பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 12, 2008

FLASH: ராஜ்தாக்கரே கைதானார்

மும்பையில் பதட்டம்..


ராஜ் தாக்கரேக்கும் மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அபுஆஸ்மி இரண்டு பேரும் அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சுக்கள் அமைந்தது. அப்பாவி டாக்ஸி டிரைவர்கள், பொது மக்கள் இதில் பாதிப்படைந்தார்கள்.

போலீஸ் இரண்டு பேர் மீதும் கலவரத்தை தூண்டியதாக கூறி இதே பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மும்பை போலீசார் ராஜ் தாக்கரேவுக்கு ஒரு நோட் டீசு அனுப்பினார்கள். அதில் வருகிற 25-ந்தேதி வரை நீங்கள் பத்திரிகை மூலமோ மற்ற வழிகளிலோ எந்த அறிவிப்புகளையும் வெளி யிடக்கூடாது என்று கூறப்பட் டிருந்தது. ஆனால் இந்த நோட்டீசை வாங்க ராஜ்தாக்கரே மறுத்து விட்டார். நோட்டீசை வாங்க மறுத்தது பற்றி கட்சி செய்தி தொடர்பாளர் சிசிர்ஷிண்டே கூறும்போது, "ஜனநாயக நாட்டில் யாருடைய பேச்சுரி மையையும் பறிக்க முடியாது. ராஜ்தாக்கரேக்கு சுதந்திர உரிமை இருக்கிறது. எனவே நோட்டீசை வாங்க மறுத்து விட்டோம்'' என்றார்.

இதனால் உடனடியாக கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர் என்று இன்று காலை முதல் செய்தி பரபரத்தது. அவர் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் கலவரத் தில் ஈடுபடக்கூடும் என்று கருதப்படுவதால் மும்பை மற்றும் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

ராஜ்தாக்கரேயை கைது செய்தால் உடனடியாக கலவரம் வெடிக்கும் என்பதால் அதற்கு முன்னதாக சமாஜ் வாடி தலைவர் அபுஆஸ்மியை கைது செய்ய போலீசார் திட்ட மிட்டனர்.

இதற்காக இன்று காலை அபுஆஸ்மி வீட்டுக்கு போலீ சார் சென்றனர். வீட்டை சுற்றிலும் ஏராளமான போலீ சார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அவரை கைது செய்ததும் அடுத்து ராஜ்தாக்கரேயை கைது செய்ய உள்ளனர். எனவே ராஜ்தாக்கரே வீட்டு முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராஜ்தாக்கரே முன் ஜாமீன் வாங்கினால் கைதாவதில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் முன் ஜாமீன் வாங்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

ராஜ் தாக்கரே ஒரு தேச துரோகி தான்.

8 Comments:

உண்மைத்தமிழன் said...

//ராஜ் தாக்கரே ஒரு தேச துரோகிதான்.//

இதைச் சொல்வது இட்லிவடையார்தானா..? ஆச்சரியமாக உள்ளது..

அது சரி.. இட்லி, வடையில் நீர் எந்த இட்லி..?

IdlyVadai said...

//இதைச் சொல்வது இட்லிவடையார்தானா..? ஆச்சரியமாக உள்ளது..//

எனக்கு ஆச்சரியம் தான் நீங்க இப்படி திடீர் என்று வந்தீர்கள் என்று.

//அது சரி.. இட்லி, வடையில் நீர் எந்த இட்லி..?//

நான் காஞ்சிபுரம் இட்லி

IdlyVadai said...

கலவரம் ஆரம்பம்:

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் புனேயில் பஸ் மீது கல்வீசி ‌ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்தாக்கரே வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாலும், அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதாலும் அவரது ஆதரவாளர்கள் புனேயில் பஸ் மீது கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். வடமாநிலத்தவர்கள் கடைகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மும்பையில் கடைகள் போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்டு வருகிறது. நாசிக்கிலும் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. 26 மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(போலிஸ் கலவரம் செய்யும் ரவுடிகளை சுட்டுத்தள்ள வேண்டும். பார்க்கலாம் என்ன செய்ய போகிறார்கள் என்று. )

உண்மைத்தமிழன் said...

//எனக்கு ஆச்சரியம்தான் நீங்க இப்படி திடீர் என்று வந்தீர்கள் என்று//

ஏன் வர மாட்டேன் என்று சந்தோஷத்தில் இருந்தீர்களா..? அல்லது ஐயோ வந்துட்டானே என்ற பொறுமலில் இசொல்கிறீர்களா..?

ஒண்ணும் புர்யலே இட்லி..

//நான் காஞ்சிபுரம் இட்லி//

அதான் உங்க ஊரை துவைச்சுக் காயப் போட்டாச்சே.. அப்புறமென்ன ஊர்ப் பாசம் வேண்டிக் கிடக்கு..?

உண்மைத்தமிழன் said...

//போலிஸ் கலவரம் செய்யும் ரவுடிகளை சுட்டுத்தள்ள வேண்டும். பார்க்கலாம் என்ன செய்ய போகிறார்கள் என்று.)//

இட்லி என்னாச்சு..? எதுனாச்சும் மைதா மாவை சேர்த்துப் போட்டு அரைச்சுட்டாங்களா..? அசைவமாயிட்டீங்க..

கண்ணை மூடிக்கிட்டு சுடணும்னா எப்படி? ஒரு போராட்டம்னா கலவரம்னு ஒண்ணு வெடிக்கத்தான் செய்யும். அதுகூட செய்யலைன்னா இந்தியால அரசியல் கட்சி நடத்த முடியுமா?

'போடணும்'னா போராட்டம் நடத்தச் 'சொன்னவனை'த்தான் போடணும்..

மெஸ்மரிஸம் செய்யப்பட்ட பிள்ளைகளை அல்ல..

Anonymous said...

//ராஜ் தாக்கரே ஒரு தேச துரோகிதான்.//

ஒரு தேச துரோகியை, தேச துரோகி என்று சொல்லுவதற்கு யார் கிட்டயாவது சர்டிபிகேட் வாங்கனும்மா என்ன?

Anonymous said...

This kind of narrow parochialism has been started by the wretched DMK only in the 60s thru anti-Hindi propaganda & now in every state local politicians are fanning the regional passions & getting name & fame(?). So, once MNS comes to power in Maharashtra, they will bury this propaganda like DMK has quitely buried their anti-Hindi & separate Dravida Nadu.

So, no need to feel too much for these stunts. Arasiyalil Idhellam Sagajamappa.

Hariharan # 03985177737685368452 said...

//ராஜ் தாக்கரே ஒரு தேச துரோகிதான்.//

அ முதல் ஃ வரை எல்லா புரட்சிகளின் கருத்து எரிமலைகள் நிறைந்த பூமியான தமிழகத்தில் இருந்து கொண்டு அதுவும் ஈவெராமஸ்வாமி, அண்ணா,கருணாநிதி போன்ற இனமான, ஈன உணர்வுக் காவலர்கள் தோன்றி வலம் வந்த தமிழகத்தில் இருந்து கொண்டு ராஜ் தாக்கரேயை எப்படி அய்யா தேசதுரோகி என்று சொல்கிறீர்??

ராஜ் தாக்கரே மாதிரி தன் பெயரிலேயே தாக்குறேன்னு தன் கொள்கையைத் தெளிவாகச் சொல்லும் இயற்கைக் கொடையாக அளித்த ஒரு இன மானக் காவலர் / இன முரசுவை இனம் கண்டு ஈவெரா, அண்ணா , கருணாநிதி மாதிரி வளர்த்துவிட தமிழகத்தைப்போல் மராட்டியத்தில் முடியாமல் போகலாம்.

இன மான, ஈன உணர்வு-பகுத்தறிவு சாகுபடி முறைகளின் டெக்னிக்கல் Knowhow manual ஜெராக்ஸ் காப்பி சென்னையில் ராஜ் தாக்கரேக்கு வேப்பேரியிலோ, அறிவாலயத்திலோ கிடைக்கலாம்.

உத்தவ் தாக்கரேக்கும் ஒரு காப்பி அனுப்ப வேண் டும்.