பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 16, 2008

விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

இன்று நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள் பூமிநாதன் தலமையில் ஆனந்த விகடன் அலுவலகம் முன் கூடி, விகடன் பத்திரிக்கையை எரித்தார்கள். எதற்கு ? ஜெயமோகன் எழுதிய கட்டுரைக்கு கண்டனமாம். அங்கே இருக்கும் ஒரு ரசிகரிடம் "ஏம்பா ஜெயமோகன் எழுதியதற்கு விகடனை எரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தான் விவரம் தெரியாமல் எழுதுகிறார் என்றால், விகடனுக்கு எங்கே போச்சு மூளை அதை ஏன் பிரசுரிக்கனும் என்று கேட்டார். நியாயமான கேள்வி.

இப்போது விகடன் அலுவலகம் முன் 100 போலீஸ் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். 11 பேர் அரஸ்ட் ஆகியிருக்கிறார்கள்.

இன்றும் மட்டும் சுமார் 100 போன் கால்கள் விகடனுக்கு வந்திருக்கும். ஜெயமோகன் போன் நபர் என்ன சொல்லுங்க என்று. தமிழ்நாட்டில் சில நபர்களை பற்றி உயிருடன் இருந்தால் பிறந்த நாள் வாழ்த்தும், உயிருடன் இல்லை என்றால் நினைவுநாள் என்று ஒருபக்க விளம்பரம் தான் போட முடியும் என்று ஜெயமோகனுக்கு தெரியவில்லை. ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

6 Comments:

கால்கரி சிவா said...

That's what Vikatan want.

Mission accomplished :(

Anonymous said...

This what both AV and AM expected and wanted to happen.If AV is a cheap publicity loving magazine, he is a 'writer' who wants to be controversial so that he can be popular.

Anonymous said...

இன்றும் மட்டும் சுமார் 100 போன் கால்கள் விகடனுக்கு வந்திருக்கும். ஜெயமோகன் போன் நபர் என்ன சொல்லுங்க என்று

No need, all details including address, photos are available
at jeyamohan.in
Only some details like the sizes of his inner garments are missing :).

ஜோ/Joe said...

// விகடனுக்கு எங்கே போச்சு மூளை அதை ஏன் பிரசுரிக்கனும் என்று கேட்டார்.//

உண்மை தான்.

Ravikutty said...

Well said about the safety of Jeyamohan.
Tamils have no sense of humour.

Anonymous said...

நம்மைப் போன்றவர்கள் குறித்து
ஜெயன்மோகன்

விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்
February 17, 2008 – 9:01 pm
உங்களைப்பற்றிய விமரிசனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? அவை உங்களை பாதிக்கின்றனவா? அவற்றை வாசித்துப் பார்ப்பீர்களா? அல்லது just ignore செய்வீர்கள

allwantspace

அன்புள்ள நண்பருக்கு,

நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.

இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.

என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.

யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.

---------------------------
allwantspace என்று ஒருவர் பெயர்
வைத்துக்கொண்டு கேட்பாராம், அவர்
இப்படி பதில் சொல்வாராம்.