அனுப்பிட இயலும்.

ஆனால் அவ்வாறு கூட தி.மு.க. கேட்கவில்லை. தான் இரண்டு இடங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 28 வாக்குகளையும், பா.ம.க. உள்ளிட்ட எஞ்சிய தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஓர் இடத்திலும் போட்டியிடலாம் என்ற நிலையில் 2004-ம் ஆண்டு கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்ற பா.ம.க. தற்போது ஓர் இடம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கேட்பது நியாயம் தானா?

தோழமைக்கு அப்பாற்பட்டு

டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் கடந்த முறை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவில்லை என்று எழுதியிருந்தார். அப்போது அதற்கான அவசியம் ஏற்படாததால் கூட்டப்படவில்லை.

மேலும், டாக்டர் ராமதாஸ் தன் கடிதத்தில், "அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம், எனவே, டெல்லி மேல்-சபை தேர்தலில் கூடுதலாக ஒரு இடம் தாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் கோரப்படுவதைப் போன்று, நாங்களும் கோருவதற்கு எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்'' என்று எழுதியிருப்பது எந்த அளவிற்கு தோழமை உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றது என்பதை இந்த அறிக்கையினை மீண்டும் ஒருமுறை டாக்டர் ராமதாஸ் படித்தால் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

எனவே, அவர் இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புகிறேன்.''

Read More...